Everything posted by விளங்க நினைப்பவன்
-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
அதை தானே சாதி முத்திரை குத்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அங்கே என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது) மேலே தெரிவிக்கபட்ட கருத்து போல் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் நடைமுறைபடுத்துவதே சரியான தீர்வு
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன் 2 -1 வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின் போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள் "நன்றி யேர்மனி " என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
எல்லை தாண்டி களவு எடுக்க வருகின்ற கள்ளர்கள் மீது இனி நடவடிக்கைகள் இறுகலாம்.
-
ரணில் பக்கம் சாய்வதற்காக, மார்ஷல் பதவியா..?
இவருக்கு தமிழ் அரசிய்வாதிகளின் பேச்சை கேட்டு வாக்களித்து உயர்ந்த கவுரவம் ஈழ தமிழர்கள் பலர் ஏற்கெனவே வழங்கி கௌரவித்துவிட்டனர்.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
மது தடை உள்ள இடங்களில் கள்ள சாராயம் பெருக்கம் தாராளமாக நடைபெறும். தமிழ்நாட்டில் நடந்தது தான் அதிசயம் மதுவுக்கு அங்கே தடை இல்லை. அப்படி இருக்க கள்ள சாராயம் . மதுவின் மீதான மோகம் தமிழ்நாட்டில் மிக அதிகம்
- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு!
இந்தியா சொல்லி தான் இவர்கள் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற நகைசுவை நாடத்தை நடத்துகின்றனரா😄
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
மது இல்லாத ஒரு நாடும் உலகில் சாத்தியம் இல்லை. தமிழக அரசியல் வாதிகளுக்கு தெரிந்தது மது இல்லாத ஒரு மாநிலம். நமது உறவும் அவர்களின் பேச்சை கேட்டு அப்படி நம்ப தொடங்கிவிட்டார். இந்த கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிர் இழந்த நகரம் கள்ளக்குறிச்சி மிகவும் பின்தங்கியதாம்.வேலைவாய்ப்பு இல்லாமையும் வறுமை காரணம் கள்ளச்சாராயம் தாயரிக்கும் கொள்ளைகாரர்கள் தங்கள் தொழிலுக்கு மக்களை பயன்படுத்துகின்றனர்.
-
தாய்வான் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை!
அது தானே மக்கள் சுதந்திரம் என்பது சீனாவால் சகித்து கொள்ள முடியாதது.
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
நான் அவர் சொன்னதை ஒரு தகவலாக மட்டும் தான் சொன்னேன் 😊
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
ஆனால் இந்த இந்தியா பேசினால் நீதி தர்மம் புண்ணிய பூமி இந்தியா என்று எத்தனை சுத்துமாத்துக்கள்.
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
என்னாலும் இந்த மருத்துவர் சொன்னதை ஏற்று கொள்ளவில்லை. எனக்கு தெரிந்தவரை நன்றாக வயது வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இலங்கைக்கு மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று வருகிறார்கள். .துன்பம் தருகின்ற கொடிய நோய்கள் வந்தவர்கள், இளவயதினர் உட்பட சிலர் தங்காகவே இறக்க விரும்புவதாக படித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்த இரண்டு தமிழ் இளம் அண்ணாமார்கள் தங்களுக்கு வந்த நோயில் இருந்து விடுபட்டு உயிர் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைபட்டார்கள் என்பதை நேரிலே பார்த்திருக்கிறேன். அவர்களால் முடியவில்லை 😥 அதில் ஒருவர் சொன்னார் நான் இலங்கையில் இருந்திருந்தால் இந்த நோய் எனக்கு வந்திருக்காது. ---------------- எனது நண்பர் தமிழ் என்னை விட அதிகம் தெரிந்தவரிடம் சேடம் பற்றி வட்அப் தகவல் அனுப்பி கேட்டிருந்தேன். அது கடுமையான அஸ்மா வந்த நிலை என்று தகவல் தந்தார்.
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
அவர்கள் நீங்கள் எல்லாம் வந்து முஸ்லிம் மதத்தை தழுவி உலகத்தை அல்லாவின் சட்டம் ஆட்சி செய்யும் என்று பர்ர்த்து கொண்டிருக்கின்றார்கள். அவருடன் பயிற்ச்சி செய்வது நவீன முஸ்லிம்கள். இந்திய, இலங்கை முஸ்லிம்கள் மொழியில் அவர்கள் துரோகிகள், காபிர்களின் அடிவருடிகள்.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
இது ஒரு சகிக்க முடியாத பொய். குடிப்பதை தூண்டிவிடும் பொய். முழு உண்மை.
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
சேடம் என்றால் என்ன?
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
Gazprom இழந்த இழப்பை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று ரஷ்யாவினால் நியமிக்கபட்ட விசாரணை குழுவே எச்சரித்துள்ளது.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சாதி பார்த்து கல் எறிவது தவறு தானே😟
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
நீதியான கருத்து. ஹமாஸ் ஒக்ரோபர் 7 இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை பலஸ்தீனர்கள் கொண்டாடினார்கள். இவர்களுடன் வேலை பார்த்த ஈழதமிழர்களிடம் பேசிபார்த்தால் தெரிந்து கொள்ள முடியும் இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதே போன்று பழைய காலத்து ஈழதமிழர்களிடம் பெண்கள் வேலைக்கு போவது நல்லது இல்லை அவாகள் வீட்டில் இருந்து சமையல் செய்து பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும்.ஆண் சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஓம் நானும் கேள்விபட்டேன் 😄. மெக்காவில் உள்ள சிவலிங்கத்தை தான் கறுப்பு கல் என்று முஸ்லிம்கள் வணங்குகின்றனராம். இப்போ பார்த்தால் இந்து மதத்தின் ஒரு பிரிவு ஈழதமிழர்களிடம் உள்ள சைவம் போன்று முஸ்லிம் மதமும் இன்னொரு பிரிவு. பாலஸ்தீனர்களுக்காக ஏன் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்கள் இவ்வளவு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதும் விளங்கியது 😂
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
உறவே, அது சாதி பற்று வெறி ☹️
-
மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்
ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம் களவு எடுக்க போனவர்கள் பிடிபட்டதிற்காக ஸ்டாலின் சீற்றம் கொள்ளலாமா இப்படி ஒரு முதல்வர் செய்யலாமா 😭
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
புனித ஹஜ் யாத்திரை என்று சொல்லபடுகின்ற யாத்திரைக்கு சென்று இறந்து போனால் அதை ஒரு பாக்கியமாக நம்புபவர்கள் அவர்கள். ஹஜ் யாத்திரை வருகின்ற பக்தர்கள் அல்லாவின் விருந்தாளிகள் என்று சவுதியில் சுலோகங்கள் வைக்கபட்டுள்ளனவாம்.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
வட கொரிய கிம் யொங் அன் ஒரு ஜோடி வேட்டை நாய்களை புதினுக்கு பரியசாக வழங்கி இருக்கின்றார். புதின் அவருக்கு உல்லாச சொகுசு கார் ஒன்றை பரியசாக கொடுத்திருக்கின்றார்கள்.இது ஒரு ஒளிமயமான உலகத்தின் எதிர்காலந்திற்கு வழி அமைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இது நீங்கள் சொன்னது நடக்க கூடியது. ஆனால் அந்த தமிழ் வேட்பாளரும் சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல தான் போட்டியிடுகிறேன் என்று நகைசுவை விடாமல் முழு இலங்கை மக்களின் நன்மைக்காக என்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.