Everything posted by விளங்க நினைப்பவன்
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
புட்டின் ரஷ்யாவை கொள்ளை அடித்த பணத்தில் அவர் காதலிகள் மட்டுமல்ல அவர் பிள்ளைகளும் எல்லோ மேற்குலக நாடுகளில் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கின்றார்கள்
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
டொக்டர் அர்ச்சுனா கிளிநெச்சியில் புதிய பாலம் அமைக்கும் வேலை நடைபெற்ற இடத்தில் நின்ற இலங்கை இராணுவ அதிகாரியுடன் சிங்களத்தில் கதைத்து விட்டு சொன்னார் புழுதடைந்த பாலத்தை இலங்கை இராணுவம் அகற்றும் பின்பு இந்திய இராணுவம் தாங்கள் கொண்டு வந்த பாலத்தை பொருத்துவார்கள்.
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன புட்டினுக்கு ஒத்துவராதவை. சூறாவளியின் இலங்கை பாதிப்பை பயன்படுத்தி தனது உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்த இலங்கை ஆட்களை எப்படி தூக்குவது என்று தான் நினைப்பார். எரிகின்ற வீட்டில் இருந்து என்ன பிடுங்கி எடுக்கலாம் என்று சிந்திப்பவர்.
-
பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
இலங்கை பிரச்சனையும் தீர்ந்து விடலாம் ஆனால் இந்த மேற்குலக நாடுகளில் குடியேறிய ஈழதமிழர்களின் எங்கட தான் உத்தமம் என்ற பிரச்சனைக்கு முடிவே இல்லை🙆♂️
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு ] இந்த அநுர குமார திசாநாயக்க என்பவர் செம்ரம்பர் 2024 முன்பும் அரசியலில் தீவிரமாக இருந்திருக்கின்றார். தனி மனித நம்பிக்கை சொல்லி ஆட்சிக்கு ஆதரவு திரட்டுவது பேய்காட்டுவது சுலபம். ஜேவிபி மிக பெரிய அளவில் இணைய தளங்கள் மூலம் தமிழில் பிரசாரம் நடத்துகின்றது. ஒரு காணொளி பார்த்தேன் அதன் தலைப்பு தேரர்களை கம்பெடுத்து விரட்டிய சிங்கள மக்கள் - தென்னிலங்கையில் கடும்பதற்றம். இப்படியானதை பார்த்தால் தமிழர்கள் மிகவும் சந்தோசம் அடைவார்கள் என்று தான் அப்படி
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
பாகிஸ்தான் காலாவதியான பழுதடைந்த உணவுப்பொருட்களை வழங்கியது மோசமான செயல். தீமை செய்கின்ற பழுதடைந்த உணவுகளை கொடுப்பதை விட புடின் மாதிரி ஒன்றும் கொடுக்காமல் இருந்திருக்கலாம். இந்தியா புகழ் அதிகரித்துவிட்டது . பாகிஸ்தான் பொருட்கள் காலாவதி ஆகவில்லை என்று புர்க்கா போட்ட தமிழ் பெண் பேசும் காணொளி ஒன்று வந்தது ஆரம்பம் கேட்டேன் அதை பற்றிய செய்திகளே இல்லை
-
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!
மோடி இந்திய கடற்படை விமானப் படைகள் மூலம் இலங்கை பாதிப்புக்கு உதவிகள் செய்து வருகின்றார். மோடியை சந்தோசபடுத்துவதற்காக இலங்கையுடன் நானும் துணை நிற்கிறேன் என்று புட்டின் சொல்லியிருப்பார் அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களும் 20,000 வெள்ள தடுப்பு சாக்குகளும் கொடுத்துள்ளது. நிவாரணக் குழுவுடன் பொருட்களை ஏற்றி செல்லும் இரண்டு C-130 விமானங்கள் வியாழகிழமை வர இருக்கின்றன. 1 மில்லியன் அவுஸ்ரேலிய டொலரை அவுஸ்ரேலியாவும், நேபாளம் 200 ஆயிரம் யுஸ் டொலரையும் , மாலத்தீவு 50,000 அமெரிக்க டாலர்களையும் 25,000 ரின்மீன்களையும் கொடுத்துள்ளன. ஜப்பான் நிவாரணப் பொருட்கள் மருந்துகனை வழங்கியதோடு அவசர மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் கடற்படை மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது மற்றும் மீட்புப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் C-130 விமானம் உட்பட மேலும் நிவாரணப் பொருட்கள் வரும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை மூலம் நிவாரண பொருட்களை கொடுத்துள்ளது
-
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
🤣 தமிழ்நாடு என்று பெயர் சீமானின் மகன்களே படிப்பதே ஆங்கில மொழி மூலம்
-
மூத்த தமிழ் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதிற்கு தமிழ் சீமான் வாழ்த்து
- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
நான் அப்படி நினைக்கவில்லை இந்தியர்களை எடுத்து கொள்வோம் ரஷ்யா கெட்டது என்று தெரிந்தாலும் இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா என்று அதற்க்கு தானே விசுவாசமாக இருக்கின்றார்கள் . (பூட்ரின் இம்மாதம் இந்தியா வருகிறார் என்று சொன்னார்கள் ) வெளிநாடு வந்த பின்பு மதம் மாறி இலங்கை தமிழர்களை எடுத்து கொள்வோம் அவர்கள் நம்பி மாறிய புதிய மத கட்டனை படி விசுவாசமாக தானே நடக்கின்றனர். கண்டால் தொடங்கிவிடுவார்கள் Everything is happening according to the .......🤣 அவர்கள் அப்படியொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள். அனால் மற்றவர்களுக்கு ரஷ்யா தான் நேர்மையானவன் நல்லவன் வெஸ்டர்ன் நாடுகள் மோசமான கள்ளர்கள் என்று பிரசாரம் செய்வார்கள். கள்ளு உடலுக்கு தீங்கு என்று நான் குடிக்க மாட்டேன் ஆனால் மற்றவர்களுக்கு அது தான் சத்துணவு நீண்டகாலம் வாழ்வதற்கு ஏற்ற பானம் என்று வழி காட்டுவேன் 😂- யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர்
யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அண்ணா உங்களுக்கு இந்தியர்கள் பற்றி மிக அதிகம் தெரியும் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்தது அவர்கள் ரஷ்யா எங்கள் உண்மையான நண்பன் ஆகவே ரஷ்யா எப்படியாவது உக்ரேனை அடித்து அழித்து பிடித்துவிட வேண்டும் என்ற நிலையில் இருப்பார்களம் அது திராவிட தமிழனாகவோ சீமான் தமிழனாகவோ ஹிந்திகாரக இருந்தாலும் . ஆனால் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பு தேடி வந்து வாழ்கின்ற ரஷ்ய விசுவாசிகள் எம்மவர் சிலரின் நிலை தான் விசித்திரமானது. எமது நாடுகளில் ரஷ்யா பற்றிய செய்திகள் வந்தா அது எல்லாம் சாதிகார வெஸ்டர்ன் நாடுகளின் திட்டமிட்ட சூழ்ச்சி ரஷ்யா என்ற நல்லவனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் எந்த பின்புலமுமில்லாமல் செய்தி. ஆனால் புடினின் தகவல் toolbox ல் இருந்து வருகின்ற ரஷ்ய சார்பு தவறான தகவல்களை பரப்புகின்ற தளங்கள் பிராவ்தா நெட்வொர்க் செய்திகள் தான் உண்மையானவை.- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இரஸ்சியாவிற்கு ஐரோப்பிய நாடுகள் மேல் தாக்குதல் செய்யும் எந்தவித நோக்கம் இல்லை எனவும் அவ்வாறு கூறுவது அபத்தாமானது வேணுமென்றால் எழுத்துபூர்வ உறுதிமொழி வழ்ங்கலாம் என புட்டின் அறிவித்துள்ளார், ] எனக்கு இதை படிக்கின்ற போது பழைய நினைவுகள் வருகின்றது 😂 மூன்று வருடங்களுக்கு முன்பு புடின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தை உக்கிரேன் எல்லையில் கொண்டுவந்து குவித்தார் .உடனே உக்ரைனும் மேற்குலகநாடுகளும் உக்ரைன் ஆக்கிரமிப்பை ரஷ்யா ஆரம்பிக்க போவதாக உறுதியுடன் தெரித்தனர். நல்லவரான புடின் உடனே விளங்கபடுத்தினார் ரஷ்ய எல்லையில் எங்கள் இராணுவம் ஒரு தற்காப்பு பயிற்சியை தான் செய்கின்றது. எந்த ஒரு நாட்டிற்கும் அச்சுறுத்தலை செய்சதற்கு இல்லை உக்ரைனை ஆக்கிரமிக்கப் போவதும் இல்லை 😂- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அவர் பாபா ரசோதரன் அல்லது ரசோ பாபா என்ற பெயரில் வந்து கருத்து சொன்னால் தான் கேட்பீர்களோ 😄- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அது மோடி தான் என்று வேறு பல நிபுணர்கள் நம்புகின்றனர். மகிந்தாவுக்கு சாத்திரம் சொன்ன சாத்திரி போன்றவர் தான் இந்த பல்கேரிய நாட்டு பாபா வங்கா 🤣 இந்த சாத்திரி உலகையே ஆளும் சக்தி கொண்டவராக உலகின் இறைவன் வருகிறார் என்று சொன்னது விளாடிமிர் புடினை இல்லை. ரம்பின் உக்ரைன் சமாதான முயற்சிகளைத் தடுக்கும் யூரோப் முட்டாள்கள் என்று சொன்ன ரஷ்ய மெட்வேடியெவ் வை தான் என்று வேறு பல நிபுணர்கள் சொல்கிறார்கள். வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே நீண்ட காலமாக நம்மிடையே கண்டறியப்படாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று பல்கேரிய நாட்டு பாபா வங்கா தெரித்து இருக்கின்றார். புதின், மெட்வேடியெவ், டொனால்ட் ரம் வேற்றுகிரகவாசிகளாக இருக்கலதமோ என்று பல நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.- போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயார் என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்று உக்ரைக் ஆதரவு கூட்டணியின் வீடியோ மாநாட்டிற்கு பின்பு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார். மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய தலைமையை தொடர்ந்து கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.- இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு
புதிதாக புது மியுசிக் போட மற்றவர்களால் இயலவில்லை அதனால் தானே அவர் பாடலை களவெடுத்து அப்படியே போடுகின்றனர்- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
புடின் உக்ரேனை இணைக்க ஆசைபட்டதை பார்த்து ட்ரம் கனடாவை இணைக்க ஆசைபட்டதை பார்த்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆசை வந்து சிந்து பகுதி மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று சொல்லியுள்ளார். இலங்கையுடன் இணைந்து தான் தான் வட கிழக்கு உள்ளது. அகன்ற இந்தியா காண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவுடன் இலங்கை வடகிழக்கை இணைக்கும் அகன்ற இந்தியா 🤣 ஆசை பிஜேபி தவைர்களுக்கு இருந்ததாக சொல்கின்றார்கள். ஜேவிபியும் இந்தியாவுக்கு இந்த நோக்கம் இருப்பதாக சொல்லி இருக்கின்றதாம். --- @Kandiah57 ஐரோப்பிய பாதகாப்பு மிகவும் முக்கியம் அதுவும் ரஷ்யா போன்ற மோசமான ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து- ரசிக்கலாம் வாங்க
யாழ்பாணத்தில் சுவாமி ஞானபிரகாசர் பிறப்பின் முப்பொன் விழா- சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?
ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர் என்றபடியால் இந்திய பெரியவர்கள் தீர்க்க தரிசனத்துடன் கடவுளுக்கு செய்த பாதுகாப்பு ஏற்பாடு தான் பெண்கள் உள் நுழைய முடியாது மற்றது பெண்களுக்கு மாதவிடாய் வரும். அந்த முடிவை நீதிமன்றம் அவமதித்ததால் தான் இப்படி 😭- திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
கடவுள்மார்களின் ஜீன் குணம் அது தானே 😂- 'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?
அப்போ விஜய் அரசியலை விட்டு விலகும் சாத்தியம் இருக்கின்றது இலங்கை பாராளுமன்றத்தை அதிரவிட்ட வீர தமிழன் அர்ச்சுனா போன்ற ஒரு வீரதமிழன் தமிழ்நாட்டிற்க்கும் வேண்டும் என்று அங்கே உள்ள வீர தமிழர்கள் ஆசைபடுகின்றார்களாம் 😂- அமெரிக்காவின் அவலம்
வங்கி முகாமையாளர் உயர் அதிகாரிகள் ஒரு சிலரை இலங்கையில் தெரிந்து இருக்கின்றேன் அவர்களுக்கு உடம்பு வளையாது 😂 ஏதாவது போய் எடுத்து வர கொடுக்க Peon இருக்கிறார்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அர்ச்சுனா தான் யார் என்பதை வெளிபடையாக காட்டி பின்னரும் அவரை புகழ்ந்து ஆதரிப்பவர்கள் இருக்கின்றார்கள் 😟- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
புலம்பெயர் தமிழர்கள் என்றால் அர்ச்சுனாவின் பாராளுமன்ற பேச்சை இரசித்து சந்தோசபடுபவர்களாக இருக்கின்றனர். இறங்குங்கோ நீங்கள் தான் சரி 😂 - அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.