Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு பட மூலாதாரம்,@mkstalin 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர், பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்களுக்கு மற்றும் காளைகளுக்கு பரிசு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பரிசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் பைக் பரிசாக பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 11 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை முதலிடம் பெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மாடு இரண்டாம் இடம் பெற்றது. இவருக்கு மோட்டார் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளை மூன்றாவது பரிசினை வென்றது. அவருக்கு எலக்ட்ரிக் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 63 பேர் காயம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4 பேர், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர் இதில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞர் உட்பட 21 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,@mkstalin 'அதிக காளைகளை அடக்கினால் அரசு வேலை' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜல்லிக்கட்டைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர்" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  2. 8 பைக்கற் சீமந்து, 2 லான்ட் மாஸ்ரர் மணல், 20 கம்பி, 2 லான்ட் மாஸ்ரர் சல்லி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 கிலோ கட்டு கம்பி.
  3. கொழும்பு துறைமுக நகரத்தில் The Food Harbour உணவக மையம் திறப்பு ! Published By: Digital Desk 1 17 Jan, 2026 | 09:34 PM கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவக மையமான ‘த ஃபுட் ஹார்பர்’ (The Food Harbour), நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமாகியதை தொடர்ந்து உணவுத் துறைமுகம் பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் ஏனைய விருந்தினர்கள் உட்பட பல பிரமுகர்களுடன் இணைந்து, உத்தியோகபூர்வமாக இதனை ஆரம்பித்து வைத்தனர். கொழும்பு துறைமுக நகர பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட தலைமை விருந்தினர்களால் முக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன. கொழும்பு துறைமுக நகரத்தின் பரந்த வளர்ச்சிப் பார்வைக்கு பங்களிப்பதில் உணவு மையம் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஃபுட் ஹார்பர் என்பது இலங்கையின் முதல் சர்வதேச தரத்திலான திறந்தவெளி உணவு மற்றும் பான இடமாகும், இது கொள்கலன் பூங்கா பாணி சமையல் மையமாக உருவாக்கப்பட்டது. நேற்று (16) பொதுமக்களுக்குத் திறக்கப்படும் இது, சுற்றுலாப் பயணிகள், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்களுக்கு உணவளிக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் உணவு வகைகளை வழங்கும் பல்வேறு வகையான உணவு மற்றும் பான பிராண்டுகளை ஒன்றிணைக்கிறது. உணவருந்தலுக்கு அப்பால், தி ஃபுட் ஹார்பர், போர்ட் சிட்டி கொழும்பின் வாழ்க்கை முறை மற்றும் ஓய்வு இடமாக அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது, அதேநேரம், இலங்கை மற்றும் பிராந்திய பிராண்டுகளுக்கு உயர்-தெரிவுநிலை தளத்தை வழங்குகிறது மற்றும் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவைத் துறைகளில் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. தி ஃபுட் ஹார்பரின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களிடையே நெட்வொர்க்கிங் ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236278
  4. கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச கேப்டன்கள்: அண்டர்-19 உலகக் கோப்பையில் நடப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டாஸின் போது ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேசத்தின் துணை கேப்டன் ஜவாத் அப்ரார் கைகுலுக்கவில்லை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளிலும் எதிரொலித்துள்ளது. புலவாயோ நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளின்போது, டாஸ் போடும் போது இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜனவரி 15 முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடிய முதல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் விதிப்படி) அமெரிக்காவை தோற்கடித்தது. சனிக்கிழமையன்று இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. கைகுலுக்காத கேப்டன்கள் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான உறவுகள் பதற்றமாகவே இருந்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பதற்றமான நிலை நிலவிவருவதால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது. இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் தாக்கம் இப்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியிலும் காணப்பட்டது. சனிக்கிழமையன்று இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜவாத் அப்ரார் ஆகியோர் டாஸ் போட வந்தபோது, இருவரும் வழக்கமான முறையில் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் அஜீசுல் ஹக்கீம் டாஸ் போடுவதற்கு வரவில்லை, அவருக்கு பதிலாக துணை கேப்டன் அப்ரார் வந்தார். இருப்பினும், அஜீசுல் ஹக்கீம் இந்தியாவிற்கு எதிரான ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்ற அப்ரார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் ஆட்டமிழந்தார் சமூக வலைதளங்களில் பரபரப்பாகும் விவாதம் U-19 (19 வயதுக்குட்பட்டோருக்கான) அணி கேப்டன்கள் கைகுலுக்காதது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள விளையாட்டுப் பத்திரிகையாளர் அமோல் கர்ஹட்கர், "மைதானத்திற்கு வெளியே விசா ராஜதந்திரம். மைதானத்தில் கைகுலுக்காத கொள்கை. கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில் கண்ணியவான்களின் விளையாட்டாகக் கருதப்பட்டது," என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார். அதேபோல், வங்கதேச கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் எக்ஸ் வலைதளப் பதிவில், "கை குலுக்காமல் நடத்தும் நாடகம் தொடர்கிறது. இம்முறை இதில் வங்கதேசமும் சேர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சையும், அது தொடர்பான வாத-விவாதங்களும் விளையாட்டு உலகில் பிரபலமானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சை இந்தியா - பாகிஸ்தான்: 'கைகுலுக்காத' நிகழ்வு இதற்கு முன்னதாக, ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 'கைகுலுக்காத' விவகாரம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பையில் இரு நாட்டு அணிகளும் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் ஒன்றையொன்று நேருக்கு நேர் எதிர்கொண்டன. அப்போது டாஸ் போடும் போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோருக்கு இடையே வழக்கமான 'கைகுலுக்கல்' நடைபெறவில்லை. டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இரு அணி கேப்டன்களிடமும் கூறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிஸ் ஐசிசி-இடம் பாகிஸ்தான் புகாரும் அளித்தது. போட்டி நடுவரை மாற்றாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறிவிட்டது. இதன் காரணமாகவே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி தொடங்க தாமதமானது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இருப்பினும், 'கைகுலுக்காத கொள்கையை' இரு அணிகளும் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை கடைப்பிடித்தன. இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போதும் இரு அணிகளுக்கும் இடையே பதற்றம் காணப்பட்டது. மொஹ்சின் நக்வி அந்தக் கோப்பையைத் தன்னுடன் எடுத்துச் சென்றார், இதனால் இந்தியா தான் வென்ற ஆசியக் கோப்பையை இதுவரை பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqy5v4n3qqo
  5. இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் Jan 17, 2026 - 06:55 PM இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர் அவர்களின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, செனட் சபையின் பரிந்துரைகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செனட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்னிலையில் எரிக் மேயர் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்தே இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவராகக் கருதப்படும் எரிக் மேயர், இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். அவர் அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவதுடன், தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இலங்கையின் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் நேற்று (16) தனது பதவியிலிருந்து விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkicbb3u0423o29nqge933ri
  6. கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை Jan 17, 2026 - 06:45 PM கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் திட்டமிட்டபடியே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில்: "இந்த கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் நீண்டகாலச் செயல்பாட்டின் மூலம் அடையத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, ஆசிரியர்-அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணங்கள் விநியோகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பாரிய செயல்பாட்டின் போது, ஒரு சில குழுக்கள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேண வேண்டும். இது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் முழு நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு செயல்பாடு என்பதால், இது தொடர்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். கல்வி மாற்றச் செயல்பாட்டின் விசேட திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி வசதிகளான ஊடாடும் தொடுதிரை (Interactive screens) மற்றும் இணைய இணைப்புகளை முதற்கட்டமாக முதல் இரண்டு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkiby3rc0421o29nvubm84cj
  7. ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை! Jan 17, 2026 - 06:16 PM - 0 போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு 'குறைப்புப் புள்ளிகள்' வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார். மேலும், போதைப்பொருள் பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் பாவனையைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் மா அதிபரால் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாது வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmkiax0dg0420o29nfypvfych
  8. தென் கொரியாவில் பாரிய தீ விபத்து - பல குடிசைகள் எரிந்து நாசம் ! 17 Jan, 2026 | 11:05 AM தென் கொரியாவின் தலைநகர் சியோலின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குரியோங் (Guryong) என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (16) சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகே தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 1,200-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்கள் பொலிஸார் ஈடுப்பட்டதுடன் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளும் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புப் பகுதி, அதிக எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த காலங்களில் பலமுறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236256
  9. இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை Jan 17, 2026 - 04:50 PM இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை படைத்துள்ளார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விரான் சமுதித்த 143 பந்துகளில் 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக இந்த ஓட்டங்களைக் குவித்தார். அவருடன் இணைந்து திமந்த மஹவிதான முதல் விக்கெட்டுக்காக 328 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmki7tyt8041to29nrtits5y7
  10. அத தெரண கருத்துப்படம்.
  11. அப்பாவோட ஏதோ கோவத்தில என்னை ஓடவிட்டு அவமானப்படுத்தியதாக தற்போது உணர்கிறேன். ஆனால் பத்து வயதில் அது புரியவில்லை அண்ணை. மறுக்க மறுக்க ஓடவிட்டது தான் எனக்கு வருத்தம். அப்போது நண்பர்களுடன் விளையாடுகையில் என்னால் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓடமுடிவதில்லை.
  12. 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி பட மூலாதாரம்,BBC Asian Network 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். பாலிவுட் திரையுலகம் தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது, திரையுலகில் பிளவுக் கருத்துகள் அதிகரித்து வருகின்றனவா, பாலிவுட் திரையுலகில் அவரது அனுபவங்கள் எனப் பல விஷயங்களை அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி ஆசிய நெட்வொர்க் எடுத்த நேர்காணலில் ஹரூண் ரஷீத்திடம் பேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகக் காண்போம். 'நானும் மனிதன்தானே!' ஹரூண் ரஷீத்: உங்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பர்மிங்ஹாம் சிம்ஃபனி அரங்கத்திற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுள்ளதா? அப்போது இருந்ததில் இருந்து உங்களில் இப்போது நடந்துள்ள மாற்றங்கள் என்ன? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் மிகவும் பயந்து போயிருந்தேன். நான் சென்னையில் இருந்து வந்தவன். அங்கெல்லாம் ஆர்கெஸ்ட்ரா வேறுவிதமாக இருக்கும். இங்கு நடந்த விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஹரூண் ரஷீத்: நீங்கள் பயந்தீர்கள் என்பதைக் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆஸ்கர் உள்பட எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையுமே வென்றுவிட்ட நீங்கள் ஓர் அரங்கத்திற்குள் நுழையும்போது பயந்ததாகச் சொல்வதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை... ஏ.ஆர்.ரஹ்மான்: நானும் மனிதன்தானே! நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நிலைமையை திறம்படக் கையாள்வோம். இருப்பினும் சில நேரங்களில் நாம் இதுவரை அறிந்திடாத ஓரிடத்திற்குள் நுழையும்போது பயம் வரவே செய்யும். ஆனால் அதையும் மீறி வாழ்க்கை செல்லத்தானே வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 'ரோஜா படத்துடன் திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்' ஹரூண் ரஷீத்: ரோஜா திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியாவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வெளியான பிறகு நடந்த மாற்றம் என்ன? ரஹ்மான்: ரோஜாவுக்கு இசையமைக்கும் போது மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். இதை செய்து முடித்துவிட்டு, திரைத்துறையை விட்டு விலகி, என் சொந்த ஆல்பங்களை தயாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு மாறாக அனைத்தும் மாறின. என் ஸ்டூடியோவில் இசையைப் போட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச ஸ்பீக்கர்களில் நன்றாக இருக்கும். அதுவே திரைப்படத்தில் மோனோவில் கேட்கையில் அவ்வளவுதானா என்றிருக்கும். அதனால் நான் மீண்டும் படங்களுக்கு இசையமைக்கவே போவதில்லை என முடிவு செய்வேன். இசையின் தரம் குறைந்துவிடுவதாகக் கருதினேன். நான் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், எதுவும் மாறப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனை என்னைப் பீடித்திருந்தது. பின்னர் அனைத்தும் மாறியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டால்பி, அட்மோஸ், டிஜிட்டல் எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிவேகமாக நடந்தன. அதன்பிறகு, சரி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டே இருந்தேன். பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து, சரி திரைத்துறையை விட்டு விலக வேண்டுமென்ற முடிவைக் கைவிட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன். 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' ரஹ்மான்: உண்மையில், ரோஜா, பாம்பே, தில் சே (உயிரே) ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த நேரத்தில் நான் இந்தி திரையுலகில் ஒரு வெளியாள் போலத்தான் உணர்ந்து கொண்டிருந்தேன். தால் திரைப்படம்தான் அதை மாற்றியது. ஹரூண் ரஷீத்: 1999இல் தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியானது என்றால் அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு நாட்டிலேயே மிகவும் அற்புதமான இசையை நீங்கள் அளித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஒரு வெளியாள் என்று விவரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா? ரஹ்மான்: அதற்குக் காரணம் நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது. ஆனால், 'எனக்கு உன் இசை மிகவும் பிடித்துள்ளது. நீ இங்கு நீண்டநாள் நீடிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு நீ இந்தி மொழியைக் கற்க வேண்டும்' என்று சுபாஷ் காய் கூறினார். நானும் சரியெனக் கூறி, ஒரு படி மேலே சென்று உருது மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், 60கள், 70களின் இந்தி இசைக்கு தாயாக இருப்பது உருதுதான். பின்னர் அதனுடன் ஒத்திருக்கக்கூடிய அரபி மொழியை படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து பஞ்சாபி மொழி மீது ஆர்வம் கொண்டேன். உயிரே படத்தில் கதாபாத்திரத்தையே மாற்றிய ஒரு பாடல் ஹரூண் ரஷீத்: சமீபத்தில் அந்தந்த மொழிக்குரிய கலாசார பண்புகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். குறிப்பாக, உயிரே திரைப்படத்தில் வரும் நெஞ்சினிலே பாடலில் மலையாள கலாசாரம் கலந்திருக்கும். அது தற்போது அதிகம் விவாதத்திற்கு உள்ளாகிறது. சமீபத்தில் வெளியான பரம் சுந்தரி திரைப்படத்தில் மலையாள சமூகம் காட்டப்பட்ட விதம் விமர்சிக்கப்படுகிறது. 1998இல் ஏ.ஆர்.ரஹ்மானால் கலாசாரத்தை துல்லியமாகக் காட்ட முடிந்தபோது, இப்போது ஏன் முடியவில்லை என்று கேட்கப்படுகிறது. ரஹ்மான்: மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்களால் முன்பைவிட இப்போது சிறப்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஹரூண் ரஷீத்: இருப்பினும் 1998இல் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது? ரஹ்மான்: அப்போது என்ன நடந்தது என்றால், மணிரத்னம் இந்த டியூனை எடுத்துக்கொண்டு, எனக்கு கல்யாண கனவு போன்ற ஒன்று வேண்டுமென்றார். சரி, எந்த மரபுப்படி அது இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அவர் என்னையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான் மலையாள முறையைத் தேர்வு செய்தேன். அவர் சரியெனக் கூறி, இரண்டாவது கதாநாயகியை ஒரு மலையாளியாகக் கதையில் மாற்றிவிட்டார். ஹரூண் ரஷீத்: அப்படியெனில், ப்ரீத்தி ஜிந்தாவின் பாத்திரம் மலையாளி கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே 'நெஞ்சினிலே' பாடலுக்காகத்தானா? ரஹ்மான்: ஆமாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அந்த டியூன் மிகவும் சுவாரஸ்யமானது எனக் கருதினார். இன்றும்கூட அந்தப் பாடலை, மலையாளம் புரியவில்லை என்றாலும், பலர் பாடுகிறார்கள். அதுமட்டுமின்றி நான் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதுவரைக்கும் எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று, அங்கு நிலைத்தது இல்லை. அது முற்றிலுமாகப் புதிய கலாசாரம். இளையராஜா இரண்டு படங்களைச் செய்திருந்தார். அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன். காணொளிக் குறிப்பு தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா? ஹரூண் ரஷீத்: பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக்கொள்வேன். ஹரூண் ரஷீத்: ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான்: ஏனெனில், வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதைத் தேடிச் செல்வதில்லை. நான் எதையாவது தேடிச் செல்லும்போது அது துரதிர்ஷ்டமாக அமைவதாக உணர்கிறேன். நான் எதற்குத் தகுதியானவனோ அதைக் கடவுளிடம் இருந்து பெறுகிறேன். பட மூலாதாரம்,BBC Asian Network சாவா திரைப்படம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதா? ஹரூண் ரஷீத்: நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்... ரஹ்மான்: அதனால்தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும். ஹரூண் ரஷீத்: ஆனால் இதன் காரணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா? ஏனெனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு படத்திற்கு உங்கள் இசையை வழங்கும்போது, அந்தப் படத்திற்கு எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை அல்லது எந்தத் தீய நோக்கமும் இல்லை என்பதை ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று ஒரு படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிவது மிகவும் கடினமாக உள்ளது. ரஹ்மான்: அது மிகவும் உண்மை. மேலும் சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன். ஹரூண் ரஷீத்: ஆனால், 'சாவா' படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம்? ஏ.ஆர். ரஹ்மான்: ஆமாம். ஹரூண் ரஷீத்: நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உங்களிடம் நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான்: அது பிளவுபடுத்தும் படம்தான். அது பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், இயக்குநரிடம் நான், 'இந்தப் படத்திற்கு நான் ஏன் தேவை?' என்று கேட்டபோது, 'இந்தப் படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை' என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் மேலும் அதன் முடிவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிச்சயமாக, மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்கள் திரைப்படங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு உள்மனசாட்சி என்ற ஒன்று உள்ளது. எது உண்மை, எது திரிக்கப்பட்டது என்பதை அதனால் அறிய முடியும். ஹரூண் ரஷீத்: வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாக்கப்படுவது பிரச்னையல்ல. அவை உருவாக்கப்படுவது உண்மையில் ஓர் அற்புதமான விஷயம். அது வரலாற்றைக் கொண்டாடுகிறது. அது கதாநாயகர்களைக் கொண்டாடுகிறது. அந்தப் படங்களுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள்தான் சிக்கலானவையாக இருக்கக்கூடும், இல்லையா? ஏ.ஆர். ரஹ்மான்: சாவா மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று. அது ஒவ்வொரு மராட்டியரின் ரத்தம் போன்றது. படம் முடிந்ததும், பெண்கள் அந்த அழகான கவிதைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம். அதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இசையமைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஹரூண் ரஷீத்: இது மாதிரியான படங்களில் எனக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால், திரையில் ஒவ்வொரு முறை ஒரு எதிர்மறை விஷயம் நடக்கும்போதும், கதாபாத்திரம் 'சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' போன்றவை வருகின்றன. இந்தப் படத்தில் மட்டும் சொல்லவில்லை; பிற படங்களிலும் இப்படியெல்லாம் காட்டப்படுகின்றன. ரஹ்மான்: ஆம், ஆனால் எனக்கு மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இத்தகைய தவறான தகவல்களால் ஈர்க்கப்படுவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எனக்கு மனிதத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது. ஹரூண் ரஷீத்: ஆனால், இத்தகைய விஷயங்கள் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதைக் காட்டுகிறதா? ரஹ்மான்: ஆம். அதோடு மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு இதயம் இருக்கிறது, அன்பு இருக்கிறது, இரக்கம் இருக்கிறது. தினசரி காலையில் எழுந்து 'இன்று எத்தனை பேரை நான் வெறுக்கப் போகிறேன்' என்று கருதுவோமா? இல்லை. அது உங்கள் இதயத்தில் இருக்கும் அமிலத்தைப் போன்றது. அது இதயத்தையே அழித்துவிடும். 'பிராமணப் பள்ளியில் படித்தேன்' ஹரூண் ரஷீத்: சமீபத்தில் நீங்கள் ராமாயணம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மத ரீதியான நூல் ஒன்று திரைப்படமாக வடிவம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் நன்கு அறியப்பட்ட ஒரு முஸ்லிம். அப்படியிருக்க இந்தப் படத்தில் உங்கள் பங்கு இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கலாம். இது ஏதாவது வகையில் உங்களை பாதித்துள்ளதா? ரஹ்மான்: நான் படித்தது ஒரு பிராமணப் பள்ளியில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் ராமாயணம், மகாபாரதம் இருக்கும். எனவே எனக்கு முழு கதையும் நன்கு தெரியும். மேலும், அந்தக் கதை நற்பண்பு, உயர்ந்த லட்சியங்கள் போன்ற விஷயங்கள் பற்றியது. மக்கள் பல விதமாக வாதிடலாம், ஆனால் அந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் மதிக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு நல்ல விஷயத்தையும் விட்டுவிடக் கூடாது என்கிறார் நபிகளார். அறிவு என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. அதை நீங்கள் எல்லாவற்றில் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், ஒரு யாசகனிடம் இருந்து அரசன் வரை, எதிர்மறை செயல்களில் இருந்து நேர்மறை செயல்கள் வரை அனைத்திலும் கற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது எல்லா இடங்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்று. அதனால், 'நான் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை' என்றோ, 'இங்கிருந்து நான் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்றோ ஒருவரால் ஒதுக்கிவிட முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vxdzkmpk2o
  13. தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் நாகதீப விகாராதிபதி ஜனாதிபதியிடம் கூறிய விடயம் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார். நயினாதீவுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாக தீப விகாராதிபதியை சந்தித்து, கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்சினை தையிட்டி விகாரை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த விகாரையை சுற்றியுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், காணி கையளிப்புக்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும் எனவே உங்கள் காலத்திலேயே காணிகளை கையளியுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன் என தெரிவித்தார். https://tamilwin.com/article/naga-deepa-vicar-meet-president-1768637751
  14. போதைப்பொருள் என்ற அரக்கனுடன் சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 17 Jan, 2026 | 03:43 PM யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ''முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, போதைப்பொருளுக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கொழும்பில் இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இம்பெற்றது. 2ஆவது நிகழ்வு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிராமிய மட்டத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டுவருகின்றனர். போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளைஞர்களை மீட்க வேண்டும். இளைஞர்கள் போதைப் பொருள் பிசாசிடம் சிக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்பும்போது யாழின் மரபுரிமை, கலாசாரம், கௌரவம், அடையாளம் என்பவற்றை பாதுகாத்து அதனை செய்யுமாறு ஜனாதிபதி எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேவேளை, கொழும்பில் “கோட்சூட்” அணிந்து, யாழில் வேட்டியுடன் அரசியல் பேசும் நபர், யாழில் வரவுள்ள சர்வதேச மைதானத்துக்கு எதிராக வழக்கு போடப்போகின்றாராம். எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களாக இவர்கள் மாறியுள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது. தமிழரசுக் கட்சியினர் உட்பட எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் எவரும் வரவில்லை. நிகழ்வுக்கு போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி அண்ணனுக்கு கோட்சூட் நபர் கூறினாராம். இப்படிதான் சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது. இந்நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/236273
  15. சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் படகுடன் கடற்றொழிலாளர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டு படகுகள் நான்கு நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடற்றொழில் விசைப்படகுகள் கடலில்10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதிக்கப்படுகின்றது. காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கரையோரம் மீன்பிடியில் ஈடிபடுவதுடன், இலங்கை கடற்றொழிலார்களின் உடமைகளை சேதப்படுத்தால் கடற்றொழிலார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக கடற்றொழிலார்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காரைக்கால் பகுதி கடற்றொழிலார்கள் பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது என கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட கடற்றொழிலார்கள் தங்கச்சிமட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீன்பிடி விசைப்படகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காரைக்கால் கடற்றொழில் விசைப்படகையும், அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு சிறை பிடித்து அழைத்து வந்த கடற்றொழிலாளர்கள் 14 பேரையும் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததுடன், மீன்பிடி விசைப்படகை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவகின்றனர். தனுஷ்கோடி கடற்பரப்புக்குள் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் வருவதை நிறுத்திக் கொள்வதுடன் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்த பின் படகு ஒப்படைக்கப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் காரைக்கால் மீன் பிடிப்படகை கடற்றொழிலாளர்களுடன் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் சிறைபிடித்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/boat-captured-karaikal-fishermen-will-be-released-1768581787
  16. 'சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை' - அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்பு 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை" - தமிழ்நாடு முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்: அகத்தியன், கருவனூர் - 3 கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2 அஜித், அலங்காநல்லூர் - 2 பிரசாத், மதுரை - 2 சூர்யா, வாடிப்பட்டி - 2 ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பரிசுகள் விவரம் 10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர். முதல்வர் வருகை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார். பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,2026 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது பாதுகாப்பு ஏற்பாடுகள் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  17. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 17 Jan, 2026 | 03:07 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின. ஆனால், மற்றொரு முன்னாள் உலக சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன். சி குழு - இங்கிலாந்து வெற்றி ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர் டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம் நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது. உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய். https://www.virakesari.lk/article/236231
  18. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkhxm4pq0416o29nqb7zl9k7
  19. நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு - படங்கள் இணைப்பு 17 Jan, 2026 | 11:49 AM இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சனிக்கிழமை (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன. இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது. மேலும், இப் பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236263
  20. 5ஆம் ஆண்டில் சாதா 50மீற்றர் ஓட்டத்தில் (மறுக்க மறுக்க ஆசிரியை கட்டாயப்படுத்தி ஓடவிட்டார்) கடைசியாக ஓடிய எனக்குத்தானா அப்ப முதல் பரிசு!! முன்னுக்கு ஓடிய நண்பர்கள் இவன் எப்படா ஓடி முடிப்பான் என எல்லைக் கோட்டில் ஏளனமாகப் பார்த்தது எல்லாவற்றையும் தம்பர் இறும்பூத வைத்துவிட்டார்!
  21. வடக்கு கடலில் அபூர்வமான குளிர் நிலை : காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது – நாகமுத்து பிரதீபராஜா 17 Jan, 2026 | 11:34 AM கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்ந்த கடல் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தெற்கு பகுதியில் காணப்படும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் வானிலை மற்றும் காலநிலைப் பாங்குகளைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக முக்கியமான காரணியாக விளங்குகிறது என்றும், அதனால் வடக்கு பிராந்தியக் கடற்பரப்பில் தற்போது காணப்படும் இந்த அசாதாரண குளிர் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ‘டித்வா’ புயலுக்குப் பின்னரான நாட்களில் இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் பொதுமக்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளும் மிகுந்த கரிசனையுடன் அணுகுவது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236259
  22. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/236240
  23. இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் Jan 17, 2026 - 10:38 AM இன்று (17) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 பாகை செல்சியஸ் எனவும், பதுளை பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 பாகை செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 பாகை செல்சியஸ் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkhujyq6040zo29n4kn8hm3t
  24. யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு Published By: Vishnu 17 Jan, 2026 | 03:14 AM ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அதன்படி நாளை மதியம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூபியில், பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/236233
  25. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தமாக தனி அரசாங்கம் உள்ளது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன், மற்ற நாடுகளும் அவரது திட்டத்தை எதிர்க்கின்றன, அமெரிக்காவில் உள்ள பலரும் இதுகுறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற தூதுக்குழு கிரீன்லாந்திற்குச் சென்றிருந்தது. அந்தத் தூதுக்குழு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரைச் சந்தித்தது. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.