Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. நான் அறிந்தது இப்படி, ‘நம’ என்றால் வணங்குதல் (நமஸ்தே) ‘சிவாய’ என்றால் சிவனுக்கு ஆக கூட்டிப் பார்த்தால் ‘சிவனுக்கு வணக்கம்’ ஒவ்வொருவரது விளக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஏராளன் குறிப்பிட்டது போல் ‘ச்’ இல்லை
  2. “யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்” அரசியல் என்றால் முதலில் எதிராளியை இழுத்து வைத்துத்தான் பேசுவார்கள். அதற்குப் பிறகுதான் மற்றவை
  3. தலமைக்கேற்ற ஆளுமையோ பக்குவமோ இல்லாதவர். கட்சிக்குள் இருந்து பேச வேண்டிய, போராட வேண்டிய விடயங்களை வெளியே வந்து பேசுகிறார் என்றால் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. பேசாமல் இவரும் பொதுக்கட்டமைப்போடு சேர்ந்து கொள்ளலாம்.
  4. உழைக்கும் கைகள் அவர்கள் கஸ்ரப்பட்டு உழைக்கும் தொழிலாளிகள். வெயில், மழை, பனி, காற்று... என்று பாரமல் திறந்த வெளியில் நின்று வேலை செய்பவர்கள். அவர்களது கடுமையான உழைப்புக்கு ஏற்ற பணம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் யேர்மனியில், கொக்கைம் நகரில் கடந்த ஜூலை மாதம் முதல் பைபர் ஒப்ரிக் கேபிள்களை (Fiber optic cables) நிலத்தினுள் தாட்பதற்காக ஒரு வீதி பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வீதி கேபிள்கள் தாட்கப்பட்டு, செப்பனிடப் பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் ஓகஸ்ட் மாத இறுதியில் திறந்து விடப்பட்டது. 13.09.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென இருவர் அதே வீதியில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் இயந்திரம் (Mini excavator) கொண்டு வீதியை உடைத்துக் கொண்டிருந்தார். மற்றுமொருவர் குடியிருப்புகளுக்கு கேபிள்கள் செல்லும் இடத்தில் பிக்கான் கொண்டு கிளறிக் கொண்டிருந்தார். இருவருமே வேலைக்கான உடைகளை அணியாமல் சாதாரண உடைகளிலேயே வேலை செய்து கொண்டிருந்தார்கள். நான்கு கிழமைகளாக, வீதி வேலைகளால் ஏற்பட்டுக் கொண்டிருந்த சத்தங்களினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பாளர், ‘வேலை முடிந்து விட்டது தானே. இப்போது ஏன் திடீரென வந்து மீண்டும் வேலை செய்கிறார்கள்? அதுவும் வெள்ளிக்கிழமை மாலை நேரம்! வெள்ளி என்றால் எல்லோரும் வெள்ளனவே ஓடிவிடுவார்களே!’ என்று நினைத்துக் கொண்டவர், என்னதான் நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தால், வீதிகளுக்கான தடுப்புகளைப் போடாமல் அவ்விருவரும் தங்கள் பாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதை அவதானித்தார். ஏதோ ஒன்று அவருக்குத் தவறாகப் பட நிலத்தைக் கிண்டிக் கொண்டிருப்பவரிடம் பேச்சைக் கொடுத்தார். “எங்களுடைய முதலாளி மூன்று மாதங்களாக எங்களுக்கான சம்பளத்தைத் தரவில்லை. எனக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பணத்துக்கு நான் என்ன செய்வது? அந்தக் கோவத்தில்தான் இதைச் செய்கிறோம்” என்றார். பொலிஸுக்குத் தகவல் போனது. பொலீஸ் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இப்பொழுது அந்த இருவரும் கிரிமினல் வழக்கை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சேதாரம் எவ்வளவு என்று இன்னும் கணிக்கப்படவில்லை. ஆனாலும் வீதியைப் புனரமைக்க கொக்கைம் நகரசபை ஒப்புக் கொண்டுள்ளது. கொக்கைம் நகரசபை எந்த நிறுவனத்திடம் இந்த வேலைக்கான அனுமதியை வழங்கினார்களோ அந்த நிறுவனத்துக்கும் சிக்கல் வந்திருக்கிறது. யேர்மனியிலும் இப்படி நடக்கிறதா? என ஆச்சரியப்படுகிறீர்களா? முதலாளிகள் உலகமே எப்பொழுதும் தனி. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. “மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி வந்திடக்காரணம் என்ன மச்சான் அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி” https://www.tagesschau.de/inland/regional/hessen/hr-nach-streit-mit-bauleitung-bauarbeiter-verwuestet-gehweg-in-hochheim-100.html
  5. நான் அறிந்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊரில் உள்ள காணிகளை விற்றுப் பணம் பார்ப்பதில்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள். இந்தக் கனடாக்காரர் வித்தியாசமாக இருக்கிறார். அவர் காணியை வாங்கி இருந்தாலும் நாளைக்கு யாரோ ஆட்டையைப் போடத்தானே போகிறார்கள். என்ன விசயம் கொஞ்சம் முன்னாடியே நடந்திருக்கு.
  6. இறுதிப் போட்டி என்று மோத வந்து மூன்றாவது தடவையும் தோற்றுப் போனார். உண்மைதான். வாரம் தோறும் நடைபெறப் போகும் நிகழ்ச்சி ஒன்றைத் தொலைக்காட்சியில்தொகுத்து வழங்கப் போகிறார். ஏறக்குறைய பத்து வருடங்கள் ஊடகங்களில் இல்லாமல் இருந்தவரை திரும்பக் கொண்டு வந்து நிகழ்ச்சியை நடத்துவதுக்கு இந்தக் குத்துச் சண்டை ஒரு விளம்பரம்தான். ஆனாலும் சண்டை உண்மையானது.
  7. தமிழ்சிறி வாழ்த்துக்கள்.👏
  8. ஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர். “பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் 2001ஆம் ஆண்டு குத்துச் சண்டைக்குப் போன ஸ்ரெபான் ராப், தோற்றுப் போனார். மூக்குடைபட்டு இரத்தம் வழிய அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்த நாள் ஊடகங்களில் வெளிவந்ததில் அவர் பெருத்த அவமானங்களுக்கு ஆளானார். ‘ஒரு பெண்ணிடம் தோற்பது எவ்வளவு அவமானம்? அவளை வென்றே தீருவேன்’ என்ற அவரது வீராப்பு மீண்டும் ரெஜினா ஹால்மிஸ்ஸை 2007இல் மோத அழைத்தது. இம்முறை நடந்த குத்துச் சண்டையில் ஸ்ரெபான் ராப்புக்கு மூக்கு உடைபடவில்லை ஆனாலும் தோற்றுப் போனார். ஸ்ரெபான் ராப் ஊடகங்களுடான தனது தொழிலை 2015 இல் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வந்ததில்லை. திடீரென இப்பொழுது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். “நான் ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் மோதத் தயார்” என அறிவித்திருக்கிறார். ஸ்ரெபான் ராப்புக்கு இப்பொழுது வயது 57. ரெஜினா ஹால்மிஸ்ஸுக்கு 47 வயது. ரெஜினா ஹால்மிஸ்ஸும் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று விட்டவர். ஆனாலும் ஸ்ரெபான் ராப்பின் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் நாளை இரவு (14.09.2024) டுசுல்டோர்ப் நகரத்தில் மோதப் போகிறார்கள். ரெஜினா ஹால்மிஸின் எடை 50கிலோ, ஸ்ரெபான் ராப்பின் எடை 80கிலோ. ரெஜினா ஹால்மிஸ் எடையில் மட்டுமல்ல உயரத்திலும் ஸ்ரெபான் ராப்பைவிடக் குறைவானவர். “ஒரு பெண்ணிடம் பொது வெளியில் தோற்றுப் போன ஸ்ரெபான் ராப்பின் மனதில் உள்ள வலி அவரை சும்மா இருக்கவிடவில்லைப் போலும். கடந்த ஒன்பது வருடங்களாக நல்ல பயிற்சிகள் எடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். குத்துச் சண்டைகளில் 25 வருட அனுபவங்கள் எனக்கிருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்” என ரெஜினா ஹால்மிஸ் தெரிவித்திருக்கிறார். இந்தப் போட்டி நாளை யேர்மன் தொலைக்காட்சி( RTL)இல் 20.15க்கு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.
  9. இதே நினைவுதான் எனக்கும் வந்தது. விரும்பிச் சாகப் போனவனைக் காப்பாற்றி, சட்டம் தண்டனை தரப் போகிறது
  10. சுனாமி எப்போதாவது ஒருதடவைதான் வருகிறது. ஒரு புதுமுகம் ஆட்சிக்கு வந்துதான் பார்க்கட்டுமே. போர் நடந்த காலங்களில் அவர்களும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.