Everything posted by Justin
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂
-
யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்
மண்டபங்களின் உள்ளே நடத்துகிற நிகழ்வுகளுக்கும் மாநகரசபை அனுமதி எடுக்க வேணுமோ? தீ அபாய ஆபத்துக்களைத் தடுக்கும் fire safety code அனுமதி போல ஏதாவதா?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நீங்கள் சொன்ன பிரகடனங்கள் எல்லாம் யுத்த காலத்தில், தமிழர் பிரதிநிதிகளாக தரப்பொன்று (அல்லது சில) இருந்த காலத்தில் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் விளைவாக வந்தவையாக இருந்ததால் உடனே கவனம் பெற்றன. இது பேச்சு வார்த்தையின் முடிவுப் பிரகடனம் இல்லையல்லவா? எனவே யார் கவனிக்கப் போகிறார்கள்? இப்போது கூட, பிரகடனத்தின் உள்ளடக்கத்தைச் சுட்டிக் காட்டிய பிறகும் அதைப் பற்றி எதுவும் பேசாமல், வேறெதையோ தானே பேசிக் கொண்டிருக்கிறோம்? முந்தியே தெரிந்திருந்தால் வித்தியாசமாக பேசியிருப்போம் என்கிறீர்களா? நான் நம்பவில்லை😂.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
//ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?// ஓம் அல்லது இல்லையெனப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இது ஒற்றைத் தீர்மானம் அல்ல, பல தீர்மானங்கள், இலக்குகளின் தொகுப்பு - எனவே எல்லாம் நடை முறையாகாது என உறுதியாகச் சொல்ல முடியும்😎. பொருளாதாரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஏற்கனவே உள்ளூர் தமிழ் தலைமைகளாலும், புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளாலும் முன் மொழியப் பட்ட மாற்றங்கள் தான் - எனவே இதில் யாரும் எதிர்க்க, அதிர்ச்சி கொள்ள எதுவும் புதிதாக இல்லை! திட்டமிடல் பாசையில் இது போன்ற பிரகடனத்தை blue print அல்லது high-level summary என்று சொல்வார்கள். ஒவ்வொரு இலக்கினுள்ளும் பல செயல்கள் (action items) உள்ளடங்கியிருக்கும். அந்த செயல்கள் நடை பெறுமா என்பதைப் பொறுத்தே இலக்கு தப்பும் அல்லது தாழும்! (இந்த இலக்குகளை செயல் பட்டியலாக வகைப்படுத்தும் முயற்சியைத் தான் கோசான் "ஈழத்தமிழர் அபிலாசைகள்" என்ற திரியில் செய்ய முயன்றார் என நினைக்கிறேன். பின்னர் அதை யார் பொறுப்பெடுத்தார்கள் என அறியேன்!) அழுத்தம்? இலங்கை அரச தரப்பு வெளி அழுத்தங்களால் பணியவைக்கப் பட முடியாத சில தகைமைகளைக் கொண்டிருக்கிறது. எனவே, moderate optimism!
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
வேறெங்கும் தமிழில் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன் - 6 அம்சப் பிரகடனம்: 1. நாட்டின் பன்முகத்தன்மையை, எந்த ஒரு சமூகமும் தன் கௌரவத்தை இழக்காத வகையில் காக்கவும், முன்னேற்றவும் வேண்டும். 2. பொருளாதாரப் பிரச்சினையைப் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி மூலம் தீர்க்க வேண்டும் - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புலம்பெயர்ந்த இலங்கையரின் முதலீடு,நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர் திசையில் வைத்திருத்தல், நாட்டை ஒரு மத்திய தர வருமானமுள்ள நாடாக மாற்றுதல். 3. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் - அந்த அரசியலமைப்பு தனி மனித, சமூக உரிமைகளை முன்னேற்றி, சமத்துவம், சம பிரஜாவுரிமை என்பவற்றை மக்களிடையே பேண வேண்டும். நிர்வாக அமைப்புகளின் பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படியொரு அரசியலமைப்பு வரும் வரை, தற்போதிருக்கும் அரசியமைப்பின் படி இதய சுத்தியோடு அதிகாரப் பகிர்வின் அலகுகளை அமல் படுத்த வேண்டும். 4. பிரிக்கப் படாத, ஐக்கியமான ஒரு நாட்டின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். மத, இன, கலாச்சார மற்றும் வேறு அடையாளங்களை ஏற்றுக் கொண்டு, மதித்து இன மதக் குழுக்களிடையேயானா புரிந்துணர்வை உருவாக்க வேண்டும். 5. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புக் கூறி, சமாதானமாகி, எதிர்காலத்தில் இத்தகைய துன்பங்கள் மீள நிகழாமல் உறுதி செய்யும் ஒரு இலங்கையை இலக்கில் நிறுத்த வேண்டும். 6. இரு தரப்பு மற்றும் பல் தரப்பு சர்வ தேச ஒப்பந்தங்களை மதித்து சுதந்திரமான, செயலூக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து, உலகின் சமாதானம் நிலவும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை இணைய வேண்டும்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
https://www.tamilguardian.com/sites/default/files/Image/pictures/2023/Sri Lanka/231208 GTF Ranil/FINALHimalaya Declaration - English with signatories and titles with the date.pdf 👆இமயமலைப் பிரகடனத்தை 2023 ஏப்ரல் மாதமே தமிழ் கார்டியன் திறந்து காட்டி விட்டது. பொது மக்கள் அறியாமல் இருப்பது பரவாயில்லை. "பரிஸ்ரர்" பொன்னம்பலமும், ரெலோவின் பேச்சாளரும் உள்ளடக்கம் அறியாமல் இருக்கிறார்கள் பாருங்கள்? அங்கே தான் நிக்கீனம் எங்கள் "தமிழ் தேசிய கிச்சு கிச்சு மூட்டித்" தலைவர்கள்😂!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார். அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லை. உங்களைப் போன்ற சிலரை அப்படி சொல்லலாம் என்பது தான் நான் 🤐 மூலம் சொல்லாமல் சொன்னது!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சேச்சே, எல்லாரையும் சொல்ல முடியாது!😂🤐
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்ன நொஸ்ட்ராடமஸ் திரி? நான் காணவில்லை? நானும் வந்து என் "பாசிச அடக்கு முறையை" வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டதே, ஐயகோ😂! பி.கு: எங்கோயோ பல வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு அடியின் கோபத்தில் இன்றும் எல்லா இடங்களிலும் நுழைந்து territory marking செய்யும் ஆட்களைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்! சில விடயங்களில் மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனை தூக்கி ஏற்றி விட வேணுமேயொழிய, கீழே தான் இருப்பேன் என்பவர் இழுத்து விழுத்த இடம் கொடுத்தலாகாது, #அடக்கு முறைக் கருத்தாளன்😎
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது போன்ற black & white விடயங்களுக்கெல்லாம் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" என யோசிக்காமல் பதில் சொல்லி விட வேண்டும்! இல்லா விட்டால் கிடைத்த இடை வெளியில் #மண்ணு லாறி புகுந்து வாரிக் கொட்டி விடும் - புரியுதா நாஞ்சொல்றது😂?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்! பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂? பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கு எதிர்ப்பு, அமெரிக்க குலைப்பன், "கிளிசரின் கண்ணீர்" மனிதாபிமானம் எல்லாம் கலந்து இப்ப புரின் ஆதரவாளர் நசரல்லா விசிறிகளாக மாறப் போகிறார்கள்! தோல், கண் நிறம் கூட நெருங்கி வந்து விட்டது! ஆனால் ஒரு விடயம் துருத்திக் கொண்டு இடிக்குமே? மதத்தை என்ன செய்வது😂?
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இப்படி அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கொல்வது அற ரீதியில் தவறு மட்டுமல்ல, அதன் சொந்தப் பாதுகாப்பிற்கும் உதவாத ஒரு முட்டாள் தனமான செயல்! காசாவில் இருக்கும் 2 மில்லியன் வரையான மக்களில் 50% வரை 18 வயதுக்குக் கீழான இளையோர் என்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை நோக்கிய வன்மத்தை வளர்க்க இதுவே போதும். பயங்கரவாத ஒழிப்பு/ஹமாஸ் ஒழிப்பு விடயத்தில் இஸ்ரேல் தோல்விப் பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம், இத்தளத்தை நான் "breitfart"என்று பகிடியாக அழைப்பதுண்டு. கீழ் வரும் பந்தியை வாசித்த போது அமெரிக்காவின் பிரபல நையாண்டிப் பத்திரிகையான The Onion வாசிக்கிறேனோ என்ற குழப்பம் வந்தது: "...Obama ignored Israel’s long record as one of the best, if not the best, countries in the world in upholding human rights and international humanitarian law in war against a ruthless, terrorist enemy"😂
-
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
நேரப் பற்றாக்குறை, ஆனால் சுருக்கமாக: ஓம், சில விடயங்கள் தவறு, சில விடயங்கள் தவிர்ப்பு (omission) என்று அபிப்பிராயத்திற்கேற்ப தரவுகளை வளைத்திருக்கிறார். சில நுட்பமான உள்குத்துக்களும் கூட: "வட்டி, வர்த்தகம் என்று வாழ்ந்தார்கள்" என்கிறார். ஐரோப்பாவில் 1900 இல் யூதர்கள் மருத்துவம், விஞ்ஞானம் , வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சினார்கள், இந்த "cunning வியாபாரிகளாக இருந்தனர்" என்பது நாசிகள், யூத எதிர்ப்பாளர்கள் பாவிக்கும் ஒரு anti-Semitic trope! 1897 இல் முதல் சியோனிஸ்ட் காங்கிரஸ், ஆனால் அது தான் யூதர்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கும் முதல் முன்மொழிவு அல்ல. யூத நாடு இயக்கம் ஆரம்பித்தது 1800 ஆரம்பத்தில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த யூதர்களிடையே. இதைப் பார்த்து வளர்ந்த தியோடர் ஹேர்ஷல் தான் முதல் சியோனிஸ்ட் காங்கிரசை உருவாக்கி யூதப் பணக்காரர்களை நாடி பலஸ்தீனம் நோக்கிச் செல்லும் யூதர்களை அதிகரிக்க வைத்தார். டொக்ரர் குறை எதை வாசித்து விட்டு இதை எழுதினாரோ தெரியவில்லை!
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
இப்பிடிச் சொல்லி விட்டீர்கள், இனி ராசம்மா வர மாட்டா😂!
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்னுடைய கருத்து குணா எப்படி "அமெரிக்க ஷதி" கதையாடலை நடக்கும் சம்பவங்கள் வைத்து உருவாக்குகிறார் என்பது பற்றி மட்டும் தான், இது தான் கிளி ஜோசியம். யாழ் களத்தில், உலகின் முக்கியமான சம்பவங்கள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடப்பது சாதாரணமானது, அனேகமானோர் தகவல்களை, வரலாற்றுத் தரவுகளைப் பகிர்கிறார்கள், எனவே பயனுள்ளவை தான் இந்தப் பரிமாற்றங்கள். நீங்கள் சொல்வது போல, "நமக்கு தொடர்பென்ன, எனவே பேசாமல் இருப்போம் என்றால் எதையும் கற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் வாழும் (Middle America) அமெரிக்கர்கள் போல நாமும் மாறி விடுவோம் - என்ன நன்மை? ஒன்றுமில்லை. என்ன தீமைகள்? பல.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குணாவின் காணொலிகள் தற்போது ஊரில் கிளி ஜோசியம் சொல்வோரின் கதைகள் போல மாறி வருகின்றன: இயல்பாக நடக்கும் சம்பவங்களை எடுத்து, "பார் நான் முதலே சொல்லியிருக்கிறேன், இது தீர்க்க தரிசனம்" என்பதான தோற்றம் காட்டல்! 1979 முதல் அமெரிக்காவிற்கு ஈரான் ஒரு முள்ளு மத்திய கிழக்கில். ஹிஸ்புல்லாவும் , ஈரானும் ஹமாசின் தாக்குதலைப் பயன்படுத்தி தாமும் யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியே அமெரிக்கா கப்பல்களை அனுப்பியது. இது தினசரி செய்திகள் பார்ப்போருக்கே விளங்கும் விடயம். இதற்கு எப்படி குஞ்சம் கட்டி வீடியோ போடுவது என்று யோசித்த போது, உக்ரைன் ரஷ்யா யுத்தம் வசதியாக கிடைத்து விடுகிறது. அமெரிக்கா தான் புரினுக்கு கிச்சு கிச்சு மூட்டி பெப்ரவரி 2022 இல் பெலாரசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த படைகளை கியேவ் நோக்கிப் போக வைத்தது என என்று கற்பனை வலை பின்னாதவரை குணாவை நம்பலாம்😎!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்குமே காசை சேமிக்கத் தான் விருப்பம் இருக்கும். ஆனால், காசை மட்டும் சேமித்து வைத்து, நாட்டின் நலன்களை ஜனநாயக மறுப்பாளர்களிடம் கையளித்து விட்டால் (புரின், ஹமாஸ்), சித்திரத்தை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு சுவரை இடித்து விடுவது போலாகும்! பல உரையாடல்களில் உங்களுக்கு நான் விளக்க முயல்வது இதைத் தான்: அமெரிக்கா என்பது பணக்கையிருப்பு என்ற ஒற்றைக் கூடைக்குள் மட்டும் தன் எல்லா முட்டைகளையும் வைத்து விட்டுக் காத்திருக்கும் தூர நோக்கற்ற தேசமல்ல! கடன் இருக்கும்/வளரும், உள்நாட்டில் புறுபுறுப்பு இருக்கும், சாதாரண அமெரிக்கர்களின் வருமானம் குறையும்/கூடும், ஆனால் அமெரிக்காவும் பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கும்! ஏனெனில் you can chew gum and walk!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது. மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன. ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன. https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
"ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது போரே இல்லையென்றால், அது உத்தம ஆட்சி தான்" என்பதை ஏன் இலங்கையிலும் பிரயோகிக்க முடியாது எனக் கேட்டேன்! இதன் பதில் உங்களுக்குத் தெரியுமென்பதால் பேசாமல் இருக்கிறீர்கள்! இது ஒன்றும் தேவையில்லாத புகுத்தல் அல்ல: ட்ரம்ப் ஆட்சியின் உலக அமைதி, அமெரிக்கா முழுவதும் தன் கவனத்தை உள்நோக்கித் திருப்பிக் கொண்டதால் உலகைக் கைகழுவி விட்ட அமைதி! இது ஏற்கனவே முன்னர் ஒரு தடவை நடந்திருக்கிறது 30 களில் - அதன் விளைவு என்னவென்பதை ஏற்கனவே ஒரு தொடரில் எழுதியாகி விட்டது. அப்படித் தான் இன்றும் விளைவு விபரீதமாக (குறிப்பாக ஐரோப்பாவிற்கு) இருந்திருக்கும்!