Everything posted by விளங்க நினைப்பவன்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மிகவும் தேவையான அறிவுரைகளில் முக்கியமானது. அதே போன்று ஆசிரியர்களை கடவுளாக நினைப்பதையும் கைவிட வேண்டும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
எப்படி மேலே யாயினி தந்த வீடியோவில் நோய்பட்ட அப்பாவை அழைத்து கொண்டு மகன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரவு செல்கின்றார்.ஆனால் அங்கு எவருமே இல்லை அதன் பின்பு யாழ்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றார்கள். சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பளம் பெற்று கொண்டும் வேலைக்கு வரவில்லை . இப்படியா நீங்கள் வாழ்கின்ற நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. இலங்கை சிங்கள பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளே சாவகச்சேரி வைத்தியசாலை வேலை செய்பவர்களை விட எவ்வளவோ மேல் என்கின்றார்கள்.
-
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: இலங்கையில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்தியமத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
இந்தியாவில் களவு எடுத்தால் தண்டணை , வெளிநாட்டுக்கு சென்று களவு எடுத்தால் பாதுகாப்பு வழங்கபட வேண்டும் இந்திய நீதி.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலையில் அரசால் மக்களுக்கு கொடுக்கபட்ட மருத்துவ வசதிகளை மக்கள் பெற்கொள்ளவிடமால் பன்றிகள் பறித்து தின்று கொழுத்து கொண்டிருந்த போது அதற்கு எதிராக தனி ஒரு ஆளாக போராடிய டொக்டர் அர்ச்சுனா மிகச் சிறந்தவர்.மிகவும் பாராட்டுக்குரியவர் 🙏 அது தானே பிரச்சனையே. டொக்டர் அர்ச்சுனாவும் ஒரு மேற்குலகநாட்டில் குடியேறி இருந்து கொண்டு அப்படி அவர்கள் எதிர்பார்ப்பது போன்று தன்னை காட்டி கொண்டு சிமாட்போனில் , லப்ரொப்பில் தட்டி கொண்டிருந்தால் வாழ்த்துக்கள் கிடைக்கும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
டொக்டர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார் 👇 நான் ஒரு யதார்த்தவாதி நான் ஒரு புலி ஆள் என்று சொல்லவில்லை செல்வராசா கயேந்திரன் முதலில் சொல்லி பார்த்தவரம் புலி தலைவரை தூக்கினால் பிரச்சனை முடிந்து விடும். இப்படி பட்டவர்கள் தாம் தமிழ் இனம். திருந்துங்கோடா
-
"உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... "
மதங்கள் வழமையாக சொல்லும் இந்த மிகப்பெரிய பொய் பலதடவை அப்பலபட்டு அவைகளின் சுயரூபம் வெளிவந்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
மிகச் சரியாக சொன்னீர்கள் இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி பேசுவதற்கு இவர்கள் ஒரு விதி முறை வைத்திருக்கின்றார்கள் எவரை புகழலாம் எவரை இழிவுபடுத்த வேண்டும் என்று அதற்கு கீழ்படிந்து நடத்தால் பிரச்சனை வராது அல்லது ஒரே தாக்குதல் தான்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
[ இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். ] முரண்பாண்டின் மொத்த உருவம் சீமான். அவர் தான் அப்படி என்றால் தொண்டர்களும் அப்படியே ஏற்று கொண்டுவிட்டனர். எனககு சந்தேகம் இருந்தது இவர்கள் பெரும் தலைவர் என்று சீமானை சொல்கின்றார்களா அல்லது சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்த அண்ணாவை தான் சொல்கின்றார்களோ! ஆனால் அப்படி எல்லாம் இல்லை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதை பிடிவாதமாக மறுத்த காமராசர் தான் பெரும் தலைவர். புலி தலைவரை பயன்படுத்துவது போன்று.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
ஈழதமிழ் தோழர்கள், புரச்சியாளர்கள் மீது நான் வைத்திருக்கின்ற எனது உறுதியான நம்பிக்கை பிழைக்கவில்லை 💪
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
டொக்டர் அர்ச்சுனாவை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போராடும் ஒருவராகவே இதுவரை பார்த்தேன். வட்சப்பில் அவரை மாபெரும் தலைவன் என்றும், வீரபையன்26 வார்த்தையில் சொல்வதானால் பெரும் தலைவர் அர்ச்சுனா என்றும் செய்திகள் அடிக்கடி அனுப்பி கொண்டிருந்தார்கள். அதனால் வேறு எதுவும் நான் நினைக்கவில்லை இப்போது யாயினியும் நீங்களும் சொன்ன பின்பு தான் யோசிக்கின்றேன்🤔
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
நீங்கள் யாரை பெரும் தலைவர் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி. இவர் இந்திய பாரத ஒருமைபாட்டில் உறுதியான பற்று கொண்ட ஒருவர் என்பது அறிந்துள்ளேன்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
உறவே பெரும் தலைவர் என்று நீங்கள் சொல்வது உங்களது கட்சி தலைவர் சீமானை தானே
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நேரம் கிடைக்கின்ற போது எழுதுங்கோ.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம். பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
😄 வட்சப் குறுப்பில் வந்த தகவல் உறவே நன்றி தரம் கெட்டு கீழே சென்று கொண்டிருப்பது வருத்தம் 😟
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள்
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
சீமான் கட்சி கருணாநிதியை சாதி அடிப்படையில் தாக்கி பாட்டு பாடியதாகவும் பதிலுக்கு மற்ற சாதியினர் பதிலுக்கு செய்ய குழப்பம் வரும் என்று எதிர்பார்த்து தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தகவல் படித்தேன்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இதற்கு முன்பும் யாழ்களத்தில் இவர் பெயரை கண்டுள்ளேன். யார் இந்த தோழர் பாலன் டொக்டர் அர்ச்சுனா போன்று இலங்கையில் இருந்து மக்களுக்காக போராடுபவரா அல்லது கப்பிட்டலிஸ்ட் மேற்குலகநாடுகளில் குடியேறி கொண்டவரா
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 - 1 பிரான்ஸ்
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
இவருடைய பயம் கவலை எல்லாம் சீனா கொடுக்கும் வீட்டை மக்கள் ஏற்று கொண்டு அவர்களுக்கு வீடுகள் கிடைத்து விடுமோ என்பது தான். எப்போதோ வரும் சூறாவளிக்கு இந்த வீடு அழிந்து விடும் என்று இவர் இப்பவே கவலைபடுகின்றாராம். இந்தியாவில் இருந்து கொள்யைடிக்க வருகின்ற இந்திய மீனவர்களால் இலங்கை தமிழ் மீனவர்கள் பாதிப்படையவில்லை.இழுவை மடி வலையால் தானாம் பாதிப்பு
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நல்ல செய்தி.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
சிறப்பாக எமது ஆட்கள் நிலையை தெரிவித்துள்ளீர்கள்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நானும் இவர் பெயரை கேள்விபட்டுள்ளேன் படித்தது இல்லை படிக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கபட்டு ஈழதமிழர்களிடமும் பரவி இருக்கின்ற இந்த கொடூரமான சாதி முறை அவர்களிடம் கரைபுரண்டு ஓடும் மதத்தின் பங்கே முக்கியமாக இருக்க வேண்டும்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
இல்லை நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை. நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஒரு சிறந்த யேர்மன் அணி தோற்றுவிட்டது😟