Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.
  2. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." அது கிடைக்கவில்லையே என ஏங்குவதை விட்டு எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த சுகம் எனக்கு கிடைத்திருக்கிறதே என இருப்பதைநினைத்து மகிழ்வடைந்தால் எல்லாமே நிறைவாகும். "உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு."
  3. முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும்.
  4. அதுசரி ..... கைது செய்யப்பட்டவர்களிடம் முறையாக விசாரணை செய்து விநியோகஸ்தர்களை கைது செய்து ஏன் தண்டிக்கவில்லை? கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுக்கு என்ன நேர்ந்தது? நீதிமன்ற முன்னிலையில் அழிக்கப்பட்டதா? இன்று கைப்பற்றப்படும் போதைப்பொருள் நாளைக்கு நுகர்வோர் சந்தைக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமாகும்? கைப்பற்றல், கைது நாடகம் இதனால் யாருக்கு என்ன லாபம்? எய்தவனை விட்டுவிட்டு வெறும் அம்பை நோவதேன்?
  5. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நியமிக்கப்பட்டவர்களே காவற்துறையினர். அவர்களோ, சட்டத்தை மீறுகின்றனர், நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து கேள்விக்குள்ளாக்குகின்றனர், வன்முறைகளை தூண்டுகின்றனர், குற்றவாளிகளை பாதுகாத்து தப்ப விடுகின்றனர், சமூக விரோதிகளை காக்கின்றனர், போதைப்பொருளை கடத்துகின்றனர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குகின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர். இவர்களுக்கு சட்ட அறிவுமில்லை பொது அறிவுமில்லை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தெரியாதவர்கள், தேவையற்ற, தமக்கு அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அமைதியை குழப்பி பிரச்சனைகளை சிக்கலாக்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர், அதிகாரங்களை துஸ்ப்பிரயோகம் செய்கின்றனர். நீதிமுறை தெரியாத, ஒழுக்கமற்ற இவர்கள் எதற்காக இங்கு நிலைநிறுத்தப்பட்டுளார்கள்? இவற்றை எங்கள் பிரதேசங்களில் ஊக்குவிக்கப்பதற்காக சம்பளம் கொடுத்து அரசாங்கம் வளர்க்கிறது. இவர்களை காவற்படை என அழைப்பதை விடுத்து காவாலிப்படை என விளிப்பதே பொருத்தமானது!
  6. அட இவ்வளவுதானா தமிழ் படுகிற பாடு காணாதென்று எதிர்காலத்திலுமா? எனது பேரப்பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் பெயருக்காக அடிபட வேண்டி வந்தால்?
  7. தொடர்ந்து போலீசாரின் விசாரணை (வியாபாரம்) நடைபெறுமென நம்பலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலும் அநீதியுமே தொடரும்.
  8. உந்தகுசும்புதானே கூடாது சாமியார். அவர்தானே நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார். இப்போ, எண்களும் சுயம் மாறி வேலை செய்யுமோ இல்லையோ? இனி, தாங்கள் தடக்கி விழுந்தாலும் சோதிடம் கேட்டு சோதிடப்பிரியர்களின் தொல்லை தொடரப்போகுது கந்தையாப்பாவுக்கு! தெரியாமல் வாயை கொடுத்து விட்டார் பாவம். தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் தொடருவோரின் வாழ்வு!
  9. பாவம் சிறியர்! அவர்கள் பெயர் வைப்பதில் முந்திவிட்டார்கள். பரவாயில்லை, நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன். களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?
  10. இப்போ, வரன் தேடுபவர்கள் பணம், அழகு, சண்டித்தனம், போலிக்கௌரவம் இத்யாதிகளையே தேடுகின்றனர். அறிவு, பண்பு, நேர்மை, சகிப்புத்தன்மை, சிக்கனம், உதவும் மன்னிக்கும் மனப்பான்மை இவையெல்லாம் வேண்டாதவை. அவை இப்போ பிள்ளைகளுக்கு போதிக்கப்படுவதுமில்லை.
  11. மறக்காமல் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சியுங்கள். அது, காலத்தின் கட்டாயம். வரலாறு என்றும் உங்களை நினைவு கூரும்.... நன்றி.
  12. ம்ம்.... அதுதான் பெரிய பிரச்சனை! ஊரிலே பரம்பரை பரம்பரையாக போர்காலத்திலும் சரி இப்போதும் சரி தொடர்ந்து இருப்பவர்களின் காணியிலேயே புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டுக்காசை கொண்டு வந்து, ஆனால் இனாமாக அடாவடியாக ஏழைகளின் காணியை அபகரிக்க முயற்சிப்பதை என்ன சொல்வது? ஊர்ல மட்டும் கள்ளர் காடையர் இல்லை, இங்கிருந்து பெயர்ந்து போன கள்ளர் காடையர் மீண்டும் வரும்போதெல்லாம் தமது தொழிலை விட முடியவில்லை தொடர்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் என்று அவர்கள் செய்யும் தொழிலை களவு என்று யாரும் பேசுவதில்லை.
  13. அது உங்கள் பணியல்லவா, அது யார் இப்போது குத்தகை எடுத்தார்கள் உங்களிடமிருந்து?
  14. இந்த இக்கட்டான நிலையில் இவரை அழைத்து தன்னை பெரிய ராஜதந்திரி எனக்காடட விழையுதோ இலங்கை!
  15. இனவாத அரசியல் வியாதிகளின் சாதனை இது. அன்று, நம்மை பலாத்காரமாக அடித்து விரட்டினார்கள். இன்று, அவர்களாகவே வெளியேறுகிறார்கள். இனிமேல் சீனனும் இந்தியனும் குடியேறட்டும். ஆனால் தமிழன் தம் கலாச்சாரங்களோடும் பண்பாட்டுடனும் இந்த மண்ணில் வாழ விடமாட்டார்கள்.
  16. எங்கும் எதிலும் என்னை நினைத்து அழைப்பு விடுவதற்கும், காணாவிட்டால் தேடுவதற்கும் தளராமல் கருத்திடுவதற்கு ஊக்கம் தருவது எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி சிறியர்! நன்னிச்சோழனின் மனநிலையே எனதும், அதனால் இதில் ஈடுபட்டு போட்டியாளர்களுக்கு எரிச்சலை கிளப்பாமல் விலகிக்கொள்கிறேன்.
  17. அனுபவிக்க துடிக்கும் இளசுகளை பெற்ற அனுபவம் எச்சரித்து தடுக்கப்பார்க்கிறது! "இளங்கன்று பயமறியாது பட்டுத்தான் தெளியும்." அது அரும்பியவுடன் கருகியதால், கண்டிப்பாக இது நிலைத்திருக்கும். இப்போ அப்பாவின் தண்டிப்பை நினைத்து பெருமைப்படுகிறீர்களா அல்லது இன்னும் வில்லன்தானா? எத்தனை பட்டாம்பூச்சிகள் கண்ணெதிரே சிறகடித்துப் பறந்தன அத்தனையும் கனவாகின. பார்த்து ரசிப்பதோடு மறைந்தன இளமையும் காலமுந்தான்.
  18. நாட்டில் எரிபொருளுக்கு வரிசை கட்டியம் சொல்கிறார்கள்.
  19. ஆஹா..... அற்புதம்! இப்படிதான் கனிந்ததா உங்கள் காதலும்?
  20. இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும் கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  21. இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல் குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
  22. 15/2/24 மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர் கணக்க்கில மட்டோ அல்லது என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  23. ஒரு உழுந்து வடை, தேநீருக்கு நோகாமல் எண்ணூறு ரூபா வாங்கியவர் எப்படி விறைப்பெடுக்கிறார் பாருங்கள். தண்டம் கொடுக்கும் போது, கொடுத்தவரின் வலி தெரியும், அப்போ நினைப்பார்; இப்படி வரும் என்று தெரிந்திருந்தால், சும்மாவே கொடுத்து புண்ணியத்தை தேடியிருக்கலாமென்று. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும்.
  24. தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.