Everything posted by நிழலி
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
நான் குருணாகல் சாஹிராவில் 4 ஆம் வகுப்பு வரைக்கும் படித்தனான். அது ஒரு கலவன் முஸ்லிம் பாடசாலை. அங்கு படித்த என் வகுப்பை விட ஒரு வகுப்பு கூடிய என் கூடப் பிறந்த அக்காவுடன் படித்த ஒரு முஸ்லிம் அக்கா, இன்று வரைக்கும் என்னை தம்பி என்று அன்பாக அழைக்கும் ஒருவர். சந்தோசமான ஒரு பாடசாலை. பின் 83 கலவரத்தின் காரணமாக யாழ்ப்பாணம் போய், பரியோவான் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு முடியும் வரை படித்தேன். பரியோவான் கல்லூரி ஆண்கள் பாடசலை என்று எல்லாருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். பாடசாலை வாழ்க்கையில் வரண்ட காலம் அது. பின் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள விவேகானந்தா கலவன் பாடசாலையில் 11 ஆம், 12 ஆம் வகுப்பு படித்தனான். வாழ்வில் கிடைத்த அருமையான வசந்த காலங்களில் ஒன்று. அங்குள்ள தோழிகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காகவே பட்டிமன்றம், பாட்டுப் போட்டி, இலக்கிய விழா என்று ஈடுபட்டு சாகித்திய விழாவில் பரிசுகளும் வாங்கினேன். ஆண் பெண் ஆரோக்கியமான உறவும் நட்பும் கூடவே சில அருமையான காதல்களும் உருவாகும் இடம் கலவன் பாடசாலைகள். பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள் ரசோ.
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
நான் ஊருக்கு போனால், மீன் வாங்க செல்லும் இடங்களில் தான் நீங்களும் வாங்கி இருக்கின்றீர்கள். கொழும்புத்துறை ஜெட்டிக்கு கிட்ட இப்ப மீன் விற்பதில்லையா? புலம்பெயர் நாட்டில் இருந்தாலு, சாறம் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓடும் skill இன்னும் இருக்கின்றதை அறிய ஆச்சரியமாக இருக்கு
-
யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் !
ஊரில் நடக்கும் இவ்வாறான விடயங்கள் பற்றிய திரிகள் எல்லாம், எந்தப் பின்னூட்டங்களும் இன்றி காற்று வாங்கிக் கொண்டு கிடக்கின்றன. இந்த செய்தியை வாசிக்கும் போது, ஊரில் நல்லாப் படித்தவர்களில் அனேகம் பேர், உயர்ந்த இடத்துக்கு வந்த பின் எவரையும் மதிக்காது, தான்தோன்றித்தனமாகவே நடந்து கொள்வர் என்ற என் புரிதல் சரி எனவே நினைக்கத் தோன்றுகின்றது. என் இனத்தில் உள்ள ஊருபட்ட சாபங்களில் இதுவும் ஒன்று.
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
அமைச்சர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார். இதற்கு முதல் இருந்தவர்கள் எல்லாம் இந்த விடயத்திலும் இந்தியாவிடம் பம்மிக் கொண்டே இருந்தவர்கள். இந்த மீனவர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் விடுவதே ஆகும்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
இந்தக் கட்டுரை ஓரளவுக்கு நியாயமாக உள்ளது. இன்றைய உக்ரைனின் அவலத்துக்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும், இவர்களின் திட்டத்துக்கு துணை போன செலன்ஸ்கியும் தான் காரணம் என ஓரளவுக்கு தெளிவாக எழுதி உள்ளார்.
-
கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!
வரும் 27 இல் நடக்கவிருக்கும் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் லிபரலுக்கு கிடைக்க போகும் அடி கனடா பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும். லிபரல் கட்சி மத்திய, மாகாண அரசுகளில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும்.
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
இலங்கையில் ஒரு மில்லியனுக்கு அரைவாசி Auto / 3 wheeler கூட வாங்க முடியாது. செவ்வந்தி தன்னை காட்டிக் கொடுக்காமல் இருக்க 10 மில்லியன் ரூபாவுக்கும் மேல் கொடுக்கும் அளவுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் பணக்காரியாக இருப்பார் என நினைக்கின்றேன்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மாதிரித்தான். இலங்கையில் அரச செலவில் அல்லது மக்கள் வரிப்பணத்தில் நல்லா படிச்ச என்னைப் போன்றவர்களை (அடப்பாவி நீயுமா என உங்கள் Mind Voice சொல்வது கேட்குது 😆 ) தங்கள் நாட்டுக்கு கவர்ந்து இழுத்து இறங்கியவுடனேயே நிரந்தரவதிவுடமை கொடுப்பது போலத்தான் இதுவும். நாங்களும் படிச்ச பிறகு, உந்த நாடு சரிவராது என்று இலங்கையை விட்டு கிளம்பி போனது போலத்தான் காளியம்மா மற்றும் மிச்ச ஆட்களும்.
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
பிழம்பு இதனை தனித் திரியாக இணைத்தமைக்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.😃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் சிறிக்கும், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய நுணாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
தமிழ் மிரரில் இக் கட்டுரையை எழுதியவர் தன் பெயரைக் குறிப்பிட பயந்து freelancer என்றே குறிப்பிட்டுள்ளார். ஆள் கடும் ஜேவிபி எதிர்ப்பாளர் போலிருக்கு. இலங்கையில் ஆளும் கட்சியின் சில செயற்பாடுகள் மீது மக்களுக்கு விமர்சனங்கள் சில இருப்பினும் அது வெறுப்பாக இன்னும் மாறவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால், அனேகமாக அனைத்து இடங்களிலும் தேசிய ஐக்கிய முன்னனி வெற்றி பெறும்.
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
பார்க்கலாம், இந்த நிகழ்வு நடந்தால், அதனை குழப்ப பெரியார் தொடர்பான கூட்டட்தை குழப்பிய மறத் தமிழ் காவாலிகள் வருவார்களா என.
-
சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!
முதலில் 10 மாணவர்கள் பலி என்று வாசித்து விட்டேன்! தரம் 10 இல் கற்கும் மாணவர் என்று தலைப்பை இட்டால் ஆதவன் குறைந்தா போய்விடுவார்
-
கைவிலங்குகள்
ஏனெனில், நீங்கள் குறிப்பிடுகின்றவர்கள் ஒரு போதும் எதிர்த்து போராடாதவர்கள். போராட்டம் நிகழும் போது கிரிக்கெட் மட்ச் பார்ப்பதைப் போன்றே ஆதரவு கொடுத்தவர்கள். பெடியல் நல்லா அடிக்கிறார்கள் என்று பொப்கோர்னை சுவைத்தபடி ரசித்த ரசிகர்கள் இவர்கள். தன் இனத்தின் விடுதலைப் போரை உளமாற ஆதரித்தவர்கள், அப் போராட்டத்துக்கு தன்னாலான உதவிகளை உளமாற கொடுத்தவர்கள் இன்னொரு இனத்தின் விடுதலைப் போர் தோற்றுப் போக வேண்டும் என்றோ, அவ் இனத்தின் விடுதலை போரை முன்னின்று நடாத்த முனைகின்றவரை கோமாளி என்றோ நக்கல் அடிக்க மாட்டார்கள்.
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்!
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். இப் படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு மகன்களுக்கும் அந்த வலியை கடத்திச் செல்கின்றது இப் படம். Amazon Prime இல், IPTV யில் தமிழ் ஒலிப்பதிவுடன் உள்ளது. பாருங்கள்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
வேறு எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல், வெறுமனே இரண்டு கட்சிகள் மட்டும் போட்டியிட்ட ஒரு இடைத்தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாமல் போனது உங்களுக்கு வியப்பைத் தருகிறதா இசை? இதில் அதிமுக, பா.ஜ.க போட்டியிட்டு இருந்தால் நாதக எத்தனை சதவீதம் எடுத்து இருக்கும்? திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலை உள்ளவர்களில் கணிசமானோர் கூட சீமானுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரில்லை என்பது தான் யதார்த்தம்.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
அவரது மின்னஞ்சலை கூகிளில் இட்டுத் தேடும் போது, அவர் பாண்டிச்சேரியில் வசிப்பதாகக் காட்டுகின்றது.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!
இலங்கையை போர்க் குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படல் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே டிரம்ப் இற்கு ஆதரவு கொடுக்கும் எம்மவர்கள் இதற்கு இனி எப்படி தம் அவர் மீதான ஆதரவை நியாயப்படுத்தப் போகின்றனர்? விஷச் செடிகள் எப்போதும் விசஷ் செடிகள் தான். எத்தனை வேடங்கள் போட்டாலும் போடாவிட்டாலும்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
கோஷானுக்கு எப்படியான ஷேப் பிடிக்கும்?- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ட்ரம்ப் பதவிக்கு வந்தது இனங்களுக்கிடையே, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து. பெரும்பான்மையான அமெரிக்கர்களை வெறுப்பின் மூலம் ஒன்றிணைத்து வெற்றி அடைந்தார். எவரெவர் சமூகங்களிற்கிடையே, தேசியவாதம், இனத்தூய்மைவாதம் எனும் போர்வையில் வெறுப்பை விதைத்து பெரும்பான்மையானோரை ஒன்றிணைக்க முயல்கின்றனரோ அவர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அப்படியான விசச்செடிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு ட்ரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.- கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
நீர்வேலியான் சொல்வது போன்று, கனடிய -அமெரிக்க எல்லைகளினூடாக கடத்தல் என்பது 0.99 வீதம் கூட இல்லை. சட்ட விரோத குடியேற்றவாசிகளின் குடியேற்றமும் மெக்சிகோ, மற்றும் தென்னாபிரிக்கா எல்லைகளினூடாக குடியேறும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவு. ஆனால் கனடாவுக்குள் வரும் சட்ட விரோத துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 90 வீதம் அமெரிக்கவில் இருந்து வருபவை. இன்னொரு விடயம், கனடா பாதுகாப்பு பிரிவாலோ அல்லது பொலிசாரால் கண்ணுக்கு முன் நிகழும் வாகனத் திருட்டையோ, அல்லது எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, பெரும் பல்பொருள் அங்காடிகளில் உள்ள நகைக்கடைகளை பட்டப்பகலில் கொள்ளை அடிக்கும் கொள்ளைகளையோ தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றனர். நிலமை இவ்வாறு இருக்க, பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் நீண்டும், வளைந்தும், அடர் வனங்களும், ஆறுகளும் இருக்கும் எல்லையை கடந்து நிகழும் குற்றங்களை தடுக்கவே முடியாது. எனவே பெரியளவில் மாற்றங்கள் இருக்காது.- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ஒரு அதி தீவிர வலதுசாரி பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை ட்றம்ப் காட்டிக் கொண்டு இருக்கின்றார். காசாவில் இனச்சுத்திகரிப்புக்கு அங்கீகாரம் வழங்குகின்றார். ஒரு சிங்கள அதி தீவிர இனவாதி எம் தாயக மக்களை இந்தியாவில் குடியேற்றி விட்டு, வடக்கு கிழக்கை முற்றிலும் சிங்கள மயமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடின் அது எப்படி இருக்குமோ, அவ்வாறு தான் இந்த வலதுசாரி யின் கோரிக்கையும். அமெரிக்காவை நாசமாக்காமல் விட மாட்டார்.- யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நல்ல விடயம். இதில் இரத்ததானம் வழங்கிய தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழங்கப்பட்ட தண்டனை காலத்தையும் சிறிது குறைத்து அவர்களின் இச் செயலுக்கு மதிப்பை கொடுத்தால் நல்லது (பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல் போன்ற அதி தீவிர குற்றங்களை செய்தவர்களை தவிர்த்து) அப்படியே, வேலை வெட்டி இல்லாமல், போட்டிப் பரீட்சை கூட தமக்கு வைக்காமல் அரச வேலை வேண்டும் என்று போராடும் பட்டதாரிகள் இதையெல்லாம் செய்ய மாட்டார்களா? (அவர்களில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை வேறு செய்து இருக்கின்றார்.. குருதியை கொடுத்து விட்டு செத்து இருக்கலாம்)- லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
இந்த படுகொலையின் சூத்திரதாரி கோத்தா. அவரை விட்டு விட்டு, வால்களை பிடிச்சு உள்ளே வைப்பதால் ஒரு பயனும் இல்லை. - ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.