Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. அது மிமிக்ரி இல்லை. ஆனால் எடிட் பண்ணப்பட்ட ஒன்று. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சுயநலக் கூட்டம், சீமானுடன் இணைந்து செய்த தில்லாலங்கடி வேலை அது. அண்மையில் முன்னைய செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைக்கும் போது, அவர் நடேசன் அண்ணாவின் நெருங்கிய உறவுகளுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் ஆனால் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியாது என்றும் கூறினார்.
  2. எமக்கு வயது படிப்படியாக ஏறிக் கொண்டு போகும் போது நாம் காண விரும்பாத நிகழ்வுகளில் ஒன்று, நாம் விரும்பிய, பழகிய, நெருக்கமான உறவுகளை அவர்களின் வயோதிபத்தின் காரணமாக இழப்பதும் ஒன்று. அந்த வரிசையில் இன்று பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களும் காலமாகி காற்றில் கரைந்து விட்டார். கண்ணீர் அஞ்சலி 😢
  3. நான் சென்னையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து சென்னைக்கும் எயார் லங்கா வில் தான் பயணம் செய்தேன். குறுகிய, ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம் என்றாலும் வெள்ளைப் பொங்கல் தந்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது. அதை விட அதை பரிமாறிய பெண் மிக அழகாக இருந்தார். எயர் கனடா வில் பல முறை பயணம் செய்துள்ளேன். பயணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் சேவை மிக மிக மட்டம். அவர்கள் தரும் உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, சுவிங்கத்தை உமிஞ்சு கொண்டு இருக்கலாம். எனக்கு பிடித்தது கட்டார் விமான சேவை. நல்ல உணவு. பாரபட்சமற்ற உபசரிப்பு. விமானங்களும் புதுசாக, மிகவும் தூய்மையாகவும் இருக்கும்.
  4. இணையவன், நீங்கள் / நாங்கள் கரடியாக கத்தினாலும், தலையைக் குத்தி தாளம் போட்டாலும், எங்கள் சனம் திருந்தாது. பலவிதமான ஆய்வுகளுட்பட்டு, பரிசோதனை சுற்றுகளெல்லாம் முடிந்து வெளி வரும் ஒரு மருந்தையோ அல்லது தடுப்பூசியையோ நம்பாமல் சதிக்கதைகள் எல்லாம் சொல்லுவினம், ஆனால் இப்படி ஒரு குடி நீரை அல்லது பானத்தை அப்படியே நம்பி குடிப்பினம். ஆட்டு மந்தைக் குணம். இன்னும் ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு. அக் கூட்டம் " நீ ஆங்கில மருந்தைத் தான் நம்புவாய், ஆனால் இப்படியான மருந்துகளை நம்ப மாட்டாய்" என்று புளிச்சல் ஏவறைக் கதைகள் கதைப்பினம். இப்படி தவறான பானத்தை நம்பி பருகி நோயில் வீழ்ந்தவர்கள் எனக்குத் தெரிந்து இருவர் உள்ளனர். இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் செய்கின்றவர்கள். கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பாமரர்களைக் காட்டிலும் இவற்றை அதிகம் நம்புவது எம் மக்கள் மத்தியில் இருக்கும் படித்தவர் கூட்டம் தான்.
  5. என்பார் லெனின் (“இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” - நூலிலிருந்து). இந்தியாவுடனான ஜேவிபியின் முரணையும் உறவையும் இந்தக் கோணத்தில் பார்ப்பதா என்பதே இந்த வாரம் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களாகும். இந்தியத் தலையீட்டு மரபு கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்தே இலங்கை மீதான ஆக்கிரமிப்பு மரபு இந்தியாவுக்கு உண்டு. இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஐதீகங்களைப் பலப்படுத்தி வந்த காரணிகளை சுறுக்கமாக இவ்விடயப் பரப்புக்குள் உள்ளடக்கலாம். இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் பற்றி சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப்புவாத மனநிலையை நிறுவியதில் மகாவம்ச ஐதீக மரபுக்கு பெரும் பங்குண்டு. அதேவேளை இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் இந்திய பாரம்பரியங்களின் பங்கு (குறிப்பாக தென்னிந்திய வகிபாகம்) மறுக்க இயலாது. ஏறத்தாள மொழி, கலாசாரம், உணவு-உடைப் பண்பாடு, மதப் பாரம்பரியம், கலைகள் அனைத்திலும் இந்தியாவின் வகிபாகமின்றி இலங்கை வளர்ந்ததில்லை. ஏன் சிங்கள இனத்தின் தோற்றமே இந்தியாவில் இருந்து வந்த விஜயன் மற்றும் அவனின் தோழர்களின் வழித்தோன்றல்களில் இருந்து உயிர்த்தது தான் என்பதை மகாவம்சமே விளக்குகிறது. பௌத்தம் அங்கிருந்து தான் வந்தது. சிங்கள மொழி உருவாக்கத்துக்கான அடிப்படை அங்கிருந்தே கிடைக்கிறது. எந்த சிங்கள பௌத்தத்தனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறப்படுகிறதோ அந்த சிங்களமும் பௌத்தமும் இந்திய இறக்குமதியே என்பதை எவரால் மறுக்க முடியும்? ஜேவிபியின் இந்திய எதிர்ப்பின் பின்புலம் இலங்கையின் வரலாற்றில் இந்தியாவை அதிகமாக எதிர்த்ததும், வெறுத்துமான சக்தியாக ஜேவிபியை துணிந்து குறிப்பிடலாம். “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற கருத்தாக்கத்தை ஜேவிபி தோற்றுவித்தது 1968 ஆம் ஆண்டாகும். அதன்படி இந்திய எதிர்ப்பு இலங்கையின் அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது. இந்திய விரோதப் போக்கின் ஊற்று சீன மாவோவாத பின்னணியில் இருந்து தொடங்கியது என்று ஜேவிபியின் முதலாவது செயலாளரான லயனல் போபகே குறிப்பிடுகிறார். ரோகண விஜேவீரவும் ஜேவிபியின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்த அன்றைய இளைஞர்கள் பலரும் அதற்கு முன்னர் சண்முகதாசனின் சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். சண்முகதாசனின் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவுக்கு எதிரான சீன சார்பு பிரச்சாரங்களை உள்வாங்கியவர்கள். பிற்காலத்தில் சண்முகதாசன் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே ஈபிஆர்எல்எப் இயக்கத்தை அதிகம் வெறுத்ததற்குக் காரணமும் கூட அவ்வியக்கத்தின் இந்திய சார்புக் கொள்கையும், இந்தியப் படையுடன் சேர்ந்து இயங்கியதும் தான். அதற்கு மாறாக அவர் புளொட் இயக்கத்தினருடன் நெருக்கமாக இருந்தார். ஏனென்றால் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே இந்திய எதிர்ப்பை அதிகம் கொண்டிருந்த இயக்கமாக புளொட் இருந்தது. “வங்கம் தந்த பாடம்” என்கிற நூலை வெளியிட்டு இந்திய எதிர்ப்பு கருத்தாக்கத்தை இயக்க உறுப்பினர்களுக்கு பாடமாக நடத்தியவர்கள். ஆனால் 71 கிளர்ச்சிக்குப் பின்னர் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டதாக குறிப்பிடுகிறார் லயனல் போபகே. ஆனால் 80 களின் அரசியல் கள நிலை மீண்டும் இந்திய எதிர்ப்பு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. “அகண்ட பாரத” கோட்பாட்டிலிருந்து இந்தியா வெளியே வந்து விட்டதா என்றால்; இல்லை என்று கூறத் தயங்கத் தேவையில்லை. ஆனால் இந்திய காலனித்துவ அதிகாரத்தை நிறுவுவதாயின் அதனை நேரடியாக கைப்பற்றி மேற்கொள்ளவேண்டும் என்பதில்லை. புதிய உலக ஒழுங்கில் ஆக்கிரமிப்பானது ஆயுதங்களைக் கொண்டு நிறுவது அல்ல. மாறாக பல்வேறு நுட்பமான வழிகள் இன்று வளர்ந்துவிட்டுள்ளன. நவகாலனித்துவ முறையியல் என்பது பொருளாதார, கலாசார, தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறைகளால் வளர்த்தெடுக்கப்ப்பட்டுள்ளது. முதலாளித்துவம், எகாதிபத்தியம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் பட்டை தீட்டப்பட்டு மறுவடிவம் பெற்றுள்ளன. மறு கோட்பாட்டக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஏகாதிபத்தியத்தின் தலைமையாக கருதிவந்த போக்கானது; இன்று அவ்வப்போதைய நலன்கள் சார்ந்து அடிக்கடி மாறி மாறி உருவாகிற அதிகாரத்துவ முகாம்களாக பரிமாற்றம் கண்டிருக்கிறது. அவ்வாறான ஆக்கிரமிப்பு கூட்டு நாடுகள்; அவ்வப்போது சேர்ந்தும், பிரிந்தும், புதிய கூட்டுகளை நிறுவிக் கொண்டும் பலவீனமான நாடுகளை சுரண்டும் உலகமே இன்று எஞ்சியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நிலையான - நிரந்தமான கூட்டுகள் எதுவும் இல்லை. இந்தப் பார்வையில் இருந்தே இந்தியத் தலையீட்டின் பண்பையும் வடிவத்தையும், அளவையும் கணிப்பிட முடியும். 1965 இல் ஆரம்பிக்கப்பட்டஜேவிபி 1968 ஆம் ஆண்டளவில் தமது உறுப்பினர்களை கோட்பாட்டு ரீதியில் வளர்த்தெடுப்பதற்காக ஜே.வி.பி நடாத்திய பிரபலமான 5 வகுப்புகளில் முறையே "பொருளாதார நெருக்கடி", "சுதந்திரம்", "இந்திய விஸ்தரிப்புவாதம்". "இடதுசாரி இயக்கம்". "இலங்கையில் புரட்சிக்கான பாதை" என்பன அடங்கும். இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை தனது நான்காம் படையைப் போல பாவித்து வருகிறது என்கிற கருத்து மேற்படி கருத்தாக்கத்தின் அங்கம் தான். 1970 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் “தேசபக்த மக்களுக்கான அறைகூவல்” என்கிற துண்டு பிரசுரத்திலும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சுதேசிய அடுவருடிகள் ஐக்கிய தேசியக் கட்சியே என்று குறிப்பிட்டது. 71 கிளர்ச்சி பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் முன் விஜெவேற சாட்சியமிளித்த போது எஸ்.நடேசன் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி ஜேவிபி கொண்டிருந்த கருத்துக்களை உறுதி செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஓயாமல் அதற்கு பதிலளித்த விஜேவீர. ஒரு இடத்தில் “இந்திய முதலாளித்துவ வர்த்தகத்தின் நலன்களுக்கு இந்திய வம்சாவளியினர் சாதகமாக இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும் 71 கிளர்ச்சியை அடக்க இந்தியா உலக ஏகாதிபத்தியங்கள் தமக்கு தேவைப்பட்டால் தனி நாடொன்றை பிரித்து கூறுபோடவும் முடியும், தேவைப்பட்டால் பிளவுபட்ட நாடுகளை இணைத்துவிடவும் முடியும் என்பதற்கு உலகில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. பங்களாதேஷ், நேபாள், பூட்டான், பாகிஸ்தான் போன்ற தனது நேரடி எல்லை நாடுகளிலும் இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டு மாற்றிய ஆட்சி மாற்றங்களை நாம் அறிவோம். 1988 இல் மாலைதீவைக் கைப்பற்றுவதற்காக புளொட் இயக்கம் மேற்கொண்ட சதியை இராணுவ உதவி அனுப்பி அதை முறியடித்ததையும் அறிவோம். அதுபோலவே 1971 ஜேவிபி மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் முடியடிக்க இந்தியா சகல உதவிகளையும் செய்தது. அக்கிளர்ச்சியின் போது சிறிமா அரசாங்கம் வெருண்டு போயிருந்தது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் உதவி கோரியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அக்கிளர்ச்சியை நசுக்கியது. 71 ஏப்ரல் கிளர்ச்சி குறித்து வெளிவந்த பல நூல்களில் மிக முக்கியமான நூல் ஜேவிபியினரின் நியமுவா வெளியீடாக 931 பக்கங்களில் வெளிவந்த “71 ஏப்ரல் விசாரணை” என்கிற நூல். அதில் பல உத்தியோகபூர்வ அரச ஆவணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படை தளபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிக்கையும் உள்ளங்டங்கும். அதில் 80களில் இருந்து 1986 ஆம் ஆண்டு விஜேவீர எழுதிய “இனப்பிரசினைக்கோர் தீர்வு” நூலில் கூறப்பட்ட மூலோபாய சூத்திரத்துக்குள் அடக்கக்கூடியதல்ல தற்போதைய ஜேவிபியின் இந்தியா தொடர்பான மறு அவதார அணுகுமுறை. ஆரம்பத்தில் இந்தியா என்பது ஒரு அரசியல், பண்பாட்டு, பொருளாதார ஆக்கிரமிப்பு நாடாக சித்திரித்து வந்த போதும்; மேற்படி நூலிலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா பாதுக்காக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பது புலப்படுகிறது. இலங்கையை பிரித்து ஈழ நாட்டை உருவாக்கி அதை தமிழ் நாட்டுடன் காலப்போக்கில் இணைத்து; பின்னர் அண்டைய திராவிட மாநிலங்களையும் இணைத்துகொண்டு ஈற்றில் “திராவிடஸ்தான்” என்கிற நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் அடிப்படைத் திட்டமென்றும். இந்தியாவைத் துண்டாட முயற்சிக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சதியில் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயலாற்றுவது இரகசியமல்ல என்றும் குறிப்பிடுகிறார். (ப. 173,174) இந்த நூலை விஜேவீர எழுதி ஓராண்டில் இந்திய விமானப்படை அத்துமீறி யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் உணவுப் பொதிகளை விமானங்களின் மூலம் போட்டமை, இந்திய மத்திய அரசின் மிரட்டல்கள், இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம், மாகாண சபைகள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை, அப்படையின் அடாவடித்தனங்கள் எல்லாமே இந்தியா பற்றிய கண்ணோட்டத்தை மீண்டும் மாற்றியது. இந்திய ஆக்கிரமிப்பின் வடிவமே இந்தியாவின் போக்கு; என்கிற முடிவுக்கு வரவேண்டி இருந்தது. மாகாண சபையை ஜேவிபி எதிர்த்தது இரு அடிப்படை காரணங்களால். ஒன்று அது நாட்டை பிரதேசங்களாக துண்டாடி பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால். அடுத்தது இந்தியாவின் அரசியல் தலையீட்டை இலகுவாக்குவதற்கு ஏதுவாக “வடக்கு - கிழக்கு தமிழர் சுயாட்சி” ஆகிவிடும் என்பதால். திருகோணமலை துறைமுகத்தின் மீதான அமெரிக்க ஆர்வத்துக்கு ஜே.ஆர் அரசாங்கம் கொடுத்த பச்சை சமிக்ஞையானது இந்தியா உடனடியாக களமிறங்கத் தூண்டியதன் காரணி என்பதை விஜேவீர அறிவார். அதேவேளை அமெரிக்காவை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிப்பதை விஜேவீர விரும்பாதபோதும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் திருமலை துறைமுகத்தின் மீதான இந்தியா தனது செல்வாக்கை ஏற்படுத்தியதையும் எதிர்த்தார். இலங்கையின் இறையாண்மையின் மீதான அச்சுறுத்தலென்றும் பிரச்சாரம் செய்தார். 87-89 காலப்பகுதியில் இந்திய எதிர்ப்பு வாதம் தலைதூக்கிய போது ஏறத்தாழ பெருவாரி சிங்கள சக்திகள் இந்தியாவை எதிர்த்து ஒன்றிணைந்தார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு சிங்கள அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்தது மட்டுமன்றி அதற்குத் தலைமை தாங்கியது ஜேவிபி யின் முன்னணி அமைப்புகளின் ஒன்றான தேச மீட்பு முன்னணி. எப்போதும் இந்திய அரசுடேன் நட்பைப் பேணி வந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இந்திய எதிர்ப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார். இந்தக் கூட்டணி சற்று பலமாக இருந்ததன் காரணம் அக்கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கிற பொதுக் கூட்டணி என்பதாகும். பத்தாண்டுகளாக ஜே ஆரின் அராஜக அரசாங்கத்தை எதிர்க்க வழி தேடிக்கொண்டிருந்த அச்சக்திகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையை இந்தியாவின் சண்டித்தனமாகவே கருதியது. இலங்கையின் இறையாண்மையை ஜே.ஆர் இந்தியாவுக்கு பலியாக்கிவிட்டார் என்றே குற்றம் சுமத்தியது. அவ்வாறு எதிர்த்த சக்திகள் 1987 க்குப் பின்னர் ஆட்சியிலமர்ந்த எந்த அரசாங்கமும் மாகாண சபை முறையை இரத்து செய்ய துணிந்ததில்லை. மாகாண சபையை தீவிரமாக எதிர்த்த முதன்மை சக்தியான ஜேவிபி கூட இறுதியில் அதனை எதிர்க்க முடியாத இடத்துக்குத் தான் வந்து சேர்ந்தது. உள்ளூர் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சிக்குள்ளிருந்தும் இந்திய எதிர்ப்புவாதம் தலை தூக்கியது. பிரதமர் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்த காமினி திசாநாயக்க, லிலித் அத்துலத் முதலி உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் இந்திய எதிர்ப்புவாத அலையில் ஒன்றுபட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் பிரேமதாச கலந்துகொள்வதை தவிர்த்தார். அந்த அலையின் ஒரு வடிவமாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது ரோஹித்த விஜிதமுனி என்கிற கடற்படை சிப்பாய் ஒருவரால் திடீரெனத் தாக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை பிரேமதாச விடுவித்தார். அரசாங்கத்துக்கும் – விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும் இந்தியாவை பிரிவினைவாதத்துக்கு சாதகமான சக்தியாகவே ஜேவிபி பிரச்சாரம் செய்தது. இவ்வாறான இந்திய எதிர்ப்புவாதத்துக்கு அப்போது தலைமை தாங்கிய சக்தியாக ஜேவிபி இருந்தது. அப்பேற்பட்ட ஜேவிபி யின் மக்கள் செல்வாக்கையோ, அரசியல் வளர்ச்சியையோ இன்றைய இந்தியா சாதகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இருதரப்பு தந்திரோபாய விட்டுக் கொடுப்புகள் எதிர்ப்பரசியலை எங்கே செய்ய வேண்டும், சமரச அரசியலை எங்கே எப்போது, எந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்பதையும் NPP சரியாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதுவே இன்றைய தேவையும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று வல்லரசுகளையும் சமமாக கையாண்டு வருவதில் இருந்து அதன் கவனமான ஆட்சிப் பயணத்தைக் கவனிக்கலாம் மூலாபாயம் தந்திரோபாயம் பற்றிய மாக்சிய தத்துவார்த்த வழிகாட்டலை பிரயோகிப்பது எப்படி என்பதைப் பற்றி ஜேவிபி புதிதாக பாடம் கற்க வேண்டியதில்லை. தென்னாசியாவில் இந்தியா சண்டியர் தான். அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை என்பது தற்காப்பு இராஜதந்திர அணுகுமுறையோடு நின்றுவிடவில்லை. இந்தியாவுக்கென்று அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆக்கிரமிப்பு குணம் இருக்கவே செய்கிறது. அது அரசாங்கங்களின் கொள்கையல்ல. இந்திய அரசின் நிலையான அணுகுமுறையே. இந்தியாவின் அனுசரணையின்றி அயல் நாடுகளில் எந்த ஆட்சியையும் நிறுவப்பட்டுவிடக் கூடாது இருந்து வரும் நாடு இந்தியா. அதேவேளை இந்தியாவின் ‘அகண்ட பாரத’ முனைப்பிலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டது என்கிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடுகையில் பிஜேபி ஆட்சியில் அப்படிப்பட்ட நெகிழ்ச்சி இருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்துடன் இந்துத்துவ முலாமையும் பூசிக்கொண்டு ‘இந்துத்துவ ராமராஜ்ஜிய விஸ்தரிப்பு’க் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது தற்போதைய பிஜேபி என்பதை நாமறிவோம். அந்த வகையில் இந்தியா என்பது தென்னாசிய பிராந்தியத்தில் நவகாலனித்தை பிரயோகிக்கும் நாடு என்பது பரகசியம். ஆனால் அளவு ரீதியில் அதற்கான முனைப்பு அத்தனை வீரியத்துடன் இல்லை என்பது ஒரு தற்காலிக ஆறுதல் எனலாம். எவ்வாறாயினும் “நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல்” கோட்பாட்டின் பிரகாரம் அந்தந்த நாடுகள் தமக்கான பேரம்பேசும் ஆற்றலை வளர்த்து வைத்துக்கொள்வதும், பேணுவதும் அடிப்படியான தகுதிகளே. அந்தவகையில் இலங்கை என்கிற குட்டித்தீவின் பேரம் பேசும் ஆற்றலில் முதன்மையாக அதன் அமைவிடம் தகுதி பெறுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் பிரதானமாக அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடுகளும், ராஜதந்திர ஈடுபாடுகளும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். மற்ற காரணிகள் எல்லாம் அதற்கடுத்ததே. இன்றைய இந்திய எதிர்ப்பாளர்கள் இந்திய எதிர்ப்பை இன்றும் பேணி வரும் தரப்பு சிங்களப் பேரினவாதத் தரப்பே. ஆனால் புதிய அரசியல் நிலைமைகளின் கீழ் பலர் சற்று அடங்கி இருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்தர்களை தூண்டக் கூடிய நிகழ்வுகளுக்காக தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தரப்பு அது. குறிப்பாக மாகாண சபை முறைமையை கலைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளும் இதில் அடங்கும். இந்தியாவின் இராஜதந்திர வலைக்குள் NPP அரசாங்கம் சிக்கிவிட்டது என்கிற விமர்சனத்தையே அவர்கள் முன் வைக்கின்றனர். இந்தியாவுடனான NPP யின் ‘நட்பு கொள்ளும் அணுகுமுறை’ நடைமுறை அரசியலில் தவிர்க்க முடியாதது. எதில் பிடிவாதமாக இருக்கவேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது நீண்டகால தேவைகளை மாத்திரம் கொண்டிருக்காது மாறாக சமகால நடைமுறை தேவைகளும் தான் வகிபாகம் செலுத்தும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஒப்பந்தங்களில் ஜேவிபி எதிர்த்து வந்த எட்கா ஒப்பந்தமும் கூட அந்த 34 ஒப்பந்தங்களில் அடங்கும். 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நிர்பந்திப்பது என்பது இந்தியாவின் மானப் பிரச்சினையாகவும் தொடர்கிறது. அதற்காக இந்தியா தனது பிரதமர் ஒருவரை காவு கொடுத்திருக்கிறது. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோரை இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தி இலங்கையில் தாக்கப்பட்டதை இலங்கைப் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருமிதமாகக் கருதி வருகிறார்கள். இத்தனைக்கும் பிறகும் மாகாண சபை தோல்வியுற்ற தீர்வாக தொடர்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மோடியின் பேச்சில் 13வது திருத்தச் சட்டம் பற்றி அழுத்தங்களையும் கவனிக்கலாம். அதை விட அதிகமாக 87-89 காலப்பகுதியில் ஜேவிபி ஆயிரக்கணக்கான அதிகமான தமது தோழர்களையும் இதே காரணத்துக்காக விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பதையும் எளிமையாக கடக்க முடியாது. அரசியல் களத்தின் இன்றைய வடிவம் மாறியிருக்கிறது. ஜேவிபி யைப் போல NPPயானது இடதுசாரித் தனத்தில் தீவிரம் பேணும் இயக்கமல்ல. மாறாக சற்று தாராளவாத சக்திகளையும் இணைத்து கொள்கை நெகிழ்ச்சிப் போக்கைக் கொண்ட, இலங்கையின் இறைமையில் உறுதிகொண்ட; இலங்கைக்கான புதிய ஒழுங்கை வேண்டி நிற்கிற இயக்கமே NPP. அந்த வகையில் NPP என்பது ஜேவிபியின் கொள்கைகளில் இருந்து ஓரளவு விட்டுக்கொடுப்பையும் சமரசத்தையும் செய்து கொண்ட வடிவம் என்றால் அது மிகையில்லை. இந்த விட்டுக்கொடுப்புகள் ஜேவிபியின் மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையின்பாற் பட்டது என்று கூறமுடியும். அதே வேளை NPPயில் இருந்து கற்றுக்கொள்கிற நடைமுறைப் பாடங்கள் எதிர்கால ஜேவிபியின் மூலோபாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். மூலோபாய – தந்திரோபாய மாற்றம்? இந்தியா மீது ஜேவிபிக்கு இருந்த பார்வை மாறியிருப்பது போல நிச்சயமாக ஜேவிபிக்கு இந்தியா மீதிருந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதற்கான தேவை ஒருபுறம். அதைவிட இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கையின் அமைவிடம் முக்கியமானது. தென்னாசிய நாடுகளுக்கு வெளியில் உள்ள நாடுகள் இலங்கையை கையாளக்கூடிய சாத்தியங்கள்; இலங்கையின் தேவைகளில் இருந்தே வழிதிறக்க இயலும். அப்படியாயின் இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையானது இந்திய உபகண்டத்தின் இருப்பில் தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒன்று. அதன் நீட்சியாகவே ஒருவகையில் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணனாக தன்னை பேணிக்கொள்வதிலும், அதனை அனைவருக்கும் நினைவுறுத்துவதிலும் இந்தியா தீவிர வகிபாகத்தை செய்தாக வேண்டும். இதுவரை இலங்கையில் புதிதாக எவர் ஆட்சியேறினாலும் அவர்களின் முதல் ராஜதந்திர விஜயம் இந்தியாவுக்கானதாக அமைந்திருக்கிறது. அரச தலைவரின் முதல் விஜயம் இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு மரபாகவே பேணி வருகிறது. அது ஒரு புதிய அரச தலைவரை கௌரவிக்கும் நிகழ்வாக மாத்திரமன்றி, இந்தியாவின் ஆசீர்வாத சடங்காகவும், நல்லெண்ண சமிக்ஞைக்கான உடன்பாடுகளையும் கூடவே செய்துகொண்டு வழியனுப்பி வைப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளது. மூலோபாயம் இல்லாத தந்திரோபாயம் என்பது காலப்போக்கில் தந்திரோபாயத்தையே மூலோபாயமாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கிவிடும். அதுவே ஈற்றில் சந்தர்ப்பவாத தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து உண்டு. https://www.namathumalayagam.com/2025/01/IndiaJVP.html?fbclid=IwY2xjawHqGFBleHRuA2FlbQIxMAABHX_kvwXz0XKMdwSV0X3XW-OUQSzT9myus9Qxp5Cdf1DBZdpyYwQjd3AjKw_aem_J8cQSJecUIErUKzDFab0Bg
  6. ருடோ, லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் பதவியில் இருந்தும் விலக விரும்புவதாகவும் தெரிவுத்துள்ளார். கனடிய பாராளுமன்றத்தினை மார்ச் வரைக்கும் ஒத்தி வைத்துள்ளனர் (propagated). கனடாவின் மிகவும் தோற்றுப்போன ஒரு பிரதமர்களில் ஒருவராக வரலாறு இவரை பதிவு செய்யும்.
  7. எதுக்கும் சீனர்கள் சைட் டிஷ்ஷாக இதனை உண்கின்றனரா என அறியவும். அவர்கள் உண்பார்களாயின், பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு வரும்.
  8. ரொம்ப கஷ்டத்தில் இருக்கின்ற திருடர் போல இருக்கு.. பாவம். ருடோ விடம் உதவி கேட்டால், தன் அமைச்சரைவையில் கூட இடம் கொடுப்பார் இந்த பாவப்பட்ட திருடருக்கு.
  9. நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத் தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட காணொளி நீக்கப்பட்டது.
  10. ஈழத்தமிழர்களும் புலிகளும், அவர்களுக்கு முன் அரசியல் செய்த தமிழ் கட்சிகளும் ஒரு போதும் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்தவில்லை. ஈழத்தமிழினம் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாக, சுயநிர்ணய உரிமை உள்ள இனமாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கு. அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் தற்கொலையை மீண்டும் செய்யவும் விரும்பவில்லை. சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று சிங்களத்துக்கு சாமரம் வீசுகின்றீர்கள்.
  11. இந்த புற்றை வளர்த்தவர்களில் ஒரு பிரிவினர் தான் இவர் சார்ந்த ஜேவிபி யினர். சாத்தான் தேவை ஏற்படின் வேதமும் ஓதும். இப்போ அதைத் தான் இவர்கள் செய்கின்றனர்.
  12. உங்கள் தலையில் உள்ள நீண்ட, கடும் கறுப்பு நிற முடியின் ரகசியம் இது தானா அண்ணா?😄
  13. பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் பாவம் செய்தால் சித்திரகுப்தனால் எண்ணேய் சட்டியில் வைத்து வறுக்கப்படுவீர்கள் அம்மா சத்தியம் செய்து பொய் சொன்னால், அம்மா இறந்து விடுவார் சரஸ்வதி பூசை செய்தால் படிப்பு நல்லா வரும் சோதனைக்கு முன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி கொளுத்தினால் சோதனை பாஸ் செய்யலாம் வலம்புரிச் சங்கை காதில் வைத்து கேட்டால் அதன் மூச்சு சத்தம் எப்பவும் கேட்கும் இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?
  14. மேற்கத்தையர்களிடம் இருக்கும் பொதுவான ஒரு நல்ல அம்சம், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எவ்வளவு இனவாதியாக, வலது சாரியாக, இடது சாரியாக, நடு சாரியாக, பட்டுச் சாறியாக இருந்தாலும், திறமை இருந்தால், அவர்களை ஓரளவுக்கு ஏனும் மதித்து, வாய்ப்புகள் கொடுப்பர். இந்த அம்சம் கொஞ்சம் கூட இல்லாதவர்களாக நான் கண்டது இந்தியர்களிடம் மட்டும் தான்.
  15. வருத்தம் என்று குடும்ப வைத்தியரிடம் போனால் (தமிழ் மருத்துவர், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்). டொக்டர்: "Flue shot ஷொட் எடுத்ததோ" நான்: "இல்லை டொக்டர்...நான் ஒரு நாளும் எடுப்பதில்லை" டொக்டர்: "உமக்கு 50 வயசாச்சு என்று நினைவில்லையோ.. இந்த பழைய வீரம் எல்லாம் இனி இல்லை... அதுவும் உமக்கு இந்த வருடம் நிமோனியா வந்து போனது... இனி இப்படி எடுக்காட்டி அடிக்கடி அதுவும் வரும். இனிமேல் அது எடுக்காமல் இந்தப் பக்கம் வரக் கூடாது" என்று மனிசன் பேசிப் போட்டுது.
  16. முதல் நாளே அரங்கம் சென்று பார்க்க இருந்த திட்டம் போட்டு இருந்தோம், ஆனால் முடியவில்லை. இந்த வெள்ளி பார்க்க செல்வதாக உள்ளேன். என் குடும்பத்தில் வெற்றிமாறனின் ரசிகர் இருவர் உள்ளோம். ஒன்று நான், அடுத்தது என் மகள். நாம் இருவரும் இது வரைக்கும் அசுரனை மூன்று முறையும், விடுதலை பாகம் 1 இனை இரண்டு தரமும், ஆடுகளத்தை பலதடவையும் பார்த்துள்ளோம். கந்தப்பு மாதிரி, பொல்லாதவனை மட்டும் திரையரங்கம் சென்று பார்க்கவில்லை. மிச்ச எல்லாவற்றையும் அரங்கம் சென்றே பார்த்து இருக்கின்றேன். வெற்றிமாறனின் படங்களில் மிகப் பிடித்தது, வட சென்னை.
  17. டாக்டர், 50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?
  18. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்!
  19. தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.
  20. என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! பிறந்தவுடன் தூக்கிய நேர்ஸ் இனைப் பார்த்து கண்ணடித்தது நேற்று நடந்தது போல் இருக்கின்றது. அதற்குள் 50 வருடம் ஓடிப்போய் விட்டது!
  21. 1946 இல் கொண்டு வரப்பட்ட Canadian Citizenship Act மூலம் இது நிகழ்கிறது. இது அரசியலமைப்பின் படியா என தெரியவில்லை.
  22. கனடாவில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கனடாவின் பிரஜை தான் - சில விதிவிலக்குகள் மட்டுமே. விதி விலக்குகள் 1. பெற்றோர்கள் இன்னொரு நாட்டின் இராஜதந்திரிகளாக, பிரதிநிதிகளாக அல்லது இன்னொரு நாட்டின் அரசாங்கத்தில் உள்ளவராக இருக்க கூடாது 2. பெற்றோர்கள் ஐக்கிய நாட்டு சபையின் அமைப்புகளின் கீழ் வேலை செய்கின்ற இராஜதந்திரியாக இருக்க கூடாது
  23. இப்படி பெரும் உலகத் தலைவர்களே பிள்ளை என்று வரும் போது, அநியாயமாக குத்துக்கரணம் அடிக்கும் போது, எங்களுக்கு இருந்த தலைவனோ, தன்ர பிள்ளைகளையும் சண்டை செய்து சாகவிட்டு, தானும் செத்துப் போனார். பிழைக்கவே தெரியாத மனுசனகாகவே இறந்து போனார்.
  24. நானும் இதில் என்னையும் இணைத்துக் கொள்கின்றேன். இந்த விசைப்பலகை வீரம் கூட தேத்தண்ணியில் ஊறிய மலிபன் பிஸ்கட் போல கொஞ்சம் கொஞ்சமாக நமுத்துப் போய்க் கொண்டு இருக்கு இப்ப.
  25. இப்படியான உடனடி தீர்வுகள் கிடைக்க வேண்டிய விடயங்களில் தமிழ் எம்பி மார்களில் எவராவது ஈடுபடுகின்றார்களா? அல்லது காலத்தை கடத்தும் வழக்கமான செயற்பாடுகளில் தான் ஈடுபடப் போகின்றார்களா? நிறைய உழைப்பையும், பணத்தையும் கொட்டி பயிர்செய்கையில் ஈடுபட்ட இவ் விவசாயிகளின் இழப்பு மிக வலி மிகுந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.