Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது - சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம் Published By: RAJEEBAN 11 JAN, 2024 | 05:01 PM இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது என தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த இனப்படுகொலை வழக்குவிசாரணை இன்று ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதன் போது தென்னாபிரிக்கா சார்பில் வாதத்தை முன்வைத்த தென்னாபிரிக்காவின் உயர்நீதிமன்ற சட்டத்தரணி அடிலா ஹாசிம் இஸ்ரேல் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றது அதன் நோக்கங்கள் இனப்படுகொலையை வெளிப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஆயுதங்களை பயன்படுத்திய பாரியளவிலான படுகொலைகளில் அழிவுகளில் ஈடுபடுகின்றது மேலும் பொதுமக்களை சினைப்பர் தாக்குதல் மூலம் இலக்குவைக்கின்றது. பாலஸ்தீனியர்களிற்கான பாதுகாப்பு வலயங்களை அறிவித்த பின்னர் அவற்றின் மீது குண்டுவீச்சுதாக்குதலை மேற்கொள்கின்றது. காசாவில் பாலஸ்தீனியர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான உணவு நீர் சுகாதாரம் எரிபொருள் தொடர்பாடல் போன்றவற்றை மறுக்கின்றது சமூக கட்டமைப்புகளை வீடுகளை பாடசாலைகளை மசூதிகளை தேவாலயங்களை மருத்துவமனைகளை அழிக்கின்றது. பெருமளவானவர்களை கொலை செய்கின்றது கடும் காயங்களிற்குட்படுத்துகின்றது பெருமளவு சிறுவர்களை அனாதைகளாக்கியுள்ளது. இனப்படுகொலைகள் ஒரு போதும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதில்லை, ஆனால் இந்த நீதிமன்றத்திற்கு 13 வார ஆதாரங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173718
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு என்றும் திகழும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி! 11 JAN, 2024 | 04:10 PM அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்ற கழகம்தான். தமிழ்நாடு அரசு 2021ம் அயலகத் தமிழர், மறுவாழ்வு துறையை உருவாக்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 58 நாடுகளிலிருந்து அயலக தமிழகர்கள் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தாய் தமிழ்நாட்டில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வரும்போதெல்லாம் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அயலக தமிழர்களாகிய நீங்கள்தான் இருக்கிறீர்கள். முன்பைவிட தமிழர்கள் இப்போது வெளிநாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறோம். வெளிநாட்டு வேலை ஏற்பாடு மட்டுமல்ல அங்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த வெளிநாட்டுத் தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றிருந்த நிலையை மாற்றியது நமது கழக அயலக அணிதான். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை 8 நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் வகையில் தற்போது தி.மு.க அயலக அணி ஏற்பாடு செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலங்கை , மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள் , கவிஞர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர். நிறைவு நாளான நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றி எனது கிராமம் என்ற திட்டத்தை துவக்கி வைத்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்குகிறார். https://www.virakesari.lk/article/173710
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு - ஹேக் சர்வதேச நீதிமன்றில் இன்று ஆரம்பம் Published By: RAJEEBAN 11 JAN, 2024 | 12:09 PM காசாவில் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் அதேவேளை இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள இனப்படுகொலை வழக்கினை இன்று சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. இஸ்ரேலிற்கு எதிரான ஹமாசின் தாக்குதல் 1948 சமவாயத்தினை மீறுகின்றது என தெரிவித்து தென்னாபிரிக்க தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு குறித்தே சர்வதேச நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. ஹமாஸ் கற்பழிப்பாளர் ஆட்சிக்கு தென்னாபிரிக்கா அரசாங்கம் சட்டபூர்வ அரசியல் பாதுகாப்பை வழங்குவதால் தென்னாபிரிக்காவின் அபத்தமான இரத்த அவதூறுகளை களைவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்;துள்ளது. காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது. தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு கொலம்பியா பிரேசில் பாக்கிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் ஆதரவளித்துள்ளன ஹமாசின் ஒக்டோபர்ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் பலவாரங்களாக தொடர்கின்ற நிலையிலேயே தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் 23000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்துள்ளது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவின் சனத்தொகையில் 85 வீதமானவர்கள் -1.9 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயிரகக்கணக்கான கட்டிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச நீதிமன்றத்திற்கான 84 பக்க ஆவணத்தில் தென்னாபிரிக்காவினால் முறைப்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மையை கொண்டவை - இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீன தேசிய இனமற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என தென்னாபிரிக்க தெரிவித்துள்ளது. இனப்படுகொலை வழக்குகள் நிரூப்பிப்பதற்கு கடினமானவை - பல காலம் நீடிக்க கூடியவை எனினும் சர்வதேச நீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொல்வதையும் அவர்களிற்கு கடுமையான மன மற்றும் உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/173672
-
புதிய கொவிட் பிறழ்வு வேகமாக பரவுவதாக WHO எச்சரிக்கை
நாடுகள் தயாராக இருக்க வேண்டும் – கொரோனா திரிபு தொடர்பில் WHO தலைவர் எச்சரிக்கை 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால்,கொவிட்-19 எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது. 2020இல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, இலட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர். பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது. இலட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கொவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின. இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர். 2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கொவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து எச்சரித்துள்ளார். அவர் இது குறித்து தெரிவித்ததாவது: 2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல. மேலும் சில இடங்களில் இது பரவிய தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287859
-
ரத்தக் கறை, டாக்ஸி டிரைவர் சாதுர்யம்... - 4 வயது மகனைக் கொன்ற பெண் சிஇஓ கைதானதன் பின்புலம்
Bengaluru CEO: 4 வயது மகன் கொலை, அறையில் கிடைத்த ஆதாரம் - தாய் Suchana Seth கைதானது எப்படி?
-
கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!
கடந்த இரு நாட்களில் 10 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தகவல் 11 JAN, 2024 | 08:30 PM கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் சிறுவர் முதல் பெரியோர் வரையான 10 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெலிபன்னை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி 2 வயது குழந்தை மற்றும் அவரது தாய் காணாமல் போயுள்ளார். காணாமல்போன பெண் ஒரு யூடியூப் சேனலை நடத்திச் செல்பவர் என வெலிபன்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கோண்டாவில் பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி வறக்காப்பொலவில் 26 வயது யுவதியும் மொரட்டுவையில் 57 வயது பெண்ணும் முல்லேரியாவில் 67 வயது நபரொருவரும் தம்பகல்லவில் நபரொருவரும் அம்பாறை பிரதேசத்தில் 53 வயது நபரொருவரும் வவுணதீவு பிரதேசத்தில் 42 வயது நபரொருவரும் காணாமல் போயுள்ளனர். மேலும் நுவரொலியா ,மெதகம பிரதேசத்தில் 40 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173695
-
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் டுபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. https://thinakkural.lk/article/287806
-
சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர் மலை வழக்கு
Published By: VISHNU 11 JAN, 2024 | 09:06 PM சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே வியாழக்கிழமை (11) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது வியாழக்கிழமை (11) B688/2002 நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். வியாழக்கிழமை (11) சந்தேகநபர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல் வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம். மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்டு செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்கள் குறித்த வழக்கினை இன்றைய தினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார். குறித்த வழக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோர் தோன்றியிருந்தனர். https://www.virakesari.lk/article/173731
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கும் செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவில் செஞ்சி மஸ்தான் அமைச்சரால் அமோக வரவேற்பு இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11) நாளையும் (12), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நேரடியாகச் சென்று வரவேற்றார். இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287856
-
ரின்மீன் இறக்குமதிக்கு தற்காலிக தடை : காரணத்தை கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்
Published By: VISHNU 11 JAN, 2024 | 07:34 PM தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று வியாழக்கிழமை முதல் (11) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று கடற்றொழில் அமைச்சில் இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதன் போது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவு ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின்மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விசேடமாக இவ்வருடம் ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரின்மீன்களுக்கு வட் வரி விதிக்கப்பட்டதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின்மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இலங்கை சந்தைக்கு தேவையான ரின்மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்ற போதும் கடந்த காலங்களில் பெருமளவு ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ரின்மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள செஸ் மற்றும் வட் வரி காரணமாகஇறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின்மீன்களின் விலைக்கு தங்களது உற்பத்திகளை வழங்க முடியாதென்பதால் தங்களது தொழிற்சாலைகளை மூடி விடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர், இன்று முதல் ரின்;மீன் இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களுக்கு மேலதிக வரி ஒன்றை அறவிடுவதற்கு ஏதுவான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் திருமதி குமாரி சோமரத்னவுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் இலங்கையில் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மீன்களை இறக்குமதி செய்யும் போது தேசிய ரின்மீன் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியதுடன் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தை விலை மற்றும் விநியோகம் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குமாரி சோமரத்ன, பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி அனுஷா போகுல, தம்மிக ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173737
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
IMF பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை Digital News Team சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி குழுவினருடன் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். அவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் முக்கிய நோக்கமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியுடன் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் குறித்த குழு கண்காணிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் கூறியுள்ளது. https://thinakkural.lk/article/287835
-
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு : மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க
11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார். அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கெமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173740
-
மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது
அம்பாறையில் கடும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு Published By: DIGITAL DESK 3 11 JAN, 2024 | 04:42 PM அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன. அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/173713
-
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு
சுகாதார தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை: இராணுவத்தினர் அரச வைத்தியசாலைகளில் கடமையில் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு பதிலடியாக, அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கும் இடையூறு இல்லாத நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்புப் படைத் தளபதிகளுக்குத் தேவைக்கேற்ப படைகளை அனுப்புவதற்குத் தயார்படுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களுக்கான பாதுகாப்புப் படைத் தளபதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மஹமோதர போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினரை அனுப்பியுள்ளனர். , அத்துடன் மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மற்றும் மீரிகம ஆகிய அரச வைத்தியசாலைகளிகளிலும் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர். கிட்டத்தட்ட 500 வீரர்கள் தற்போது முக்கியமான நடவடிக்கைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் லியனகே, விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்புப் படைத் தளபதிகளை மேலதிக துருப்புக்களை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களின் அசௌகரியங்களை குறைத்து, தடையற்ற மருத்துவ சேவையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். வேலை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சம்பள உயர்வு போன்ற சிறு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287827
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
கண்டிக்கு விஜயம் செய்தார் பிரித்தானிய இளவரசி Published By: DIGITAL DESK 3 11 JAN, 2024 | 04:06 PM இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (11) கண்டியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173699
-
யாழில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்
வலிகாமம்மேற்கு பிரதேச சபையின் இணையத்தளம் https://valikamamwest.ps.gov.lk/ வலிகாமம்மேற்கு பிரதேச செயலகத்தின் இணையத்தளம் http://www.valikamamwest.ds.gov.lk/index.php/en/
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கடும் ஏவுகணை ஆளில்லா விமான தாக்குதல்கள் Published By: RAJEEBAN 10 JAN, 2024 | 12:48 PM செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பெருமளவு ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டனர் எனவும் இதனை தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு மற்றும்காயங்கள் குறித்த தகவல்களை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யேமனின் துறைமுகநகரங்களான ஹெடெய்டா மொக்கா துறைமுக நகரங்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தனியார் பாதுகாப்பு அமைப்பான அம்பிரேய் தெரிவித்துள்ளது. ஹெடெய்டா சம்பவத்தில் கப்பல்கள் ஏவுகணைகள் ஆளில்லா விமான கப்பல்களை பார்ப்பதை அறிவித்துள்ளன. மொக்காவில் கப்பல்கள் ஏவுகணைகள் ஏவப்படுவதையும் ஆளில்லா விமானங்கள் தாக்குவதையும் அவற்றின் பின்னால் சிறிய படகுகள் காணப்படுவதையும் ; கப்பல்கள் பார்த்துள்ளன. குண்டுகளுடன் ஆளில்லா விமானங்களையும் குருஸ் ஏவுகணைகளையும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றையும்பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெற்றன என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/173593
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தார் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன் Published By: PRIYATHARSHAN 11 JAN, 2024 | 11:24 AM மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne,) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் புதன்கிழமை (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர். இந்நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோர் வரவேற்றனர். இதேவேளை, கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் விஜயம் செய்தனர். இலங்கையில் பிரித்தானிய இளவரசி தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, இலங்கையில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக கொழும்பில் உள்ள சேவ் தி சில்ட்ரன் அலுவலக ஊழியர்களை இளவரசி ஆன் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளை கேட்டு அறிந்துகொண்டார். மேலும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசி ஆன், சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். அத்துடன் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்கும் சமூக-உணர்ச்சி கற்றல் கருவித்தொகுப்பான 'தில்லி' திட்டத்தின் அமர்வையும் அவதானித்தார். குறித்த வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களையும் இளவரசி ஆன் பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/173665
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆர்டிகல, டபிள்யூ.டி.லக்ஷ்மன்,பி.பி. ஜயசுந்தர மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை பெயர் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை . ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் கையாளப்போகும் விதம் தொடர்பாக எதிர்க்கட்சி போன்றே 220 இலட்சம் மக்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து,விசாரணைகளை மேற்கொண்டு,தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் ஏன் உத்தேசிக்கவில்லை என கேட்கிறோம். நாட்டை வங்குரோத்தடையச் செய்ததன் மூலம் குறித்த நபர்கள் தனிப்பட்ட நலன்களைப் பெற்றுள்ளார்களா என்பது பிரச்சினைக்குரிய விடயம். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பின்னர் அவர்களது குடியுரிமை தொடர்ந்து இருக்க இருக்க வேண்டுமா? 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய நீதி அமைச்சர் கூட தெரிவித்துள்ளார். ,இந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் வற்வரியை அதிகரிக்க வேண்டிய ஏற்பட்டிருக்காது. அத்துடன் நனோ உர மோசடியாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொருளாதாரத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? சேதன உர மோசடி காரணமாக நாட்டுக்கு 711.8 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அனுபவமற்ற இந்நிறுவனம் கொள்முதல் வழிகாட்டுதல்களை விதிமுறைகளைக் கூட மீறியுள்ளது. விநியோகஸ்தருக்கு 711 மில்லியன் ரூபாவை அவ்வேளையிலயே பணமாக செலுத்தப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு முன்னரோ அல்லது அங்கீகாரம் கிடைத்த அன்றோ உரங்களை விமானத்தில் ஏற்றி கொண்டு வரப்படுவது வழக்கத்திற்கு மாறான அதிசயமானதொரு விடயம். உரத் தொகையை பகுதி பகுதியாக இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு இருந்தும்,மொத்த பங்குகளின் மதிப்புக்காக ஒரு கடன் பத்திரத்தை திறந்ததன் காரணமாக 99 இலட்சம் தேவையற்ற செலவுகளை அரசாங்கம் சுமக்க நேரிட்டுள்ளது. அத்துடன் எரிவாயு மோசடியால் ஏற்பட்ட இழப்பு இதைவிடவும் அதிகமாகும். சியாம் கேஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டாலும்,குறிப்பிட்ட நிறுவனத்தின் கோரிக்கையை அனுமதிக்காமல்,அதே நிபந்தனைகளின் கீழ் ஒகியு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்ததால், 1138 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாடு வங்குராேத்தாக காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்களில் சிலர் இன்னும் அரசாங்கத்தில் இருக்கின்றனர். ஏன் அவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக,முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு நட்டஈடு செலுத்த நேரிட்டிருக்கிறது. இதன் பிரகாரம்,நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர்ந்த தீர்ப்பின் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம். அதனால் இவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/173642
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:36 PM ஆர்.ராம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர். அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளார். மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173656
-
இஸ்ரேலை பாதுகாக்க கடற்படையை அனுப்புவதை நிறுத்திவிட்டு கிழக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்ய ஈடுபடுத்துக - ஹக்கீம்
Published By: VISHNU 10 JAN, 2024 | 08:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கமலுக்கு எமது கடற்படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன். செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற்படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/173650
- வெத்து இலை - T. கோபிசங்கர்
- வெத்து இலை - T. கோபிசங்கர்
-
உடற்றும் பிணி – அருணா சிற்றரசு சிறுகதை
நன்றி அக்கா பகிர்விற்கு. பல இடங்களில் எங்கள் குடும்ப நிலையும் கதை தொட்டுச் சென்றது. 2011 இல் தம்பி 35 நாட்களுக்கு மேல் வென்ரிலேற்றர் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கையில் அம்மாவும் நானும் பட்டபாடுகள் கனவு போல இருக்கிறது. அப்பா கவலையை வெளிக்காட்டவில்லை. இன்று தம்பி மீண்டு வந்து தன்னுடைய உடல் இயலாமையைத் தாண்டி பல சமூக சேவைகளை முன்னெடுக்கிறான். எனக்கும் சேவை செய்வதற்கு உந்துதலாக இருக்கிறான்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா Digital News Team மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கட்டார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள். செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் “ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர். இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும். ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது. “டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன. https://thinakkural.lk/article/287700