Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. பணத்தினை இழந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். நோய் காவிகள்!
  2. அரச இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அங்கிருந்த அரச உடமைகளை திருடிச்சென்று விட்டாராம் மஹிந்தா. எங்களிடம் ஒன்றுமேயில்லை என அவரது இளைய புதல்வர் புலம்புகிறார். நாமலோ தன்னிடமுள்ளதெல்லாம் தனது மனைவியின் சொத்துக்கள் என்கிறார். மஹிந்தவோ தனக்கு வசிப்பதற்கு கொழும்பில் வீடு இல்லை என மக்களைப்பார்த்து அழுகிறார். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கை நிலையை மறக்கவில்லை என புரிகிறது. இவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி. இவர் பிச்சைப்பாட்டுப்பாடுகிறார். நாட்டில் அனிஞாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது குமுறுகிறார்கள், ஏன்? இவர்களுக்கெல்லாம் எஜமானர் இவர்கள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா? சுடுகாடாக்கி சூறையாடினார்களா? தங்கள் ஏவல் நாய்கள், தங்களை காட்டிக்கொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்கிறார்கள். இவர்களுக்கு முன் முந்திக்கொள்பவர்கள் இவர்களை காட்டிக்கொடுத்து தாம் தப்புவர். எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளை இழந்து தனிமையில் தவிப்பதுபோல் இவர்களும் தவிப்பார்கள். அதுதான் தர்மத்தின் வேலை.
  3. மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். அவர்களே சேடம் இழுக்கிறார்கள்.
  4. அரசியல் திருடர்களை கைது செய்தால், தெருவுக்கு இறங்கி ஊளையிடுகிறார்கள். பாதாள உலகைச் சேர்ந்தவர்களை கைது செய்தால், அது தேவையில்லை என்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்தால், பதறுகிறார்கள். கொலைகாரரை கைது செய்தால், அவர்களின் சொந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். அப்போ; இதில் எல்லாம் இவர்களுக்கு பங்குண்டு. தங்கள் ஊழல், கொலை, களவுகளை மறைக்க பயங்கரவாதிகளை அழித்தோம் என்று மக்களை திரட்டி ஏமாற்றுகிறார்கள். சந்திரிகா சொன்னார், ராஜபக்சக்கள் திருடர் என்று. ஆனால் இவர்கள் திருடர் மட்டுமல்ல கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு என்று செய்யாத வேலையே இல்லை. அரசியலுக்கு எள்ளளவும் தகுதியற்றவர்கள். தமிழரை மட்டுமல்ல, தமது அடாவடிகளை தட்டிகேட்ப்பவர்கள், விமர்ச்சிப்பவர்கள், தங்களுக்கு உதவியவர்களையே கொலை செய்து தம்மை காத்துக்கொண்டவர்கள். மக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதைப்பற்றி கணக்கெடுக்காமல், தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதை மக்களிடமிருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை காட்டி தங்களை வீரர்களாக சித்தரித்தனர். யார் எதை களவெடுக்கிறார்கள், அதை எப்படி தடுப்பது என்கிற அறிவு கூட இல்லாத முட்டாள்கள். இவர்கள் தான் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதில குட்டிச்சாத்தானுக்கு ஜனாதிபதி கனவு வேறு. இவர்களுக்குப்பின்னால் பல திருடர் பதுங்கி காத்திருக்கிறார்கள், இவர்கள் அடாவடி, அரசியல் சூழ்ச்சி செய்து தம்மையும் காப்பாறுவார்களென. முடியாவிட்டால், அரச சாட்சிகளாக மாறி தங்களை காத்துக்கொள்வார்கள்.
  5. அது மட்டுமா? அவர் அறிவித்த கடையடைப்பு, படுதோல்வி! இவருக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்தவையோ, ரணிலையோ குஷிப்படுத்தி இவருக்கு பதவி பட்டாடை கிடைக்கும். மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதிலும் பார்க்க மக்கள் தமக்கு பிடித்த அனுராவை தெரிவதில் தப்பில்லையே. அப்போதும், அனுரா அலையில் அடிபட்டுப்போனாலும் நமக்கு வெற்றியே என்று பிதற்றுவார். இனிமேல் இவர் வென்றாலென்ன தோற்றாலென்ன? இவருக்கு பதவி கிடைக்கப்போவதில்லை, ஆளுநர் மூலமாகவே காரியங்கள் நடைபெறும். முன் போல் தேர்தல் நேரம் வந்து வாக்கு அறுவடை செய்ய முடியாது. உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. இருந்தமாதிரி தன் தொழிலையே செய்து கொண்டிருந்திருக்கலாம், தேவையில்லாமல் அரசியலில் செருகப்பட்டு, சொந்த தொழிலையும் இழந்ததுதான் மிச்சம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்ப்போச்சு இப்போ சுமந்திரனின் தொழில்.
  6. சிவஞானம் யாரைப்பார்த்து இந்தக்கேள்வியை கேட்கிறார்? யாரிடம் கேட்க வேண்டிய கேள்வியிது? கேட்க வேண்டிய இடத்தில் கேட்பதற்கு பயப்படுகிறாரோ? நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். தமிழரை பிரித்தாளுவதே இந்தியாவும் இலங்கையுந்தானே. அவர்களுக்கு தெரியும் யாரைபிரித்தால் தீர்வை கிடைக்காமல் செய்ய முடியும் என்பது. முடிந்தால் இந்தியாவிடம் நேராக இந்த விளக்கத்தை சொல்லலாம் சிவஞானம் அவர்கள்.
  7. குற்றவாளியின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், கோரிக்கைகள் கவனிப்பாரின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. சொல்லில் மாற்றமேயொழிய பொருளில் மாற்றமில்லையென்றால்; ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏக்கிய ராஜ்ய ஏமாற்றுக்கதைதான். எங்கள் விடுதலையை நாங்களே போராடி பெற்றுக்கொள்ள விட்டிருக்க வேண்டும். இல்லையேல் தாம் அதை பெற்றுத்தந்திருக்க வேண்டும். தங்கள் தேவைக்கு, பொழுதுபோக்கிற்கு ஒரு சபை, இது கலைக்கப்படவேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று இனி கனடா சொல்ல முடியாது என இலங்கை எதிர்பார்க்கிறது. தமிழ் இனம் என்கிற ஒரே காரணத்திற்காகவே, இவ்வளவு அவலங்களை நம் இனம் சந்தித்தது. அதை மாற்றியமைக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் பக்கம் யாருமில்லை, சந்திப்புகள் இல்லை, விளக்கம் அளிக்க ஒருவருமில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க பலர் நம்பக்கமேயுண்டு. இந்த சொல் இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. இதை விட கொடூரமான சொல் பயன்படுத்தப்படுவதுதான் பொருத்தமானது. காரணம் ஒரு இனத்தை அழித்து, மவுனமாக்கி விட்டு எதுவுமே நடக்காத மாதிரி, விடுதலை வேண்டியவர்களை மட்டும் குறி வைத்து தடைகளை ஏற்படுத்துவதும் குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் நிஞாயமானது? இவர்கள் எல்லாம் எங்களுக்கு நிவாரணம், நிஞாயம் பெற்றுத்தரப்போகிறார்களாம் நம்புவோம். இனி இனிப்பிரச்சனை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை, பொருளாதார பிரச்சனை மட்டுமேயுண்டு, அதற்கான அபிவிருத்தி ஏர்படுத்தப்படுமென அறிவிக்கப்படும். ஐ. நா. இலங்கை பிரச்சனை பற்றி இனி விவாதிக்கப்போவதில்லை. எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடைபெறும். போராட யாரும் இல்லை. இது தான் சர்வதேசத்தின் நடுவு நிலை. இதைத்தான் நம் தலைவர்கள் மௌனமாக இருந்து சேர்ந்தியங்கி சாதித்தது. இனிமேல் இவர்களுக்கு அரசியல், பதவி, பணம் எதுவுமிருக்கப்போவதில்லை. அப்பப்போ குரல் எழுப்பி விட்டு போக வேண்டியதுதான்! இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லாட்சி மஹிந்தவை காப்பாற்றியது, இந்த ஆட்சி இனப்பிரச்சனை நடைபெறவேயில்லை என சாதிக்கும்.
  8. இவர்கள் சொல்வதை மற்றைய நாடுகள் அங்கீகரித்து செயற்படுத்த வேண்டும். ஆனால் சர்வதேசத்துக்கு தாம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்ற மாட்டார்கள், அதற்கு சம்பந்தமில்லாத ஆயிரம் காரணங்களை, அறிக்கைகளை வெளியிடுவர். இலங்கைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் சொல்ல வேண்டியது; உங்கள் சட்டங்களை உங்கள் நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள், எங்கள் இறையாண்மையில் தலையிடுவதையோ, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுவதையோ நிறுத்திக்கொள்ளுங்கள் என அறிவிக்க வேண்டும்.
  9. சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா? வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.
  10. அது மட்டுமல்ல, சமூக சீர்கேடுகளை வளர்ப்பது, போதை கலாச்சாரத்தின் கதாநாயகர்கள், சமூகங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பது, ஊக்குவிப்பதும் இவர்களே. இவர்கள் அரசியல்வாதிகளின், தலைவர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம். நாட்டில் சட்டம், நிஞாயம் நிலைக்க வேண்டுமாயின் இந்த துறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமானது.
  11. மேற்குலகு, ஐ. நாவின் இயலாத்தன்மை, குற்ற உணர்வு மேலோங்கி, அதை நசுக்கி தம்மை நிஞாய வாதிகளாக காட்டுகின்றனர். எல்லா சிங்கள தலைவர்களும் பாதிக்க பட்ட மக்களுக்கு நிஞாயம் வழங்குவதை விட்டு மேற்குலகையும், ஐ. நாவையும் குஷிப்படுத்துவதிலேயே முக்கியம் செலுத்துகின்றனர். தர்மம், நீதி இல்லாதவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள். அன்று இலங்கையில் நடந்த இனவழிப்புக்கு தக்க நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இன்று காஸாவில், உக்ரேனில் இப்படியான அத்துமீறல்கள் நடக்க வாய்ப்பிருந்திருக்காது. இல்லையேல் அதை செயற்படுத்த தவறியவர்கள் அந்த சபையை கலைத்திருக்க வேண்டும். இந்தச்சபை இருப்பதால் என்ன லாபம் யாருக்கு? ஏன் இந்தச்சசபை கூடுகிறது? அறிக்கைகளை விடுகிறது? இனப்பிரச்சனை இல்லை என்பவர்கள் ஏன் அந்த இந மக்களை அழித்தார்கள்? அவர்களின் வாழ்விடங்களை கலைத்தார்கள்? இப்போ அனுரா சொல்கிறார், வடக்கில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்கிறார். வடக்கில் இருந்த பொருளாதாரத்தை அழித்தது யார்? ஏன் அழித்தார்கள்? எங்களுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று கேட்டோமா இவர்களிடம்? எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிஞாயம் வழங்குங்கள் என்றுதானே கேட்க்கிறோம். தாங்கள் நினைப்பதுதான் எங்கள் பிரச்சனையென அவர்களே முடிவெடுக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது?
  12. நீங்கள் அப்பாவி, அப்படியே நம்பிவிட்டீர்கள் அவரை. எதுக்கு? உடனேயே குளியலறைக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு முக்கு முக்கி எடுத்து விடுங்கள் ஆளை, வேண்டுமென்றால் கொஞ்சம் நெருப்புத்தண்ணியையும் கலந்து விடுங்கள் . ஆள் கொஞ்சம் திமிறுவார் விடாதைங்கோ. அதைச்சொல்லுங்கோ! எதுக்கு பாவம் சிவன் கோவில் சாத்திரியாரை அழைக்கிறீர்கள்? அவரோடு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உங்களுக்கு?
  13. ரோச் பற்றி வாங்கித்தான் புலிகள் ராஜீவை கொலை செய்தார்கள் என்று ஒருவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்த வீரர்கள். அவர்களுக்கு இலங்கையை தங்கள் கைக்குள் வைத்திருப்பதற்கு புலிகள் மீள எழுகிறார்கள் என்கிற புனை கதை வேண்டும், சிங்களமக்களை ஏமாற்றுவதற்கு இனவாதிகளுக்கு புலிகள் வேண்டும், மொத்தத்தில் இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி தன் லாபம் தேடுகிறார்கள்.
  14. தண்ணியில கண்டம் போல தெரியவில்லை, தண்ணிப்பஞ்சம், சோம்பேறித்தனம் போலல்லவா தெரிகிறது.
  15. தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி என்றும் தன்னை விளித்துள்ளார் அருச்சுனா. இவர் ஒரு கொள்கையோடு செயற்படுவதாக தெரியவில்லை. ஒரு தடவை நாமலை உயர்த்தி பேசுகிறார். தனது தந்தையை காணாமலாக்கியதை மன்னித்து விட்டதாக கூறுகிறார், அவரது தந்தை மட்டும் அவர்களால் காணாமலாக்கப்படவில்லை. தையிட்டி விகாரையை அகற்ற முடியாது அவர்களுக்கு வேறு காணி வழங்கப்படும் என்றார். ஆனால் தனது காணியை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், மதம் இனம் என்பது கவனிக்கப்படாது என்றார். இப்படி மாற்றி மாற்றி ஏதோ குழப்பி பேசி தன்னைத்தானே மற்றவர்கள் பரிகசிக்க வைக்கிறார்.
  16. மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன? உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.
  17. அது ரசோவாக இருக்காதா என்றும் மனம் ஏங்கும். இல்லையென்றாலும் நித்திரை வராதே.
  18. இதற்கு முன் பல பெண் நீதிபதிகள் இதே மல்லாக்கத்தில், யாழ் உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றி இருக்கிறார்கள். அப்போ ஒரு முறைப்பாடும் அவர்களுக்கு எதிராக எழவில்லை. உதாரணமாக உதயநிதி என்று நினைக்கிறன், பெயர் மனதில் சரியாக இல்லை. யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றியவர், இவர் இராணுவத்தினரின் மக்களுக்கெதிரான கெடுபிடிகளை கண்டித்தவர், இந்த ஒரு காரணத்தினாலேயே இடம் மாற்றப்பட்டவர், மஹிந்த ஆட்சியில். நம்ம ஆட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை அதையும் ஒத்துக்கொள்கிறேன்
  19. உயர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது நல்லாட்சி காலத்தில். அப்போது அப்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் கோத்தா ஜனாதிபதியாக வந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மட்டுமேன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஒன்றுமே விளங்கவில்லை.
  20. இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.
  21. சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.
  22. ஒரு கதையில் பல அன்றாட சம்பவங்களையும் கலந்து சுவையாக ஆர்பாட்டமின்றி எழுதுகிறீர்கள். பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!
  23. இதுகளையெல்லாம் சட்டம் போட்டு திருத்த முடியாது, அதுகளாய் திருந்தினாலொழிய. சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுங்கள்.
  24. வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் சண்டியர்களை இழுத்து வருகிறார்கள், இவர் இவ்வளவு காலமும் ஒளித்திருந்துவிட்டு இந்நேரம் பார்த்து கிளம்புகிறார். தலைவனே கிளம்பும்போது, இவர்கள் கூலிகள் என்ன செய்வது?
  25. தொலைந்தது கள்ளத்தொடர்பு! அது சரி, சிறியர் ஏன் இதை இங்கு இணைத்தார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.