Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
வானொலி மற்றும் சினிமாவின் பொற்கால நினைவலைகள்... · Rejoindre Sukumar Shan · · காண கிடைக்காத அரிய புகைப்படம் ! இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனம் அவர்களின் கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 58 விவேகானந்தா ரோடு இல்லத்துக்கு நடிகர் சந்திரபாபுவும் நடிகர் ஸ்ரீ ராமும் வருகைதந்தபோது எடுத்த புகைப்படம் . சந்திரபாபு மடியில் மயில்வாகனம் அவர்களின் மகளும் மயில்வாகனம் மடியில் அவரது மகனும் அமர்ந்துள்ளார்கள் . பின்னால் வெள்ளை புடவையுடன் காட்சியளிப்பவர் . திருமதி .செந்திமணி மயில்வாகனம் . புகைப்பட உதவி - யசோதா மயில்வாகனம் அவர்கள்.....!- கொஞ்சம் ரசிக்க
மனைவி என்பவள் உயிர் · நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது... என் மனைவி )... ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாகக் கூர்ந்துப் பார்க்கிறேன்... இத்தனை வருட வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்... என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்.. விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில் தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்... வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்... எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசி அறியாமலே புசித்திருக்கிறேன்... கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்... திருப்பி ஒரு நாளேனும் என்னைத் திட்டியதில்லை அவள்... திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ.. ஏனடி எல்லா வலிகளையும் உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்... மெதுவாக அவள் கைகளை எடுத்து என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்.. கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர் வலிக்கிறது கைப்பட்டதால் அல்ல.. . மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து... எங்கே இருந்தேன் இத்தனை நாளும் என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்... பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னைத் தூங்க விடவில்லை நான் பின் நான் பெற்றதுகளும் உன் நாத்தனார்களும்... செல்வமே அத்தனைச் சொத்துக்கள் சேர்த்த எனக்கு... எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்... இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ நாங்கள் அத்தனை பேரிருந்தும் உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவள் நீ எப்படி மறந்தேன் உன்னை... நானில்லாத போதும் நீ தைரியமாக கடந்து விடுவாய் உன் இறுதி நாட்களை நீயில்லாமல் என் வாழ்க்கை நினைத்தும் பார்க்க முடியவில்லை என்னால்... தீர்க்கச் சுமங்கலியாகி நீ முந்திக் கொண்டால் ஊரே போற்றும் உன்னை... உன்னைத் தொலைத்து விட்டு நானிருந்தாலோ ஏறெடுத்தும் பாரார் என்னை நீ இருக்கும் வரையில் தான் என் திமிரெல்லாம்... நான் சத்தியமாகச் சொல்கிறேன் நீ மட்டும் போதுமடி எனக்கு உன்னை விட எதுவும் என்னை ஈர்க்காது இனிமேல்.. சாகும் வரையில் உன் காலடி போதும் உன் மார்போடு என்னை அணைத்து ஒரு தாலாட்டு போதும்... கதையின் நீதி :- வெறும் உடலால் இணைபவர்கள் கணவன் மனைவி அல்ல... ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி √ @everyone- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன மான் பொண்ணு மான் சும்மா சும்மா பார்க்காதே......! mgr பெண் வேடத்தில்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே பெண் : இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான் பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான் பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் பெண் : காதல் சிறகானது இன்று சருகானது என் உள் நெஞ்சம் உடைகின்றது பெண் : உன் பாதை எது என் பயணம் அது பனி திரை ஒன்று மறைக்கின்றது பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா......! --- விழியிலே என் விழியிலே கனவுகள் ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
பனம்பழ அதிரசம்........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புன்னகையில் பூ பூக்கும் திருமகளே.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பாவாட கட்டையில பார்த்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் நோகாம பார்த்துப்புட்ட வேறென்ன மிச்சம் கல்யாண கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் அச்சு வெல்ல பேச்சுல ஆழ தூக்குற கொஞ்ச நேரம் பாரு நா கூலி கேக்குற துள்ளி போகும் துள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சு கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யார் அத பார்த்தது ஊரெல்லாம் உன்னை பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாரும் இல்ல தூது சொல்ல வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டி போன குடும்பிக்கு சீப்பதேடுற என்ன பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற கால நேரம் கூடி போச்சு மாலை வந்து மாத்துற.......! --- பூஜைக்கேத்த பூவிது ---- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- குட்டிக் கதைகள்.
Vijay est à பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம். · முல்லா நஸ்ருதீனுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார். முல்லா நஸ்ருதீன் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம். உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன். நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார். இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது. மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது. கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது. கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை. மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.......! __ஓஷோ......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
50 + சுக்கு ஒரு கிக் கொடுக்கத்தான்......! 😂- அதிசயக்குதிரை
கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Variety of images · Rejoindre Velocity S · sSootnerdp080la41l8u10f7330co6,7583018hc3 91ûltf87:0208 f8ca · போர்டிங் கேட் வரை வந்தும், விமானத்தின் கதவு மூடப்பட்டு விட்டதால் விமானத்தில் பயணிக்க முடியாமல் வீடு திரும்பிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். "ஒரு கதவை திறக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதனை திறந்து என்னை அனுமதித்திருக்கலாமே" என்ற கேள்வி நிச்சயமாக பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மையில் இது வெறும் கதவை திறந்து மூடுவதற்கான ஒரு விஷயம் அல்ல. இதில் ஏராளமான தொழில்நுட்ப காரணங்கள் அடங்கியுள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவில் பதில் காணலாம். விமானத்தில் ஏறுவது என்பது ரயில் அல்லது பேருந்தில் ஏறுவது போல அல்ல. விமான விதிகளின்படி, புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விடும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. எடை : விமானத்தின் எடையானது சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விமானத்தின் கேப்டன் மற்றும் கோ-பைலட் விமானத்திற்குள் நுழையும் பொழுது, அன்று ஆன் போர்டு செய்ய போகும் எதிர்பார்க்கப்படும் எடை அவர்களிடம் தெரிவிக்கப்படும். எரிபொருள் எடை+ கார்கோ எடை+பயணிகளின் எடை என்று கணக்கிடப்படும். பயணிக்க போகும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் இந்த சமயத்தில் வழங்கப்படாது. எடை குறித்த இந்த விபரங்களை பைலட் ஃபிலைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். பிற கணக்கீடுகளுக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட எடையுடன் கூடிய விமானம் எந்த வேகத்தில் புறப்பட வேண்டும் மற்றும் தரையிறங்க வேண்டும் போன்ற விவரங்களை கம்ப்யூட்டர் வழங்கும். இதன் பிறகு எத்தனை டன் எரிபொருள் உள்ளது மற்றும் எத்தனை லிட்டர் இன்ஜின் ஆயில் உள்ளது போன்ற மிக துல்லியமான கணக்குகள் டெக்னிக்கல் லாகில் இருந்து கொடுக்கப்படும். அடுத்த சோதனை: விமானத்தில் ஏற்ற வேண்டிய கடைசி கார்கோவை லோடு செய்த பிறகு மற்றும் கடைசி பயணி விமானத்திற்குள் நுழைந்த பிறகு கமாண்டரிடம் லோடு மற்றும் ட்ரிம் ஷீட் எனப்படும் ஒரு கொத்து தாள்கள் வழங்கப்படும். அவற்றில் பின்வரும் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறுதி எண்ணிக்கை ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் தனித்தனியான எண்ணிக்கை மற்றும் விமானத்தின் ஒவ்வொரு சோனிலும் சேர்க்கப்பட்டுள்ள எடை ஆகியவை கணக்கிடப்படும். விமானத்தின் எல்லா நிலையிலும் புவி ஈர்ப்பு மையமானது பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் அமையும் படி எடையானது லோடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரம். விமானத்தின் கதவு மூடப்படும் : பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து, தங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனரா என்பதை விமான பணியாளர்கள் உறுதி செய்வார்கள். விமானத்தின் கதவுகள் அனைத்தும் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை விமான பணியாளர்கள் சரி பார்ப்பார்கள் (கதவு ஆட்டோமேட்டிக் மோடில் அமைக்கப்பட்டிருக்கும்) இப்பொழுது விமானம் புஷ்பேக் செய்ய தயாராக இருக்கும். இறுதி சோதனை: விமானத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அனைவரும் தங்களது இருக்கையில் புஷ்பேக் செய்துள்ளனரா என்பதை ATC -யிடம் பைலட் உறுதி செய்வார். அனைத்தும் சரியாக இருப்பதை ATC பைலட்டிடம் கூறுவார். இப்பொழுது யாரேனும் ஒரு பயணியை உள்ளே அனுமதிப்பதற்கு கூட இந்த ஒட்டுமொத்த செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். விமானத்தின் பார்க்கிங் பிரேக்குகள் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் சேருமிடத்தை சென்றடையும் நேரம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படும்.....!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடப்பது 68 .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் ஆண் : பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள் ஆண் : உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ.......! --- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ ---- குட்டிக் கதைகள்.
Raja K Welder dpoStrsnoeul90 3g51afg5858at,lf1flmuo8891:mhû4i0 m1a2333025h · #பந்த_பாசம் இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன்.. . “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி... . அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்... . “வணக்கம்ண்ணே, சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்... . “கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்... . “அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் மகன். . “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்க… தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’ . என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்தது போல வலித்தது. மனைவியை பார்த்தேன்.. அவளும் தலைகுனிந்திருந்தாள். அவளுக்கும் வலித்திருக்க வேண்டும்......!- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இனித்திடும் இனிய தமிழே....!