Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணை. இதை நான் யோசிக்கவில்லை, என்றாலும் இதற்கான பதிலையும் சொல்லுங்கோ.
  2. காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?
  3. அவங்கள் மறைமுகமாக தடுக்கிறாங்களோ?! VPN ஊடாக முயன்று பாருங்க. குறித்த பக்கேஜ்களாக கட்டணம் செலுத்தினால் அதில் குறிப்பிட்டவை(பேஸ்புக், யுரியூப்) மட்டுமே இயங்கும்.
  4. விண்ணில் பாய்ந்தது சந்திராயன் 14 JUL, 2023 | 02:57 PM ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் இன்று விண்ணை நோக்கி சென்றுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, இந்திய மக்கள் கொண்டாடினர். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக, விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியது. இதனை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது. இந்நிலையில் கவுண்டவுன் முடிவடைந்து சரியாக 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3, முந்தைய சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்றாலும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிரங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீட்டர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/160007
  5. அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகள் உக்ரைனை சென்றடைந்தன- Published By: RAJEEBAN 14 JUL, 2023 | 12:55 PM அமெரிக்கா வழங்கியுள்ள கொத்துக்குண்டுகளை பெற்றுக்கொண்டுள்ள உக்ரைன் அவற்றை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தென்உக்ரைனில் உள்ள அதிகாரியொருவர் கொத்துக்குண்டுகள் கிடைத்துள்ளன என தனது தளபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். கொத்துக்குண்டுகள் சென்றடைந்துள்ளதை பென்டகனும் உறுதி செய்துள்ளது. மொஸ்கோ இதனை கண்டித்துள்ளது. கொத்துக்குண்டு தனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் தானும் அதனை பயன்படுத்த வேண்டியிருக்கும் என ரஸ்யா எச்சரித்துள்ளது. ரஸ்யா தான் கைப்பற்றியுள்ள பெருமளவு நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதால் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் தெரிவித்துள்ளது. கொத்துக்குண்டுகள் ரஸ்ய படையினரை மேலும் மனச்சோர்வடையச் செய்யும், நிலைமையை உக்ரைன் படையினருக்கு சாதகமாக மாற்றும் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் உக்ரைனின் பகுதிகளை மீள கைப்பற்றுவதற்கு கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159995
  6. மேற்குலக டாங்கிகளே உக்ரைனில் எங்களின் முக்கிய இலக்கு - புட்டின் Published By: RAJEEBAN 14 JUL, 2023 | 12:36 PM உக்ரைன்: மேற்குலகின் டாங்கிகளே ரஸ்யாவின் முன்னுரிமைக்குரிய இலக்காக காணப்படுகின்றன என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு மேற்குலகம் ஆயுதங்களை அனுப்புவது யுத்தத்தின் போக்கை மாற்றாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள புட்டின் உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேற்குலகம் ஆயுதங்களை வழங்குவது சர்வதேச பதற்றத்தை நீடித்து மோதலை மேலும் நீடிக்கச்செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 250 கிலோமீற்றர் செல்லக்கூடிய குறுஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கும் பிரான்ஸின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை யுத்தத்தின் போக்கை மாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குலகின் டாங்கிகளே எங்களது முன்னுரிமைக்குரிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159993
  7. முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எப்போது ? 20 ஆம் திகதி நீதிமன்றில் தீர்மானம் 13 JUL, 2023 | 09:32 PM முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அது பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணி தொடர்பில் இன்று(13) வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இதற்க்கமைய முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் (ஓ எம் பி ) சிரேஸ்ர சட்டத்தரணி ஜெகநாதன் தர்ப்பரன், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணிகளான றணித்தா ஞானராஜா, வி.கே நிறஞ்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அளம்பில் பங்குத்தந்தை யூட் அமலதாஸ், நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் கலந்துரையாடலில் முன்னதாக நீதிபதி அவர்களால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த பணியை முன்னெடுக்கும் எனவும், இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும் அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (20.07.2023) அன்று சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டவைத்திய அதிகாரிகளின் அகழ்வு நடவடிக்கைகள், நிதி தொடர்பான விடயம் ஓஎம்பி அலுவலகம் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ளல், விரைவாக அகழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும், சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொறிமுறை, குறித்த காணி தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் வரைபடங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணிதொடர்பான விடயங்கள் ,கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் குறித்த காணி சுதந்திரத்தின் பின்னர் யார் யாரின் ஆளுகையில் இருந்தது என்பது தொடர்பான விடயம் தற்போதுள்ள பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம்(20) அகழ்வு பணி தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன் அவர்கள் சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இதன் போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள். அவர்கள் இந்தப் புதைவழி எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/159955
  8. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டறியப்படவில்லை - பொலிஸ் Published By: VISHNU 13 JUL, 2023 | 05:24 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு ஜுலை மாதம் (இம்மாதம்) 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார். இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker இச்செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது. அதற்கமை இதுபற்றி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் Factseeker வினவியபோது, அவர் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகளோ, வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாகவும், 8 ஆம் திகதி எந்தவொரு அகழ்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/159940
  9. நிலவை நோக்கி நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான் – 3’ விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ரொக்கெட், நாளை(ஜூலை 14) பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 25 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான, ‘கவுன்ட் டவுண்’ இன்று மதியம், 1:00 மணிக்கு தொடங்குகிறது. பூமியில் இருந்து புறப்படும் ரொக்கெட், 173 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து படிப்படியாக புவி வட்ட பாதையின் துாரம், 36,500 கி.மீ., வரை அதிகரிக்கப்படும். பின், ரொக்கெட்டில் உள்ள, ‘புரோபெல்லன்ட்’ சாதனம் ரொக்கெட் போல் செயல்பட்டு, சந்திராயன் விண்கலத்தை, நிலவின் சுற்று வட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்கும். ஆக., 23 அல்லது, 24ம் திகதி சந்திரயான் விண்கலம் – 3ல் உள்ள லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/262903
  10. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து - உக்ரைனில் போரில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரி பணிநீக்கம் 13 JUL, 2023 | 12:20 PM ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக ரஸ்யாவின் சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஸ்ய பாதுகாப்பு படையினர் தனது படைப்பிரிவிற்கு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தான் குற்றம்சாட்டியதற்காக தன்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர் என தென் உக்ரைனில் உள்ள ரஸ்ய படையினரின் தளபதி இவான் பொபொவ் தெரிவித்துள்ளார். ஜபோரிஜியா பகுதியில் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ரஸ்ய படையினரின் தளபதியே இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பதவி நீக்கம் முன்னொருபோதும் இல்லாத சம்பவம் என ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/159898
  11. முகப்பில் புதிய பதிவுகள்(Update) தோன்றாமல் இருப்பதாகப்படுகிறது. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan
  12. ஐநாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் - மனித புதைகுழிகள் குறித்து வேல்முருகன் Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 02:46 PM கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும் உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர். வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள். இந்நிலையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. இச்சூழலில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது. எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது. ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன். https://www.virakesari.lk/article/159838
  13. அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள் - பந்துல 12 JUL, 2023 | 10:01 AM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அமைச்சரவைக்கு தெளிவபடுத்தியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் ஆட்சேபனைக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள போதிலும் , தாம் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என எண்ணுபவர்கள் ஜனாதிபதி செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அதிபர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற பொது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சரவையில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும் அங்கவீனமுற்றோருக்கு , நீரிழிவு நோயாளர்களில் இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரமின்றி , காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார். இதற்கு மேலதிகமாக ஆட்சேபனைக்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைந்தாலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்துள்ளவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும். அதே போன்று மாவட்ட அதிபர்கள் , பிரதேச செயலாளர்களிடமும் நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முக்கிய விடயங்களை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். அதற்கமைய இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் 968,000 ஆட்சேபனைகளும் , 17,500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவை சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்டோரடங்கிய குழுக்களால் மீளாய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். எனினும் கிடைக்கப் பெற்றுள்ள 968 000 ஆட்சேபனைகளில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர். மாறாக இவர்கள் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே 968,000 பேருக்கு சமூர்த்தி கிடைக்கவில்லை என அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பது பொறுத்தமானதல்ல. இவர்களில் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என்பதோடு , சுமார் 3 பேர் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பொறுத்தமற்றவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 17,500 எதிர்ப்புக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றார். இதேவேளை அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மிகவும் பொருத்தமான குறிகாட்டிகள் மற்றும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி தீர்மானிக்கும் வரைக்கும், இதுவரைக்கும் நன்மைகளைப் பெற்றுவந்த குறித்த 03 சமூகக் குழுக்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நலன்புரி நன்மைக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/159787
  14. மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 07:27 AM கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித புதைகுழி தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh. இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/159783
  15. லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.
  16. உக்ரைனிற்கான விநியோகங்களை கண்காணிக்க விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்குகின்றது அவுஸ்திரேலியா 11 JUL, 2023 | 02:18 PM அவுஸ்திரேலியா உக்ரைன் நடவடிக்கைகளிற்கு ஆதரவாக ஜேர்மனிக்கு விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது. உக்ரைனிற்கு இராணுவ மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியா கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது. ஜேர்மன் சான்சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய விமானப்படை ஈ-7ஏ வெட்ஜ்டெய்ல் விமானத்தை ஒக்டோபர் முதல் ஆறு மாதங்களிற்கு வழங்கவுள்ளது. உக்ரைனிற்கு மிகவும் அவசியமான பன்னாட்டு விநியோகத்தை பாதுகாப்பதற்காக இந்த விமானங்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளது. ஜேர்மனியிலிருந்து இயங்கும் இந்த விமானம் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும். https://www.virakesari.lk/article/159745
  17. புட்டின் வாக்னர் குழுவின் தலைவரை சந்தித்தார் - பிபிசி Published By: RAJEEBAN 11 JUL, 2023 | 10:51 AM வாக்னர் கூலிப்படையின் புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர் கூலிப்படையின் தலைவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வாக்னர் புட்டின் கதையின் மிகச்சமீபத்தைய பரபரப்பு குறித்து பிபிசியின் ரஸ்யாவிற்கான பிரிவின் ஆசிரியர் இவ்வாறு தெரிவிக்கின்றார். ஆகவே நான் இதனை உங்களிற்கு மிக தெளிவாக தெரிவிக்கின்றேன். 24ம் திகதிஜூன் அதிகாலை கலகத்தின் போது புட்டின் வாக்னர் குழுவின் தலைமை துரோகம் இழைத்துவிட்டதாகவும் முதுகில் குத்திவிட்டதாகவும் புட்டின் குற்றம்சாட்டினார், பின்னர் அன்றைய தினம் ரஸ்ய விமானங்களை வாக்னர் குழுவினர் சுட்டுவீழ்த்தி விமானிகளை கொன்றனர். அதன் பின்னர் கூலிப்படையினர் மொஸ்கோவிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டவேளை கிரெம்ளினும் வாக்னரும் உடன்பாட்டிற்கு வந்தனர், கலகம் முடிவிற்கு வந்தது எவரும் கைதுசெய்யப்படவில்லை தண்டிக்கப்படவில்லை. யெவ்ஜென்சி பிரிகோசின் கைதுசெய்யப்பட்டு விலங்கிடப்படவில்லை, கிளர்ச்சிக்காக பொலிஸ்நிலையத்தின் முன் நிறுத்தப்படவில்லை. புட்டினிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஐந்து நாட்களின்பின்னர் வாக்னர் குழுவின் தலைவர் தனது தளபதிகளுடன் புட்டினுடன் ஒரே மேசையில் அமர்ந்து உரையாடினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது அந்த சந்திப்பு எவ்வாறு முடிவடைந்தது என்பதும் எங்களுக்கு தெரியாது. சமீப நாட்களாக வாக்னர் குழுவின் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ரஸ்ய ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள வாக்னர் தலைவரின் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட படங்களை ரஸ்ய அதிகாரிகள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். தங்கக்கட்டிகள் ஆயுதங்கள் விக்குகள் போன்றவற்றை ரஸ்ய தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. பிரிகோஜின் அவர் தெரிவிப்பது போல ரொபின்கூட் இல்லை, அவர் குற்றபின்னணி கொண்ட வர்த்தகர் அவரது செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவை என சட்டவிரோதமானவை என ரஸ்ய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 24ம் திகதி கலகத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக புட்டினிற்கும் வாக்னர் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்னர் குழுவின் தலைவர் பெலாரசிற்கு செல்லவேண்டும். கடந்த வாரம் பெலாரஸ் ஜனாதிபதி வாக்னர் குழுவின் தலைவர் தனது நாட்டில் இல்லை என தெரிவித்தார். அவர்கள் பெலாரஸ் வந்துசேரக்கூடும் ஆனால் இன்னமும் வரவில்லை என்பதே அதுவே அதன் அர்த்தம். வாக்னர் எங்கே பிரிகோஜின் எங்கே அவர்களின் திட்டம் என்ன அவர்களுக்கும் புட்டினிற்கும் இடையிலான இணக்கப்பாடு என்ன? எனக்கு தெரிந்திருந்தால் நல்லது என நான் நினைக்கின்றேன், தற்போது நான் தெரிவிப்பது இதுதான் - ரஸ்யாவின் அடுத்த தவிர்க்க முடியாத அத்தியாயத்திற்காக காத்திருங்கள். https://www.virakesari.lk/article/159699
  18. சந்திரயான்-3: நிலவில் என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 10 ஜூலை 2023, 14:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரயான் 3 விண்கலத்தை வருகின்ற ஜூலை 14ஆம் தேதியன்று இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன. இந்தப் பத்து கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால்தான், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க முடியும். அவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். அதற்குள் செல்வதற்கு முன்பாக, சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும், அதைச் சுமந்து செல்லப்போகும் ராக்கெட் எப்படிச் செயல்படும் என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம். சந்திரயான் 3 விண்கலம் எப்படி இருக்கும்? இந்த விண்கலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி ஒரு பொம்மை கார் போல இருக்கும். அதற்கு ஊர்திக்கலம்(Rover) என்று பெயர். இந்த ஊர்திக்கலம் அதன் நகர்வு மற்றும் இயக்கத்தின்போது, நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும். இந்த ஊர்திக்கலம், தரையிறங்கிக் கலம்(Lander) எனப்படும் இரண்டாவது பகுதியின் வயிற்றுக்குள் இருக்கும். இது நிலவின் தரைப்பரப்பில் மென்மையாக, பாதிப்பு ஏதுமின்றி தரையிறங்கி, அதன் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே அனுப்பும். இந்த இரண்டும் சேர்ந்து, மூன்றாவது பகுதியான உந்துக்கலம்(Propulsion unit) என்ற பகுதியின் தலைக்கு மேலே இருக்கும். இந்தப் பகுதிதான், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கி.மீ தொலைவு வரைக்கும் தரையிறங்கி கலம், ஊர்திக்கலம் இரண்டையும் கொண்டு செல்லும். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் விண்கலம். இந்த அமைப்பைக் கொண்ட சந்திரயான் 3 விண்கலம்தான், எல்.வி.எம் 3 என்ற ராக்கெட்டின் தலைக்குமேல் ஒரு கலசம் போல் தெரியும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு வெளியே வரும். சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவது எப்படி? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள் முந்தைய சந்திரயான் விண்கலங்களை சுமந்து சென்ற ராக்கெட்டுகளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்று அழைத்தார்கள். தற்போது சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கு எல்.வி.எம் 3 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது. இந்த ராக்கெட் மூன்று அடுக்குகளைக் கொண்டது. அதன் இருபுறமும் இரண்டு தூண்களைப் போல் தெரிவது S200 இன்ஜின். அவற்றில் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவே பெரிய ஒற்றைத் தூணாக இருப்பது, திரவ எரிபொருள் கொண்ட இன்ஜின். அதன் பெயர் L110. அதற்கு மேலே தெரியும் இரண்டு கருப்பு பட்டைகளுக்கு இடையில்தான் உறைகுளிர் இன்ஜின் (Cryogenic Engine) இருக்கிறது. உறைகுளிரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீரை போன்ற திரவமாக மாறிவிடும். அந்த இரண்டையும்தான் அதில் வைத்துள்ளார்கள். அவைதான் அதில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அதற்கும் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் இருக்கும். இந்த இன்ஜின்கள் ஒவ்வொன்றாக எரிந்து ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும். பட மூலாதாரம்,ISRO/TWITTER படக்குறிப்பு, நிலவில் சந்திரயான் 3 பத்திரமாகத் தரையிறங்குவதில் முக்கியமான பத்து கட்டங்கள் உள்ளன முதலில், திட எரிபொருள் இன்ஜின்கள் எரிந்து ராக்கெட்டை மேலெழும்பச் செய்யும். அதன் வேலை முடிந்ததும் அது கழன்று கீழே விழுந்துவிடும். இரண்டாவதாக, திரவ எரிபொருள் எரிந்து இன்னும் உயரச் செல்ல உதவும். அதன் வேலை முடிந்ததும் அதுவும் கழன்றுவிடும். இந்த இரண்டின் செயல்பாடும் ராக்கெட்டை விண்வெளிக்குக் கொண்டு சென்றுவிடும். பிறகு விண்வெளியில், உறைகுளிர் இன்ஜின் தனது வேலையைச் செய்யும். இந்தச் செயல்முறைகளின் மூலமாக எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தும். அதுதான் முதல் கட்டம் விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன நடக்கும்? விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும். அந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ தூரத்தில் விண்கலம் இருக்கும். அதுவே தொலைவில் இருக்கும்போது, 36,500 கி.மீ. தூரத்தில் இருக்கும். விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை இந்தப் பாதையில் சுற்ற வைப்பதுதான் இரண்டாவது கட்டம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ராக்கெட்டின் மேலே கலசம் போல் இருக்கும் இடத்தில்தான் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைப்பது எப்படி? அடுத்ததாக, புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைத்தால் மட்டும் போதாது, அந்தப் பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால்தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும். அதுதான் மூன்றாவது கட்டம். இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தினசரி வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகிப்பவரை சான்றாக எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு கட்டடத்தின் தரைத் தளத்தில் இருக்கும் வீட்டிற்கு நாளிதழைப் போடும்போது இயல்பாக கையை வீசி கதவுக்குள் எறிந்துவிடுவார். அதுவே வீடு இரண்டாவது மாடியில் இருந்தால், இரண்டாவது மாடிக்கே சென்று கொடுக்கமாட்டார், அதையும் கீழிருந்துதானே வீசுவார். அப்போது, தரைத்தள வீட்டிற்குள் நாளிதழை வீசும்போது எடுத்துக்கொண்ட ஆற்றலைவிட அதிக ஆற்றலைச் செலவழித்து, கையை நன்றாகச் சுழற்றி வீசுவார். நாளிதழ் இரண்டாவது மாடியில் வந்து விழும். இதேபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தி தான் சந்திரயான் 3 விண்கலமும் நிலவுக்குச் செல்லப் போகிறது. இந்த மூன்றாவது கட்டத்தை ‘பாதை உயரம் உயர்த்து கட்டம்(Orbit raising)’ என்பார்கள். அதாவது விண்கலம் பயணிக்கும் சுற்றுப்பாதையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போக வேண்டும். அப்படி உயரத்தை உயர்த்துவதற்கு, விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கி.மீ தொலைவுக்கு ராக்கெட் வந்ததும், அதை எரித்து உந்துவிசை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது முந்தைய சுற்றில் இருந்ததைவிட இன்னும் கூடுதலான உயரத்திற்கு விண்கலம் தள்ளப்படும். அதேபோல் ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியாக சுமார் 20 நாட்களுக்கு பாதையை விண்கலத்தின் உயர உயர உயர்த்தும் வேலையைச் செய்வார்கள். சந்திரயான் 3 விண்கலம் பாதை மாறிவிடாமல் தடுக்க வேண்டும் நான்காவது கட்டம் மிகவும் சுவையானது. பூமி, நிலா இரண்டையும் கற்பனையாக ஒரு நேர்கோட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதில், பூமிக்கும் ஈர்ப்புவிசை உள்ளது, நிலவுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்புவிசை உள்ளது. அப்படியென்றால், இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும். அந்த சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி, நிலா ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்புவிசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்கவேண்டும் அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம். ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல. இதை மிக மிகத் துல்லியமாகச் செய்யவேண்டும். அதற்குத்தான் ஐந்தாவது கட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, அந்த சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் ஐந்தாவது கட்டம். புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்து சந்திரயான் 3 விடுபட வேண்டும் சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் செல்கிறது. ஆரம்பத்தில் கூறிய இரண்டாவது, மூன்றாவது கட்ட செயல்முறைகள் அப்படி பூமியை விட்டு தூரமாகச் செல்ல மட்டும்தான் வழி வகுத்தன. ஆனால் பூமியைவிட்டுத் தொலைவாகச் சென்றுகொண்டிருந்தாலும், விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இன்னமும் இருக்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் இப்போது பூமியை சுற்றி வந்த விண்கலத்தை, நான்காவது, ஐந்தாவது கட்ட செயல்முறைகளின் மூலமாக பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம். ஆனாலும், அது இன்னமும் பூமியுடைய ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இருக்கிறது. ஆகவே மேல்நோக்கி வீசிய கல் கீழே விழுவதைப் போல், அந்த சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்குச் சென்ற விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடக்கூடும். இந்த நிலையில், அந்தப் புள்ளிக்குச் சென்றதும் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து அதைத் தள்ளிவிட்டால், அதுவரைக்கும் அது இருந்த புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும். இதுதான் ஆறாவது கட்டம். நிலாவின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை எப்படி செலுத்துவது? ஆறாவது கட்டத்தின் முடிவில், சந்திரயான் 3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு பிறகு விலகி விண்வெளியில் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிடாமல், அதை நெறிப்படுத்தி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். அந்த நேரத்தில் விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கி.மீ தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம். விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள தரையிறங்கி கலத்தில்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துகலத்தையும் தரையிறங்கி கலத்தையும் பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்து, தரையிறங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்? இதுவரை நாம் பார்த்த எட்டு கட்ட செயல்முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான், இந்த முயற்சியிலேயே மிக முக்கியமான சவால் தொடங்குகிறது. நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் அந்தச் சவால். இந்த ஒன்பதாவது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது. இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான். பட மூலாதாரம்,ISRO/TWITTER படக்குறிப்பு, இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள் இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போதும் எட்டாவது செயல்முறை வரைக்கும் இதேபோலத்தான் சென்றது. ஆனால், ஒன்பதாவது கட்டத்தில் தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள். இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் பத்தாவது கட்டம். இந்த பத்து கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியைப் பெறும். இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி வரும் ஜூலை 14ஆம் தேதியன்று தொடங்குகிறது. https://www.bbc.com/tamil/articles/cy0p93lzem0o
  19. அந்த 24வது செக்கன்ல இருக்கிறது நீங்களும் உங்கடை நாயும் தானே அண்ணை?
  20. புட்டின் தலைமைக்கு ஆபத்தா? : மொஸ்கோவில் மீண்டும் நெருக்கடி! Published By: VISHNU 09 JUL, 2023 | 03:59 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா புட்­டி­னுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை கடு­மை­யாக அள்­ளி­வீசும் தீவிர தேசி­ய­வாதி ‘இகோர் கிர்­கினால்’ மீண்டும் மொஸ்­கோவில் நெருக்­கடி உரு­வா­கி­யுள்­ளது. புட்­டினின் அதி­காரம் பரி­மாற்­றப்­பட வேண்டும் என்ற தொனியில் இகோர் கிர்­கினால் மொஸ்­கோவில் மீண்டும் ஊட­கங்­களின் கழுகுப் பார்வை திரும்­பி­யுள்­ளது. கடந்த வாரம் யெவ்­ஜெனி பிரி­கோசின் தலை­மையில் வாக்னர் குழு­வி­னரின் ஆயு­த­மேந்­திய கிளர்ச்­சியில் சில நாட்கள் சூடு­பி­டித்த மொஸ்கோ விவ­காரம், மற்­றொரு ரஷ்ய அதி தீவிர தேசி­ய­வா­தியின் உரையால் மீளவும் மேற்­கு­லக ஊட­கங்­க­ளுக்கு பெருந்தீனியை போட்­டுள்­ளது. உக்­ரே­னிய போரில் வெற்­றி­பெற முடி­யா­விட்டால், புட்டின் தனது போர் அதி­கா­ரங்­களை 'பரி­மாற்றம்' செய்ய வேண்டும் என்று மற்­றொரு ரஷ்ய தீவிர தேசி­ய­வா­தி­யான முன்னாள் ரஷ்ய தள­பதி இகோர் கிர்கின்னின் உரையால் மீண்டும் மொஸ்­கோவில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ளது. மொஸ்கோ மீதான முற்­றுகை நடக்­கலாம் என ஐரோப்­பிய ஊட­கங்கள் பலவும் எதிர்­பார்த்­தி­ருந்தபோதும், அவர்­களின் கிளர்ச்சி இல­கு­வாக பிசுபிசுத்துப் போனது. இதன் பின் அதி தீவிர தேசி­ய­வா­திகள் தலை­ந­கரில் கூடி அதிபர் புட்­டினால் உக்ரேனில் வெற்றி பெற முடி­யா­விட்டால், "அவர் தனது அதி­கா­ரங்­களை சட்­டப்­பூர்­வ­மாக மாற்ற வேண்டும்" என்று வாதிட்­டனர். போர்க்­கால ரஷ்­யாவில் அசா­தா­ர­ண­மான விமர்­ச­னத்­திற்கு சம­மா­னதைப் பகிர்ந்து கொள்ள அல்ட்­ரா­ நே­ஷ­ன­லிஸ்­டுகள் குழு­வி­னர்கள் ஒன்றுகூடினர். அவர்களின் பார்வை அப்­பட்­ட­மாக புட்­டினை நோக்கியே இருந்­தது. உக்ரேன் மீதான ரஷ்­யாவின் படை­யெ­டுப்பில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினால் வெற்­றி அடைய முடி­யா­விட்டால், அவர் அதி­கா­ரத்தை ஒப்­ப­டைக்க வேண்டும் என வாதிட்­டனர். தற்­போ­தைய அமைப்பு முழு­வதும் உய­ர­டுக்­கி­னரின் பொறுப்­பற்ற தன்­மையின் அடிப்­ப­டையில் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது என்று முன்னாள் ரஷ்ய தள­பதி இகோர் கிர்கின் சில வாரங்­க­ளுக்கு முன்பு பேட்­ரியாட்ஸ் கிளப் கூட்­டத்தில் கூறியிருந்தார். ஜனா­தி­பதி போருக்குப் பொறுப்­பேற்கத் தயா­ராக இல்லை என்றால், அவர் தனது அதி­கா­ரங்­களை சட்­டபூர்­வ­மாக மாற்ற வேண்டும் என்றார் அவர். கிட்­டத்­தட்ட மூன்று மணி­நேரம் மொஸ்­கோவில் நடைபெற்ற இந்த சந்­திப்பு டெலி­கி­ராமில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. புட்டின் இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் அதி­கா­ரத்­திற்கு வந்தார். ரஷ்­யாவில் ஸ்திரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்த முழு­மை­யான சக்­தியைப் பயன்­ப­டுத்தத் தயா­ராக இருக்கும் ஒரு நப­ராக உரு­வா­கினார். ஆனால், அவ­ரது உக்ரேன் படை­யெ­டுப்­பிற்கு ஒன்­றரை வரு­டங்­களில் அந்த ஸ்திரத்­தன்­மைக்­கான அச்­சு­றுத்­தல்கள் பெருகி வரு­கின்­றன. பெரு­கி­வரும் போர் இழப்­புகள் மற்றும் இரா­ணுவத் திற­மை­யின்மை, எல்லை தாண்­டிய தாக்­கு­தல்கள் ரஷ்ய சமூ­கங்­களை பய­மு­றுத்­து­கின்­றன. யார் இந்த இகோர் கிர்கின்? முன்னர் ரஷ்­யாவின் ஃபெடரல் செக்­யூ­ரிட்டி சேர்­வீஸில் அதி­கா­ரி­யாக இருந்­தவர், கிர்கின் ஸ்ட்ரெல்கோவ் என்றும் அழைக்­கப்­ப­டு­கிறார். மேலும் 2014 இல் கிரி­மி­யாவை மொஸ்கோ இணைத்­த­திலும், உக்ரேனின் டான்பாஸ் பிராந்­தி­யத்தில் ஏற்­பட்ட மோத­லிலும் முக்­கிய பங்கு வகித்தவர் ரஷ்ய தேச­பக்­தர்கள் அமைப்­பா­ள­ரான கிர்கின், வாக்னர் குழு தலைவர் பிரி­கோ­சி­னுக்கு நண்பர் அல்ல. ஆனால், கிர்கின் - முன்னாள் பாது­காப்புப் பணி­யாளர் ஆவார். வாக்னர் குழு புட்­டி­னுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கலாம் என்று முன்பு எச்­ச­ரித்­தி­ருந்தார். பிரிகோ­சினைப் போலவே, அவரும் சில சம­யங்­களில் புட்­டினை விமர்­சிப்பதற்கு தயங்­க­வில்லை. ரஷ்­யாவின் இந்தப் போரை எவ்­வ­ளவு சிறப்­பாக நடத்த முடியும் என்று அடிக்­கடி வாதிடும் இவர், புட்டின் இந்தப் போரை வெல்லப் போவ­தில்லை என்றும் எச்­ச­ரித்­துள்ளார். முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான இகோர் கிர்கின், உக்ரேன் மீதான தனது முழு அள­வி­லான படை­யெ­டுப்பில் ரஷ்ய படை­க­ளுக்கு ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் தலைமை தாங்­கி­ய­தற்கு மேலும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை அளித்­துள்ளார். முன்னாள் தள­பதியான இவர் சமூக ஊட­கங்­களில் மிகப் பெரிய அளவில் செயற்பாட்டில் இருப்பவர். ரஷ்ய ஜனா­தி­பதி மற்றும் அவ­ரது தள­ப­தி­களின் போர்க்­கால நடத்தைகள் குறித்த அதி­ருப்திகளை பற்றி அடிக்­கடி கடு­மை­யான விமர்­ச­னங்­கள் மூலம் கூறு­பவர். தென்­கி­ழக்கு உக்ரேனின் வர­லாற்றுப் பெய­ரான நோவோ­ரோ­சி­யாவில் ஒரு வரு­டத்­திற்கு முன்பு "எதிரிகள் எங்கும் தாக்­க­வில்லை, ரஷ்­யாவின் இத­யத்தை அழிக்க முன்­மு­யற்சி செய்­கி­றது. இப்­போது நாம் என்ன செய்­கிறோம் பாருங்கள் ’ என விமர்­சித்­தவர். எம்.ஹெச் 17 விமான வழக்கில் இகோர் கிர்கின் கிழக்கு உக்­ரேனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்­கிய மலே­சிய விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­ய­தாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்­யர்­களும் லியோனிட் கார்­சென்கோ என்னும் ஒரு உக்ரேன் நாட்­ட­வரும் விமா­னத்தை எரிகணை­கள் மூலம் சுட்டு வீழ்த்தி, பய­ணிகள் மற்றும் விமான ஊழி­யர்கள் 298 பேரை கொலை செய்­த­தாக நெதர்­லாந்து விசா­ர­ணை­யாளர் குற்றம் சாட்­டி­யிருந்தார். இது தொடர்­பான நீதி­மன்ற வழக்கு நெதர்­லாந்தில் 2020 மார்ச்சில் நடந்­தது. இவ்­வி­மானம் ரஷ்ய, - உக்ரேன் எல்­லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்­வெ­ளியில் பறந்து கொண்­டி­ருந்­த­போது தொடர்பை இழந்­தது. அது உக்ரேன் அரசு மற்றும் ரஷ்ய ஆத­ரவு பெற்ற உக்ரேன் பிரி­வி­னை­வாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்­போது உக்ரேன் இராணுவ விமா­னங்கள் பலவும் சுட்டு வீழ்த்­தப்­பட்­டி­ருந்­தன. உக்­ரே­னிய கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­தி­களில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டது. இவ்­வி­மானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தற்கு நான்கு பேருக்கு எதி­ராக சர்­வ­தேச கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. இந்த நால்­வரில் ஒருவரான இகோர் கிர்கின் ரஷ்ய உள­வுத்­து­றையின் முன்னாள் கேர்னல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரேனின் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின். இந்த முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கிர்கினே, அதிபர் புட்டினால் உக்ரேனில் வெற்றி பெற முடியாவிட்டால், அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இவர் பின்னால் படை பல சக்திகள் இல்லாவிடினும், புட்டினுக்கு இன்னொரு பாரிய தலையிடியாக இவர் உள்ளார் என்றே கருதலாம். https://www.virakesari.lk/article/159589
  21. இந்திய-இலங்கை படகுச் சேவைக்கு விடுதலைப் புலிகளின் கப்பலைப் பயன்படுத்தவும் தயார் – நிமல் இந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பெறுவதற்குத் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக் குழு உள்ளது. “இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். KKS துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மட்டுமே தொடங்க முடியும் என சொன்னார்கள். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, வேறு எந்த துறைமுகத்திலிருந்தும் அல்ல” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்திற்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்,” என்றார். “படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும். இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம். என்றார். படகு நடத்துனர்களை இந்தியாவிற்கு வந்து படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/262346
  22. படக்குறிப்பு, சிவன், முன்னாள் தலைவர், இஸ்ரோ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 9 ஜூலை 2023, 12:16 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே. சிவன். பேட்டியிலிருந்து: கே. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் சந்திரயான் - 3ன் முக்கியத்துவம் என்ன? ப. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது. இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், சந்திரனில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான். கே. புவிசார் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது? ப. இஸ்ரோவைப் பொறுத்தவரை, இது ஒரு புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. சந்திரயான் 1, 2ல் நமக்குக் கிடைத்த படிப்பினைகள் என்ன? அந்தப் படிப்பினைகள் இந்தத் திட்டத்திற்கு எந்த விதத்தில் உதவும்? ப. சந்திரயான் -1ஐப் பொருத்தவரை, சந்திரனைச் சுற்றும்படி ஒரு விண்கலத்தை ஏவுவதுதான் அதன் நோக்கம். அது தவிர, Moon Impact probe என்று பெயரிடப்பட்ட சிறிய சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு சிறிய பொருள் சந்திரனில் தரையிறக்கிப் (crash landing) பார்க்கப்பட்டது. இதுதான் அந்தத் திட்டத்தின் முழுமையான நோக்கம். சந்திரயான் - 2ஐப் பொறுத்தவரை 3 நோக்கங்கள் இருந்தன. முதலாவதாக, சந்திரனைச் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளை ஏவுவது. அது சந்திரனைச் சுற்றிவந்து, சில அறிவியல் தகவல்களை அளிக்கும். இரண்டாவதாக, அந்த விண்கலத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து தரையிறங்க வேண்டும். அது லேண்டர் என்று அழைக்கப்படும். மூன்றாவதாக அந்த லேண்டரில் இருந்து ஒரு ரோவர் தரையிறங்கி, நிலவை ஆராய வேண்டும். இதில் முதலாவது கட்டம் சரியாக நிறைவேறி செயற்கைக்கோள் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. இரண்டாவது கட்டத்தில், லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்குப் பதிலாக வேகமாகத் தரையிறங்கி, நொறுங்கியது. இதனால், அதிலிருந்து கிடைக்க வேண்டிய சமிக்ஞைகள் கிடைக்கவில்லை. சந்திரயான் 3ஐப் பொறுத்தவரை, சந்திரயான் -2ல் தோல்வியடைந்த பகுதியைச் சரிசெய்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. முந்தைய சந்திரயான் திட்டத்தில் எந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், லேண்டர் வேகமாகத் தரையிறங்கி மோதியது? இப்போது அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது சரிசெய்யப்பட்டிருக்கிறது? ப. சந்திரயான் 2ல் இருந்த லேண்டர் வேகமாக தரையிறங்கி மோதியபோது, அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆராயப்பட்டன. அதில் என்ன தவறு நடந்தது என்பதை அறிந்து, இப்போது அதனைச் சரிசெய்திருக்கிறார்கள். கே. முந்தைய திட்டத்தில் விக்ரம் லாண்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அது ஏன் என்பது கண்டறியப்பட்டதா? ப. அதில் இரண்டு, மூன்று பிரச்சனைகள் இருந்தன. ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது. இந்தக் குறைபாடுகளையெல்லாம் இந்தத் திட்டத்தில் சரிசெய்திருக்கிறார்கள். கே. 1960களிலேயே அமெரிக்கா போன்ற நாடுகள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியிருக்கின்றன. ஆட்களே சென்றுவந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் ஆளில்லாத ரோவர்களை நாம் அனுப்புவது அவசியம்தானா? ப. நம்முடைய விண்வெளித் திட்டத்தில் 1960களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆரம்பித்தோம். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதுபோலவே, இப்போது நாம் செய்யும் முயற்சிகள் பிற்காலச் சந்ததிகளுக்குப் பயன்தரும். அதில் ஒரு திட்டம்தான் சந்திரயான் திட்டம். கே. அடுத்ததாக இஸ்ரோ ஆதித்யா எல் - 1 என்ற பெயரில் சூரியனுக்கு ஆய்வுக் கோளை அனுப்பவிருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன? ப. சூரியன் பூமிக்கு மிக முக்கியமானது. பூமியின் வாழ்வைக் கட்டுப்படுத்துவது சூரியன்தான். ஆனால், சூரியனைப் பற்றி அறிய வேண்டியது நிறைய இருக்கிறது. உதாரணமாக, அதன் வெளிப்பகுதியின் வெப்பநிலை 5,700 டிகிரிதான் தான் இருக்கும். ஆனால், சூழலின் வெப்ப நிலை மிகப் அதிகமாக இருக்கும். அது ஏன் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. சூரியனின் நடக்கும் மாற்றத்தால் பூமியில் ஏற்படும் சூழல் மாற்றம் பற்றியும் அறிந்துகொள்ளவே ஆய்வுக் கோளை அனுப்புகிறோம். பட மூலாதாரம்,NASA கே. 2025ல் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது.. இதில் எந்தக் கட்டத்தில் ஆபத்து இருக்கும்? ப. விண்ணுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு விண்கலத்தில் 450 கி.மீ. உயரத்திற்கு மனிதனை அனுப்புவார்கள். பிறகு, மீண்டும் அவரைப் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். மனிதனை சுமந்து செல்லும் ராக்கெட்டைப் பொறுத்தவரை, செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்களைவிட கூடுதல் செயல்திறனை, நம்பகத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே தற்போதைய ராக்கெட்டுகளை அதற்கேற்றபடி மாற்ற வேண்டும். அடுத்தபடியாக, மனிதர்கள் பூமியில் இருக்கும்போது என்னவிதமான சூழலில் இருந்தார்களோ அதேபோன்ற சூழலில் விண்ணிலும் இருப்பதற்கேற்றபடி சிறு அறைகளை (module) உருவாக்கவேண்டும். Environment Controlled Life support System என்று இதை அழைப்பார்கள். மனிதர்களை திரும்ப அழைத்துவரும்போது, பல கட்ட வெப்ப மாறுபாட்டை விண்கலம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி அந்த விண்கலத்தை வடிவமைக்க வேண்டும். அதேபோல, திரும்பிவரும் விண்கலம் நாம் நினைத்த இடத்தில் துல்லியமாக தரையிறங்க வேண்டும். அதற்கும் சில தொழில்நுட்பங்கள் தேவைப்படும். இதுதொடர்பான சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக சோதனை ஓட்டம் நடைபெறும். இதற்குப் பிறகு மனிதர் இல்லாத ரோபோக்களைக் கொண்ட ராக்கெட் அனுப்பப்படும். இப்படியான இரண்டு - மூன்று சோதனைகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. அடுத்ததாக, செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான சுக்ரயான் திட்டத்திலும் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது... வேறு எந்தெந்த கிரகங்களையெல்லாம் அடைய இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது? அதனால், என்ன பலன் கிடைக்கும்? ப. அடுத்ததாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தயாராகிவருகிறது. அதற்கடுத்து வெள்ளி கிரகத்திற்கு ஆளை அனுப்பும் திட்டம் இருக்கிறது. ஆனால், அது அனுமதி பெறும் கட்டத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம், பூமியின் துவக்கம் ஆகியவற்றை அறிவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை அதற்குப் பல்வேறு பலன்கள் இருக்கும். ஒன்று மக்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும் திட்டங்கள். மற்றொன்று, வேறு கட்டமைப்புக்கு உதவும் தகவல்களைத் தரும் திட்டங்கள். மூன்றாவதாக, முழுக்க முழுக்க விண்வெளி அறிவியலுக்கு உதவும் திட்டங்கள். இந்தத் திட்டம் அதுபோன்ற ஒரு திட்டம்தான். கே. சந்திரயான் 1 ஏவப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்தத் திட்டத்திற்குப் பிறகு நம்முடைய விண்வெளித் திட்டம் எந்த அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது...? ப. சந்திரயான் திட்டத்திற்கும் விண்வெளி வளர்ச்சிக்கும் இடையில் பெரிய தொடர்பு கிடையாது. இது ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது, அவ்வளவுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய செயற்கைக்கோள்கள் உருவாகியிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரோ நுழைவு வாயில் கே. சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு நிறுவனத்தைக் கட்ட நினைக்கின்றன. இந்தியா இது போன்ற திட்டங்களில் ஈடுபட எவ்வளவு காலம் பிடிக்கும்? ப. இந்தியா இப்போதுதான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேண்டுமானால், இதுபோன்ற திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம். கே.. இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகின்றன. இஸ்ரோவைப் பற்றித் திரைப்படம் எடுப்பதைவிட குறைவான செலவில் இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புவதாகக்கூட வேடிக்கையாகச் சொல்வார்கள்.. இது எப்படி சாத்தியமாகிறது? ப. குறைந்த செலவு என்பது ஒரு ஒப்பீட்டுப் பார்வைதான். நாம் சிறப்பு முயற்சி எதையும் அதற்காக மேற்கொள்வதில்லை. விண்வெளித் திட்டங்களுக்கான பொருட்களையும் கருவிகளையும் நாம் நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கேயே உருவாக்குவதால் செலவு குறைவாக இருக்கிறது. இதனை வெளிநாடுகளில் வாங்கினால், விலை அதிகமாக இருக்கும். செலவு குறைவாக இருக்க அது ஒரு காரணம். அதேபோல, இங்கே தயாரிப்புச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை குறைவு. மற்றபடி, இதற்கென சிறப்பு முயற்சிகள் எதையும் இஸ்ரோ செய்வதில்லை. கே. சந்திரயான் - 3 ஏவப்பட்டு எத்தனை நாட்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக சொல்ல முடியும்? ப. இந்தத் திட்டம் முழுமையடைய 45 நாட்களாகும். சந்திரயான் ஏவப்பட்ட பிறகு, 45 நாட்களுக்குப் பிறகுதான் லாண்டர் சந்திரனில் தரையிறங்கும். ஜூலை மாத மத்தியில் சந்திரயான் ஏவப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் லாண்டர் தரையிறங்கும். அதற்குப் பிறகுதான் அந்தத் திட்டம் முழுமையடையும். கே. விண்வெளி ஆய்வுத் துறையில் நாம் மேலும் திறன்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்? ப. விண்வெளித் துறையில் தேவைகள் அதிகரித்துவருகின்றன. வெளிநாட்டு சந்தையைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நம் நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசைப் பொறுத்தவரை 2021ல் விண்வெளித் துறை தனியாருக்கும் திறக்கப்பட்டது. இப்போது தனியாரும் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். நிறைய ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுகின்றன. நிறைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திலும் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு இஸ்ரோ தயாராகிக்கொண்டிருக்கிறது. கே. இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு, காலநிலைகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் போன்ற ஆய்வு கோள்களைத் தவிர மங்கள்யான், சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் தேவையா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறதே? ப. காலநிலை கண்காணிப்பு, ரிமோட் சென்சிங் எல்லாம் தேவை என இப்போது சொல்கிறார்கள். ஆனால், 1960களில் இஸ்ரோ தனது ஆய்வுகளைத் துவங்கியபோது, இதெல்லாம் தேவையா என்றுதான் சொன்னார்கள். ஆனால், அப்போது துவங்கியதன் பலன்களைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதேபோல இப்போது சந்திரயான் போன்ற திட்டங்களைத் துவங்கினால்தான், அதன் பலன்களை வரும் சந்ததியினர் அனுபவிப்பார்கள். தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். பட மூலாதாரம்,TWITTER/ISRO கே. நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் ஏதும் இஸ்ரோவுக்கு உள்ளதா, அது சாத்தியமா? ப. இப்போதைக்கு அப்படித் திட்டம் ஏதும் இல்லை. பிற்காலத்தில் நடக்கலாம். கே. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ராக்கெட்களை ஏவுவது என்பது உச்சபட்ச தொழில்நுட்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், அம்மாதிரி நிகழ்வுகளுக்கு முன்பாக விஞ்ஞானிகள் வழிபாட்டுத் தலங்களுக்குப் போகிறீர்கள்.. ராக்கெட் மாதிரிகளை வைத்து பூஜை செய்கிறீர்கள்... அறிவியலும் நம்பிக்கையும் எந்த இடத்தில் சந்திக்கின்றன? ப. இதெல்லாம் தனி நபர்களின் நம்பிக்கை. அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. ராக்கெட்களைப் பொறுத்தவரை, எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். இம்மாதிரி பிரச்சனை வரலாம் என்பதே முதலில் புரியாது. அம்மாதிரி நிலையில், சிலர் வழிபடுகிறார்கள். அவ்வளவுதான். https://www.bbc.com/tamil/articles/crgk0144p12o
  23. அண்ணை முத்துராஜாவை திரும்ப தரவேண்டும் என கூறியே தாய்லாந்திடம் வழங்கியதாக அதனை பராமரித்த விகாரைக்குரிய தேரரின் பேட்டி ஒன்று இருந்ததாக நினைவு. இவங்கள் அதனுடைய பெரிய தந்தத்துடனான தோரணைக்காகவே அதனை திரும்ப கேட்கிறதாக நினைக்கிறேன்.
  24. உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்குவதற்கு அமெரிக்காவின் நேச நாடுகள் எதிர்ப்பு Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 10:15 AM உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு அதன் நேச நாடுகள் பல கண்டனத்தை வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கவுள்ளதை உறுதிசெய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இதனை மிகவும் கடினமான முடிவு என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கனடா பிரிட்டன் ஸ்பெயின் நியுசிலாந்து ஆகிய நாடுகள் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. கொத்துக்குண்டை தடைசெய்யும் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள 123 நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதை பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் சுட்டிக்காட்டியுள்ளார். கொத்துக்குண்டினை தடை செய்யும் உடன்படிக்கையை கொண்டுவருவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்திய நியுசிலாந்து கடும் கருத்தினை வெளியிட்டுள்ளது. கொத்துக்குண்டுகள் கண்மூடித்தனமானவை அவை பொதுமக்களிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என நியுசிலாந்து பிரதமர் கிறிஸ் கிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்த எதிர்ப்பை நியுசிலாந்து அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சிலவகையான ஆயுதங்களை உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்பது குறித்து தனது நாடு உறுதியாக உள்ளது என ஸ்பெய்ன் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரொப்லெஸ் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டினால் எற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/159553
  25. Sri Lanka: மனித புதைகுழியில் கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது? Human Remains Found in Mullaitivu - இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது மனித புதைகுழிதானா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜூலை 6ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடந்து முடிந்த அகழ்வுப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முல்லைத்தீவு பகுதியில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணையில் சர்வதேச தலையீடு வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.