Everything posted by தமிழ் சிறி
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி
- தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்!
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது . நாட்டிலிருந்து புறப்பட்ட 11வது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அந்தக் குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யுஎஸ்பீ. அவர்களும் இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கே அவர்களும் கடமையாற்றவுள்ளனர். இதேவேளை இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே, தொலகே வெளியேறும் 11வது இராணுவ மருத்துவப் படையணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இராணுவ மருத்துவப் படையணி தலைமையக நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.யு.எஸ். வனசேகர ஆர்.டபிள்யூ.பீ யுஎஸ்பீ, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த குழுவினை வழியனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421294- யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு! யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து , கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது இதன்போது 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421328- நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் ; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை
நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் படிப்பு பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தினத்தன்று நாமல் ராஜபக்ஷ மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421344- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
போலியான செய்தி குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்! காதலர் தினத்தன்று (14) பாடசாலைகள் பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயிரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரச்சாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது. இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2025/1421358- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! தென்னிந்திய சினிமா நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்க்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அவருக்கு CRPF பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வீரர்கள் உட்பட 8 முதல் 11 காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள். ‘தளபதி’ என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். விஜய் தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேர்தல் வியூகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சிகளைப் போலவே மாநிலம் முழுவதும் ரோட்ஷோ நடத்தவும் அவர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. சரியான திகதிகள் மற்றும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு நிகழ்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலைகள், உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான பாதுகாப்பு தற்போதைக்கு போதுமானதாகக் கருதப்பட்டாலும், தமிழகத்தில் அரசியல்வாதியாக அவரது உயரும் சுயவிவரத்தை இது பிரதிபலிக்கிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான உத்தரவை இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2025/1421387- தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்!
தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு குறித்த மற்றொரு எக்ஸ் பதிவில் மோசடி, எலோன் மஸ்க்கின் குழந்தைகளுடன் தனது புதுமையான தருணங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார், அதில், பில்லியனரின் குடும்பத்தைச் சந்தித்ததும், பலதரப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவதும் மகிழ்ச்சியாக இருந்தது – என்று பதவிட்டார். டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பிய பின்னர் தனது முதல் அமெரிக்க பயணமாக பிரதமர் மோடி வியாழன் அதிகாலை வொஷிங்டன் டிசியை சென்றடைந்தார். மோடியின் அமெரிக்க விஜயம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421355- ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி. ”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர் மார் க் ரூட்டை, நேட்டோ தலைமையகத்தில் அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரேனுக்கு நேட்டோ அமைப்பு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி எனவும், அனைத்து நட்பு நாடுகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன எனவும், அமெரிக்காவும் தம்முடன் தான் உள்ளது எனவும், எனவே உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1421343- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
பாம்பை... பழி வாங்கிய குருவி.😂- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இது, எங்களின்... Fபமிலி போட்டோ. 😂 நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி. 🤣- தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
சின்னக் கதிர்காமர் என்று அழைக்கப்படும் சுமந்திரன் தரப்புக்கு, விகாரை இருப்பதில் நல்ல விருப்பம் போல் தெரிகின்றது. இப்படியான போராட்டங்களில்... ஆளை காணக் கிடைக்குதில்லை.- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது! வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ள நிலையில் தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கு.திலீபன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421052- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@கிருபன் ஜீ... இரண்டு பிழை திருத்தங்களை அறியத் தருகின்றேன். "Mitchell Starc" விளையாடாத படியால், இந்திய வீரர் Arshdeep Singh ஐ தெரிவு செய்கின்றேன். "Jasprit Bumrah" விளையாடாத படியால், Mohammed Shami ஐ தெரிவு செய்கின்றேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.- நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் தீர்மானிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421012- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்! சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் கூறினார். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1421036- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, எப்போதும் தமிழன்.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி