Everything posted by இணையவன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இன்று தங்கம் 1940 ற்கு மேல் வந்தால் விற்கும் வர்த்தகம் செய்ய எண்ணியுள்ளேன். சென்ற வாரம் செய்த எரிவாயு முதலீடு (Virtuel Trading) +60 டொலர் வரை ஏறி பின்னர் அடுத்த நாள் -50 டொலருக்கு இறங்கி SL ஆக மூடப்பட்டது. இரண்டாவதாக இட்ட முதலீடும் விலைச் சரிவால் இவ்வாறே மூடப்பட்டது. நேற்று மறுபடியும் முதலிட்டு 60 டொலர் இலாபம் கிடைத்தது. இன்னும் NATGAZ விலை ஏறு என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதிக நாட்கள் விட்டுப் பார்க்க முடியாது. இலாபம் வரும்போது விற்றுவிட வேண்டும். இன்றைய எவது வர்த்தக நிலை. அநேகமானவை இன்று விற்கும் வர்த்தகம் (மஞ்சள் கோடிட்டவை)
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது பங்கு வர்த்தகத்தின் (Virtuel Trading) இன்றைய நிலை. Palladium புதிய முதலீடு COTTON மிகவும் கீழே இறங்கியபோது இரண்டாவது முதலீட்டினை நேற்று மதியம் ஆரம்பித்துள்ளேன். இப்போது விலை ஏறுகிறது NATGAZ இது இன்று காலை முதல் விலைச் சரிவில் பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதில் கிடைத்த இலாபம் முழுவதும் போய் -40 டொலர் வரை சென்றது. ஆரம்பம் முதல் இந்த வர்த்தகத்தினைப் பரிசோதிப்பதற்காக மூடாமல் வைத்துள்ளேன். இப்போது இரண்டாவது வர்த்தகத்தை இன்று ஆரம்பித்துள்ளேன். இரண்டாவது வர்த்தகம் இலாபம் தர ஆரம்பிக்கின்றது. நிச்சயம் மேலே செல்லும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்றிரவு OIL, NASDAQ100 ஆகியவற்றை மூடிவிட்டு USDJPY இந்த வாரம் முழுவதும் மந்தமாகப் போய்க்கொண்டிருந்ததால் 200 டொலர் (X10) வாங்கும் வர்த்தகத்தில் முதலிட்டேன். குறைவாக மதிப்பிட்ட TP ற்குச் சில மணி நேரத்தில் 21 டொலர் இலாபத்துடம் மூடிக் கொண்டது. விழிப்பாக இருந்திருந்தால் இரு மடங்கு இலாபம் கிடைத்திருக்கும். இன்று காலையில் அதன் விலை வெகுவாக அதிகரித்திருந்ததால் விற்கும் வர்த்தகத்தில் 100 டொலர் முதலிட்டு SL 18 டொலர் இலாபத்துடன் மூடிக் கொண்டது. இதோ அதன் விபரம் படத்தில்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று அமெரிக்க CFD சந்தை மூடியிருந்ததால் இன்று எனது முதலீட்டில் ( Virtuel Trading) மாற்றங்களைச் செய்யவுள்ளேன். இலாபம் தரும் இந்த மூன்றில் OIL, NASDAQ100 ஆகியவற்றை இலாபத்துடன் மூடி பின்னர் விலை குறையும்போது வாங்கவுள்ளேன். தொடர்ந்து விடுவதால் ஏற்றம் இறக்கம் இருக்குமே தவிர பெரிதாக உயரும்போல் தெரியவில்லை. மாறாக விலைச் சரிவு ஏற்படலாம். NATGAZ விலை ஏறும் என்றே நினைக்கிறேன். விட்டுப் பார்க்கலாம் எதுவரை ஏறும் என்று. விலை குறையும்போது இதில் இன்னொரு முதலீட்டைச் செய்யலாம். UK100 இனை 22 டொலர் நட்டத்துடன் மூடியுள்ளேன். COTTON விலை ஏறு என்ற நம்பிக்கையில் மேலும் இன்னொரு முதலீடு செய்துள்ளேன். ஏனையவற்றில் சிலதை இலாபங்களுடன் விற்றுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் பற்றிய எதிர்வு கூற முடியாமல் உள்ளதால் இப்போது தங்கத்தில் முதலிடுவதைக் குறைத்துள்ளேன். நேற்று விற்கும் வர்த்தகத்தில் 100 டொலர் முதலிட்டு 5 டொலர் இலாபத்துடன் மூடிவிட்டேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது வர்த்தகத்தின் இன்றைய நிலை. NATGAZ நேற்றுவரை கிடைத்த இலாபம் இன்றைய 5.5 வீத வீழ்ச்சியுடன் இழக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நிச்சயமாக மீண்டும் உயரும். Weight Watchers நேற்று ஏதோ காரணத்துக்காக பாரிய சரிவைச் சந்தித்தது. இதன் கடந்தகால தரவுகளைப் பார்த்துவிட்டு மலிவாக இருந்ததால் வாங்கியது. ஒரே நாளில் நல்ல இலாபம் தந்துள்ளது. COTTON தொடர்ந்தும் சரிந்தவாறு உள்ளது, பொறுத்துப் பார்க்கலாம். UK100 என்னுடைய கணிப்புத் தவறு. திங்கள் பார்த்துவிட்டு விற்க வேண்டும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முதலாவது கேள்விக்கு மட்டுமான பதில். பங்குவர்த்தகத்துக்கு பெரிய கணணித் திரையே உகந்தது. நீங்கள் முதலிட்ட OIL இல் அழுத்தினால் இப்படி வரும் (மன்னிக்கவும் பிரெஞ்சில் உள்ளது). 1. எண்ணை வர்த்தகத்தின் தற்போதைய விலை 2. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு இன்றைய விலை ஏற்ற இறக்க வீதம் 3. வர்த்தகச் சந்தை மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்ற விபரம். திறக்கும் மூடும் நேரங்களை இதனை அழுத்தி அறியலாம். 4. நீங்கள் முதலீடு செய்த தொகையும் வாங்கப்பட்ட பங்கு எண்ணிக்கைகளும் 5. வாங்கியபோது ஒரு பங்கின் விலையும் வாங்கப்பட்ட திகதியும் 6. தற்போது OIL வர்த்தகம் மூலம் உங்களுக்குக் கிடைத்துள்ள இலாபம் (அல்லது நட்டம்) 7. SL - உங்களது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக நீங்கள் தீர்மானிக்கும் எல்லை. 99 டொலர்களுக்கு மேல் நட்டம் ஏற்பட்டால் வர்த்தகம் தானாகவே மூடிக் கொள்ளும். இதன்மூலம் நீங்கள் முதலிட்ட தொகையில் 101 டொலரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பங்கு வாங்கிய பின்னரும் இதனை மாற்றிக் கொள்ளலாம். 8. Leverage - இங்கு X5 என்று இருப்பது முதலிட்ட தொகை 5 மடங்கு போன்று கணிக்கப்படும். அதாவது இலாபம் 1000 டொலர் முதலிடப்பட்டது போன்று இருக்கும். இழப்பும் மிக ஆழமாக இருக்கும். உதாரணமாக Forex வர்த்தகத்தில் X30 ஆக முதலிட்டிருந்தால் வர்த்தகம் 3.3 வீதம் வீழ்ச்சியடைந்தால் மொத்த முதலீட்டையும் இழந்துவிடுவீர்கள். கவனமாகக் கையாள வேண்டும். ஒரு தடவை முதலிட்டால் மாற்றம் செய்ய முடியாது. 9. TP - நட்டம் வரும்போது தானாக மூடப்படுவது போன்று இலாப எல்லையையும் தீர்மானிக்கலாம். இந்த எல்லையை எட்டும்போது வர்த்தகம் தானாக மூடிக் கொண்டு முதலும் இலாபமும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றலாம். உங்கள் வர்த்தகத்துக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாளி. சில நிமிடங்களில்கூட உங்கள் முதலில் பெரும் பகுதியை இழக்கலாம். அப்படி ஏற்பட்டால் எந்த மாற்றீடும் கிடையாது. யாரும் உதவிக்கு வரப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.🙂
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அடுத்து இரண்டாவது முயற்சி, அநேகமானவர்கள் முதலிடும் முறை - இதுவும் Virtuel Trading இல்தான். நீண்டகால முதலீடு - இது சில நாட்களாக அல்லது வாரங்களாக இருக்கலாம். Leverage குறைவானதாகவும் Stop Loss அதிகமானதாகவும் முதலிட்டுக் சுமாரான இலாபம் அடைவது. எங்கு முதலிடுகிறோம் என்பதே முக்கியமானது. உதாரணமாக நான் தெரிவு செய்த சில வர்த்தகங்கள் . Natgaz, Oil, Nasdaq100, ... Natgaz இன் விலை குளிர் காலம் ஆரம்பிப்பதற்கு முன் 9.7 டொலர் வரை போனது. அப்போது ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் தாங்கிகளை நிரப்பத் தொடங்கும். இப்போது இதன் விலை 3.2 டொலர் போகிறது. காரணம் ஐரோப்பாவில் எரிவாயு சேமிப்பு 85 வீதத்துக்கு மேல் போய்விட்டது, வாங்குவதற்கு ஆளில்லை. குளிர்காலத்தில் அதீத எரிவாயுப் பாவனையால் மறுபடி இன்னும் சில வாரங்களில் வாங்க ஆரம்பிப்பார்கள். இதே நாளில் சென்ற வருட விலையுடன் ஒப்பிட்டாலே 4 டொலர்களை அண்மிக்கும். பெற்றோலியமும் இப்போது 75 டொலரில் உள்ளது. இது இனிமேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது சென்ற வாரம் முதலிட்டபோது இருந்த நிலை : இது நேற்றைய நிலை : UK100 தவிர ஏனையவை வாங்கும் வர்த்தகம். Cotton நான் எடுத்த தவறான முடிவுபோல் தெரிகிறது. இன்னும் சில நாட்கள் விட்டுப் பார்க்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஆம். வசி கூறியதுபோல் வாங்கும் போது உள்ள விலைக்கும் அதே கணம் விற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளிதான் கமிசன். ஒவ்வொரு சந்தையைப் பொறுத்து இந்தத் தொகை வேறுபடும். உதாரணமாக Palladium 100 டொலருக்கு (X10) ற்கு வாங்கினால் அதன் விற்பனை விலை 96.5 ஆக இருக்கும். தங்கத்தில் இந்த இடைவெளி மிகச் சிறிது. மற்றும்படி பிரான்சில் பங்குச் சந்தையில் 1 டொலர் இலாபம் வந்தாலும் 1 மில்லியன் டொலர் இலாபம் வந்தாலும் 30 வீதம் வரி கட்ட வேண்டும். 😬 பங்குச்சந்தை இலாபத்தில் வரி கட்டுவதில் குறுக்கு வழியில் எதுவும் செய்ய முடியாது. ஒரே ஒரு வழி உண்டு, அது ஒரு வித வைப்புத் திட்டத்தில் முதலிடுவது, 17 வீதம் வரி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஆம் நஸ்டாக் 100. 4 விற்றல் வர்த்தகம் (Vente என்று உள்ளவை). மேலும் சில நாட்கள் Virtuel Trading செய்து பார்த்தேன். இதே போன்று நல்ல இலாபம் கிடைத்தது. ஆனால் பாதகங்களும் உண்டு. ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளபோது மட்டுமே இந்த வர்த்தகம் சாத்தியம். கனவயீனமாக முடிவுகள் எடுக்கப்படாவிடின் ஏற்படும் ஒரு நட்டம் அன்று முழுவதும் கிடைத்த இலாபத்தை விட அதிகமாக இருக்கும். அதிக நேரம் மினக்கட வேண்டும். முழு நேர வேலையாகச் செய்ய வேண்டி வரும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது முதலீட்டினை இழந்ததாலும் நேரம் இன்மையாலும் சில நாட்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இறங்கியுள்ளேன். ஆனால் முதலீடு இல்லாமல் Virtuel Trading இல். இதில் பெரிய தொகை முதலீடாகத் தரப்பட்டதால் பல்வேறு விதமான வர்த்தகங்களை முயன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக விற்கும் வர்த்தகம் (Sell) பல்வேறு முதலீடுகளில் முயன்று பார்க்க முடிந்தது. இன்று Nasdaq இல் குறுகிய trading வர்த்தகம் ஒன்றை முயற்சி செய்தேன். இதற்காக அதிக நேரம் தேவைப்படும். நான் நேரம் கிடைக்கும்போது மட்டும் முதலீட்டினைச் செய்துள்ளேன். இன்று நான் வர்த்தகம் செய்த நேரத்த்தில் பங்குகளின் நிலை கீழ்கண்டவாறு உள்ளது. ஆரம்பப் புள்ளியும் முடிவுப் புள்ளியும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதை அம்புக்குறியில் காட்டியுள்ளேன். ஆரம்பத்தில் முதலிட்டால் முடிவில் இலபமும் நட்டமும் இல்லாமல் இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில மணி நேரம் வரைபு ஒரு நிலையான எல்லைக்குள் நிற்கிறது. படத்தில் வட்டமிக்குக் காட்டிய பகுதியை அடுத்த படத்தில் பெருப்பித்துள்ளேன். இவ் வரைபில் சிவப்பு அம்புக்குறி காட்டியுள்ள உயரமானது 200$ முதலீட்டில் 5 டொலர்களுக்குச் (13 அலகுகள்) சமமானது. உதாரணமாக 10850 இலிருந்து 10863 ற்கு நகருதல். குறிப்பிட்ட வலையத்தினுள் விலை வலையத்தின் கீழ்மட்டத்திற்கு வரும்போது வாங்கும் வர்த்தகமும் (buy) வலையத்தின் உச்சிக்குச் செல்லும்போது விற்கும் வர்த்தகமும் (sell) செய்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் TP யின் அளவு 5$ தான். SL முக்கியமில்லை, அல்லது இதில் எனக்குச் சரியான அனுபவம் இல்லை. 200 டொலர் (+200$) முதலீட்டில் இன்றைய வர்த்தக விபரம் இதோ. விற்கும் வர்த்தகங்களை மஞ்சள் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
இப்ப தற்கொலை செய்வதற்கும் ஆள் வைத்துச் செய்கிறார்களாம். 😎
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோ சந்தையில் FTX Trading செய்த குளறுபடிகளால் பாரிய மாற்றங்கள். இந்த வருட ஆரம்பத்தில் Bitcoin இன் பெறுமதி ஆண்டு முடிவில் 100 000 டொலர்களை எட்டும் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெறுமதி ஆண்டு முடிவில் 10 000 டொலர்களை அடைந்து விடுமோ என்று சந்தேகிக்கின்றனர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சசிவர்ணம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வீட்டு விலையில் பணவீக்க்கத்த்தின் ஆதிக்கமும் உண்டு. கீழுள்ள படத்தில் பிரான்சின் வீட்டு விலையும் (சிவப்பு) வட்டி வீதமும் (பச்சை)
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நல்ல இலாபம். வாழ்த்துகள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று 1620 இல் இருந்த தங்கம் இன்று 1660 ற்கு ஏறியுள்ளது. EURUSD மிகவும் இறங்கிக் காணப்பட்டதால் நேற்று முந்தினம் வாங்கி நட்டமடைந்தேன். நேற்று வாங்கியிருந்தால் இன்று அதிக இலாபம் அடைந்திருக்கலாம். EURUSD இதவிட கீழ் செல்ல முடியாது, சர்வதேச வர்த்தக சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நாளை சற்று விலை குறைந்தால் வாங்க உத்தேசித்துள்ளேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நல்லது ரஞ்சித். இக் கட்டுரை குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மொழி பெயர்ப்பதற்கான காப்புரிமை எவ்வாறானது என்று தெரியவில்லை. கட்டுரை ஆசிரியரின் தொடர்பு இருக்குமானால் அனுமதி கேட்டுப் பார்க்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
EURUSD இல் முதலிட்டிருந்தேன். ஈரோ டொலரை விட விலை குறைந்திருந்து ஏறத் தொடங்கியபோது வாங்கியது. நேற்று திடீர் வீழ்ச்சியில் Stop loss ஆகியது. அதன் முன் palladium போன்றவற்றில் ஏற்பட்ட நடடங்களினால் கையிருப்பு 70 டொலர்களாகியது. அதனை நேற்று தங்கத்தில் முதலிட்டேன். விலை இன்னும் குறைந்து கொண்டே செல்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எண்ணை, எரிவாயு ஆகியவற்றின் வர்த்தகம் சுவாரசியமானது. கடந்த பல நாட்களாக அவதானித்து வருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் தற்போது விலை வீழ்ச்சியில் உள்ளன. நேற்று ஒன்றுசேர்ந்த பல்வேறு காரணிகளால் எரிவாயுவின் விலை 6 வீதம் குறைந்தது. இது மிகப் பெரிய வீழ்ச்சி. அதோடு சேர்ந்து எண்ணையும் விலை குறைந்தது. இன்னும் விலை குறையும் என்கிறார்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் 1670 இல். 🙂 முதலிட்டுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1711 இல் வாங்கியுள்ளேன். Stop loss 1103. பார்க்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இரண்டு வாரங்களுக்கு முன் சிறு பங்குகளாகக் கவனமெடுத்து வாங்கி கணிசமான அளவு இலாபம் கிடைத்தது. மொத்த இருப்பு 100 டொலரைத் தாண்டியதும் palladium வெள்ளி செப்பு ஆகியவற்றில் மாறி மாறி குறுகிய கால முதலீடுகள் செய்து அதிக இலாபம் ஈட்டியிருந்தேன். பெற்றோலியத்தின் விலை அடிக்கடி கூடிக் குறைவதால் அதில் இலகுவக இலாபம் அடையலாம் போல் தோன்றியது. மொத்தக் கையிருப்பு 220 டொலர்களாக உயர்ந்தது. கடந்த செவ்வாய் பெற்றோலியத்தில் இரு பிரிவாக 200 டொலர்களை முதலீரு செய்திருந்தேன். அன்று திடீரெனெ ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் 100 டொலர்களைச் சில மணி நேரங்களில் இழந்துவிட்டேன் (Stop loss 50%). நேற்று தவறான தருணத்தில் தங்கத்தில் முதலிட்டு நட்டத்துடன் வெளியேறி வெள்ளியில் முதலிட்டேன். அதுவும் ஏறுகிற மாதிரித் தெரியவில்லை. உங்களது தங்க முதலீட்டில் 1699 Stop loss மிகக் குறுகியதாகத் தெரிகிறது. தற்காலிகமான சிறு தாழ்வு ஏற்பட்டால் மூடப்பட்டு விடும் அல்லவா ? ஒருவேளை எனது இழப்புகளுக்கு தவறான Stop loss காரணமாக இருக்கலாம். Stop loss - Take profit இரண்டையும் எவ்வாறு கணிப்பிடுகிறிர்கள் ? நான் முதல் நாள் அதிகபட்சமாக இருந்த அளவை Take profit ஆக எடுத்துக் கொள்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சிறப்பான முடிவு. நான் வாங்கவில்லை. ஏற்கனவே வெள்ளி வாங்கியுள்ளதால் கையிருப்பு எதுவும் இல்லை. வெள்ளியிலிருந்து உடனே வெளியேறுவதானால் நட்டம் ஏற்படும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இன்றும் 1740 - 1730 ற்கு உள்ளேயே தடுமாறுவதால் தற்போது முதலிடுவதாக இல்லை. நேற்று palladium திடீரென 6 வீதத்தை இழந்திருந்தது. என்னிடமுள்ள மொத்த இருப்பையும் திரட்டி நேற்று இரவு முதலிட்டுள்ளேன். இதில் பிரச்சனை என்னவென்றால் தங்கத்தைப் போல் அல்லாது வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பாரிய இடைவெளி உண்டு. வாங்கியவுடனேயே சுமார் 7 வீதத்தினை முதலீடு இழந்துவிடும். இந்த இழப்பையும் இலாபத்தில் உள்ளடக்க வேண்டியுள்ளதால் மிகப்பெரிய விலை ஏற்றம் வந்தால்தான் விற்க முடியும். எரிவாயுவின் விலை நேற்று 7 வீதத்துக்கும் மேல் கூடியது. முதலிட்டவர்கள் அதிக இலாபம் அடைந்திருப்பார்கள். இன்று தங்கம் 1730 இனை விடக் குறைந்தால் சிறு இலாபத்துடன் palladium இனை விற்று தங்கத்தில் முதலிடலம் என்று எண்ணியுள்ளேன்.