கு . சா . ...... வைரவர் , வீரபத்ரர் , காளி எல்லோரும் காவல் தெய்வங்கள்தான் . ..... வைரவர் உங்கள் வரையில் தாய் போன்றவர் , ஏனையோர் பெரியம்மா , சின்னம்மா போன்று மரியாதைக்குரியவர் . ......!
ஜானகி வனத்தில் பொன்மானைக் கண்டு அம்மான் ராமனை திரத்தியிரா திருந்தால் ராமனுக்கே அனுமானைத் தெரிந்திருக்காது . ........பிறகேன் உங்களுக்கு கவலை . .......ஐரோப்பாவிலேயே ஐநூறுக்கும் அதிகமாய் சைவக் கோயில்கள் இருக்கு .......கர்த்தரை என்ன செய்வதென்று ஐரோப்பியர் யோசிக்கவில்லைத்தானே ...........!
வைரவரைத் தலையில் வைத்துக் கொண்டு ஒருநாளும் மெய்ஞானம் அடைய முடியாது . ....... ஆனால் உங்களுடைய பக்திக்கு வைரவர் உங்களைத் தோளில் தூக்கிவைத்து மெய்ஞானத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடுவார் ஒரு ராக்கட் பாய்வதைப் போல் . ........!
"பற்றுக பற்றற்றான் பற்றை பற்றுக
அப் பற்றை விடற்கு "
உண்மையை கூறுங்கள் நீங்களா நிர்ப்பந்தத்துக்கு அடிபணிபவர் சும்மாவெல்லாம் புலுடா விடக்கூடாது . ......! 😂