புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை.
அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது..
வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்..
தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார்.
வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார்.
ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள்.
மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது.
உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம்.
சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்..
வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார்.
ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான்.
அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.)
இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??!
இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது.
ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல்.
வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது..
நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை.
நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே.
நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது.
அம்மனை தரிசிக்க வந்த கணவாய்.
நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார்.
தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை.
இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.