வணக்கம் வாத்தியார் . ..........!
ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
பெண் : வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ
ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ .......!
--- சின்னவளை முகம் சிவந்தவளை ---