Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது. என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது. இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது. எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம். அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள். சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்! அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன். ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான். ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...! எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம். நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் . வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார். தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத் தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன். விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன். அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது) 8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது. சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள். ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன். ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது. சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன். இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். "என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன். ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது. கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை. அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன். ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான். அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது. இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது. இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்! எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். "சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன். வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன். ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும், தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை.. மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை... இனி நான் என்ன செய்வேன்... (மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)
  2. எனக்கும் இந்த பிரச்சினை private modeவ்/ secret mide டில் கடந்த சில நாட்களாக இருந்தது. அதில் இருந்து வெளியேறிய பின் இன்று சரியாகியள்ளது.
  3. வாசித்து முடித்து விட்டேன். கொஞ்சம் விரிவாக பின்னூட்டம் இடுவம் என்பதால் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
  4. இப்பதான் கதையை வாசிக்க தொடங்கியிருக்கின்றேன்.. இப்படி கஜுவையும் பாதாமையும் சாப்பிட்டால், உரச உரச பற்றும் தீ புரியாணியை வெளுத்துக் கட்டச் சொல்லும் தானே..
  5. நல்ல சுவாரசியமான ஒரு பயணக் கட்டுரை நில்மினி. நீங்கள் 2017 இல் உங்களது ஒரு பதிலில் மடகஸ்கார் பற்றி குறிப்பிட்டு இருந்ததைக் கண்டவுடன், அது பற்றி எழுத முடியுமா என நான் கேட்டது நினைவு. வெளினாட்டு பயணிகள் பலரை கவரும் நாடாகவும், மாணிக்க கற்கள் விளையும் பூமியுமாக இருப்பினும் இவர்கள் ஏன் 500 வருடங்களுக்கு முற்பட்ட வாழ்க்கையைப் போன்று வறுமையாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் 13 நாட்களுக்கு அமெரிக்க டொலர் 12000 அறவிடும் விடுதிகளை கொண்ட ஒரு நாட்டில்.
  6. ஒரே மூச்சில் 3, 4 பாகங்களை வாசித்து விட்டேன். பொதுவாக எனக்கு வரலாறு பிடித்தமான ஒன்று அல்ல. வரலாறு சார்ந்த புனைவு நாவல்களைக் கூட விரும்பி வாசிப்பதில்லை. ஆயினும், ஜஸ்ரினது எழுத்து நடையும், அவர் சொல்ல வரும் மையக் கருத்தை (இன்றைய ரஷ்யா - உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பான) நோக்கிய துல்லியமான நகர்வும் வாசிப்பை சுவாரசியமாக்கியுள்ளன.
  7. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய நுணாவிலான், அகஸ்தியன் ஆகியோருக்கும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் சிறிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்,
  8. தொடருங்கள் தமிழ் சிறி. ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?
  9. இலங்கை ரெலிகொம்மில் மிக உயர்ந்த நிலை அதிகாரியாக இருந்த என் நண்பன் (வேலையில் இவன் கார் கதவை திறக்க என்றே ஒருவர் இருந்தார் என்பதை கண்கூடாக கண்டனான்), குடும்பத்துடன் இங்கு வந்து விட்டான். ஏன் என்று கேட்டதுக்கு, இங்கு பிச்சை எடுத்தாலும் பாதுகாப்பாக, முக்கியமாக தனி மனித சுதந்திரத்துடன் வாழலாம் என்கின்றான். Millennium m IT இல் உயர் பதவியில் வேலை செய்கின்ற, சிங்களப் பெண்ணை மணந்த என் தமிழ் நண்பன், தன் மகனையும் மகளையும் இங்கு படிக்க அனுப்பி வைத்து செட்டிலாக்கி விட என் மூலம் முயல்கின்றான் என் திட்டமும் எண்ணமும் அச்சொட்டாக இது தான் கொழும்பு என்று (யாழ்ப்பாணம் அல்லவே அல்ல) இருந்த எண்ணம், கொஞ்சம் நகர்ந்து சென்னை என்று ஆகியுள்ளது இப்ப.
  10. ....ஆனாலும் இந்த வரிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே...
  11. சுவையான எழுத்து நடையில் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் தமிழ் சிறி. நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். அவர் தன் காதலிக்கு கொடுத்த முத்தங்களில் இலங்கை யில் இருக்கும் போது கொடுத்த முத்தமா, அல்லது ஜேர்மனி வந்த பின் கொடுக்கும் முத்தமா சுவையாக உள்ளது .. என்று ஒருக்கால் கேட்டுச் சொல்ல முடியுமா?
  12. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா
  14. சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
  15. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்த வுடன் தனிமடல் போட்டு வரவேற்ற முதலாவது உறவு நீங்கள்!
  16. ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்து இருந்த சுருட்டின் முனையில் மீண்டும் நெருப்பை பற்ற வைத்தார். புலோவிச் இந்த கிராமத்தில் இருக்கும் சிறு ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு பொறுப்பானவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இராணுவத்தில் இருந்து பணியாற்றி விட்டு ஒய்வு பெற்று விட்டு இப்ப இதற்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரது 4 மகன்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். மிகவும் இயல்பான வாழ்க்கை. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழும் மனிதர் அவர். வீட்டுக்கு செல்வதற்கு நடக்க தொடங்குகின்றார். ரயில் நிலையத்தில் இருந்து நான்கு அடி தூரம் மட்டுமே நடந்து இருப்பார். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசை கேட்கின்றது. இந்த நேரத்தில் எந்த ஒரு ரயிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லையே என்று தன் கண்களை சுருக்கிக் கொண்டு மீண்டும் பார்க்கின்றார். அந்த ரயில் மெதுவாக ஆனால் சீராக வந்து கொண்டு இருந்தது. அதன் சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தில் பட்டும் படமாலும் ஒரு தாள கதியில் தவழ்ந்து கொண்டு வருவது போல இருந்தது. தான் சிக்னல் கொடுக்கவில்லையே... எப்படி இந்த ரயில் சிக்னலையும் அலட்சியப்படுத்திக் கொண்டு இப்படி வருகின்றது என அங்கலாய்ப்புடன் அதனையே உற்றுப் பார்க்கின்றார். ரயில் பழமையான ரயில். நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்படும் ரயில். அதன் எஞ்சின் ஏதோ ஒரு விருந்தில் சிறப்பு நடனம் ஆட வந்திருக்கும் மங்கையின் புன் முறுவல போன்று இருந்தது. அதன் அருகே மெல்லிய புகை மூட்டம் பனியின் சாரல்களுக்கு மத்தியிலும் தெளிவாக தெரிந்தது. புலோவிச் தன் 10 வருட சமிக்ஞை பொறுப்பாளர் காலத்தில் ஒரு போதுமே இந்த ரயிலை கண்டதில்லை. இப்படி பழைய ரயிலை ரஷ்சியஅரசு பயன்படுத்துவதும் இல்லை. அவர் தன் கண்களை மேலும் சுருக்கி ரயிலையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார். அது அவர் நிற்கும் இடத்தினை கடக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் அதை கவனிக்கின்றார். அதன் எஞ்சினில் ரயிலை செலுத்துவதற்கு எவரும் இல்லை. எஞ்சின் கண்ணாடியில் எந்த முகத்தையும் காணவில்லை. புலோவிச்சின் தோலில் இருந்து அவரது வெண்ணிற முடிகள் மெல்ல கிளர்ந்து எழுகின்றன. ரயிலின் பெட்டிகளிலும் எவரும் இல்லை போன்றே தோன்றுகின்றது. அதன் அனைத்து சிவப்பு நிற யன்னல்களும் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயில்களும் கறுப்பு நிற கதவுகளால் சாத்தப்பட்டு இருந்தன. புகைபோக்கியுனூடாக திரவ நுரை வெளியாகிக் கொண்டு இருந்தது. இறந்த காலம் ஒன்றை தனக்குள் புதைத்துக் கொண்டு அந்த ரயில் செல்வதாக புலோவிச்சுக்கு தோன்றியது ரயில் கடக்கும் போது, மாதா கோயிலின் மெழகுவர்த்தி வாசனையை ஒத்த வாசனை காற்றில் பரப்பிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது. வெண்ணிற அன்னம் ஒன்று தன் சிறகுகளை படபடவென அடிக்கும் ஓசையுடன் ரயில் அவரை விட்டு கடந்து செல்கின்றது. அதன் கடைசிப் பெட்டியும் கடந்து சென்ற பின் தண்டவாளத்தில் இருந்து நெடிய தூரம் சென்று மறையும் வரைக்கும் அவர் பார்த்துக் கொண்டு நின்றார். அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் ஏனைய ரயில் நிலையங்களில் விசாரிக்கும் போது, அப்படி ஒரு ரயில் தம் நிலையங்களை கடந்து செல்லவே இல்லை என அறிந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, வேலையை விட்டு விலகியதே. (ரயில் இன்னும் பயணம் செய்யும்) பின் குறிப்பு: இக் கதை 'உண்மையாக நடந்தது' என்று சொல்லப்படுகின்ற ஒரு மர்மமான கதையை / செய்தியை ஒட்டி (unresolved mystery), அதைத் தழுவி புனையப்படுகின்றது.... இந்தக் கதையை கண்டிப்பாக உங்களில் சிலர் அறிந்து இருப்பீர்கள். அப்படி அறிந்து இருப்பின் இப்போதைக்கு அதை சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
  17. பாஞ்ச் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  18. இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.
  19. தொடருங்கோ நெடுக்கு.... உங்கள் எழுத்து நடை வாசிக்க கொஞ்சம் கடினமாக எனக்கு இருப்பினும் தொடர்ந்து வாசிக்கின்றேன்... இடையிடையே படங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
  20. கொஞ்ச நேரத்துக்கு முன் கொழும்பில் வசிக்கும் அம்மாவுக்கு தொலைபேசினேன். நான்: "அம்மா .. முழு நாட்டுக்கும் ஊரடங்கு போட்டுள்ளார்கள்... கவனம் வெளியே போக வேண்டாம்" அம்மா: "ஓமடா.. கொழும்பில் இந்தியன் ஆமி வந்து நிற்குதாம்..அதுதான் ஊரடங்கு போட்டுள்ளார்கள்" என்னத்தைச் சொல்ல...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.