Everything posted by ஏராளன்
-
தையல்கடை.
அப்பாடா நானும் பயந்துபோய் இருந்தனான்! ஏழரை அலுப்புக் குடுக்குமோ என்று, சுபமாய் கதை முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும் சீட்டுத் தொடர்வது தான் ஏழரையோ? என்னத்தை பெருப்பிக்கப் போறியள் என்று சொன்னால் ....
-
தையல்கடை.
தைக்கட்டும் தைக்கட்டும், நன்றாக தைச்சுக் கிழிக்கட்டும்.
- தையல்கடை.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
ஓஹோ! அண்ணையிடம் முழுத் தகவலும் விரல் நுனியில் இருக்கே. அப்பிடியெண்டா வாழ்த்தைச் சொல்லி விடுவம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
நீங்கள் என்ன மாதிரி இடங்கள் போக விருப்பம் என்று சொல்லுங்கோ, நம்மட @புரட்சிகரத் தமிழ்த்தேசியன் விபரம் தருவார். அண்ணை திருமணங் கடந்த உறவில்லைத் தானே?!
-
தையல்கடை.
அடக்கடவுளே சின்னப் பொடியளை கலாய்க்க வேணாம் அண்ணை.
-
தையல்கடை.
வர்ணனைகள் தேர்ந்த எழுத்தாளர் போன்று இருக்கு! தொடருங்கள் சுவி அண்ணை.
-
குட்டிக் கதைகள்.
அவரைப் பற்றி என்ன வரலாறு தெரியுமோ?!
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்: பசுமை நிறைந்த அதிகம் அறியப்படாத பகுதிகள் மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களுள் கோவை குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவை குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாகவும் உள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம். சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவை குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேத்தரின் நீர்வீழ்ச்சி கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களைவிடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன. அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலை தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும். நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறை குளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம். இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்', டைனோசர் முட்டைகளின் வழிபாடு மற்றும் கடத்தல் – கள நிலவரம் குருசடை தீவு, கண்ணாடி படகு சவாரி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலா தலங்கள் சென்னையைச் சுற்றி இப்படியும் கூட சுற்றுலா தலங்கள் உள்ளனவா- - BBC News தமிழ் கொடிவேரி அணைக்கட்டு கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. 90களில் முக்கியமான படப்பிடிப்பு தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஆனைக்கட்டி கோவையைச் சுற்றி பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும். பரளிக்காடு சூழல் சுற்றுலா கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம். இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்த சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது. மலம்புழா அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையிலிருந்து எளிதாக செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை. மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. படகு பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. வால்பாறை கோவையிலிருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும். கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம். வால்பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்தி காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயிண்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். ஆழியாறு அணை, குரங்கு நீர் வீழ்ச்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும். அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. இங்கு பூங்கா, மீன் காட்சியகம், பார்க் தமிழ்நாடு மீன்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு நீர் வீழ்ச்சிக்குச் செல்வார்கள். வெள்ளியங்கிரி ட்ரெக்கிங் கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தூரம் மலை பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம். பக்தர்கள் மட்டுமில்லாமல் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது. பாலமலை கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம். நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கை காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம். உடுமலைப்பேட்டை கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளன. திருமூர்த்தி அணைக்கு மேல் பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடைபயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமராவதி அணை அமைந்ந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-64682857 தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்வோர் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- add image.JPG
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாஃப்டர் கொலை – காரணத்தை கண்டறிய 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் நோக்கி 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். அதன்பிறகு, வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/240414
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான், அகஸ்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
தையல்கடை.
தையலாள் என்றும் ஒரு பெயர் இல்லத்தரசிகளுக்கு உண்டெல்லோ. கதை நன்றாகப் போகிறது அண்ணை, முடிவு(சனி) தான் என்னாகுமோ?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாவும் கற்பனை அல்ல தானே?! தொடருங்கள் அண்ணை.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
தொடருங்கோ சிறியண்ணை.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
மனிதனின் உடல்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கர்வம் வேண்டாம்.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் மட்கும் பொருள்களால் கட்டுமானம்: இந்திய தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை சொல்வது என்ன? #Exclusive முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். கீழடி குறித்து இந்த ஆய்வறிக்கை சொல்வதென்ன? பிபிசி வழங்கும் பிரத்யேகத் தகவல்கள். மதுரையில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற தொல்லியல் தளத்தை 2014ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்தார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு ஒரு முறை இந்தியத் தொல்லியல் துறையும் அதற்குப் பின்பு மாநிலத் தொல்லியல் துறையும் அங்கு அகழாய்வுகளை நடத்தின. இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கை தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணாவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, கீழடி தொல்லியல் தளத்தின் காலகட்டம், அங்கு நிலவிய கலாச்சாரம், அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்த பயிர்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், அந்த இடம் எப்படி ஒரு நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ஆரம்பகட்ட விடைகளை அளிப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. கீழடியில் ஊற்றெடுக்கும் தமிழர் வரலாறு - இதுவரை கிடைத்தவை என்ன? சிவகளை அகழாய்வு: '3,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம் இருந்ததா?' தமிழர் கடல் நகரம் பூம்புகார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதா- - BBC News தமிழ் கீழடியில் மூன்று காலகட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் இங்கே வாழத் துவங்கியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இரும்புப் பொருட்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இடைக்கற்காலத்தைச் சேர்ந்த நிறைய கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த தீட்டப்பட்ட கற்கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இருந்தபோதும் கீழடி இடைக்கற்காலத்தையோ, புதிய கற்காலத்தையோ சேர்ந்த இடமாகக் கொள்ள முடியாது. இந்தக் கற்கருவிகள் கிடைப்பதை வைத்துப் பார்க்கும்போது, கீழடி வளரத் தொடங்கியபோது முந்தைய காலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். படக்குறிப்பு, அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில்தான், கீழடியில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA தானியங்களை சேகரித்துவைக்கக்கூடிய, அலங்கரிக்கப்பட்ட ஜாடிகள், சுடு மண் குழாய்கள், சுடு மண் உறை கிணறுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த அடுக்கில் கிடைத்திருக்கின்றன. உயர்ந்த ரகமுள்ள கறுப்பு - சிவப்பு கலங்கள், சிவப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், வெள்ளை நிறம் பூசப்பட்ட கலங்கள், தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் சேர்த்துவைத்துப் பார்க்கும்போது, இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளம் செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,K. AMARNATH RAMAKRISHNA இங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் பிராகிருத பெயர்கள், கீழடிக்கும் இலங்கைக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. மதிப்புமிக்க கற்களால் ஆன மணிகள், தந்தத்தால் ஆன பொருட்கள், தாமிரப் பொருட்கள், முத்து போன்றவை இங்கு கிடைத்திருப்பதை வைத்துப்பார்க்கும்போது, இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடனும் உலகின் பிற பகுதிகளுடனும் கீழடிக்கு இருந்த தொடர்பு தெரியவருகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் வரலாற்று துவக்க காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் மிக அரிதாகவே கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இந்த இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த கட்டடத் தொகுதிகள், மிகப் பெரிய கட்டடத் தொகுதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஓட்டி மேலதிக ஆய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையால் செய்யப்படாத நிலையில், இந்த கட்டடத் தொகுதிகள் எவ்வளவு பெரியவை, விரிவானவை என்பதை அறிய முடியவில்லை. இங்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் கீழடியின் கலாச்சார வளர்ச்சியை மட்டுமல்லாமல், வைகைச் சமவெளி மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்று துவக்க காலம் எப்படியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, இங்கு மக்கள் வாழ்வது குறைய ஆரம்பித்தது. பிறகு இந்த இடம் கைவிடப்பட்டது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிசெய்திருக்கிறது. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன உணவை உண்டார்கள், எந்த விலங்குகளை வளர்த்தார்கள், இங்கு கிடைத்த எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் காணலாம். (தொடரும்) https://www.bbc.com/tamil/india-64565240
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் காக்கா நரிக் கதை சீன வடிவம்
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வாழ்த்துகள் சிறி அண்ணை. தண்டப் பணம் அறவிட்டால் சுற்றுலா பயணிகளை எவ்வாறு கவருவது? அப்புறம் எப்ப நாடு வல்லரசாகிறது! யாழ்ப்பாண நகரில் இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடாம், சனம் வரிசை கட்டினதாம்.
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
மன்னிச்சு அண்ணை. மிகத் தவறு எனப் புரிந்தது. நன்றி. நிர்வாகத்திற்கு திருத்தச் சொல்லி முறையிட்டுள்ளேன்.
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! காணோளியா? காணொலியா? சரி? சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே?
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
ல்,ள்,ழ் எது எங்கே வரும்? | ல ள ழ எழுத்துப் பிழைகள்