Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Asmin Uthumalebbe est à Chennai, Tamil Nadu, Inde. · #ஈழத்தமிழர்களின்_வாழ்வியல்_வலியை_சொல்லும்_திரைப்பாடல்_நேற்று_சென்னையில்_ஒலிப்பதிவானது தாயைப்பிரிவதும் தாய் மண்ணைப்பிரிவதும் ஒன்று. தாயை, தாய்நாட்டை பிரியும்போது ஏற்படும் மரணவலியை நான் பாடலாக்கியுள்ளேன். கடைசிப்போரின் கந்தகப்பொழுதுகளை.. முள்ளிவாய்க்காலின் சொல்லில்லடங்கா நிமிசங்களை.. நாலைந்து வரிகளுக்குள் நறுக்கிவைத்துள்ளேன்... ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியை பாடலின் ஊடாக பதிவு செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களே பாடலைக்கேட்டு கண்கலங்கப்போவது உறுதி. ஈழத்தின் மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஸ் அவர்களின் புதல்வி, இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் இசையில், இயக்குனர் சிபோ சிவகுமாரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படத்துக்காகத்தான் இப்பாடலினை எழுதியுள்ளேன். மரணவலிதரும் இப் பாடலினை பிரபல பின்னணிப்பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். தமிழ்,கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 2000 அதிகமான பாடல்களை பாடியிருக்கும் திரைப்படப் பாடகர். இளையராஜா, தேவா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியவர். தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதினை பெற்றவர் திரு.ஸ்ரீநிவாஸ் அவர் என்பாடலைப்பாடுவது நான் பெற்ற பேறு. பாடலை உருக்கமாக அவர் பாடும்போதே கண்கள் கலங்கி நின்றதை கண்ணுற்றேன்.பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. இப்பாடல் என் பாடல் பணியில் முக்கிய பாடலாக இருப்பது உறுதி. இப்பாடல் வாய்ப்பினை வழங்கிய இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் அவர்களுக்கு நன்றி மேலதிக விபரங்கள் விரைவில் ... பாடலாசிரியர் அஸ்மின் கவிஞர் அஸ்மின்........!
  2. வணக்கம் வாத்தியார்........! ஏய்... என் தலைக்கேருற பொன் தடம் போடுற என் உயிராடுற என்னடி மாயாவி நீ என் நெலம் மாத்துற அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற விட்டா நெஞ்ச வாரி உன் பட்டா கிறுக்குற வண்டா சுத்தும் காத்து என்ன ரெண்டா உடைக்குதே சும்மா நின்ன காதல் உள்ள நண்டா துளைக்குதே... தினம் கொட்டி தீக்கவா ஒரு முட்டாள் மேகமா உன்ன சுத்தி வாழவா உன் கொட்டா காகமா பறவையே பறந்து போவமா மரணமே மறந்து போவமா உப்பு காத்துல இது பன்னீர் காலமா.......! ---என்னடி மாயாவி நீ---
  3. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்........! 💞
  4. கோ.ஆலயமணி பாட்டாளி மக்கள் கட்சி nSsoeortpd0g780u: l9l,i12u uiag90cc7j1t90l2114f0ia127u2208em · இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!!
  5. ஓம்......நீங்கள் சொல்வதுதான் சரி.........! 👍
  6. அட என்ன ஒரு வெட்கம்......! 😂
  7. முதலாவது சென்டிமீற்றர் அளவு.....! இரண்டாவது இஞ்ச் அளவு என்று நினைக்கிறன்......!
  8. இன்பம் இன்பம் இன்பம் இந்த உலகில் உண்மைக் காதல் ஒன்றே ........! 💞
  9. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி ஆண் : ம்ம்ம்ம் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம் பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே ஊடல் கூட காதல் என்று ஆகுமே ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம் பெண் : என் வெட்கத்தின் நிறம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு நம் காதல் வரைவோமே வா….....! ---பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்---
  10. எங்கள் தோட்டத்திலும் இந்த "zucchini யும் cumcumpar ரும்" இப்பதான் பூப்பூத்து பிஞ்சு பிடித்திருக்கு அவியலுக்கு நல்லா இருக்கும்.......! 👍 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.......!
  11. Variety of images · Rejoindre Venkatesan Lakshmi · · இல்லம் - சுஜாதா சிறுகதை அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். இரண்டு குழந்தைகள். மனைவி. அவள் அப்பா வேறு. அப்பாவுக்கு ஒத்து வரவில்லை. அண்ணா சாமாவிடம் அப்பா தாராளமாக இருக்கலாம். ஆனால் அண்ணா தினம் தினம் தண்ணியடித்துவிட்டு வருவதும், வீட்டுக்குள்ளேயே சிகரெட் பிடிப்பதும், சிக்கன் சாப்பிடுவதும், குழந்தைகளின் பாப் சங்கீதமும், கணவன் மனைவிக்குள் சதா சண்டை வருவதும் , இதை விட தினம் மன்னி அப்பாவிடம் " இந்த மாதிரி பிள்ளையை வளர்த்திருக்கேளே " என்று சொல்லிக் காட்டுவதும் அப்பாவுக்குப் பிடிக்கலே ! தம்பியிடம் இருக்கலாம். அவனுக்கு இப்போதுதான் கல்யாணமாயிருக்கிறது. அவன் இருப்பது ஆர்மி குவார்ட்டர்ஸ்ல. அந்தப் பெண் பஞ்சாபிப் பெண். தினம் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும். அந்தப் பெண் பேல் பூரி பாவ் பாஜி , பானி பூரி , பிட்ஸாவிலேயே உயிர் வாழ்பவள். அவளைப் போய் ரஸம் வை , சாம்பார் வை , தொகையல் அரை என்று சொன்னால் சரிப்பட்டு வரவில்லை. அதோடு அப்பாவுக்குக் கட்டில் சப்தம் தாங்காது. இதனால் என்ன செய்வது என்று நாங்கள் யோசித்ததில் அப்பாவே எங்களைக் கூப்பிட்டு "எத்தனை நாள் நான் இருப்பேன் என்று தெரியாது. ( அப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்பா ) . உடல் ஆரோக்கியமா இருக்கற வரை நான் ஒரு நல்ல ஹோமில் சேர்ந்துகொள்கிறேன். எனக்கு வரும் பென்ஷனில் வட்டிப் பணம் என் செலவுகளுக்குப் போதும். இதைப் பற்றி உங்களுக்கு எந்த விதக் குற்ற உணர்வும் வேண்டாம். உங்கள் மேல் எனக்கு எந்தவித வருத்தமோ வெறுப்போ கிடையாது " என்றார். அப்பாவுக்கு ஊருக்கு வெளியே ஒரு எஸ்டேட் இருந்தது. அதை விற்று விடுவதைப் பற்றிப் பேச்செடுத்தோம். அது பற்றி அப்புறம் பேசுவோம் என்றார். அப்பா சுக சாந்தி என்னும் ஹைகிளாஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். ஊருக்கு வெளியே தாம்பரம் தள்ளி இருந்தது. அடிக்கடி போய்ப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அதைத் தவிர அவருக்கு ஏகப்பட்ட வசதிகள் அங்கே. 15 நாட்களுக்கு ஒரு முறை அவரிடமிருந்து கடிதம் வரும். அண்மையில் வருவதில்லை. தற்செயலாக அண்ணா சாமா அப்பாவின் நிலம் பற்றி விசாரித்தான். அங்கே ஏதோ ஃபாக்டரி வருவதால் கோடிக்கணக்கில் போகும் என்றான். மேலும் அவன் "என்ன அப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டாமா ராஜா? இப்படி முதியோர் இல்லத்தில் கேட்பாரற்று விட்டுவைத்தால் எப்படி? மயிலாப்பூரிலே நான் இருக்கும் கட்டடத்திலேயெ ஒரு ஃப்ளாட் விலைக்கு வரது. அதை வாங்கி அப்பாவை அங்கே வைத்துக் கொள்வதுதான் உசிதம். கடைசி காலத்தில் தாம்பரத்தில் அவருக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிவிட்டால்? சில நாளா லெட்டர் வேற வரவில்லை. அந்த நிலத்தை என்ன பண்ணப் போறார்னும் தெரியவில்லை " என்றான். கடைசியில் நாங்கள் எல்லோரும் கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனோம். பாதை கரடு முரடாய் இருந்தது. டாக்ஸி போய்க்கொண்டே இருந்தது. குதித்துக் குதித்து ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தோம். அப்பாவைச் சேர்க்கும்போது இருந்ததை விட இப்போது ரொம்ப மாறியிருந்தது. நிறைய மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. காம்பவுண்டுக்குள் ரோடு சுத்தமாக இருந்தது. உபதேச வாசகங்கள் கம்பத்துக்குக் கம்பம் எழுதி வைத்திருந்தார்கள். ( ஆரோக்கியம்தான் ஆனந்தத்தின் அடிப்படை. ) நிசப்தமாக இருந்தது. கதவை மூடினதும் காலம் நின்று போனது போல் இருந்தது. டாக்ஸியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நெருங்கியபோது இல்லத்தில் ஒரு விழாப் போல எங்கும் தோரணம் கட்டி , டேப்பில் இனிமையாக, சப்தம் குறைவாக நாயனம் வாசித்துக் கொண்டிருக்க...... அப்பாவின் அறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு பெண்மணி புது வேஷ்டி அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்பா எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார். "வந்துட்டாங்களா ? லோச்சு , தீஸ் ஆர் மை சன்ஸ்....லெட்டர் கிடைச்சுதா ?" "என்ன லெட்டர் ?" "நான் கொடுத்த லெட்டரைப் போஸ்ட் பண்ணினியோ? லெட்டர் போட்டிருந்தேனே கிடைக்கலை? என்ன தபால் இலாகாவோ ? போன் வேறு ஒரு வாரமா வேலை செய்யல." பட்டு வேஷ்டியை இடுப்பில் மூன்று சுற்று சுற்றிக் கட்டிக் கொண்டு இருந்தார். மூஞ்சி தெளிந்து இன்னும் 15 வருஷத்துக்குத் தாக்குப் பிடிப்பார் போல் தெம்பாக இருந்தார். "என்ன லெட்டர்ப்பா ?" "என்னை இந்த இல்லத்திலே பரிவாப் பார்த்துண்ட சுலோசனாவை இன்னிக்கிக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவளுக்கும் மூணு பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கா. இனிமே இவதான் எல்லாம். இவளுக்குத்தான் எல்லாம்." எங்கள் திறந்த வாயில் " ஸ்வீட் சாப்பிடுங்க " என்று ஆளுக்கொரு ஜிலேபி விள்ளலை லோசனா செலுத்தினாள்......!
  12. அறிஞர் அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல்.......! 👍
  13. உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்.......! 😍
  14. வணக்கம் வாத்தியார்........! ஆண் : வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் ஆண் : மாமன் ஓட்டாண்டி பொிய லூசாண்டி அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நா வெறியான விருமாண்டி ஆண் : { அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு } (2) ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும்தான் ஆச இருக்கு மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா......! --- அட ஊதுங்கடா சங்கு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.