-
Posts
6192 -
Joined
-
Last visited
-
Days Won
70
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
இது தான் இலக்கு👆! இதை பொது வேட்பாளர் மூலம் செய்ய இயலாமல் போய் விட்ட கோபத்தில் தான் இனி பொதுத் தேர்தலை எதிர் கொள்வர்😂! இதைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்: தீவிர தேசியவாத தமிழர் அரசியலில் - குறைந்த பட்சம் இந்த வட்சப் பதிவை எழுதுவோர் போன்றோரின் பார்வையில்- ஒரு சில குறிப்பிட்ட கருத்துகளை உரத்துச் சொல்வோர் மாத்திரமே கை தட்டி வரவேற்கப் பட வேண்டும், ஏனையோர் மக்கள் தேர்வு செய்தாலும் விரட்டப் பட வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பை மதிக்காத ஜனநாயக மறுப்பை ஆதரிக்கும் ஆட்களோ தேடிப் போய் அடைக்கலம் தேடுவது ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளில்! அங்க இருந்து தான் ஊரில் ரௌடிகளும், ஒத்த ரூட் தீவிர போக்காளர்களும் உருவாக ஆசிர்வாதம் வழங்குவர்😂! இவர்கள் எத்தனை தரம் வாக்காளர்கள் வாக்குகள் மூலம் சொன்னாலும் திருந்தப் போவதில்லை! விளக்குமாறால் தான் இந்த தீவிர தேசிய ரௌடிகளை அடித்து விரட்டுவர் மக்கள்!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
Justin replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
"ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை! எனவே, ஒற்றுமை என்பதன் முதல் படி "என்னோடு ஒத்துப் போகாதவன் எல்லாம் எதிரி!" என்ற கட்டுப் பெட்டித் தனத்தைக் கைவிடுவது தான். பொது வேட்பாளர் தமிழ் பகுதிகளில் கூட மூன்றில் இரண்டு வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்ட பின்னும் உங்களுக்கு இது உறைக்கவில்லையானால், எதுவுமே உங்களுக்கு உறைக்காது! -
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
Justin replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தகவல் மூலங்களை சரிபார்க்காமல் வெட்டி ஒட்டியவர் அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேற்றரில் போட அது "பொரியலுக்குத் தடை" என்று மொழிமாற்றம் செய்திருக்கிறது😂! -
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
Justin replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அப்பிடியே 2005 (2006?) உரையையும் புலனத்தில் இருந்து எடுத்துப் போட்டு விடுங்கோ! "..மகிந்த யதார்த்தவாதியாகத் தெரிகிறார்.." என்ற வரிகளை மீட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்😂! -
முதலில், இந்த உள்ளகப் போட்டியே, இந்த தேர்தலில் நிகழ்ந்திருக்கக் கூடாதென நான் கருதுகிறேன். தமிழர்களுக்கு தீரவைப் பெற்றுக் கொடுக்க ஆர்வமாயிருப்போர் பொதுத் தேர்தலில் தங்கள் திட்டங்களை முன்வைத்து வாக்குக் கேட்டுப் போட்டியிடுவது தான் முறை. 2020 இல் அப்படிப் போட்டி போட்டு, 3 வெவ்வேறு நிலை கொண்ட தமிழ் கட்சிகளையும், இரு தேசியக் கட்சி ஆட்களையும் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தெடுத்தார்கள். அதே போல மீண்டும் 2024/25 இலும் தேர்ந்தெடுக்க போட்டி போடுவது தான் முறை. அதை விட்டு விட்டு, ஜனாதிபதி தேர்தலில் இந்த சிறு பிள்ளை வேளாண்மையை பொதுக் கட்டமைப்பு ஆரம்பித்தது பயனற்ற வேலை! "விலகி இடங்கொடு, நான் வர வேணும்😎!" என்று சும்மா அலட்டிக் கொண்டிருக்காமல் பொதுத் தேர்தலில் நின்று மக்கள் ஆணையைப் பெற்ற பின்னர் பேசினால், பொதுக்கட்டமைப்பின் பின் நிற்கும் ஆட்களுக்கு மரியாதை திரும்பக் கிடைக்கலாம்!
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
Justin replied to விசுகு's topic in சமூகவலை உலகம்
தேர்தலைப் புறக்கணிக்கும் படியான இவர்களின் வேண்டுகோள் வடக்கு கிழக்கு மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இதை தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை முதலில் கஜேந்திரகுமார் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 2015, 2020, 2024 - இந்த எல்லா தேர்தல்களிலும் யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் பங்கேற்பு வீதம் 66- 67% தான்! கிழக்கில், சராசரியாக 70% பங்கேற்பு. எந்த அடிப்படையில் இப்படி ஒலி வாங்கி முன்னால் இருந்து வழமையாக 70 தாண்டும், இந்த முறை நாங்கள் கேட்டு யாழில் 67 இற்கு குறைந்து விட்டது என்கிறார்? -
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
Justin replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இப்படி மூன்றாகப் பிரியும் போது, ஒப்பீட்டளவில் இப்போது இருக்கும் சுமூக நிலையை குலைத்துப் போடக் கூடிய ஒரு நிர்வாகம் தெற்கில் உருவானால் தாயக மக்கள் என்ன செய்வது? பொது வேட்பாளரை எதிர்ப்போரை பந்தி பந்தியாக திட்டும் ஆய்வாளர்கள் கூட இந்த எளிமையான கேள்வியை காணாதது போல கடந்து போயிருக்கின்றனர்😂! -
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
Justin replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆரம்பம்: சர்வ தேசத்த்திற்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! நடுக்கதை: சிங்களக் கட்சிகளுக்கு (முக்கியமாக ரணிலுக்கு, 2005 பாணியில்😎) ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! கடைசி மூலை: "எங்களுக்குப் பிடிக்காத" தமிழ் தலைவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! ஆரம்பத்திலேயே செல்வத்தார் வாய் தவறிப் போட்டுடைத்திருக்கிறார்: முன்னாள் ஆயுத தாரிகள் அல்லாத, "தீவிர தமிழ் தேசிய வண்டியில் மிதிபலகையில் தொத்திக் கொண்டு வயிறு வளர்க்கும்" நிலையில் இல்லாத தலைவர்களை எதிர்க்கத் தான் இந்த பொது வேட்பாளர் கூத்து! இதைத் தான் நீங்கள் இப்ப மீளவும் சொல்லியிருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்! -
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
Justin replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மேல் முகநூல் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்று, பலரின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே இணைத்திருக்கிறேன். "...உங்கள் பிரச்சனையே இதுதான் நாலு இளசுகள் மைக்கு முன்னுக்கு பேசின விடையம் உங்களுக்கு இனிச்சுது... ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது அவர்களது கருத்து... (பல்கலையிலேயே பலர் அதை ஏற்கப்போவதில்லை அது வேறு கதை) இப்போது சில விரிவுரையாளர்கள் மைக்குக்கு முன் பேசிய விடையம் கசக்குது... உடனே அருகதை பற்றிப் பேசுகிறீர்கள்... நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் சொகுசாக இருந்து கருத்துவிடும் பலரைவிட...படித்துவிட்டு புலம்பெயராமல் சொந்த நாட்டில் சேவையாற்றும் இந்த கல்வியாளர்களுக்கு அருகதை இருக்கிறது பிடிக்காவிட்டால் பாசிசவாத அவயங்களை மூடிக்கொள்ளுங்கள் குறிப்பு - அவையள் என்ன சொன்னாலும் நாங்க " -
இது மிகவும், தூர நோக்கும் இராஜதந்திரமும் மிக்க புலிகளின் செயல்களுள் ஒன்று என்பேன்! புலிகளின் தண்டனையால் ரணில் படு தோல்வி அடைந்தார். மகிந்த பதவிக்கு வந்து, யுத்தம் மீண்டும் ஆரம்பித்து, முள்ளி வாய்க்காலில் பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். சர்வதேச நாடுகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தமிழர் பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்போது தமிழர் பக்கமே நிற்கின்றன. இனப்படுகொலையாளிகளான பக்சாக்கள் ஹேக் நகரில் சிறையில் இருக்கிறார்கள்! ரணில், இன்னும் தோல்வியில் இருந்து மீள இயலாமல் வீழ்ந்து கிடக்கிறார்! பி.கு: முடிவிலி எண்ணிக்கையான சமாந்தர அகிலங்கள் (parallel universe) இருக்கின்றன, அந்த சமாந்தர அகிலங்களில் ஒன்றில் 👆 இது நடக்கிறது என்ற நம்பிக்கையோடு வாசிக்கவும்!
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
Justin replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அப்பிடியோ? இந்த தலை கீழ் வரலாற்றை எங்கே எடுத்தீர்கள்? பதில் அவசியமில்லை. 2014 இல் கிரிமியாவை ஒரு எதிர்ப்புமில்லாமல் வந்து ரஷ்யா பிடித்தது நட்புறவான செயல் என்கிறீர்களா? அந்த நேரம் சும்மா இருந்தது போல இப்போதும் சும்மா மேற்கு இருந்திருந்தால், நீங்களும் இப்ப அகதியாக மேற்கு நோக்கி வந்திருப்பீர்கள் என நான் ஊகிக்கிறேன்! கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு போயிருப்பீர்கள் என்று சொன்னாலும் நம்புகிறேன்😎! இவ்வளவு "உலக நலன்" கருதி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்! ஆனால், நீங்கள் வந்து தஞ்சம் பெற்ற நாடே அமெரிக்காவினால் நாசிகளிடமிருந்தும், பின்னர் நேட்டோவினால் ஸ்ராலினிடமிருந்தும் காப்பாற்றப் பட்ட நாடு என்பதை எங்கேயும் வாசித்தறியவில்லையா? அல்லது உருப்படியான ஒலி ஒளி மூலங்களில் கேட்டுக் கூட அறிய முடியவில்லையா? இதற்கு தற்போது உங்களிடம் இருக்கிற ஒரு சோடி கண்ணும் காதுமே போதுமே உங்களுக்கு? பாவிக்க மாட்டீர்களா😂? -
ஹிஸ்பல்லா அமைப்பின் மீது ஒரு எதிர்கால இராணுவ நடவடிக்கையின் போது அதிர்ச்சி வைத்தியமாக (element of surprise) செய்யவிருந்த வேலையை, இஸ்ரேல் இப்போதே அவசரமாகச் செய்ய வேண்டி வந்து விட்டது என்கிறார்கள். இனி புதுக் கொம்பனியொன்றை உருவாக்கி, புதிய அண்டர் வேர் மாதிரி ஏதாவது ஹிஸ்பல்லா போராளிகளுக்கு விற்றுத் தான் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் இஸ்ரேல்😎!
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
Justin replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சகல வளங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன். வளைகுடா எமிறேற் நாடுகள் பல, குடிமக்களுக்கு சகலவற்றையும் இலவசமாக வழங்கும் அளவுக்கு செல்வம் மிகுந்தவை. ஆனால், மக்கள் அங்கேயிருந்து சில சமயங்களில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வந்து தங்கி விடுகிறார்கள். (சவூதி அரச குடும்பத்தினரே தங்கள் இராட்சத போயிங் விமானத்தில் பறந்து வந்து இங்கே தான் உடுப்பு வாங்குகிறார்கள்!). ரஷ்யாவிடம் எரி சக்தி வளம், பாரிய நிலப் பரப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரும் ரஷ்யாவின் எல்லையில் போய் "அசைலம்" கேட்டு வரிசையில் நிற்பதில்லை (இங்கே ரஷ்யாவை தலையில் தூக்கி வைத்திருப்போர் கூட ரஷ்யாவை அண்டவில்லை😂!). எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது! -
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
Justin replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உளறுவாயன் ஜே.டி. வான்ஸைக் கட்டுப் படுத்தாமல் பேச அனுமதித்தால், நீலக்கட்சிக்குத் தான் இலாபம்! எனவே, இவர்களைப் பேச விட வேண்டும் என நினைக்கிறேன்😂! -
நுணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
Justin replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இப்பவும் எருமை மாடுகள் அமெரிக்காவையோ, வேறு லிபரல் ஜனநாயக நாடுகளையோ மதிப்பதில்லைத் தானே? கடாபி, சதாம் ஹுசைன், இடி அமீன், லீ பென், புரின் போன்ற பேர்வழிகளைத் தானே புகழ்ந்து கொண்டாடுகின்றன😎? -
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
Justin replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கந்தையருக்கு கிளிநொச்சி செய்தி இன்னும் அப்டேற் ஆகவில்லைப் போல: நேற்று வந்த தகவல்படி மாவை பொது வேட்பாளருக்கு ஆதரவு. இன்றைய செய்தி இன்னும் வரவில்லை😎! -
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
Justin replied to கிருபன்'s topic in உலக நடப்பு
கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎. சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!). "ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல். ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்! -
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
Justin replied to தமிழ் சிறி's topic in அரசியல் அலசல்
நிலாந்தன் கிளிநொச்சியில் ஒரு காலத்தில் (உருத்திரபுரமென்று நினைவு) தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்பித்ததால் "மாஸ்ரர்" என அழைக்கிறார் என நினைக்கிறேன். -
சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?
-
முற்றிலும் தவறான செய்தி - தமிழ்மிரர் காரருக்கு ஆங்கிலம் புரிவதிலும், மொழிமாற்றம் செய்வதிலும் உள்ள சிக்கலால் இந்த நிலை. இரண்டு "வழக்குகள்" அல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் உட்பட்ட 18 பேருக்கெதிரான ஒரு வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளை (counts of felony) மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்ற தொழில் நுட்பக் காரணத்தினால் நீதிபதி நீக்கியிருக்கிறார். இதே போல 6 குற்றச்சாட்டுகள் மார்ச் மாதமும் தொழில் நுட்பக் காரணங்களால் நீக்கப் பட்டன. இன்னும் 8 மோசடிக் குற்றச்சாட்டுகள் (felony counts) ட்ரம்பின் மீது இந்த 1 வழக்கில் சுமத்தப் பட்டிருக்கின்றன. ஒரு மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டாலே தண்டனை பலமாகத் தான் இருக்கும், எனவே 8 என்பது மிகப் பெரிய ஆபத்து நிலை தான். இந்த போலிச் செய்திகளை "அப்படியே சாப்பிடும் அப்பாவிகள்" உலவும் இடங்களில் போடுவது அவர்களுக்கு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்தால் அதுவும் நல்லது தான்😎! உண்மையான செய்தியின் இணைப்பு: https://www.npr.org/2024/09/12/nx-s1-5110238/georgia-trump-case-supremacy-clause-counts-quashed
-
கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.
-
இந்தக் கதையை வாசிக்கையில் ட்ரம்பும் கமலாவும் நினைவுக்கு வருகிறார்கள். பெண்களிடம் தோற்பதைச் சகிக்க முடியாத ட்ரம்ப், கமலாவிடம் விவாதத்தில் தோற்றதாகத் தான் தெரிகிறது. "இனி விவாதம் இல்லை!" என்று நாண்டு கொண்டு நிண்ட பின்னர், கட்டாயம் மீண்டும் விவாதிக்க வருவார் என்கிறார்கள்! பார்க்கலாம்!
-
உங்கள் போல ஒரு சிலர் இருக்கிறார்கள், நன்றிக்குரியது தான். ஆனாலும் தற்போதைய நிலைமைகள் - யாழ் களத்திலும் சரி, யாழுக்கு வெளியேயும் சரி- cut and dry ஆகத் தகவல்களைத் தருவோரை விட சும்மா அலட்டிக் கொண்டிருப்போரை முன்னிறுத்தும் நிலைமைகள். Return of Investment (ROI) என்றொன்று இருக்கிறது. 3- 4 மணி நேரம் செலவு செய்து ஒன்றை உருவாக்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு அது பயன்படுகிறது? அந்த 3 மணி நேரத்தை ஒரு வேலை விடயத்தில் செலவழித்தால் ROI பதவியுயர்வு, முன்னேற்றம், சம்பள உயர்வு. பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் அவளுக்கு பரீட்சையில் அதிக புள்ளிகள் ROI . காணியை துப்புரவு செய்தால் மனைவியிடம் நல்ல பெயர்😂..இப்படி ROI மிக அதிகம். எனவே, ஓணாண்டியார் நினைப்பது போல இது உணர்ச்சி வசப்பட்டு வந்த ஒதுங்கல் அல்ல, calculated withdrawal!
-
இது தமிழ், அவமரியாதை அல்ல. என்னிடம் "உங்கள் நிலைப்பாட்டிற்கு விளக்கம் தேவை" என்று ஒரு தாயக அரசியல் திரியில் கேட்டீர்கள். அப்படியான ஒரு விளக்கம் கேட்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. ஆனாலும், நான் என்ன செய்தேன்? "குய்யோ முறையோ" என்று திரியைத் திசை மாற்றினேனா? உங்களுக்கு ஒரு விளக்கம் தந்தேனா இல்லையா? அப்படி செய்யாமல் நீங்கள் உரையாடலை "நீங்கள் இப்படியானவர் தான் என அறிவேன்" என்று திசைமாற்றுவதை பம்முதல் என்றேன். நிற்க: களத்தின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர், கருத்து எழுதும் எல்லோரையும் நட்போடு நடத்த வேண்டியதில்லை, ஆனால் மரியாதையோடு நடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நியாயமானது. அதிலும், யாழ் களத்தில் பகிரப் படும் தகவல்களை தரமானவையா, ஆதாரம் மூலம் பலம் பெறுபவையா என்று தேடும் முயற்சியைச் செய்வோரை நோக்கி நீங்கள் கோபம் கக்குவது இது முதல் தடவையல்ல. நீங்கள் கவனித்தீர்களோ தெரியாது, இதன் விளைவை ஏற்கனவே யாழ் களத்தில் காண்கிறோம் என நான் நம்புகிறேன்.