கோணல் புளியங்காய் .......! ஒருநாள் ஒரு அரசன் வீதியால் கண்காணிப்பு செய்து கொண்டு போகும்போது அங்கே ஒரு இளம்பெண் கோணற்புளியங் காய் விற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கின்றான் ....... பின் அவளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அப்பெண்ணையும் தன் தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனை சென்று அவளை அந்தப்புரத்தில் சேர்த்து அரசிக்கு இணையாக அவளைப் பராமரித்து வாழ்ந்து வருங்காலையில் .......பல ஆண்டுகள் சென்றபின் ஒருநாள் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவ் வீதியால் வருகின்றான் ........ அப்போது அங்கு வேறு சிலர் கோணற் புளி விற்றுக் கொண்டிருப்பதை அந்தப் பெண் பார்த்து அரசனிடம் ...... அரசே அதோ அங்கே ஏழைப் பெண்கள் கோணல் கோணலாய் ஒரு காய் விற்றுக் கொண்டு இருக்கிறார்களே அது என்ன காய் என்று கேட்கிறாள் .......... உடனே அரசனும் "ஓ" உனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து விட்டன போல , நீ தேரில் இருந்து இறங்கிப் போய் அது என்ன வென்று விசாரித்து தெரிந்துகொள் என்று சொல்ல அவளும் இறங்கி அங்கு செல்லும்போது இனி நீ அங்கேயே இரு என்று சொல்லிக்கொண்டு அரசனும் அங்கிருந்து சென்று விட்டான் .........அவளும் தனது திமிர் பேச்சால், வந்த வளமான வாழ்வு தொலைந்து போச்சுதே என்று தூரத்தே செல்லும் தேரையே பார்த்து "ங்ஏ" என்று விழித்துக் கொண்டு நின்றாள் ........! 😂 பி . கு : எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் மிக மிகச் சிறிய வயதில் ஆச்சி சொன்ன இந்தக் கதை ஞாபகம் வந்தது கூடவே ஆச்சியும் ..........! 😇