Everything posted by விளங்க நினைப்பவன்
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நான் தெரிந்து கொண்டது இந்த இனவாத கட்சி ஐரோப்பா பாரளுமன்றத்தில் 15 இருக்கைகளை பெற்று கொண்டுள்ளது. யேர்மன் எதிர் கட்சி இவர்களை விட அதிகம் இருக்கைகள் பெற்றுள்ளது . ஆளும் கூட்டணி கட்சிகள் தனி தனியாக இவர்களைவிட குறைய பெற்று கொண்டதால் இவர்கள் இரண்டாவது இடம்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சுகபோக வாழ்கை வாழ்வதற்காக காசு கொள்ளை அடிப்பதற்காக அரசியல் செய்கின்ற மகா கொள்ளையர்களுக்கு ஒரு போதும் சந்தர்பம் கொடுக்க கூடாது.
-
யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு.
வாழ்த்துக்கள் வெளிநாட்டில் உள்ள ஒருவர் துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்துள்ளார் 👍 தங்க ஆபரணங்கள் கொடுத்தவர்கள் மாணவின் வீட்டுக்கு தளபாடங்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சரியான கணிப்பு. அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 % 40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 8.10 %
-
பாரதியார் தம்மை விடுதலை செய்யும்படி பணிவோடு வேண்டி பிரிட்டிஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதம் – பின்னணி என்ன?
பரதியாரின் மறுபக்கம்.தெரிந்திராத தகவல் தெரியபடுத்தியமைக்கு நன்றி. ஈழதமிழர்களும் மேற்குலக நாடுகளில் நல்ல பாதுகாப்பான வசதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டு தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் அப்படி போராட வேண்டும் இப்படி போராட வேண்டும் என்று பொங்குவார்கள்.
-
திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான்.
6.5% இருந்து 8.1 % எடுத்தது சீமானின் அதிரடி பாய்ச்சல் ,சாதனை ,மற்ற கட்சிகளுக்குபெரும் அச்சுறுத்தல் 🤣 தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லாமல் ஹிந்திகாரர்களா
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
பொது வேட்பாளர் பற்றிய யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடை பெற்ற கலந்துரையாடல் என்று மேலே உள்ள படத்தை பார்த்தால் அது கடவுளை பற்றிய கலந்துரையாடல் போல் அல்லவா தெரிகின்றது 🤔
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
17 ஆவது நினைவு நாள் அஞ்சலிகள்.
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
அமைச்சரே இப்படி பயனற்ற வேலையை செய்யாதீர்கள். இந்திய சிலை கலாச்சாரம் வேண்டாம். குவியும் சிலைகளையும் , சிலைகளின் கனத்தையும் ஈழ தமிழர்ளின் பூமி தாங்காது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நூறு வீதம் உண்மை.சீர்கேடுகளுக்கு காரணங்களும் அது தான்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை. இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை". இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும் நல்லது செய்யட்டும்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்டதே இந்த திரி மூலமே எனக்கு தெரியும் .இந்த முதலாவது வீடியோவை நான் கஷ்டபட்டு பார்த்து விளங்கி கொண்டது தமிழ் அடியனும் கதை பரப்பி விடுகின்றார். பெருமாளும் சொன்னாரே தமிழ் அடியன் முன்பும் பல பொய்கள் சொன்னவர் என்று. இரண்டாது வீடியோ நான் இன்னும் பார்க்கவில்லை.
-
சாமி சிறீ பாஞ்
நீண்ட சிகிச்சையில் மூலம் நீங்கள் சுகம் பெற்றதும், உங்களை கண்டதும் மகிழ்ச்சி. 😄 இரசித்தேன்
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
ஒரு போதும் முடியாது. தமிழர்கள், ஆசியாவை சேர்ந்தவர்கள் இப்படி செய்வதை அவரும் செய்கின்றார். தேர்தலில் மக்களின் விருப்பு முக்கியம் இல்லை மக்கள் தனக்கு வாக்களிக்காவிட்டாலும் கடவுளுக்கு அங்க பிரதஷ்ணம் செய்தால் மக்கள் தீர்ப்பை கடவுள் சுத்துமாத்து செய்து மாற்றி இவரை வெற்றியடைய பண்ணுவார் என்று நம்புகின்றார்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
இந்த தமிழ் அடியனும் கதை பரப்பிவிட தானே முயற்சிக்கின்றார்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உறவே இதை நீங்கள் முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.
-
வினா விடை
தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
யாயினி, நியாயம் மிகச் சரியான கருத்து. கபிதனின் பொறுப்பான பதில்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
தகவல்களுக்கு நன்றி.
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
சோறு மத்தியானம் மட்டுமே. மற்றும்படி இலகுவான ஆரோக்கியமான உணவான புட்டு இடியப்பம் இரண்டு வேளை சாப்பிடுகின்றோம் எல்லோ என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுகின்றது 😟
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இது மாதிரி தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில் கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது குரல் கொடுக்கவில்லையாம். ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.
-
நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து : சீனாவினது ஆய்வில் வெற்றி!
உண்மை தான் .எமது ஆட்களில் இந்திய மருத்துவத்தை தேடி இந்தியா போவோர் ஒரு பகுதி இருக்கின்றனர்.ஆனால் சீனா மருத்துவ பக்கம் போக மாட்டார்கள்.
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
🤣 நான் இன்று தொடக்கம் விலை மிகவும் அதிகாமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழப் போகின்றேன்.
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.