Everything posted by நிழலி
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
கோசானும் வாக்களித்தால் இந்த எண்ணிக்கையை காட்டும் என நினைக்கிறேன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சஜித் தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சங்கள் எனக்கு உள்ளது. ஆயினும் மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்து, தமிழ் மக்களுக்கு சுவாசிக்க இடம் கொடுத்தது மற்றும் நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பை மாற்ற ஓரளவுக்கேனும் காத்திரமான பேச்சுவார்த்தைகளில் (அரசியலமைப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட குழுக்களுடன்) ஈடுபட்டமை போன்ற விடயங்களில் ஈடுபட்டமை போன்ற காரணங்களால், இருக்கின்ற லூசுக் கூட்டத்தில் கொஞ்சம் லூசுத்தனம் குறைந்த கூட்டமாக அவர்கள் இன்னும் தெரிவதால்.
-
மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
இவர் மகிந்தவுடன் பொதுஜன பெரமுனவில் முன்னர் இருந்து அமைச்சரானவர் அல்லவா? இப்ப எந்தக் கட்சியில் யாருடன் நிற்கின்றார்? இம் முறை பொதுஜன பெரமுனவுக்கு கடந்த முறை ஐ.தே.க. விற்கு நிகழ்ந்தது தான் நிகழும் என எதிர்பார்க்கின்றேன்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன். இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...! கியல வடக் நாஹி
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஓம்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
உங்கள் கருத்துத் தான் எனதும். ஆனாலும் என்னால் ஜேவிபி போன்ற ஒரு இனவாதக் கட்சிக்கு என் வாக்கை போட விருப்பம் இல்லை என்பதால் நான் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. ஊரில் இருந்திருந்தால் என் வாக்கை செல்லுபடியற்ற வாக்காக செலுத்தியிருப்பேன்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அச்சச்சோ... கடும் வெறுப்பு இருந்தாலும், தமிழரசுக்கு வாக்களித்து விட்டேனே....😀
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி: தமிழரசு கட்சி 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி - 03 இடங்கள் 28) வன்னி தமிழரசு கட்சி - 03 இடங்கள் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி: 04 நீங்கள் மாற்றச் சொல்லிய மாற்றிய இந்த மாற்றங்களால், கீழே உள்ள எண்ணிக்கையிலும் மாற்றம் செய்துள்ளேன். பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 54)தமிழரசு கட்சி: 10 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):154
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்த ஊர்களுடன் எனக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லை என்பதால் தான் தெரியாது என்று சொன்னேன். புள்ளிகள் கிடைக்காவிடினும் பரவாயில்லை. கலந்து கொண்ட இரு போட்டியாளர்களில் யாழ்ப்பாணத்தில் முதலில் வருவது தமிழரசு என ஒருவரும், மற்றவர் தேசிய மக்கள் கட்சி என்றும் பதிலளித்து, உண்மையில் இரு கட்சிகளுமே சரி சமமாக தொகுதிகளை வென்றால், எவ்வாறு புள்ளிகள் இடுவீர்கள்? இருவருக்கும் சம புள்ளிகள் தானே? இம் முறை சில இடங்களில் சமமாக வருவார்கள் என நான் என் சின்ன மூளையை கசக்கி பிழிந்து சாறு எடுத்துக் கணிக்கிருக்கின்றேன் 😀. எனவே இரண்டுக்கும் அரைப் புள்ளிகளாகவது வழங்க முடியும் தானே? ஏனெனில் இப் போட்டி அதிஷ்டத்தினை மட்டும் நம்பி நடத்தும் போட்டி இல்லையல்லவா?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தக் கணிப்பில், வாய்க்கு வந்தபடி, குத்து மதிப்பாகத் தான் பதில் எழுத முடிந்தது. ஊரில் உள்ளவர்களுடன் கதைக்கும் போது தாமும் குழம்பி, எம்மையும் குழப்பியடிக்கின்றனர். ஒரு பக்கம் சிங்கள தேசியக் கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக செல்வது தமக்கு ஒரு இழுக்கு என நம்புகின்றனர். அதே நேரம், தமிழ் கட்சிகளின் மீது கடும் வெறுப்பும் கொண்டுள்ளனர். இவற்றை விட, தமக்கு தெரிந்தவர் போட்டியிடுகின்றார் என்று அந்தப் பக்கமும் இல்லாமல். இந்தப் பக்கமும் இல்லாமல் தெரிந்தவருக்கு வாக்களிக்க போவதாக சொல்கின்றனர். என் நண்பன், லண்டனில் இருக்கின்றான். அரசியல் பிரக்ஞை உள்ளவன். ஆனால் தனக்கு தெரிந்த ஒருவர் / உறவுக்காரர் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பதற்காக அங்கு போய் அவருக்கு உதவி செய்கின்றான். தம் உறவுகள் எல்லாம் அவருக்குத் தானாம் வாக்கு போடுவினமாம். ஏனென்றா...ல் ஒரே சாதியாம். விரைவில் எம் மக்கள் மத்தியிலும் சாதிக் கட்சிகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. தமிழ் தேசிய உணர்வை சாதி உணர்வு மேவிச் செல்ல இடம் கொடுக்கும் வண்ணம் நிகழ்வுகள் மாற்றப்படலாம் எதிர்காலத்தில்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அடடா... தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்த்ஸ் + வாதாவூரான். தேசிய மக்கள் சக்தி: 140 என்று வர வேண்டும். @கந்தப்பு , கடைசிக் கேள்வி யிற்கான என் பதிலில் தேசிய மக்கள் சக்தி 140 என்று எடுத்துக் கொள்ளவும்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)\ 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி - 02 இடங்கள் தேசிய மக்கள் கட்சி: 02 இடம் (6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.) 28) வன்னி தமிழரசு கட்சி - 02 இடங்கள் தேசிய மக்கள் கட்சி: 02 இடம் 6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.) 29) மட்டக்களப்பு) தமிழரசு: 02 30)திருமலை தேசிய மக்கள் கட்சி: 02 இடம் 31)அம்பாறை தேசிய மக்கள் கட்சி: 03 இடம் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி: 03 தேசிய மக்கள் கட்சி: 03 இடம் (இரண்டும் சம அளவில் பெறும்) 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் கட்சி: 04 இடம் 34)கொழும்பு தேசிய மக்கள் கட்சி: 12 இடம் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: தெரியாது 39) உடுப்பிட்டி: தெரியாது 40) ஊர்காவற்றுறை: EPDP 41) கிளிநொச்சி:தமிழரசு 42) மன்னர்: தமிழரசு 43) முல்லைத்தீவு:தேசிய மக்கள் கட்சி 44) வவுனியா: ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு: தமிழரசு 46) பட்டிருப்பு : தெரியாது 47) திருகோணமலை: தேசிய மக்கள் கட்சி 48) அம்பாறை:தேசிய மக்கள் கட்சி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் கட்சி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 03 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி): 09 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி: 01 54)தமிழரசு கட்சி: 08 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு:01 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி): 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி : 0 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 75 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):156 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி): 0
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! சீரும் சிறப்புமாக வாழ்க!
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
-
அரசியல் சதிகள் அம்பலம்
நன்றி தமிழ் சிறி. ஆனால் நேரம் பொன்னானது. நான் ஏற்கனவே சொல்லியது தான். இத் தேர்தலில் சுமந்திரன் உட்பட, டக்கி, சிறிதரன், கஜேந்திரன்கள் எல்லாரும் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் கூட்டம் இது. இம் முறை என் இந்த எதிர்பார்ப்பில் 60 வீதமாவது நிறைவேறும். பி.கு: சசி இக் காணொளியை சில தினங்களிற்கு முன் வட்ஸ்அப் பில் அனுப்பி வைத்து இருந்தார். அப்பவும் நான் பார்க்க விரும்பவில்லை. பார்க்காமல் விட்டதன் இன்னொரு காரணம் தமிழ்னெட் ஆசிரியரும் இதே வகையை சார்ந்த சந்தர்ப்பவாதி என்பதால்.
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
நல்லதொரு விமர்சனம்!
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
மெய்யழகன்: வெப்பம் மிகுந்த நாளில் குளிரோடையில் கால்களை நனைத்த மாதிரி ஒரு அனுபவம். கோடை காலத்தில் தாகத்துடன் இருக்கும் போது எவராவது சில்லென குளிரும் lemon juice தரும் போது கிடைக்கும் அந்த பேரானந்தம். மனசையும் இடைக்கிடை கண்களையும் பனிக்க வைத்த படம். ஊருக்கு கன நாட்களின் பின் போன, பழகிய நண்பர்களை, உறவுகளை மீண்டும் கண்டு மெய்சிலிர்த்த அனுபவங்களை எமக்கு இப் படம் மீண்டும் அருட்டுகின்றது.. அதுவும் அந்த சைக்கிள்! அருமையான படம்!
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
தேர்தலில் தோற்றால் இதையே காரணமாக சொல்லா விட்டால் சந்தோசம்.
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
நான் வாசித்த செய்திகளின் படி, தாக்கப்படக்கூடிய இலக்குகள் பற்றிய விபரங்கள் கசியவில்லை. எந்த வகையான ஆயுதங்கள்/ தூர இருந்தே தாக்க கூடிய Air-launched Ballistic Missile (ALBM) systems ஏவுகணைகள் பற்றிய high-level தகவல்கள் மாத்திரமே கசிய விடப்பட்டன. இத் தகவல்களும் இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. அமெரிக்க புலநாய்வு பிரிவுகளால் இஸ்ரேல் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் என நினைக்கிறேன். எவ்வளவு தான் இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பினும், இஸ்ரேலை கூட வேவு பார்க்கின்றது அமெரிக்கா. https://www.bbc.com/news/articles/cz6w6p8x7p8o
-
“நான் இலங்கையன்” எனும் உணர்வுள்ள ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நடந்ததை நேர்மையாக சொல்வதும் பகிர்வதும் வீழ்ந்து விட்டார் வகையில் வராது என நினைக்கிறேன்
-
“நான் இலங்கையன்” எனும் உணர்வுள்ள ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில். கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது வித்தியாசமாக இருந்தது.
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
புரியவில்லை.. ரம்ப் யூத எதிர்ப்பாளரா?
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
பாஞ்ச் அண்ணையின் துணைவியார் விரைவில் நலம் பெறுவார்