Everything posted by நிழலி
-
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
இது சாஸ்திரம் அல்ல என்பதால், பல ஆயிரம் பேரின் தரவுகளின் அடிப்படையில் கணிக்கின்றது என்பதால், அவர் இதை ஒருக்கால் முயன்று பார்த்தாராம். அப்படி முயன்று பார்க்கும் போது, உனக்கு சாவு இல்லை, அஸ்வத்தாமன் மாதிரி அலைந்து திரிவாய் என்று சொல்லிச்சாம் (இடையிடையே தமிழ் கட்சிகளுக்கு நெப்பல் பேச்சு பேசிக் கொண்டு..)😀
-
எக்காலத்திலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது - செல்வம்
இக் கோரிக்கையை விடுவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றது செல்வம். இந்த ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதற்காக இந்திய கொலைகார இயந்திரத்துடன் இணைந்து, நீங்கள் இன்று தலைவராக இருக்கும் டெலோ, எத்தனை நூறு தமிழ் மக்களை கொன்று குவித்து, அயன் பொக்ஸால் சூடு போட்டு தமிழ் இளைஞர்களை கொன்று வீதியில் வீசி, தமிழ் பெண்களை இந்திய படையினருக்கு காட்டிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்து, தமிழ் மாணவர்களை இரவோடு இரவாக கடத்தி கொன்று அடுத்த நாள் காலையில் வீதியில் போட்டு அளப்பரிய பங்கு ஆற்றியது. இப்படியெல்லாம தியாகம் செய்து காப்பாற்றிய இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறுத்த முயல்வது எவ்வளவு துரோகம்! அப்படியே உங்களை விட இவற்றில் அதிகம் ஈடுபட்டு மக்கள் சேவை செய்த சுரேஸ் பிரேதசந்திரனையும் துணைக்கு அழைத்து கோரிக்கை வைக்கவும்.
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
மகள் தகப்பனை விட 16 அடி பாய்ந்துள்ளார்
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
தன் மீது பயணத்தடை உள்ளது என தெரியாமலா இவர் இலங்கை சென்றார்? பயணத்தடை இருக்கும் ஒரு நாட்டுக்கு செல்லும் போது அந் நாட்டின் குடிவரவுப் பிரிவால் கைதாகுவார் என்பது தெரியாமல் சென்று இருக்கின்றார் போலும். System மே உடனடியாக காட்டிக் கொடுத்து விடும். 2009 இல் மகிந்த அரசு நூற்றுக்கணக்கானவர்களை இவ்வாறு பட்டியலிட்டது. பின் மைத்திரி அரசு அதில் பலரது பெயர்களை நீக்கியது. ஆனாலும் சிலரது பெயர்கள் தொடர்ந்து அந்தப் பட்டியலில் உள்ளது. என் இரு நெருங்கிய உறவுகளின் பெயர்கள் அப் பட்டியலில் இன்னும் உள்ளன.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு பாராட்டுகள். வாலி தான் முதல் இடத்திற்கு வருவார் என நினைத்திருந்தேன். அவரின் பல அரசியல் ரீதியிலான கணிப்புகள் பின்னர் நிகழ்வதை அவதானித்துள்ளேன். கிருபனை விட அதிக புள்ளிகள் நான் பெற்றதை கண்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது எனக்கு. போட்டியினை திறம்பட நடாத்திய கந்தப்பிற்கு பாராட்டுகள். மனுசனுக்கு நல்ல பொறுமையும் இருக்கு.
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
சீமானுக்குத் தானே?
-
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி!
இப்படியே உணர்ச்சி மிகு கட்டுரைகளை எழுதிக் கொண்டு தாமும் இன்பமடைந்து மக்களில் ஒரு சிறு பிரிவினரை ஏமாற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான். மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது தம் பிள்ளைகளை, சகோதரங்களை, நண்பர்களை, அவர் தம் தியாகங்களை மதிப்பதனால். அடுத்த வருடமும், இன்னும் பத்து வருடங்களின் பின்னும் மக்கள் இவ்வாறு அஞ்சலிப்பர். அதே நேரம் தமிழ் கட்சிகள், காத்திரமான முறையில் அரசியல் செய்யாது விடின், வடக்கில் இருந்து ஒரு சிங்களவரைக் கூட இதே தமிழ் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்ற த்திற்கோ மாகாணசபை க்கு அனுப்பி வைப்பர்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இன்னும் நிறைய நடக்கவுள்ளன. மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள அங்கு மிகவும் வரவேற்கின்றனர். வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
உண்மையான் பையன். மிகச் சரியாக சொல்கின்றீர்கள்.
-
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு!
இன்னொரு வாய்ச்சொல் வீரர். மனோ தோற்பார் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் தோற்றதால் எனக்கு கவலையுமில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
*Total Tamil Representatives (Without National List)* Badulla - 2 Matara - 1 Jaffna - 6 Batticaloa - 4 Nuwaraeliya - 4 Trincomalee - 2 Ratnapura - 1 Vanni - 4 Gampaha - 1 Digamadulla - 1 *Total - 26*
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
5 வருடங்களுக்கு இந்த அரைவேக்காட்டின் கூத்துகளை பாக்க வேண்டி வரப் போகின்றதே...!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம், ஆனால் தேசியக் கட்சி ஒன்று பல தொகுதிகளில் வெல்வது என்பதும் ஒன்றுக்கு மேற்பட்ட பா.உ.க்களை பெறுவது என்பதும் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிக்கத் தொடங்கி விட்டனர் என்பதன் ஆணித்தரமான அடையாளம். எனவே தான் ஆளும் தரப்புக்கு வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1. யாழில் அனுரவுக்கு வாக்களித்தவர்களை விட, ஏனையவர்களுக்கு வாக்களித்தவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனா பிரிந்து நின்றமையால் ஒரு குறிப்பிட்ட தமிழ் கட்சியில் இருந்து தெரிவானவர்கள் குறைவு. 2. இந்த ஆறு தூண்களிற்காகத்தான் 2009 இல் இருந்து தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளை அள்ளிச் சென்றவர்களால் நடைமுறையில் செய்த விடயங்கள் எவை? 3. இந்த 6 உடன், பொருளாதார முன்னேற்றம், கல்வி நிலை மேம்படுதல், தொழில் வாய்ப்புகள், இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிலங்கள் மீண்டும் மக்களுக்கும் விவசாயத்துக்கும் வழங்குதல், வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தை குறைத்தல், போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்தல், வீதி + வாய்க்கால்கள் செப்பனிடுதல், மழை வெள்ளத்தை தடுத்தல் என்றும் இன்னபிற சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் 2009 இன் வந்த எந்த கட்சியினர் கவனத்திலாவது எடுத்தனர்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முதல் 5 உம் கிடைக்கப் போவதோ நிகழப் போவதோ இல்லை. 6 ஆவது நிகழும் சாத்தியம் மிக குறைவு என நினைக்கிறேன் இது எனக்கு மட்டுமல்ல, வாக்களித்த மக்களுக்கும் தெரியும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு வெறுமனே Youtubers தான் காரணம் என்று சொல்வது உண்மையான காரணங்களை மலினப்படுத்தி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற செயல். இதே யாழில் பெப்ரவரியில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளை நிராகரித்து சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி செல்லப் போகின்றனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளேன். காரணம் தமிழ் தேசிய கட்சிகளின் போலி வேசமும் அவர்களை இயக்கும் சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளும். அத்துடன் இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தமிழ் மக்கள் இம்மி அளவேனும் முன்னேறும் எந்த வழிமுறையையும் இவர்கள் செய்யவில்லை. கோசான் யாழ் சென்ற வந்த பின் இவ் வருட தொடக்கத்தில் எழுதிய பயணக்கட்டுரையிலும் ஜேவிபி இற்கான ஆதரவு அங்கு பெருகின்றது என குறிப்பிட்டு இருந்தார். இனி என்ன, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியால் தமிழ் மக்களுக்கு நாசம் விளைய வேண்டும் என்று திட்டிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டியது தான். ஏனெனில் அவ்வாறு செய்தால் தான் அதன் விளைவாக தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியம் நோக்கி நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்.... ஆனால் அவ்வாறு நிகழாமல் தமிழ் சனம் எதை எதிர்பார்த்து வாக்களித்தனரோ அவை இனியாவது நிறைவேறட்டும் என உளமாற விரும்புகின்றேன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885 யாழ் மாவட்டம்: 583,752 வன்னி மாவட்டம்: 300,675 மட்டக்களப்பு மாவட்டம்: 438,264 திருகோணமலை (நகரம் மட்டும்): 102,298 மொத்தம்: 1,424,989 From Election site
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஊரில் இருப்பவர்கள் மாதிரி சிந்தித்து பார்த்தேன். என் கணிப்பு பிழையானால் கணிப்பிடுதலில் இன்னும் பயிற்சி தேவை என்று எஸ்கேப் ஆகிவிடுவேன் 😀
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
கிடைக்கும் என நம்பினீர்களா? அவர்களில் பலருக்கு கட்டுக்காசும் கிடைக்காது.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
பிரியன் அண்ணா, 'அச்சச்சோ என்று'' " நான் சொன்னது ஒரு சிரிப்புக்காக. நான் தவறுதலாக தமிழரசுக் கட்சிக்கு வாக்கு போடவில்லை. எனக்கு இருந்த தெரிவு இரண்டு தான் (வாக்களிக்காமல் விடுவதை தவிர்த்து.. ஆனால் யாழில் இடம்பெறும் ஒன்றை நானே விலத்தி செல்ல விரும்பவில்லை). ஒன்று, அனுரவுக்கு அடுத்தது தமிழ் கட்சிக்கு. அனுர கட்சியின் இனவாத செயற்பாடுகளின் நினைவுகளும், அவர்கள் ஒரு போதும் மாற மாட்டார்கள் என்ற எண்ணமும் இருப்பதால், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தேன்.
-
மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
இதைத் தான் இங்கு மேற்குலகில் Dementia என அழைக்கின்றனர் என நம்புகின்றேன். எம்மவரை விட மேற்குலத்தினர் முக்கியமாக வெள்ளை இனத்தவர்களிடம் இந்த dementia அதிகமாக உள்ளதை அவதானித்துள்ளேன். இவர்கள் உறைப்பே சாப்பிடாதவர்கள். அவர்களுக்கு எப்படி வருகின்றது இது? @Justin இது பற்றி உங்கள கருத்து?
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் நினைக்கிறேன் நீங்கள் ரஞ்சனதும் ஹிருணிக்காவினதும் leak ஆன அந்த தொலைபேசி உரையாடலை கேட்ட பின் தான் அவரை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள் என..,😜
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
கோசானும் வாக்களித்து இருக்கின்றார்... என் கைத்தொலை பேசியில் chrome இல் இதை காட்டுது இல்லை. மிச்ச 8 பேரும் வாக்களிக்காமல், முடிவுகளை பார்த்தவர்கள் போலும்...