Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30791
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் " ........! 🙏
  2. எனக்கு நல்லபிள்ளை என்ற சான்றிதழும் தந்து எனக்காகப் புரிந்தும் பேசும் உங்களை நினைக்கையில் என் கண்ணெல்லாம் வேர்க்கின்றன சாத்தன்.......! 😁
  3. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ஹொய் பெண் : வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே ஆண் : மழை போல் நீயே பொழிந்தாய் தேனே பெண் : இரவும் இல்லை ஆண் : பகலும் இல்லை பெண் : இணைந்த கையில் ஆண் : பிரிவும் இல்லை பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா......! --- மழை வருது மழை வருது ---
  4. "வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது" கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள் சாத்தன் .......! 😂
  5. உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே......! உங்களின் இந்தப் பதிவில் இதுதான் உச்சம்....... சரி .....ஒரு சந்தேகம்..... ....சசிகலா அம்மையார் சமாதியில் சடார் சடார் என்று சாத்தினதும் இந்த நம்பிக்கையில்தானே ..........! 😁
  6. இதுக்குத்தான் ஒரு திருமணத்தின் தேவை அவசியமாகின்றது.......மாரியில் வாங்கிற ஏச்சில் உடல் சூடாகிடும்.....கோடையில் ஒரு பாசமான பார்வை போதும் வீடே ஏ சி யாகிவிடும்......! 😁
  7. மனம்தானே அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும் அதனால் விரும்பட்டும் விரும்பட்டும்.......! 😁
  8. வணக்கம் வாத்தியார்..........! பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா……… பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா….. ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ஆண் : நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே பெண் : என் சுவாசம் உன் மூச்சில் உன் வாா்த்தை என் பேச்சில் ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா ஆண் : பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் பெண் : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும் ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவே பெண் : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம் பெண் : உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா.......! --- மலா்களே மலா்களே ---
  9. யூ டியூபில் இருக்கின்றது.......நானும் கொஞ்சம் பார்த்தேன் ....நல்ல படம் பிரியன் ....... அதுதான் அது பெரிதாகப் பேசப்படவில்லை.......உண்மையை சொல்வதென்றால் இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்......வசூல் பெறவேண்டும்........! 👍
  10. அருமையான சாலட் ........எளிமையாய் செய்து இனிமையாய் உண்ணவும்......! 😍
  11. 1) உருளைக்கிழங்கு அம்மா உரித்தது.....! 😂 2) உருளைக்கிழங்கு மகள் உரித்தது.......! 🤣
  12. உங்களுடைய விமர்சனம் நன்றாகவே உள்ளது.......நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லை......ஒருமுறை தேடிப் பார்க்கத்தான் வேண்டும் .......! 👍 நன்றி நொச்சி .......!
  13. கவிதை பூக்கள் Vandhana Krishna Kumar · · *தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி* அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு...? அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்றுதானே நீங்கள் நினைத்து இருப்பீங்க? உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. பழமொழியின் உண்மையான அர்த்தம்: அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது. அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும். அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும். அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து, "நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள்" என்று அறிவுரை சொல்லுவார்கள். அப்படி கூறும் அறிவுரைதான், "அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?" என்பது. அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி பூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது. இப்படி எத்தனையோ பழமொழிகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்....!
  14. அன்றைய காலத்தில் பலப்பல நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வு இது போன்ற அவலத்தில்தான் இருந்தது, அதை அழகாக எடுத்தியம்பியுள்ளீர்கள் ......! நன்றி ஐயா இணைப்புக்கு.......!
  15. மணிவாழையூடே மனம்கவரும் மலர்கள் ........! 😍
  16. என்னோடு என்னன்னவோ ரகசியம்...... உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்......! 😍
  17. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா } (2) கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா........! --- ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ---
  18. ஐ.டி துறையின் நெருக்கடியையும் நெருக்குவாரத்தையும் எளிமையாய் எழுதியுள்ளீர்கள்......! 😂 நன்றி ரசோதரன்......!
  19. எங்கோ தூரத்தில் நடக்கும் கிரகணத்துக்கும் அவசரநிலைப் பிரகடனத்துக்கும் என்ன சம்பந்தம்......அது பாட்டுக்கு வந்துட்டுப் போகப் போகுது.......! 😴
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.