Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தண்ணீருக்குள் தன்னைத் தானே முகம் பார்த்துக் கொண்டு நிக்கும் தென்னைகள்......! 😂
  2. மயிலிறகு........ 08. மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள். அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன் யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான். பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள். சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள். கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே. அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம். இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும். மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு பின்னால் போகிறார்கள். அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........! 🦚 மயில் ஆடட்டும்........ 08.
  3. நீங்கள் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி ......நீங்கள் செய்வது ஒரு தலைப்பட்ச ஒப்பந்தமாகத்தான் இருக்கும்.......! 😂
  4. வணக்கம் வாத்தியார்........! ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன் ஆண் : கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் ஆண் : குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் ஆண் : யாா் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்......! --- தூவானம் தூவ தூவ ---
  5. உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்......! 😍
  6. காவலர்: எனது சகோதரா உன்னை தொழுது சொல்கிறேன். இப்பொழுது நீ ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு கார் வாங்கவும் அல்லது காண்டம் (ஆணுறை) வாங்கவும்......! 😂
  7. மயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07.
  8. இந்தக் கட்டுரையில் கடைசிப் பந்திதான் எனக்குப் பிடித்திருக்கு.......! 😂
  9. ஆஹா.....சம்பந்திகளைக் கௌரவித்து இருக்கிறீர்கள்.......நல்ல விடயம்...... ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் ......இனி அவர்கள் வீடுகளுக்கு போனால் சம்பந்தி ஐயா தேநீர் போட்டுத்தருவார் வாங்கிக் குடியுங்கோ என்று சொல்லிப்போட்டு ஆட்கள் நழுவிப் போயிடுவினம்........! 😂
  10. மயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!
  11. இப்ப எந்தச் சோடி எந்தச் சோடியுடன் போய்கொண்டு இருக்குதோ யாரறிவார்......! 😂
  12. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும் பெண் : பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும் ஆண் : உண்மையும் சில நாள் மறைந்திருக்கும் அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும் பெண் : அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும் ஆண் : குல மகள் நாணம் புரிந்து விடும் மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும் பெண் : கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும் ஆண் : கடமையும் காதலும் நிறைவேறும் அந்தக் காலமும் விரைவில் உருவாகும்.....! --- தாழம் பூவின் நறுமணத்தில் ---
  13. வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே........! 😍
  14. இங்கு வேலை செய்கிறது.......! இது ஒரு முகநூல் பதிவு .........! 😂
  15. யுத்தம் கொடுமையானது......அது எங்கே நடந்தாலும் எவருக்கு நடந்தாலும்.....ஒருசிலரின் அதிகார போதைக்கு அப்பாவிகள்தான் எப்போதும் இரையாகிறார்கள்.......!
  16. இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், ஜேக்கப் புகைவண்டியில் ஏறினாரா இல்லையா........! 😂
  17. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.