Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. வாழ்க்கை ஒரு வட்டம் இந்த சைக்கிள் சில்லைப் போல!! ஆனால் - உயிர் அந்தரத்தில் ஊசாலடும் இந்த விளக்கு போல!!!
  2. ரதி.. எதிர்பாராத விதமாக இந்த ஆடிக் கடைசியில் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நான் போன இடம் இந்தப் புத்தகசாலைதான்(குயின்சி புத்தக சாலை- KKS வீதியில் உள்ளது) உங்களது ரசனை எனக்கு தெரியாது ஆனால் வெளிநாட்டில் இருந்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, உள்ளூர் எழுத்தாளர்கள், வேற்று மொழி எழுத்தாளர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள்(தமிழ் மொழி பெயர்ப்பு), வேற்று மொழியில் பலராலும் போற்றப்பட்ட நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் என நிறைய உள்ளது. என்னைப் பொறுத்த வரை, இப்போதைக்கு இது நல்லதொரு புத்தகசாலை.
  3. யாழ்ப்பாணத்தில் என்னோடு சேர்ந்து பெற்றோல்/டீசலிற்கு நிற்கும் வரிசையை பார்க்கும் நன்றியுள்ள ஜீவன்!!
  4. New Zealand's Hakaவிற்கு சற்றும் சளைக்காத Tonga நாட்டினரின் Sipi Tau, இதுவும் பார்வையாளர்களை பரவசப்பட வைக்கும்!! 3.56ல் இருந்து பார்க்கவும்!!!
  5. நடுக்கடலில விடாமல் பத்திரமாக எதியோப்பாவில இறக்கிவிட்டுவிட்டதற்கு ஏஜென்சிக்காரனுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும் இல்லையோ?? Anyway, உங்களைப் போன்றவர்களின் கருத்துகளை அறிய சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமே.. நன்றி Goshan!!
  6. 1968 classic 🎶 by Engelbert Humperdinck😊.. Every day I wake up, then I start to break up Knowing that it's cloudy above Every day I start out, then I cry my heart out Lonely is a man without love I cannot face this world that's fallen down on me So, if you see my girl please send her home to me Tell her about my heart that's slowly dying Say I can't stop myself from crying
  7. நகைச்சுவையாக எழுதினாலும் அதிலுள்ள கருத்துகள் இன்னமும் உறைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.. அது போகட்டும் சோமாலியாவில் நிலமைகள் எப்படி என அறிய ஆவல்.. 😊
  8. உண்மைதான்.. எனது தந்தை சில வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்த விடயங்களை நிறைவேற்ற, COVID கட்டுப்பாடுகள் எடுத்த உடனே பறந்து போய் வேலையை முடித்து ஒரு மாதம் நின்று விட்டு வந்துவிட்டேன்😊 இப்பொழுது நிலமை சரியாக இல்லாதநிலையை பார்க்கும் பொழுது நல்லகாலம் போய் வேலையை முடித்து கொடுத்தமையால் ஒரு மன அமைதி இருந்தாலும் சிலவற்றை யோசிக்கும் பொழுது கவலைப்படுவதும் உண்டு.. அங்கே உள்ளவர்களில் கல்வியை கற்று இரண்டு degree இருந்தாலும் அதற்கேற்ற வேலை இல்லை.. இன்னும் சிலர் O/L படிப்பையே நிறுத்துகிறார்கள்.. பலவிதமான கோலங்களில் அங்கே உள்ள சமுதாயம் வளர்ந்து வருகிறது..
  9. உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது. COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website மூலம் இணைப்பதுண்டு. படத்தின் அளவைக் கூட postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது..
  10. எனக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது ஏனெனில் இன்னமும் இந்த செய்தி பரவிக்கொண்டுதான் உள்ளது(WhatsApp/Viber) .. எனக்கு நட்புவட்டத்தில் உண்மையை சொல்லமுடியவில்லை, ஏனெனில் நான் எனது உண்மையான பெயரிலேயே இங்கே எழுதுவதால் ஆனால் அவர்களிடம் ஆதாரம் எங்கே? April fool செய்தியாக இருக்கலாம் தானே? என சிலதை கூறிவிட்டு forward செய்ய வேண்டாம் என கூறினேன்.. கேட்பார்களோ தெரியாது😔😔..
  11. அப்படிதான் சற்று முன்பு என் தந்தையுடன் கதைத்தபோது கூறினார்.. நேற்று அவருடன் கதைக்கமுடியாமல் போய்விட்டது.. இன்று கதைத்த பொழுதுதான் தெரிந்தது. பாடசாலைகள் கூட நாளையிலிருந்து விடுமுறை எனவும், ஊரடங்கு என்றும் கூறினார்..
  12. இல்லை, ஆனால் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் தரக்கூடிய நாடுகள் எங்கே இருக்கின்றன என்றால் அது மேற்குலக நாடுகளில்தான் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் இணைந்தோ இல்லை அனுசரித்தோ நடக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். எங்கள் விடயத்தில் யார் ஓரளவிற்கேனும் உதவுவார்கள் என்பதை/சரியானதை விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்கிறேன்.. இந்த உக்ரோன் போரைப் பற்றி இணையத்தளங்களில் அவர்கள் மீது வெறுப்பை காட்டி எழுதியதால்தான் இந்தளவு கருத்துக்களும், இல்லாவிடில் ஏதோவொரு செய்தியாக பார்த்துவிட்டு மனதிற்குள் புடினை சபித்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களிற்காக இரக்கப்பட்டிருப்பேன் ஏனெனில் போர் ஏற்படுத்திய வலிகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதனை வெறுக்கிறேன்.. அவ்வளவுதான்.. நன்றி அண்ணா.
  13. வணக்கம் குமாரசாமி அண்ணா! வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா?
  14. இதென்ன பேய்/பிசாசு கதையோ? ஏற்கனவே Night Stalker பார்த்துவிட்டு செம கலக்கத்தில இருக்கிறேன்.. இனி இதற்குள் வரவில்லை நன்றி. வணக்கம்
  15. அடுத்த பகுதி வரும் வரைக்கும் அந்த மனிதன் ஒரு புரியாத புதிர் தான்
  16. நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்? இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? சரி, அதைவிடுங்கள் முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை முறியடிப்பது யார்? //எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? // போராட்டதை அவர்கள் மட்டுமா முறியடித்தார்கள்? //மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.// இருக்கலாம். ஆனால் தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்..
  17. என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!! ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!! நன்றி.
  18. @Kapithan வணக்கம் அண்ணா, அவர் முதலே உங்கள் எல்லோரிடம் கேட்டிருந்தார்.. ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் எழுதியிருந்தார்.. ஆனால் ஒருவரும் கவனிக்கவில்லை???? கவனித்திருந்தால் நேரத்தை வீண் விரயமாக்கியிருந்திருக்க மாட்டீர்கள்.. உண்மையில் உங்கள் எல்லோருக்கும் துரோகத்தின் நாட்காட்டி எழுதும் அவரால் நீங்கள் நினைப்பது போல இருக்கவில்லை என்ற கோபமோ என நினைக்கிறேன். அங்கே கூட அவர் அப்படி எழுதுவதை ஒருபட்ச கட்டுரை என சிலர் கூறினார்கள் பின் அவர் கேட்டுக்கொண்ட படி விலகியே இருந்தார்கள். இங்கே மட்டும் இது தனது சொந்த ஆக்கம் என கூறியபின்பும் எத்தனை இடையூறுகள்.. நன்றி..
  19. @goshan_che உங்களுடைய நகைச்சுவையில் இருக்கும் கருத்து அருமை!! மீண்டும் கண்டது சந்தோஷம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.