Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. அதே சிங்கள பாராளுமன்றம் போய், சிங்கள அரசியல்வாதிகளிடம் "நான் இந்தியாவுக்கு போகும் போது சுமந்திரன் என்னை நுள்ளிப் போட்டார்" என்று முறையிடுவார்.
  2. கனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன். நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன். கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!
  3. சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்….. அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி அதிர்வுகள், உணர்வுகள் மூலம் கேக்குதோ அப்பிடித் தான் எங்கடை சனத்துக்கும் சத்தம் இல்லாமலே எல்லாம் கேக்கும். “சின்னவா ஆறு மணி ஆகீட்டு”எண்டு அம்மா கூப்பிட்டா அது அரை மைலுக்க எங்க இருந்தாலும் கேக்கும், இல்லாட்டியும் கேக்கிறமாதிரி இருக்கும். கேட்ட உடனயே அடுத்து வரி “சாமி கும்பிடோணும் விளையாடினது காணும்” எண்டு சொல்லேக்க கிணத்தடீல நிப்பம். விடிய நாலரை, ஐஞ்சு எண்டு நேரம் மாறமல் அடிக்கிற கோயில் மணி அவையவையின்டை தேவைக்கு ஏத்த மாதிரி எழுப்பி விடும். காலமைக் கோயில்களின்டை மணியடிக்கிற ஐயர் என்னெண்டு தான் ஆரும் எழுப்பாமல் மணிக்கூடும் இல்லாமல் விடிய எழும்பிறாரோ எண்டு யோசிக்க வைக்கும். ஊரில இருந்து கொஞ்சந் தள்ளி ஏதோ ஒரு கோயில் “விநாயகனைக் கூப்பிட்டு வெவ்வினையை வேரோட அறுக்கிற” சீர்காழீன்டை பாட்டு அறைக்குள்ள இறுக்கி மூடிக்கொண்டு படுத்தாலும் இதமா எழுப்பிவிடும். இந்த இடைவெளீக்க பக்கத்து வீட்டை கரப்பைக்கால கலைச்சு விடகொக்கரிக்கிற அடைக்கோழீன்டை சத்தம், பாலுக்கு அவிட்டு விடாம தானே முழுப் பாலையும் கறக்கிற வேலுச்சாமியோட சண்டைக்குப் போற கண்டுக்குட்டி கத்திற சத்தம், வேப்பம் பழம் சாப்பிட்டு தொண்டை கட்டிக் கீச்சிடிற கிளீன்டை சத்தம், தண்ணி தெளிக்காம முத்தத்தைக் கூட்டேக்க புழுதி மணத்தோட வாற சத்தம், எண்ணை விடாத கப்பீல மாசிலாமணியார் தண்ணி இழுத்துக் குளிக்கிற சத்தம் எல்லாம் snooze பண்ணின alarm மாதிரித் தொடந்து எழுப்பிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் கேக்காமல் படுத்தாலும் அம்மாவின்டை குரல் எப்பிடியும் எழுப்பி விட்டிடும். விடிஞ்சு கொஞ்சம் வெளிக்கத் தொடங்கப் பக்கத்து ஒழுங்கேக்க “டிங் டிங்”எண்டு சைக்கிள் மணி அடிக்கிற பால்க்காரனுக்கு இங்க செம்பு கழுவி ரெடியாகி, அந்த இடைவெளீக்க குப்பைக் காரனின்டை டிரக்டர் சத்தத்துக்கு குப்பை வாளியை ஒழுங்கை முடக்கில வைச்சிட்டு , அவன் குப்பையை மட்டும் தான் எடுத்துக் கொண்டு போறான் எண்டதைக் confirm பண்ணீட்டு இருக்க ஐஞ்சு மணிக்கு வந்திருக்க வேண்டிய வாற மெயில் ரெயின் பிந்தி அரசடி ரோட்டை தாண்டிப் போறது கேக்கும். கொஞ்சம் கொஞ்சமாப் பள்ளிக்கூடக் கெடுபிடிச் சத்தமெல்லாம் எட்டு மணிக்கு அடங்க ஒவ்வொரு மீன்காரனா horn அடிக்க எங்கடை மீன்காரன் அடிக்கிறது பிறிம்பாக் கேக்கும். எத்தினை சைக்கிள் போனாலும் தபால்க்காரன்டை சைக்கிள் மணி தனியாத் தெரியும், அதுகும் அம்மம்மாவுக்கு பென்சன் வாற நாளில இன்னும் பிலத்தாக் கேக்கும். அப்பப்ப புளியும், ராசவள்ளிக்கிழங்கும், சின்ன வெங்காயமும் கொண்டந்து ரோட்டில கூவி விக்கிற சித்திரம், வருசத்துக்கு ரெண்டு தரம் மூண்டு தரம் எண்டு சுத்தித் திரியிற கூட்டத்தில கத்தி சாணை, அம்மி பொழியிறவன், பழைய போத்தில், பேப்பர் வாங்கிறவன், எப்பாவது சீவப் போகாமல் தேங்காய் புடுங்க, ஓலை வெட்டிறதுக்கு வாறவன் எண்டு கத்திக்கொண்டு எவன் ஒழுங்கையால போனாலும் வீட்டுக்குள்ள எங்க இருந்தாலும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மத்தியானம் வேலை முடிஞ்சு அம்மா அயர்ந்திருக்க முன்வீட்டில பக்கத்துப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறவை படலை துறக்க வாற சத்தம் கேட்டு அம்மா எழும்பி வாற எங்களுக்கு முட்டை பொரிப்பா ஒரு நேரக்கணிப்போட. எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டிட்டு திருப்பிப் படுக்க காத்துக்கு கூரையில மாங்கொப்பு முட்டிற சத்தம் கேட்டா அடுத்த நாள் குருவிச்சையும் கொப்பும் வெட்ட ஆளைக் கூப்பிட்டிட்டுவா. கொஞ்சம் அயரேக்க வெத்திலைக்கு சுண்ணாம்பு, இண்டையான் பேப்பர், இந்தக் கதைப்புத்தகம் இருக்கா, விளயாட வாறியா எண்டு கேட்டு அரட்டைக்கு வந்து படலைக்க நிண்டு கூப்பிடறவின்டை சத்தம், மற்றாக்களின்டை நித்திரையைக் குழப்பாமல் தேவையான ஆளை மட்டும் எழுப்பும். அக்கம் பக்கம் நடக்கிற சண்டை அப்பப்ப காத்தோட கேக்கும். ஒரு வீட்டுச் சண்டை மற்ற வீட்டை தெளிவாக் கேக்காட்டியும் சண்டை பிடிச்ச ஆக்கள், நடந்த நேரம், அப்பப்ப காத்தில வந்து போன அவளின்டை, அவன்டை பேருகளை வைச்சும், போனமுறை வந்த சண்டையை வைச்சும் என்ன பிரச்சினையாம் எண்டு வெத்திலை வாங்க வந்த gapஇல அலசிப் பிடிச்சிடுவினம். கலாஜோதி கலையரங்கத்தில நடக்கிற பட்டிமன்றத்தையும், அரசியல் நிகழ்வுகளையும் வீட்டை இருந்தே கேட்டு தீர்ப்புச் சொல்லிறாக்களும் இருந்தவை . அதே போல கோயில்த் திருவிழாக் காலத்தில எல்லாரும் ஒண்டா அந்தரப்பட்டுப் போகத் தேவேல்லை. ஆய்த்த மணி கேட்டு அம்மம்மா போக, அபிசேக மணிக்கு அம்மாவும் தம்பியும் போக, கொடி மரப் பூசை மணிக்கு நாங்கள் வெளிக்கிட்டு சரி இனி வசந்தமண்டபப் பூசை சாமி தூக்கச் சரியா இருக்கும் எண்டு கணிச்சுப் போறனாங்கள். இரவில தூரத்தில வாற ஐஷ்கிறீம் வானின்டை பாட்டும், மணத்தோட வாற கரம் சுண்டல் வண்டிலின்டை மணியும் main road ஆல போகும். சத்தத்தை வைச்சு தூர நேரம் பாத்து சரியா ஒழுங்கை முடக்குக்குப் போவம் நாங்கள். இரவு படுத்தாப் பிறகு முகட்டில தலைகீழா நிண்ட படி திண்ட பூச்சி சமிக்காம பல்லி உச்சுக்கொட்ட , கதவில மூண்டு தரம் தட்டீட்டு அப்ப தான் நெச்சதுக்கு தடையில்லை, நாளைக்கு போட்டு வரலாம் எண்டிற மாமா, உழுந்து மணம் மணக்குது பாம்புக் கொட்டாவியா இருக்கும் பாத்துப் பின்பக்கம் போ கண்டு பிடிச்சு சொல்லிற ஆச்சி, படுத்தாப் பிறகு நித்திரையில இரவில குசினீக்க வந்தது ஆர் வீட்டுப் பூனை, நேற்றை முழுக்க குலைச்சது எந்த வீட்டு நாய், ரோட்டில குலைக்கிற நாய் பழக்கமான ஆளுக்கு குலைக்குதா இல்லாட்டி ஆமிக்கோ குலைக்குதா, கிறீச் கிறீச் எண்டு இரவு late ஆ ஓடிற சைக்கிள் ஆர்டை, சாமத்தில வேலிக்கு வேலி தட்டித் தடவிப் பாட்டோட போனது அமரசிங்கமா, தளையசிங்கமா எண்டு துப்பறிஞ்சு சொல்லிற அம்மம்மா எண்டு எல்லாருக்கும் ஐம்புலனிலும் செவிப்புலன் அதிகமா வேலை செய்யும். எண்பதுகளின் நடுப்பகுதி, இரவில திரியிறது கள்ளனா குள்ளனா எண்டு சனம் பயந்திருந்த காலம் அப்ப. “ஐயோ கள்ளன்” எண்டு தூர எங்கயாவது கேட்டா தகரம் தட்டி, தடி எடுத்து, கோயில் மணி அடிச்சு, ஊரே கள்ளனைத் தேடி, ஓடிறான் எண்டு பின்னால ஓடிப் பிடிக்கப் போய் களைச்சு வாறவைக்குப் பிளேன்ரீ குடுத்து போன கள்ளன் திருப்பி வாறானா எண்டு விடியவிடியப் படுக்ககாமலே பாத்திட்டு அப்பிடியே பள்ளிக்கூடம் போறனாங்கள். இதுக்கு எல்லாம் மேலால என்டை மனிசி புலுமைச் சிலந்தி expert , “ இங்கயப்பா சிலந்தி சத்தம் போடுது” எண்டு என்னை அடிக்கடி எழுப்பிறது பயத்திலயா இல்லை அது உண்மையா சத்தம் போடிறது கேக்கிறதா எண்டு தெரியாது. எங்கடை சனம் இதில expert ஆகித் தான் பிறகு கோட்டைக்க செல் குத்திக் கேக்கிற சத்தத்தில alert ஆகி சைரன் போட்டுச் சனத்தைக் காப்பாத்தினவை . பொம்மர் சுத்த வாற சத்தத்துக்கு எந்தக் campக்கு அடி விழும் எண்டு தெரியும் , அதுகும் இந்தா குத்திறான், இந்தா போட்டிட்டான் எண்டு கண்டுபிடிச்சு வெடிக்கமுதலே பங்கருக்க போய் safeஆ இருந்து , சரியா நேரம் பாத்து அவன் போகவிட்டு எழும்பி வாறனாங்கள். அம்மாமார், எத்தினைமணிக்கு எவ்வளவு தூரத்திலேம் துவக்குச் சூடு கேட்டால் ரெண்டாவது சூட்டுக்கே எழும்பி இருந்துடுவினம். இப்பிடி கதைக்கிறதைக் கேட்டு, குண்டுச் சத்தத்தைக் கேட்டு , வாகனச் சத்தத்தைக் கேட்டு , பிள்ளை பிடிக்கவாறவனோட சத்தம் போட்டு சண்டை பிடிச்சு எண்டு சண்டைக்கால தப்பினது சத்தத்தால தான். சத்தத்துக்குள்ள சத்தமா வாழ்ந்திட்டு இப்ப என்னெண்டா வீட்டுக்குள்ளயே கூப்பிடிற சத்தம் கேக்காம, calling bell அடிக்கிறது உணராம, மழை பெய்யிறது தெரியாம, இருட்டினதும் விடிஞ்சதும் அறியாம சத்தமே இல்லாமல் இருக்கிறம். அக்கம் பக்கத்தில வீட்டிலயோ இல்லாட்டி ரோட்டிலயோ ஏதாவது சத்தம் கேட்டா இங்க light off பண்ணிப் போட்டுப் படுத்திடுறம். அது பயமா இல்லை சுய நலமா எண்டு தெரியேல்லை. இந்தச் சத்தம் இல்லாத தனிமை நெச்சும் பாக்கேலாத கொடுமை. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  4. நீங்கள் பதிந்ததை எம்மால் தேடி எடுக்க முடியவில்லை. உங்களாலும் முடியவில்லை. விடயம் அவ்வளவு தான். எழுதும் போது உங்களால் அதை நிரூபிக்க முடியும் என நினைத்து இருப்பீர்கள். இப்ப, அப்படி செய்வது சாத்தியமில்லை என தெரிந்து விட்டது. இப்படி எனக்கு உட்பட பலருக்கு யாழிலும், யாழுக்கு வெளியே எம் நாளாந்த வாழ்விலும் எத்தனை தரம் நிகழ்ந்து இருக்கும். உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். நன்றி
  5. ஐய்.. நல்லா கனவு காண்கின்றீர்கள். இனவாத ஜேவிபி அகற்றுவதற்கு பதிலாக நிதி கொடுத்து மேலும் கட்டுமானத்தை அதிகரிக்கும்.
  6. சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட் எனும் திரியில் எழுதப்பட்ட அநாவசியமான கருத்துக்களும், காணொளி ஒன்றும் நீக்கப்பட்டன. நீக்கப்படும் கருத்துகளை மீண்டும் மீண்டும் பதிவது யாழ் கள விதிகளுக்கு முரணாணது என்பதுடன் அவ்வாறு வேண்டும் என்றே செய்கின்றவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
  7. விசுகு அண்ணா, இக் கடிதத்தின் மூலத்தை Link இனைத் தாருங்கள்.
  8. அமரதாஸ் பற்றி என்னிடம் மிக உயர்வான அபிப்பிராயம் இருப்பினும், அவர் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதற்குரிய ஆதாரம் உங்களிடம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில், எதிர்ப்பார்ப்பில் உங்கள் பதிலை அனுமதித்து இருந்தோம். ஆயினும், வைரவன் ஆதாரம் கேட்டதற்கான பதிலில் என் பெயரையும், நிர்வாகத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பதில் எழுதியமையால், நீங்கள் அமரதாஸிடம் வாங்கி படங்களை யாழில் இணைத்த விடயம் தொடர்பாக மட்டும் நிர்வாகம் சார்பான நான் பதிலளிக்க விரும்புகின்றேன். நானும், நியானியும் யாழ் முழுதும் அலசி தேடினாலும் நீங்கள் அவ்வாறு அமரதாஸிடம் வாங்கி இணைத்த படங்களையோ அல்லது திரியையோ கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வாறு இணைத்த திரியை உங்களின் முதல் ஐடியின் உதவியுடன், உங்களால் கண்டு பிடிக்க முடியும் என்பதால், அவ்வாறு கண்டு பிடித்து எமக்கு தனி மடலில் அனுப்பினால், அவற்றை பார்த்த பின், உங்களின் முதல் ஐடியை குறிப்பிடாமல், எம்மால் அதனை உறுதிப்படுத்த முடியும். முதல் ஐடியின் கடவுச்சொல் மறந்து விட்டால், எம்மால் அதனை reset செய்து தனி மடலில் அனுப்பி வைக்க முடியும். இதன் மூலம் நீங்கள் அமரதாஸிடம் படங்களை வாங்கி யாழில் இணைத்த விடயம் பொய்யானது அல்ல என்பதை நிரூபிக்க முடியும். நன்றி
  9. உண்மை. விபத்து ஒன்று நிகழ்ந்து விட்ட அடுத்த கணம், பலர் மிகவும் பதட்டமடைந்து விடுகின்றனர். அடுத்தது என்ன செய்வது என தடுமாறி விடுகின்றனர். அதுவே அவர்களை தவறிழைக்கவும் செய்து விடுகின்றது. முதல் விபத்து இவரால் ஏற்படுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன், அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடாமல், நிற்க வேண்டும். ஆனால் இவர் அவ்வாறு நிற்காமல், அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடியிருக்கின்றார். அதுவே இரண்டம் விபத்தை தோற்றுவித்து இருக்கு என நினைக்கின்றேன் அவ்வாறு வேகமாக ஓடியதால் வீதியின் தடுப்பு சிவரில் மோதி இவரது வாகனம், Ditch இற்குள் சென்று இருக்கின்றது. அதில் இருந்து மகளையும் தூக்கிக் கொண்டு வீதியை சடுதியாக கடக்கும் போதுதான் மூன்றாவது விபத்து நிகழ்ந்து இந்த பெருந்துயரம் நடந்து இருக்கின்றது. இதில் இறந்த குழந்தையின் வீடியோக்கள் பல இச் சம்பவத்தின் பின்னர் வெளியாகியுள்ளன. பார்க்கும் போது மனசு பதறுகின்றது. நான் அடிக்கடி பயன்படுத்தும் வீதி இது. பல தமிழர்களின் உயிர்களை விபத்தில் காவு கொண்ட வீதியும் இது. கொஞ்சம் விசாலமாக இருப்பதால், பலர் கடும் வேகத்தில் தான் இதில் பயணிப்பர். பனிக்காலத்தில் சில இடங்கள் மிகவும் இருளாக இருக்கும். இதில் குளிர் காலத்தில் இரவில் அவதானமாக வாகத்தை செலுத்த வேண்டியது அவசியம். முன்னர் 80/KM வேக வீதியாக இருந்து, பின்னர் பல இடங்களில் 70 ஆக்கி இன்னும் சில இடங்களில் 60 ஆக்கியுள்ளனர். ஆனால் பலர் இன்னமும் 80 KM இல் இருந்து 120 வரைக்கும் செல்கின்றனர்.
  10. தொடங்கிய இடத்தில் அசையாமல் அப்படியே நிற்கிறது. Azure பக்கம் போய் விட்டேன்.
  11. சுக நலத்துக்கு குறைவில்லை. ஆனால் வேலைப் பளுதான் அதிகம். மீள் வரவுக்கு மகிழ்ச்சி.
  12. மோகனே திண்ணை மூடியதற்கான காரணத்தை தெளிவாக கூறிய பின்னும் சிலர் கடுப்பில் இருக்கின்றார்கள் எனில், அப்படியே இருக்கச் சொல்லுங்கள். 😁
  13. விசுகு, இசையை யார் யாழில் இருந்து அகற்றியது? விளக்கம் தாருங்கள். நன்றி
  14. அதுவும் அனுர சகோதரயாவின் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நாய் எப்படித்தான் வேஷம் போட்டாலும், அதனால் குரைக்காமல் விட முடியாது. இனவாத ஜேவிபி, எத்தனை பெயர்கள் மாற்றி, முகமூடிகள் அணிந்து வந்தாலும், அதன் இனவாத நடவடிக்கைகளை கைவிட மாட்டாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று கூறியமையுடன் சேர்ந்து இதுவும் ஒன்று.
  15. கனதியான, அறிந்திடாத பல விடயங்களை உள்ளடக்கிய நல்லதொரு கட்டுரை. தலைவரின், புலிகளின் அறிக்கைகளில் இருக்கும் தெளிவு, பெண்ணியம் தொடர்பானபுரிதல், மூட நம்பிக்கைகள் மீதான விமர்சனம், மதசார்பின்மையின் அவசியம் என்பனவற்றை மீண்டும் அறியும் போது, எத்தனை தெளிவாக தம் கோட்பாடுகளில் இருந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. தாயகத்தின் இன்றைய நிலவரமும், போக்கும் புலிகளின் கொள்கைகளில் இருந்து முற்றாக விலகி ஓடுகின்றது.. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டனர்
  16. அப்படியே சாணியையும் அம்மணி சாப்பிடுவா போலிருக்கு. அம்மணியின் diet: காலையில் இரண்டு டம்ளர் கோமியம். மதியம் ஒரு கோப்பை நிறைய சாணி. இரவு இரண்டும் கலந்த சூப்.
  17. மாப்பிள்ளையாக வந்திருக்க வேண்டிய அந்த இராணுவ அதிகாரி தப்பித்தார்! ஆளுக்கு ஆயுள் கெட்டி
  18. ஒலியும் ஒளியும்….. முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம். எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயுதம், மோதிரம் எல்லாத்தையும் சேத்து nanogramஐ மில்லிகிராமாக்கி மொத்தமா நிறுத்து வித்துக் குடுக்க அப்பா வெளீல இருந்து வாற ஒரு ஆளைப்பிடிச்சு duty free இல இருந்து ஒரு மாதிரி கலர் ரீவீ ஒண்டை வாங்கித் தந்தார். கொழும்பில இருந்து வந்த பெட்டியை ராகு காலம் தவித்து நல்ல நேரத்தில உடைப்பம் எண்டு வெளிக்கிட “பெட்டியும் உள்ள இருக்கிற ரெஜிபோமும் கவனம்” எண்டு அம்மா தீரக்கதரிசனமாச் சொன்னது பிறகு இடம் பெயரேக்க உதவிச்சுது. கால நேரம் பாத்து பெட்டியை உடைச்சாலும் டிவி ஓடினதிலும் பாக்க பெட்டீக்க இருந்த நாள்த் தான் கூட. “ Sony trinitron ” பெட்டியை உடைச்சு puzzle மாதிரிப் பாத்து பாத்துப் பொருத்தீட்டு போட வெளிக்கிட “கரண்ட் அடிக்கும் கவனம்” எண்டு அம்மம்மா சொன்னதால செருப்பையும் போட்டுக்கொண்டு on பண்ண “ஸ்ஸ்ஸ்” எண்ட சத்தத்தோட கோடுகோடா கலர் மழை பெஞ்சுது. VHF , UHF அதோட இருக்கிற எல்லா நம்பரையும் மாறி மாறி அமத்த தொடர்ந்து மழை மட்டும் பெய்ய முகம் தொங்கிச்சுது. அன்ரனாக் கம்பியை இழுத்து விரிச்சு திருப்ப ஒரு மாதிரி உருவம் வரத் தொடங்கிச்சுது. வந்த உருவம் நிக்காமல் கடகடவெண்டு மேல கீழ ஓடிக் கொண்டிருந்தச்சுது. முன்னால இருந்த லாச்சி மாதிரி இருந்த பெட்டியைத் துறந்து இருந்த நாலு உருட்டிற switch ஐயும் உருட்டிப் பழகி, பிறகு ஒருமாதிரி மேல கீழ ஓடிறதை நிப்பாட்டி, பிறகு ஒவ்வொண்டாப் பாத்து, ஒண்டு வெளிச்சம் கூட்டிக் குறைக்க மற்றது contrast எண்டு கண்டு பிடிச்சம். என்னடா இன்னும் கிளீயர் இல்லை எண்டு ஏங்க அன்ரெனாவை உயத்திக் கட்டினாத்தான் வடிவா எல்லா channelம் இழுக்கும் எண்டு சொல்ல அடுத்த budget ஓட அப்பா வரும் மட்டும் வெறும் மழையையும் இடைக்கிடை வாற நிழலையும் பாத்துக்கொண்டிருந்தம். ஒரு மாதிரி அப்பா ஓமெண்ட எங்கயோ ஒரு hardware கடைக்காரன் அன்ரெனா குழாய் விக்கிறதைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட வந்தவன் ஒரு குழாய் காணாது கிளீயரா வழாது எண்டு ரெண்டைப் போட்டு உயரத்தையும் விலையையும் கூட்டினான். கம்பிக்கு மேல கம்பி வைச்சுக்கட்டி அதில மேல பெரிய VHFஅன்ரெனாவைப் பூட்டி, கீழ குறுக்கா சின்ன UHF அன்ரெனாவையும் கட்டி, இடி விழாம இருக்க மண்ணுக்கு பெரிய இரும்புக்குழாயைப் புதைச்சு அதுக்குள்ள இந்தக் குழாயை இறக்கி அது ஆடாம இருக்க ஒரு ஆணியைப் பூட்டி, உயத்தின குழாயில இருந்து மூண்டு கம்பியை இழுத்து, தென்னையில ஒண்டு, பின் பத்தி தீராந்தீல ஒண்டு, முன் முகட்டில ஒண்டு எண்டு கட்டினம். உருட்டிப் பிரட்டி ஒவ்வொரு channel ஆ வரத் தொடங்க அண்டைக்கு முழுக்க பிறவிப் பெரும்பயனை அடைஞ்ச மாதிரி முழு நாளும் ரீவி மட்டும் பாத்துக் கொண்டிருந்தம். காலமை நிகழ்ச்சி தொடங்க முதல் கலர் கலரா வாற வட்டத்தைப் போட்டு “கூ” எண்ட சத்தம் வர போடிற TV பத்துமணிக்கு நமோ நமோ தாயே எண்டு முடியும் வரை on இல தான் இருந்திச்சுது . விளங்காத பாசையிலும் advertisement ஐக்கூட ஆவெண்டு பாத்தம்; Pears குளுகுளு baby, இவர்கள் சகோதரிகளா இல்லை தாயும் மகளும் எண்டு வந்த Rexona soap , இலங்கையில எல்லா வாகனமும் இங்க தான் விக்கிறது எண்டு நம்பின இந்திரா டிரேடர்ஸ், இடைக்கிடை தமிழில வாற அல்லி நூடில்ஷ்ஷும் பப்படமும், நந்தன விந்தன, திமுது முத்து எண்டு விளங்காதை எல்லாத்தையும் பாடமாக்கினம். கதைக்காத Tom& Jerryம், கூவிற woody wood peckerம், நாய் வளக்காத குறைக்கு “ லசியும்” பின்னேரம் விளையாட முதல் பாத்திட்டு. பிறகு 7.30க்குப் புட்டுப் பிளேட்டோட வந்திருக்க, knight rider, Battlestar galactica, Blake seven, Big foot and wild boy, Geminan, Automanம் இரவில பத்து மணிக்கு A- team, Strasky and Hutchம் இடேக்க ஓடிற Different strokes எண்டும் கொஞ்ச நாளா ஒடி ஓடிப் பாத்தம். அடிபாடு தொடங்க, முதலில கட்டி ஒளிச்சு வைக்கிறது ரீவீயுத் தான். ஒவ்வொரு முறையும் இடம் பெயரேக்க மட்டுமில்லை , பள்ளிக்கூடச் சோதினை எண்டாலும் அம்மா அதை மூடிக்கட்டி வைக்கிறதில குறியா இருந்தா. அம்மாக்குப் பிறகு அவவின்டை சீலையைக் கட்டினது எங்கடை ரீவீயும் settyயும் தான். அப்பிடிச் சோதினை முடிஞ்சு இப்ப holiday தானே எண்டு கடவுள் இறங்கி வந்தாலும் “கரண்ட்” எண்ட பூசாரி அடிக்கடி வரத்தைத் தடுத்திடுவார். அப்ப எங்கடை வாழ்க்கையில ரீவீயிலேம் தூரதரிசனமா இந்தியா மெல்ல உள்ள வந்திச்சுது. “ வாசிங் பௌடர் நிர்மா” வில வாற வெள்ளைச்சட்டைப் பிள்ளையும், “வாய்மணக்க, தாம்பூலம் சிறக்க” வந்த நிஜாம் பாக்கும் , வயலும் வாழ்வும் எண்டு எங்கடை வீடுகளுக்கு வந்த சேராத வேளாண்மையும் பொறுமையைச் சோதிக்க, வெள்ளிக்கிழமை ஓளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை படமும் படிப்பு டைம்டேபிளிலையே சேந்து இருந்திச்சுது. கடவுளையே கிட்டப்பாக்க காசுகேக்கிற ஊரில இது மட்டும், பேருக்கேத்த மாதிரி தூரத்தில இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் இலவச தரிசனம் இடைக்கிடை கிடைச்சுது. ரேடியோவில வரதாச்சாரியாரின் வர்ணனை மட்டும் கேட்டே matchஐ ரசிச்ச எங்களுக்கு ரீவீல match அதுகும் 83 World Cup வர சிறீக்காந்தும் , கப்பில்தேவும் இந்தியாவும் favorite ஆ மாறத் தொடங்கிச்சுது. வாய்கெட்டினது வயித்துக்கு எட்டாத மாதிரி, மண்டைதீவில அடி விழ உருவம் அருவமாகி பிறகு கொக்காவிலும் போக ஒன்றாய் தெரிஞ்சது பலவாய் மாறித் தெரிஞ்சு, கடைசீல சோதியாவே போட்டுது. அதோட பாதையிருந்தும் பயணத்தடைகள் கூடி, தியட்டர் இருந்தும் இல்லாமல் போக ஊர் உலகம் உய்ய எண்டு தான் பாத்த படத்தை அக்கம் பக்கச் சனமும் பாக்க எண்டு தொடங்கிச்சுது Local ஓளிபரப்பு. கொய்யாத்தோட்டத்தில றீகல், கச்சேரியடி செல்வாஸ், கோண்டாவில் expo, எண்டு ஊருக்கு ஒரு கோயில் மாதிரி ஒளிபரப்புக்களும் தொடங்கிச்சுது. சும்மா தொடங்கினவங்கள் அன்ரனா இருந்த வீடு வழிய போய் வசூலிக்கத் தொடங்கினாங்கள். காசு வாங்கிற கதை தம்பியவைக்குத் தெரிய வரக் கட்டணமும் கூடிக் படங்களில கட்டுப்பாடும் வரத் தொடங்கிச்சுது . கொஞ்சம் கொஞ்சமா கோட்டைக்குள்ள விழீற அடி கூடத் தொடங்க அங்க இருந்து திரும்பி வாற கீழ்வீச்சுச் செல்லடியோட மேல்வீச்சு பொம்மரடியும் சேர அம்மம்மா அடம் பிடிச்சா அன்ரனாக் குழாயை மேல இருந்து பாத்தா காம்ப் எண்டு அடிச்சுப் போடுவாங்கள் இறக்குவம் எண்டு. நல்ல வேளை நாங்க குழாயை இறக்க முதல் பக்கத்து நாட்டில இருந்து வந்த நிவாரணப் பொதிகள் இறங்க, குழாயை இறக்காமல் தப்பிச்சம். ஏங்கின நிவாரணங்களும் கிடைக்காம உள்ளூர் அகதியாய் திரிஞ்சிட்டு திருப்பி வீட்டைவர, இல்லாமல் இருந்த கரண்டும் திரும்பி வர, பனிக்கு மட்டும் இழுத்த தூர தர்சன் தொடந்து வடிவா , கிளீயரா இழுக்க அதுக்குப் பிறகு ராமாயணமும் மகாபாரத்துக் கதாவும், எங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. Term test க்கே TV ஐ மூடி வைக்கிற அம்மா அண்ணான்டை A/Lக்கு ஒரேடியா அந்த வருசம் மூடிக் கட்டி வைச்சதைப் பிறகு துறந்தா TV மட்டும் இருந்திச்சுது வேலை செய்யுதா எண்டு பாக்க கரண்டும் இல்லை இழுக்கக்கூடிய channelம் இருக்கேல்லை. அதுக்குப் பிறகு வேற ஒண்டும் கிடைக்காமல் ஓமர் முக்தாவும் ஒளிவீச்சும் சிறீதர் தியட்டரில பாக்கத் தொடங்க மூடிக்கட்டின TV மூலைக்குள்ளயே இருந்திச்சுது. படத்தை பாக்க ஒரு மாதிரி வந்த புதுத்தணிக்கை குழுவின் அனுமதி வர, வாடைக்கு Water pump generator,deck , cassette எல்லாம் வாடைக்கு குடுக்கிறது பிஸ்னஸா மாறிச்சுது. மூண்டு மணித்தியாலப் படத்தை தணிக்கை எண்டு வெட்டிக் கொத்தி ரெண்டு மணித்தியாலமாத்தர, அந்த ஒலியும் ஒளியும் இல்லாத படங்களை பாக்கத் தொடங்கினம். வருசத்துக்கு ஒருக்கா ரெண்டு தரம் கஸ்டப்பட்டு காசு சேத்துப் படம் பாக்கிறது பொங்கல் வருசப்பிறப்பு மாதிரித் தான் எங்களுக்கு ஒரு entertainment. மச்சான் என்ன மாதிரி இந்தமுறை விடுதலைக்க படம் பாப்பம் எண்டு தயாளன் சொல்ல முதலே காங்கேயன், பாஸ்கரன், எண்டு ஒழுங்கேக்க இருந்தவன், வந்தவன், எல்லாம் என்னைக் கழட்டிப் போட்டு அண்ணரோட கூட்டுச் சேந்தாங்கள் எப்பிடியும் ரெண்டு ரஜனி படம் போடோணும் எண்டு. ஒருமாதிரி பொருள், இடம், காலம் எண்டு எல்லாம் சரிவந்து படம் பாக்கவெண்டு வெளிக்கிட்டம். “படம் பாக்க அவங்கட்டை permission வேணுமாம், இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்களாம் எண்டு தொடங்கேக்கயே ஒண்டு வெருட்ட இஞ்சினை சாக்காலை மூடிச் சத்தம் கேக்காமப் பண்ணீட்டு வந்திருந்தம். “ தூளியிலே ஆட வந்த “ குஷ்புவைப் பாப்பம் எண்டு ஆவலா இருக்க ஓடின water pump திடீரெண்டு நிண்டிட்டு. தெரிஞ்ச அறிவில பிளக்கை கழட்டித் துப்பரவாக்கி போட இன்னும் கொஞ்சம் ஓடீட்டு திருப்பியும் நிக்க, வாடைக்கு தந்தவனை தேடிப் பிடிச்சு கொண்டு வந்தம். சாக்கால மூடின எப்பிடி காத்து வரும் புகையும் போகும் எண்டு பேசீட்டு , “சோக்கை இழுக்காதேங்கோ, காபிரேட்டரை கூட்டாதேங்கோ, எண்ணையை மட்டும் விடுங்கோ” எண்டு instructions குடுத்திட்டுப் போனான். சிவராத்திரி மாரி விடிய விடிய இருந்தும், படுத்தும், உருண்டும் குடுத்த காசுக்கு ஐஞ்சாறு படம் பாத்தம். ஒவ்வொருக்காலும் படராத்திரி முடிஞ்சாப்பறகு கொஞ்ச நாளைக்கு விகடன் விமர்சனக்குழுவுக்கும் மேலால விவாதங்களும் வியாக்கியானங்கள் நடக்கும். இதில சிலர் இன்னும் இளையராஜா, பாரதிராஜா எண்டு what’s appஇல பழைய விவாதங்களை தொடருராங்கள். 95 இல இடம்பெயர இதெல்லாம் காணாமல் போய் திரும்பி வந்து காணாமல் போனோர் பட்டியலில ஆக்களைத் தேடின கூட்டத்தில அம்மா ரீவீயையும் சேத்துக் கனகாலம் தேடித் திரிஞ்சவ. குஷ்பு மெலிஞ்சு போய், ரஜனி ரோபோவாகி, சுமனும் மோகனும் வில்லனாகி, அம்பிகாவும் ராதாவும் குண்டாகி, குள்ளக்கமல் கிழவனாகிப் போனதாலயோ இல்லாட்டி இப்பத்தை ட்ரெண்ட்க்கு நான் இன்னும் மாறாததாலையோ தெரியேல்லை, பெரிய ரீவீயும், எல்லாச் சனலும் இருந்தாலும் ஏனோ ஒளியும் ஒலியும் இல்லாமப் படம் பாத்த மாதிரி சந்தோசமான படம் ஒண்டையோ , படம் முடிய நல்ல வியாக்கியானங்களையோ ரசிக்கக் கிடைக்கேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  19. பொங்கல் முற்று முழுதான தமிழ் பண்டிகை என்பதிலும், அதில் மதம் சிறிதளவும் இல்லை என்பதிலும் நான் தெளிவாக இருக்கின்றேன். அதனை என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு உரத்து சொல்ல ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த முறை பொங்கல் அமைந்தது. காரணம், என் அப்பாவின் தங்கை, எனக்கு மிகவும் பிடித்த மாமி இந்த மாதம் 10 ஆம் திகதி அன்று தன் 74 ஆவது பிறந்த நாள் அன்றே இயற்கை எய்தி விட்டார். அவர் இறந்தமையால், மத நம்பிக்கைகளின் படி, ஒரு நல்ல விடயமும் செய்யக் கூடாது என்று என் அம்மாவில் இருந்து சிலர் அறிவுறுத்தினர். ஆனால் நான், பொங்கல் என்பது தமிழர்களின் நன்றி உணர்வை இயற்கைக்கும், தன் உழவுத் தொழிலுக்கு உதவுகின்றவைக்கும் சொல்வதற்குமான ஒரு நாள் என்பதாலும், தமிழர்களின் பண்டிகை என்பதாலும் (ஆரிய பண்டிகை எதையும் நான் கொண்டாடுவதில்லை) அதில் மதம் ஒரு துளிதானும் இல்லை என்பதாலும் கண்டிப்பாக பொங்குவேன் என்று பொங்கல் வைத்து அதனை முக நூலிலும் பகிர்ந்து இருந்தேன். அதைப் பார்த்து முகம் சுளிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்தனர்.
  20. எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன. இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர். தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது. மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.
  21. என் இரு நெருங்கிய கத்தோலிக்க நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று பொங்கல் வைத்து சிறப்பாக தைப்பொங்கலை கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் சமூகவலைத்தளங்களில் எழுதும் ஜூட் பிரகாஷ். சென்னையில் பல கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கல் அன்று பொங்கி கொண்டாடுவார்கள்.
  22. உண்மையான புலிகள் ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காகவோ அல்லது, கட்சி நபருக்காகவோ இப்படி பரிந்துரைப்பதில்லை. ஆனால் புலிகளின் வளத்தையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொளுத்த சருகுப் புலிகள் தான் இவ்வாறான வேலைகளை செய்வர்.
  23. பகிர்வுக்கு நன்றி ஏராளன். A.R. Rahman னின் பணிவு, humbleness, தமிழ் / தமிழர்களின் மீதான அக்கறை எல்லாம் பிரம்மிக்க வைக்கின்றது. கோபிநாத் பேட்டி போலில்லாமல், உரையாடலாக இதை கொண்டு சென்றிருப்பதால் ரசிக்க கூடியதாகவுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.