Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெற்றோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது. மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், “ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது. https://thinakkural.lk/article/268404
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உட்பட 7 பேர் பலி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையான போது பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் டிரோன்களை ரஷ்யா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். https://thinakkural.lk/article/268265
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பகுதியில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/162336
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
பசும்பாலா பசுப்பாலா சரி?
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
அவ்வளவு மோசமான மனநிலையுள்ள மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அண்ணை. சரிப்படுத்தியாச்சு தானே.
-
இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் மற்றும் ஒரே ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது. அங்கு 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்கா தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் தொடங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார். ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “கடந்த 1960களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன். அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. "அங்கிருந்த தேவாலயத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது,” என்று இளங்கோவன் தெரிவித்தார். குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார். அவை, "பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்)," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று அவர் விளக்கினார். இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்து கூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. "எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என்கிறார் விஞ்ஞானி இளங்கோவன். இந்த விதியை கருத்தில் கொண்டு, "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்." அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் இளங்கோவன். மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது எனவும் புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். "தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம், மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது,” எனக் கூறினார். பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN “ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்,” என்று கூறுகிறார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து. “வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்கிறார் அவர். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது,” எனக் கூறினார். குலசேகரப்பட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும் “குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரப்பட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்," என்று கூறுகிறார் நெல்லை சு. முத்து. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர். இதன் மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்,” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c843zmy0gpwo சிவப்பு குறியிட்ட பகுதி குலசேகரப்பட்டினம்.
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
இந்த திரியை வாசித்தோர் குறைவு. ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:29 PM இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 55 பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக் காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால் வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும் கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது. இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய நாளில் (ஆவணி 12) வருடா வருடம் இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய வகையில் நினைவேந்தல்களை பல வகையான சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு வருகின்றோம். எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று என்பதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும் உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது. எனவே, வீரமுனை படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம். 01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும் 02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும் 03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் 04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் 05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும். https://www.virakesari.lk/article/162218
-
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. 11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது நீதித்துறையில் சாதனையாக கருதப்பட வேண்டும் என சாடியுள்ளார். ஒருபுறம் அமலாக்கத்துறை செம்மண் குவாரி வழக்கை கையில் எடுத்திருக்கும் நிலையில், முடிந்ததாக நினைத்த சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பது அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இது போன்று தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமான செயல் அல்ல என்பதால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூருக்கு கடைசி நேரத்தில் வழக்கை மாற்றியது ஏன் என நீதிபதி கேள்வி. 20 ஆண்டுகளாக நடந்த வழக்கு 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் 2002ம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்த வழக்கின் விசாரணை முதலில் விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. பின் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜூன் 28ம் தேதி அவரையும் அவரது மனைவியையும் விடுவித்திருந்தது. தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை அவரது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இதனை தாமாக முன்வந்து நேற்று (ஆகஸ்ட் 10)விசாரித்தார். படக்குறிப்பு, 228 பக்க தீர்ப்பை வேலூர் நீதிபதி எப்படி நான்கு நாட்களில் எழுதினார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி. வழக்கை கடைசி நேரத்தில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? - நீதிபதி கேள்வி அப்போது இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில், மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீதிபதியின் உத்தரவில், விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு விசாரணை முடியும் தருவாயில் வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை பெரும்பங்கு முடித்து, முடியும் தருவாயில் இருந்த போது வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28ம் தேதி , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதன் பின் ஜூன் 30 ம் தேதி பதவி விலகியுள்ளார். வேலூர் நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது இந்த நீதிமன்றத்தின் சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் 109 பிரிவின் கீழ் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மாமியார் பி சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 228 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, 318 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறது, இப்படி செய்வதற்கு நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை: வழக்கின் பின்னணி என்ன?18 ஜூலை 2023 நான்கு நாட்களில் எப்படி 228 பக்கத் தீர்ப்பு தயாரானது? - நீதிபதி காட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு எப்படி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவுடன் வேகமாக நகர ஆரம்பித்தது என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கேள்வி எழுப்பியுள்ளது. “ஜூன் 2023-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் (பொன்முடியின்) நட்சத்திரங்கள் அவருக்கு சாதகமாக கட்சிதமாக அமைந்தன, அதுவும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் ஆசியுடன். ஜூன் 23ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நான்கு நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட இது போன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். இரண்டு நாட்கள் கழித்து நீதிபதி நிம்மதியாக பணி ஓய்வு பெற்றுவிட்டார்.” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடிக்கு நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமலாக்கத்துறையால் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது இதிலிருந்து மாறுபட்ட வழக்காகும். 2006-2011ம் ஆண்டுகளில் கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரிகளுக்கு அனுமதி அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்தான வழக்கையே அமலாக்கத்துறை கையில் எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/c8v03e4v37vo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் ; காணாமல் போனோர் அலுவலகம் Published By: DIGITAL DESK 3 08 AUG, 2023 | 04:42 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது. இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/161896
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணம் குறித்த காரணம் வெளியாகும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று (08) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார். மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் குழு தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். இதன்படி, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/267428
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை கொல்வதற்கு ரஸ்யா முயற்சி- தகவல் வழங்கிய பெண் கைது Published By: RAJEEBAN 08 AUG, 2023 | 06:11 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த விடயங்களை பெற்றுக்கொள்வதற்கு முயன்ற பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். மொஸ்கோ இராணுவத்திற்கு உதவும் உக்ரைன் பிரஜைகளை உக்ரைன் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தன்னை கொல்வதற்கான சதி குறித்து அதிகாரிகள் தகவல்வழங்கியுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கைது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யா இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ரஸ்ய தரப்பிடம் தகவல்களை வழங்க முற்பட்டவேளை இந்த பெண் பிடிபட்டார் என உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் அவரது விஜயம் குறித்த தகவல்களை அந்த பெண் பெற முயன்றார் என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் சமையல் அறையில் அந்த பெண் உக்ரைன் அதிகாரிகளுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெலென்ஸ்கி குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் தங்களிற்கு இந்த சதி குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் இதனை தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்ளும் பகுதி மீது பாரிய விமானதாக்குதல்களை மேற்கொள்ள ரஸ்யா திட்டமிட்டது, சந்தேக நபர் அந்த பகுதியில் காணப்படும் இலத்திரனியல் பொறிமுறை அமைப்புகள் வெடிமருந்து கிடங்குகள் போன்றவை குறித்த தகவல்களை வழங்க முயன்றார் – ரஸ்யா அவற்றை இலக்குவைப்பதற்கு உதவுவதே அவரின் நோக்கம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/161834
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் - 3 : இஸ்ரோ தகவல் 06 AUG, 2023 | 09:57 AM சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சந்திரயான் புவி ஈர்ப்பு விசையில் இருந்துவிலக்கப்பட்டு நிலவை நோக்கிசெல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. 5 நாட்கள் பயணத்துக்குபின் நிலவுக்கு அருகே விண்கலம் நேற்றிரவு சென்றது. இதையடுத்து விண்கலத்தை நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் முயற்சி 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு நிலவின் வட்ட சுற்றுப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தற்போது நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக இன்று (ஆக.6) இரவு 11 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/161714
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 09:14 AM வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுதிய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் ஆஜர்படுத்தினர். இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அஹமட் ரசீம் உத்தரவிட்டார். கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, யாழ்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிறிந்ததாகவும், சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் வவுனியாவில் இல்லை என்றும், சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர் சந்தேகநபர் அனுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/161659
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல் Published By: RAJEEBAN 04 AUG, 2023 | 05:43 PM ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்களை தளத்திறகு பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் கண்டு அவற்றை அழித்துள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சேதங்கள் குறித்து எதனையும்தெரிவிக்காத அதேவேளை தரையிறங்கும் கப்பல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்படமுடியாத நிலையில் உள்ளது என ரொய்ட்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/161628
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா மல்செவ்ஸ்கா பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில் பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பிப் போராடும் நிலையும் காணப்படுகிறது. மெலிந்த, நீல வண்ண கண்களைக் கொண்ட, அழகிய பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்து தற்போது அவர் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்ட்ரியானா அரேக்தா என்ற இந்த வீராங்கனை யுக்ரேனிய ஆயுதப்படையில் ஒரு சிறப்பு பிரிவு சார்ஜென்ட் ஆவார். மீண்டும் முன்வரிசையில் நின்று போர்புரியத் தன்னைத் தயார்படுத்திவருகிறார். டிசம்பரில் கெர்சன் பகுதியில் கண்ணிவெடியால் காயம் அடைந்த ஆண்ட்ரியானாவை யுக்ரேனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் - அவரது பாதுகாப்பு கருதி பெயர் சொல்ல முடியாத இடத்தில் - சந்தித்து பிபிசி உரையாற்றியது. ரஷ்யாவில் வெளியாகும் ஏராளமான ஊடகங்கள் அவரது "மரணத்தைக்" கொண்டாடிவருகின்றன. "நான் கால்கள் மற்றும் கைகளை இழந்து ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன," என்கிறார் ஆண்ட்ரியானா. "அவர்கள் ஒரு விஷயத்தைப் பிரசாரம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்." படக்குறிப்பு, ஆண்ட்ரியானா உக்ரைனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், மீண்டும் ராணுவத்தின் முன்வரிசையில் இருந்து போரிடத் தேவையான பயிற்சியையும் பெற்றுவருகிறார். அந்தச் செய்திகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "கொலைகாரி" என்றும், "நாசிப்படையைச் சேர்ந்தவர் அழிக்கப்பட்டார்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த ஆதாரமும் இல்லாமல் 'அவர் கொடூரமானவர். பிறரின் துன்பங்களில் இன்பம் காண்பவர்' என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. யுக்ரேனிய இராணுவம் கெர்சனை விடுவித்தபின் இது போன்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. "இது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். இனிவரும் நாட்களிலும் என் நாட்டை நான் பாதுகாப்பேன்," என்று அவர் கூறுகிறார். 18 மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் படையெடுத்தது. அதன் பின் தற்போது யுக்ரேன் நாட்டு ராணுவப் படைகளில் 60,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர் - களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் போரிட்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுக்ரேன் சட்டத்தின் கீழ் எந்த பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்த முடியாது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சில குறிப்பிட்ட போர் நடவடிக்கைகள் பெண்களால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சிலர் நம்புகிறார்கள். "நான் என் தளபதியிடம் வந்து, 'எனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது ?' என்று கேட்டேன். 'நீங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றவேண்டும்,' என்று அவர் கூறினார்," என்று எவ்ஜெனியா எமரால்டு என்ற ராணுவ பெண் வீராங்கனை நினைவு கூர்ந்தார் - அவர் சமீப காலம் வரை யுக்ரேன் போர்க்களத்திலிருந்து போரிட்டு வந்தார். பட மூலாதாரம்,EURASIA DAILY படக்குறிப்பு, ஆண்ட்ரியானா அரேக்தா இறந்துவிட்டதாக ஏராளமான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ராணுவத்தில் இணைந்து துப்பாக்கி சுடும் வீராங்கனைகளாகப் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் அனைவரையும் கவர்ந்துவருகின்றனர் என்று அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவர்களுக்கு நற்பெயர் கிடைக்க நடைமுறைக் காரணம் ஒன்று உள்ளது. "ஒரு ஆண் துப்பாக்கியை எடுத்து மற்றொருவரைச் சுடலாமா வேண்டாமா என யோசிக்கிறார் என்றால், அதே இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவர் அந்தச் செயலைச் செய்யவே மாட்டார்," என்கிறார் அவர். மூன்று மாத குழந்தையை தொட்டிலில் ஆட்டிக்கொண்டே பேசும் எவ்ஜெனியா, "அதனால்தான், ஆண்களைப் போல் இல்லாமல், பெண்கள் ஒரு உயிரை உருவாக்குபவர்களாக உள்ளனர்," என்கிறார். 31 வயதான அவர், ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்த பின்னர் இராணுவப் பயிற்சி பெற்றவர். ஆனால் 2022 இல் மட்டுமே அவர் இராணுவத்தில் சேர்ந்தார். முழு அளவிலான தற்போதைய போருக்கு முன்பு ஒரு நகைக் கடையின் உரிமையாளராக இருந்தார். யுக்ரேனிய பெண் வீராங்கனைகளை பெருமளவில் அடையாளப்படுத்தும் விதமாக அவர் வலுவான சமூக ஊடகச் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளார். அவர் ஒரு தொழில் முனைவோராக இருந்த போது, தொழில் வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் சமூக ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். படக்குறிப்பு, தனது மூன்று மாத குழந்தையுடன் புகைப்படத்தில் தோன்றும் எவ்ஜெனியா எமரால்டு, போருக்கு முன்பு நகை வியாபாரம் செய்தார். ஆண்ட்ரியானாவைப் போலவே, எவ்ஜெனியாவும் ரஷ்ய ஊடகங்களால் கொடூரமாக விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார். அவரை "தண்டனை அளிப்பவர், நாசி" என்று ரஷ்ய ஊடகங்கள் பரவலாகக் குறிப்பிடுகின்றன. துப்பாக்கி சுடும் வீராங்கனையாக ஒரு பெண் முன்வரிசையில் நின்று போர்புரிவதை நூற்றுக்கணக்கான செய்திகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ராணுவத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது மிகவும் கொடூரமானது - உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர கொடூரமானது என எவ்ஜெனியா கூறுகிறார். "ஏனென்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை உங்களால் நேரடியாகப் பார்க்க முடியும். இலக்கை நீங்கள் தாக்குவதை நீங்கள் பார்க்கலாம். உங்களால் தாக்கப்படும் ஒருவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை அளிக்கும்." எவ்ஜெனியா மட்டுமல்லாமல், நாங்கள் சந்தித்துப் பேசிய மற்ற முன் வரிசை வீராங்கனைகளும் அவர்கள் தாக்கிய உயிர்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்த முடியாது. ஆனால் எவ்ஜெனியா தான் யாரையாவது கொல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தபோது அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். "குறைந்தது 30 வினாடிகள் நான் நடுங்கத் தொடங்குவேன். என் முழு உடலும் நடுங்கும். என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திரும்ப மீட்கமுடியாத ஒரு செயலைச் செய்யப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கும்," என்கிறார் எவ்ஜெனியா. "ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்கள் மீது போர் தொடுக்கவில்லை. அவர்கள் தான் எங்கள் மீது போரைத் திணித்தார்கள்." பட மூலாதாரம்,ILLIA LARIONOV படக்குறிப்பு, எவ்ஜெனியா எமரால்டு, துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது குறிப்பாக கொடூரமான போர்முறை என்று கூறுகிறார் யுக்ரேனிய இராணுவத்தில் பெண்களின் சதவீதம் 2014 இல், முதன்முதலாக ரஷ்யா படையெடுத்த பின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 இல் 15% ஐ எட்டியது. ஆனால் பல பெண் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களின் போது பாலியல் சமத்துவமற்ற மனப்பான்மையால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். போர்க்களத்தில் முன் வரிசையில் இருந்து துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் நிலைநாட்டுவதற்கு முன்பாகவே இதை எதிர்கொண்டதாக எவ்ஜெனியா கூறுகிறார். "நான் சிறப்புப் படையில் சேர்ந்தபோது, ஒரு ஆண் வீரர் என்னிடம் வந்து, 'நீ இங்கே என்ன செய்கிறாய்? போய் ஒரு கப் சூப் சமைத்து அதை எடுத்துக்கொண்டு வா' என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் புண்பட்டதாக உணர்ந்தேன். 'நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா? நான் சமையலறையிலும் இருக்க முடியும். அதே நேரம், என்னால் உங்களைத் தாண்டி போரில் சாதிக்கவும் முடியும்' என்று சொன்னேன்." யுக்ரேனிய பெண் வீராங்கனைகளுக்கு உதவும் 'ஆர்ம் வுமன் நவ்' என்ற அமைப்பைச் சேர்ந்த மற்றொரு எவ்ஜெனியா (எவ்ஜெனியா வெலைகா) பேசும் போது, "பெண்கள் தங்கள் கணவர்களைக் கண்டுபிடிக்கவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதாக பொதுமக்களிடம் ஒரு வலுவான கருத்து உள்ளது," என்கிறார். உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் பெண்கள் தன்னிடம் புகார் தெரிவித்ததாக அவர் கூறுகிறார். "பிரச்னையின் அளவை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பெண் சிப்பாயும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் பிபிசியிடம் பேசுகையில், "பல்லாயிரக்கணக்கான வீராங்கனைகள் ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், மிகச்சில நேரங்களில் இது போன்ற புகார்கள் எழுகின்றன," என்று கூறினார். பட மூலாதாரம்,UKRAINE DEFENCE MINISTRY படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், யுக்ரேன் இராணுவம் பெண் வீராங்கனைகள் 'ஹை ஹீல்ஸ்' ஷுக்களுடன் பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது யுக்ரேனிய இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலினத்திற்கு ஏற்ற சீருடைகள் இல்லை. ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள், பொருத்தமான அளவுகளற்ற காலணிகள் மற்றும் குண்டு துளைக்காத உள்ளாடைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மயிலர் கூட, தனக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் யூனிபார்ம் ஒரு ஆணுக்காக வடிவமைக்கப்பட்டதாக கூறுகிறார் - அவர் "உயரம் குறைவாக" இருப்பதால் அதன் அளவுகளை மாற்ற வேண்டியிருந்தது என்கிறார். அங்கு முறைப்படி அணியவேண்டிய சீருடையில் 'ஹை ஹீல்ஸ்' கொண்ட காலணிகளும் அடங்கும் என்று அவர் கூறுகிறார். இராணுவத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்குப் பொருத்தமான சீருடைகளை, ஆடைகளை வாங்கவேண்டும் என்றால் அவர்கள் அவற்றை இணையதளம் மூலம் சொந்த பணம் செலுத்திவாங்கிக் கொள்ளலாம் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக்கொள்ளலாம். வேறு வழியில்லை. இதனாலேயே ஆண்ட்ரியானா வெட்டரன்கா, யுக்ரேனிய பெண்கள் படைவீரர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு சம உரிமைகள் மற்றும் நேட்டோவின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப யுக்ரேனிய ராணுவ சட்டத்தை சீர்திருத்துவதற்காக கோரிக்கை எழுப்பிவருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பெண் வீராங்கனைகளுக்கான சீருடை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மல்யார் கூறுகிறார். இருப்பினும், அவை எப்போது தயாரிக்கப்படும் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கமுடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், "போருக்கு பாலினம் எதுவும் இல்லை" என்று துப்பாக்கி சுடும் வீராங்கனை எவ்ஜெனியா எமரால்டு கூறுகிறார். “போர்க்களம், ஆயுதமேந்தியவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைப் பொருட்படுத்தாது. ஒரு வீட்டில் ஏவுகணை தாக்கும் போது அங்கே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருக்கின்றனர்." "போர்க்களத்தின் முன் வரிசையிலும் இந்த நிலையே காணப்படுகிறது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து திறம்பட செயல்படவேண்டும். பெண் என்ற இடத்திலிருந்து உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் ஏன் பாதுகாக்க மாட்டீர்கள்?" பட மூலாதாரம்,IRYNA படக்குறிப்பு, ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரில் தாக்குதல் நடத்தத் தயாராகும் பெண் வீராங்கனை. கிழக்கு டான்பாஸ் பகுதியில், தற்போது துப்பாக்கி ஏந்தி எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு வரும் இரினாவுக்குக் கிடைத்த ஒரு சிறிய ஓய்வு நேரத்தில் நாங்கள் அவருடன் மிகவும் சுருக்கமான உரையாடல் ஒன்றை நடத்தினோம். . ராணுவத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கவேண்டும் என பெண் வீராங்கனைகள் போராடி வருகிறார்களோ, அந்த மாற்றங்களின் ஒரு எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார். அவர் தற்போது ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றிவருகிறார். "ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனைனயின் பெயர் காதலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் அழகாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எனது கடின உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்." துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் எப்படி ஆறு மணி நேரம் வரை தரையில் படுத்துக்கொண்டு எதிரிகளைச் சுடுகின்றனர்? அதுவும் அவர்களது நிலைகளை அதிவேகமாக மாற்றம் செய்துகொண்டே பணியாற்றவேண்டிய நிலையை அவர் விவரிக்கிறார். "இது மரணத்துடன் விளையாடுவது போன்றது," என்று அவர் மேலும் கூறுகிறார். சேவை செய்யும் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். யுக்ரேனிய படைவீரர் விவகார அமைச்சகத்தின் கீழ் பாலின சமத்துவம் குறித்த ஐ.நா. ஆலோசகராக இருந்த ஆண்ட்ரியானா தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்தபோது யுக்ரேனிய ராணுவத்தில் சேர்ந்தார். "அவர்கள் என் வாழ்க்கையின் சிறந்த காலத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்," என 35 வயதான அவர் கூறுகிறார். போருக்கு முந்தைய ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கையில், அவர் மேலும் கூறுகிறார்: "நான் சுற்றுப் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும். மேலும் ஒரு தொழிலைக் கட்டியெழுப்பியிருக்க முடியும் அல்லது ஒரு சிறந்த வேலையில் அமர்ந்துகொண்டு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்திருக்கமுடியும்." ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனை வைத்திருக்கும் தாயான ஆண்ட்ரியானா தொடர்ந்து பேசும் போது, ஏழு மாதங்களுக்கும் மேலாக தனது மகனை பார்க்கமுடியவில்லை என்றும், மொபைல் ஃபோனில் தனது மகனுடைய படங்கள் தொடர்ந்து வரும் போது புன்னகையுடன் அவைற்றைப் பார்த்து மன நிறைவடைவதாகவும் கண்ணீருடன் குறிப்பிடுகிறார். தற்போதைய நிலையில், அவரது சொந்த நாட்டில் அமைதியான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் தான் அவருக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. நாடு முழுவதும் அமைதி ஏற்பட்டுவிட்டால், தனது மகன், அவனது பெற்றோரைப் போல போராடி அவனது உயிரைப் பணயம் வைத்து வாழவேண்டிய அவசியம் இருக்காது. படக்குறிப்பு, 2014 இல் ரஷ்யா கிரிமியா மீது படையெடுத்தபோது ஆண்ட்ரியானா முதன்முதலில் ஆயுதப்படையில் சேர்ந்தார் கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழுப் படையெடுப்பிற்குப் பிறகு இணைந்த எவ்ஜெனியா எமரால்டு போலல்லாமல், ஆண்ட்ரியானாவுக்கு ஏற்கெனவே இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில், ரஷ்யா முதன்முதலில் யுக்ரேனைத் தாக்கி, கிரைமியாவை இணைத்து, டான்பாஸை ஆக்கிரமித்தபோது, அவர் பிராண்ட் மேலாளராக தனது வேலையை விட்டுவிட்டு முதல் தன்னார்வ பட்டாலியன்களில் ஒன்றில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்களுடன். அந்த நேரத்தில், இராணுவம் இப்போது இருப்பதை விட சிறியதாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் போதுமான வசதிகள் இன்றித் தவித்துவந்தது. ஆண்ட்ரியானா பணியாற்றிய 'ஐடார் பட்டாலியன்', கிரெம்ளின் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை மீறல்களால் குற்றம் சாட்டப்பட்டது - ஆனால் யுக்ரேனிய இராணுவம் பிபிசியிடம் பேசிய போது, அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, யுக்ரேனிய தன்னார்வப் படைப்பிரிவுகளை பயனுள்ள வகையில் முறைப்படுத்த அந்நாட்டு அரசை வலியுறுத்தியது. ஆண்ட்ரியானா எந்த தவறான நடத்தையிலும் ஈடுபடவில்லை என்றாலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் 'ஐடாரை' விட்டு வெளியேறினார். ரஷ்ய ஊடகங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அவரை "துரதிருஷ்டம்" என்று தொடர்ந்து வர்ணித்துவந்தன. யுக்ரேனில், அவரது சேவைக்காக அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன - ஒன்று "தைரியத்திற்காக", மற்றொன்று "மக்கள் ஹீரோ" என்பதற்காக வழங்கப்பட்டன. பிபிசியிடம் பேசிய ஆண்ட்ரியானா, தான் இனி ஐடாரின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஏற்கெனவே போரில் அவருக்குப் போதிய முன்னனுபவம் இருந்ததால், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு, ஆண்ட்ரியானா மீண்டும் ராணுவத்தின் முன்வரிசைக்குத் திரும்புவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற கேள்விக்கு அந்நாட்டு அரசு ரகசியம் கருதி போதுமான தகவல்களை அளிக்கவில்லை. ஆனால், இதுவரை யுக்ரேன் ராணுவத்தினர் 93 பேர் உயிரிழந்திருக்கலாம் என பிபிசிக்குத் தகவல் கிடைத்துள்ளது. 'ஆர்ம் வுமன் நவ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தரவுகள், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆண்ட்ரியானாவின் மொபைல் ஃபோனில் பதிவு செய்துவைக்கப்பட்டிருந்த எண்கள், இறந்தவர்களின் பட்டியலாக மாறிவிட்டது. "நான் 100 க்கும் மேற்பட்ட நண்பர்களை இழந்துவிட்டேன். எத்தனை தொலைபேசி எண்களை நீக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை." ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விலை கைவிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது, என்று கூறும் அவர், ஜிம்மில் தனது மறுவாழ்வு பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். https://www.bbc.com/tamil/articles/cj5ndv8qrrno குறிபார்த்துச் சுடுபவர்களையா(Sniper) துப்பாக்கி சுடுபவர்கள் என குறிப்பிடுகின்றது பிபிசி தமிழ்?
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
தோணிக்கல் இரட்டை கொலை : பிரதான சந்தேகநபர் கைது வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் பிறந்த நாள் நிகழ்வொன்று இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கும் தீ வைத்தனர். இதன்போது, 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பணத்தை வழங்கி கொலை செய்யுமாறு பணித்த, பிரதான சந்தேகநபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/266663
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை விரைவில் - யாழ் இந்திய துணைத்தூதுவர் Published By: VISHNU 02 AUG, 2023 | 08:58 PM இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது. குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/161514
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மொஸ்கோவிலுள்ள கட்டடத்தின் மீது 2 ஆவது தடவையாக ட்ரோன் தாக்குதல் Published By: SETHU 01 AUG, 2023 | 10:17 AM ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியது. மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அக்கட்டடம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது என மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். உக்ரேனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியதாகவும் ஆனால், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியதாவும் அவர் குறிப்பிட்டார். இக்கட்டத்தின் 21 ஆவது மாடி முகப்பு சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் கூறினார். இத்தாக்குதலுககு உக்ரேன் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், பொதுவாக மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பில் உக்ரேன் நேரடியாக கருத்து தெரிவிப்பதில்லை. எனினும், நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலின் பின்னர், யுத்தமானது ரஷ்யா பிராந்தியத்துக்கு திரும்புகிறது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உக்ரேனின் கிறைவ்யி றிஹ் நகரில் ரஷ்யா நேற்று ஏவுகணைத் தாக்குதலில், 10 வயது சிறுமி உட்பட அறுவர் பலியானதுடன் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/161386
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
தாய்லாந்தின் நன்கொடையான முத்துராஜா யானையை இலங்கை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை தொடர்பில் அதிருப்தி! 31 JUL, 2023 | 03:38 PM யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமை ஏற்பட்டது. குறித்த சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஜித் மன்னப்பெரும சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விலங்கியல் திணைக்களம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக கடந்த (18) நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/161335
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : போராட்டம் முன்னெடுப்பு Published By: VISHNU 28 JUL, 2023 | 02:05 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் மக்கள் இராணுவத்திடம் உறவுகளைக் கையளித்ததாகக் கூறப்படும் பகுதியான, முல்லைத்தீவு நீதிமன்றிற்கு அருகில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போரணி தொடர்ந்து நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து. அங்கு மிகப் பாரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (28) போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன. யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/161132
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை ; அருட்தந்தை மா.சத்திவேல் Published By: VISHNU 26 JUL, 2023 | 03:36 PM மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் பாரிய மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடியும், நீதி கேட்கும் தொடர் போராட்டம் நடாத்தி வரும் வடக்கு- கிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் கடையடைப்பு ஹர்த்தால் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு அன்றைய தினம் அவர்கள் பேரணியும் நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். இதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஒத்துழைப்பு நல்குவதோடு அரசியல் நீதிக்காக கொடுக்கும் அனைத்து சக்திகளையும் ஆதரவு நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. குற்றவாளிகள் வெளியில் தெரியக்கூடாது. வெளியில் தெரிந்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது. தண்டனை கிடைத்தாலும் தண்டனையை முழுமையாக அனுபவிக்க கூடாது என்ற மனநிலையில் பேரினவாத ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதே சிந்தனையுள்ள எதிரணியினரும் உள்ளனர். மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசியல் தலையீடு தொடர்ந்துள்ளது என்பதை அன்மையில் இது தொடர்பில் ஆராய்ந்த மூன்று அமைப்புக்களின் கூட்டு அறிக்கை வெளி கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் சீருடைகளோடு மனித எச்சம் காணப்படுகையில் சர்வதேச சட்டதிட்டங்கள், நியதிகள் என்பவற்றோடும் சர்வதேச நிபுணர் குழுவினரின் வழிகாட்டலோடும் புதைகுழி அகலப்படவும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான அழுத்தமாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்துகின்றனர். இனவாத வன் செயல்களால் கொல்லப்பட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கூரக்கூடாது நினைவு கூறினாலும் மீண்டும் அவர்கள் வரப்போவதில்லை என்பதுவே தெற்கின் சிந்தனை. கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் எண்பத்திமூன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடத்தப்பட்ட போது அங்கு குழப்புவதற்காக வந்த குண்டர்கள் கூறினர். அதுவே பேரினவாத மற்றும் மதவாத அரசியல் வாதிகளினதும் கருத்தியல். தமிழர்களுக்கு இனி எத்தகைய நீதியும் இலங்கையில் கிடைக்கப் போவதில்லை இதுவே இன்றைய சூழ்நிலை. இத்தகைய பின்னணியில் யுத்த குற்றங்களுக்கும், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், கண்டுபிடிக்கப்படும் மனித புதைக்குழிகளின் ஆய்விலும் இலங்கையில் நீதியை அடைய முடியாது. சர்வதேச தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நடத்தும் கடை அடைப்புக்கும், பேரணிக்கும் தாயக தமிழர்கள் ஆதரவு வழங்குவதே அரசியல் நீதி என்றார். https://www.virakesari.lk/article/160976
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/265202
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.