Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
தமிழரசு கட்சியின் அருவருப்பான செயல்களால்… மக்கள் அவர்களை விட்டு விலகி தேசியக் கட்சியான, அனுரா கட்சிக்கு போய் சேர்ந்து… யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு சுயேச்சை உறுப்பினரையும் தேர்ந்து எடுத்து விட்டார்கள். சும்மா கிடந்த வைத்தியர் அர்ச்சுனாவை… பாராளுமன்றத்துக்கு அனுப்பி விட்டதே இவர்கள் தான். அர்ச்சுனாவின் கௌசல்யா எடுத்த வாக்கை கூட…. சுமந்திரனால் எடுக்க முடியவில்லை. இதற்குள் மாகாண முதல்வர் கனவு வேறை. இப்படிப் பட்டவர்கள் பொங்கலுக்கு அழைப்பு விடுத்தால்… ஒருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால்.. பம்மிக் கொண்டு இருந்து விட்டு… அனுரா கொண்டாடும் பொங்கலைப் பார்த்து, வயிறு எரிகின்றார்கள். மக்கள் உசாராகி விட்டார்கள். இவர்களின் சுத்துமாத்து அரசியல் இனி… எடுபடாது. தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கட்சி என்றால்…. சுமந்திரன், சிவஞானத்தின் தமிழரசு கட்சிதான்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சென்ற ஜனாதிபதி தேர்தலில்….. சங்கு கூட்டணி தமிழன் அரியநேந்திரனுக்கு வாக்கு சேகரித்த போது, சுத்துமாத்து சுமந்திரன்…. சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த ஆள். சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த சுமந்திரனுக்கும்… யாழ்.களத்தில், ஒரு லூசு கூட்டம் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருந்தது. இப்போ அவர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள். வர இருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு, தனக்கு வாக்குப் பிச்சை கேட்டு… சங்குடன் ஐக்கியமாகியுள்ளது சுத்துமாத்து சுமந்திரன். பச்சோந்தி ஓணான் கூட… இவ்வளவு விரைவாக தனது தோலின் நிறத்தை மாற்றாது. இவர்களின் பதவி வெறி பிடித்த அரசியல்… இனி தமிழ் மக்களிடம் எடுபடாது. சுத்துமாத்து சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால்…. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும், அனுர கட்சிக்கு விழுந்து, தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை… இலகுவாக வெல்லப் போகின்றது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளிக் கண்ணன் நிலையில்… சுத்துமாத்து சுமந்திரன் உள்ளார். அடுத்த செருப்படி தோல்விக்கு… இப்பவே ஆள் ரெடியாகி உள்ளார்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
வீடு - சங்கு சந்திப்பு! 😂 🤣 எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வாம்! 😅 எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் ஆகியோர் சந்தித்தனர். அருவி செய்திகள்- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.- 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
கருத்து... கந்தசாமிகளை, இந்தப் பக்கம் காணோம். 😂 ஓ... எந்த முகத்துடன் இந்தப் பக்கம் வருவது என்ற கூச்சம் இருக்கத்தானே செய்யும். கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.- உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
ஓம்.... இது, "மிக்சர்" தின்னுகிற சபை.- கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
முன்பும் ஒரு நீலக்கல், 600 கோடி ரூபாய் பெறுமதி என்று, சுவிற்சலாந்துக்கு, கொண்டு போய் விற்கப் போனால், அதை சாதாரண கல் என்று, திருப்பி அனுப்பி விட்டார்கள். விசேட விமானத்தில் அதை கொண்டு போன காசும் நட்டமாகி. இப்போ... அந்தக் கல்லில் யார், துணி துவைக்கின்றார்களோ... 😂- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
- உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா! அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தையும் இது மீறுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க சட்டத்தின் கீழ், ஒரு வருட அறிவிப்பு கொடுத்து வெளியேறுவதற்கு முன் அனைத்து நிலுவையில் உள்ள கட்டணங்களையும் செலுத்த வேண்டும். WHO தகவல்களைக் கட்டுப்படுத்த, நிர்வகிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளத் தவறியதால் டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு அமெரிக்க அரசாங்க நிதி, ஆதரவு அல்லது வளங்களையும் WHOக்கு மாற்றுவதை இடைநிறுத்த ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும் வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகுவது அமெரிக்காவிற்கு ஒரு இழப்பு, மேலும் இது உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு இழப்பு என்று WHO கூறியுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கட்டணங்களை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்றும் WHO கூறியது. அமெரிக்கா வெளியேறுவது மற்றும் அந்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பெப்ரவரியில் WHO-வின் நிர்வாகக் குழுவில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1460992- கருத்து படங்கள்
- கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர். பின்னர் அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதனடிப்படையிலேயே அது தொடர்பான அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460938- நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு
நுவரெலியாவில் வெப்பநிலை 3.5° செல்சியஸாக பதிவு! நுவரெலியாவில் இன்றைய (22) தினம் குறைந்த அளவிலான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதன்படி அங்கு வெப்ப நிலை 3.5° செல்சியஸ் ஆக பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய கண்காணிப்பு மையங்களிலிருந்து இன்று அதிகாலை சேகரிக்கப்பட்ட வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில் இந்த அளவீடு பதிவாகியுள்ளது. மேலும் இது அண்மைய காலங்களில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். பண்டாரவளையில் 11.5°செல்சியஸ், பதுளையில் 15.1°செல்சியஸ் மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°செல்சியஸ் என மற்ற குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. இன்று காலை அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3°செல்சியஸ் ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°செல்சியஸ் ஆகவும், கொழும்பில் 22.1°செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavannews.com/2026/1460963- எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 121(1) பிரிவின்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் ஜனவரி 7 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தை சவால் செய்யும் மனுக்களை சமர்ப்பிப்பதற்கு அந்த திகதியிலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. சட்டமூலம் இயற்றப்பட்டதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 512 பேரின் ஓய்வூதிய உரிமைகள் இரத்து செய்யப்படும். https://athavannews.com/2026/1460984- அண்மைய வரலாற்றில் மிகப் பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!
அண்மைய வரலாற்றில் மிகப் பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்! அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக இன்று (22) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹாஷிஷ் மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட மொத்தம் 10,871 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 23,692 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1460974- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்! கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தீர்மானங்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (21) பின்வாங்கினார். அதேநேரம், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கிரீன்லாந்து குறித்த சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து சமூக ஊடகங்களில் சில விடயங்களை மாத்திரம் முன்வைத்த ட்ரம்ப், நேட்டோ தலைவருடனான “மிகவும் பயனுள்ள சந்திப்பு” கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு வழிவகுத்ததாகக் கூறினார். இந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று நேட்டோ விவரித்தது – மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பின் மீதான விவாதங்கள் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் கூறியது. முன்னதாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அந்தப் பிரதேசத்தின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறினார். இந்த நிலையில் புதன்கிழமை இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தீர்வு நிறைவேறினால் அது அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் – என்றார். எனினும், தன்னாட்சி பெற்ற டேனிஷ் சார்பு பிரதேசத்தின் அமெரிக்க உரிமையை இந்த திட்டம் உள்ளடக்கியதா என்று அவர் கூறவில்லை. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460895- பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு.
பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில், ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460946- அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
“பனியன்…. ட்ரம்ப்”, ஆட்சி செய்யும் நாட்டில்… “பனி”.. கொட்டாமல், வேறு என்ன கொட்டும். 😂 🤣 இதுவும் கடந்து போகும் என்று, கவனமாக இருக்க வேண்டுகின்றேன். 🙂- 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
இதில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இருந்தும்... தமது தோல்விக்கு காரணத்தை தேடாமல், மற்றவரை தாக்கும் கூட்டை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இவர்களின் கூட்டுக்கு தோல்வியடைந்தோர் கூட்டமைப்பு என பெயரிட்டால் நல்லாக இருக்கும். Inthunathan SivaNathan- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம். ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர் «20 முறை இறந்திருக்கலாம்» புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா. தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: «என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.» ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது: «செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.» இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது. «என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே» பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே. «நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» அவர் தொடர்ந்து கூறினார்: «போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.» அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது. «இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார். அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்: «நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.» பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்: «உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.» பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார். «இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார். மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது. நன்றி: Tages Blatt தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன். Inuvaijur Mayuran- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சுவிட்ஸர்லாந்தில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த கௌரவம் - குவியும் வாழ்த்துக்கள் சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். செயின்ட் கேலன் மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவர், செயின்ட் கேலன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். நாடாளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கியுரைத்துடன் தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது. HR Tamil News- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சிவஞானமும், டக்ளஸ் தேவானந்தாவும். "ஹனிமூன்". ❤️ ❤️ ❤️- 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
தேர்தலுக்கு முன் 10 கட்சிகள்! தேர்தல் நடக்கும் காலத்தில்... மக்களை ஏமாற்ற, ஒன்று சேரும் கட்சிகள்! தேர்தலின் பின், பதவி போட்டியில்.. மீண்டும் 10 தனிக் கட்சிகள்! மக்களை... முட்டாள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றது சுத்துமாத்து கூட்டம். Magen Anu ################ ############## ################# இந்த நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள் அனைவரும்... சாதாரண மனிதர்கள் எங்களுக்கு தெரிந்த விடயங்கள் கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால்.. தமிழர்கள் பாவம். Niroshan Srt - ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.