"கற்றோரைக் கற்றோரே காமுறுவர்" மைக்கேல் எப்படியும் பிழைத்துக் கொள்வார்........!
எனது நண்பரொருவர் இருந்தார் ....... அவர் சிறிதும் யோசிக்காமல் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுவார்,சில நாட்களில் வேறொரு வேலை எடுத்து விடுவார்......முன்பு செய்த இடங்களில் கூட மீண்டும் வேலை குடுப்பார்கள் .......அவர் தனக்கென்று இருக்கும் விடுமுறைகளை பாவிப்பதைவிட வேலையை விட்டுட்டு வேறு வேலை எடுப்பதுதான் அதிகம்......அதனால் எனக்கு அவர் மேல் பொறாமையும் உண்டு...... நான் அதற்கு நேர்மாறு.....ஒரு இடத்தில் வேலை செய்தால் ஒன்றில் அந்த வேலைத்தளம் பூட்டுப்படவேண்டும் அல்லது 100 கி.மீ அப்பால் மாறிப் போகவேணும்......விடுமுறைகளையும் எடுப்பதில்லை அதுவும் அவர்கள் இந்த ரெண்டு மாதங்களுக்குள் விடுமுறையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று வில்லங்கமாய் அனுப்பினால்தான் உண்டு.......! 😁