Everything posted by தமிழ் சிறி
-
சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு! நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CEB இன் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். மறுசீரமைப்புப் பணிகள் முன்னேற்றமடைவதால், வரும் நாட்களில் தற்போது நிலவும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய் (11) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், பிற்பகல் 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரையான நேரத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டினை சுழற்சியில் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பெப்ரவரி 09 அன்று, இலங்கை முழுவதும் பரவலான மின்சாரத் தடையை எதிர்கொண்டது, இது முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டினையும் பாதித்தது. பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (06.00 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருந்த குறைந்த மின்சாரத் தேவையின் காரணமாக மின் மறுசீரமைப்பு செயல்முறை சிரமங்களை எதிர்கொண்டது. எவ்வாறாயினும், மாலை 6.00 மணியளவில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது. அங்கு மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையினால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன் மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மேலும் மின் தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420724
-
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
மறைந்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதிச் சடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு! மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, நாளை மறுதினம் (13) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, உடலநலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இந்நிலையில் அன்னாரின் புகழுடல், யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் 13ஆம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரது புகழுடல் தகன கிரியைகளுக்காக நண்பகல் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1420748
-
நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு!
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாண மீனவர்கள் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாகவும் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் வடக்கில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் சீன அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். https://athavannews.com/2025/1420798
-
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்!
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்! இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா (Akio Isomata) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜப்பானிய நிதிப் பங்களிப்புடன் முகமாலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலோரெஸ் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கேட்டறிந்துகொண்டார். https://athavannews.com/2025/1420834
-
போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!
போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்! போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார். போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் பாவனையில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மன்னிப்போ அல்லது இரண்டாவது வாய்ப்போ வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் இது போன்ற சில நபர்கள் முழு பொலிஸ் சேவையையும் இழிவுக்கு உள்ளாகுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1420826
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்! பிப்ரவரி 9 ஆம் தேதியை “அமெரிக்க வளைகுடா தினம்” என்று ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நியமித்துள்ளார்.மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வளைகுடாவின் பெயரை மாற்றுமாறு டிரம்ப் முதலில் பரிந்துரைத்தார், புதிய பெயர் அமெரிக்காவின் வரலாற்று மற்றும் பிராந்திய மரபை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் . “மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிடுவோம் – அது ஒரு பெரிய வளையத்தைக் கொண்டுள்ளது என்றும், மேலும் அது ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது” என்று அவர் அப்போது கூறினார். வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, நிர்வாக ஆணை புதிதாக பெயரிடப்பட்ட வளைகுடாவை “டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடாவால் வடகிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கில் எல்லையாக உள்ள அமெரிக்க கண்ட அடுக்குப் பகுதியை உள்ளடக்கியது, இது மெக்சிகோ மற்றும் கியூபாவுடனான கடல் எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கின்றது. தனது முடிவை கூறிய டிரம்ப், ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “முன்னர் மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கப்பட்ட நீர்நிலை நீண்ட காலமாக நமது செழிப்பான தேசத்திற்கு ஒரு முக்கிய வளமாக இருந்து வருகிறது, மேலும் அமெரிக்காவின் நீடித்த பகுதியாக உள்ளது, ஏனெனில் உத்தரவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இந்த நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன்” என்று கூறினார். Fox5 DC இன் படி புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு சூப்பர் பவுல் LIX க்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பறந்தபோது, வளைகுடாவைக் கடந்து செல்லும்போது மறுபெயரிடல் முக்கியத்துவத்தை டிரம்ப் எடுத்துரைத்தார். “எங்கள் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளில் அமெரிக்காவின் பெருமையை எனது நிர்வாகம் மீண்டும் நிலைநிறுத்துவதால், இந்த வரலாற்று தருணத்தையும் அமெரிக்க வளைகுடாவின் மறுபெயரிடுதலையும் நாம் அங்கீகரிப்பது மட்டுமே சரியானது” என்று அவர் கூறினார். டிரம்ப்இன் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடலோர பொலிஸார் ஏற்கனவே “அமெரிக்க வளைகுடா” என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, மேலும் மாற்றத்தை இறுதி செய்ய உள்துறை செயலாளர் டக் பர்கம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை “பொருத்தமான திட்டங்கள், விழாக்கள் மற்றும் செயல்பாடுகளுடன்” அமெரிக்க வளைகுடா தினத்தை அனுசரிக்க ஊக்குவிக்கிறது என்றும் கூறபடுகின்றது. சமீபத்தில், மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார், ஆனால் பின்னர் மெக்சிகோ எல்லையில் 10,000 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மறுபெயரிடுதல் வருகிறது. https://athavannews.com/2025/1420749
-
OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை!
OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது. எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேநேரம், “நீங்கள் ஆர்வமாக இருந்தால் டுவிட்டரை $9.74 பில்லியனுக்கு வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும்” கூறி பதிவிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டுவிட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றியமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் OpenAI மீது இரண்டு முறை வழக்குத் தொடுத்த பின்னர் இந்த வாய்ப்பை மஸ்க் முன்மொழிந்தார். முதல் முறையாக, 2024 ஜூலையில் நிறுவனம் அதன் ஸ்தாபகக் கொள்கைகளில் இருந்து விலகி, குறிப்பாக வணிகமயமான, இலாபம் சார்ந்த கட்டமைப்பை நோக்கிச் செல்லும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மனிதகுலத்திற்கான பரந்த நன்மைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படும் அபாயத்தில் OpenAI இன் பணியை இந்த மாற்றம் ஏற்படுத்தியதாக மஸ்க் சுட்டிக்காட்டினார். இந்த சட்டப் போராட்டம், திறந்த, இலாப நோக்கமற்ற முயற்சியாக AIக்கான மஸ்கின் பார்வை மற்றும் OpenAI இன் வளர்ச்சி மற்றும் இலாபத்தைப் பின்தொடர்வதற்கு இடையே உள்ள பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. 2024 ஆகஸ்ட்டில் மஸ்க் மீண்டும் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்து, “இலாபத்தை அதிகரிக்க” சக்திவாய்ந்த “செயற்கை பொது நுண்ணறிவு” தொழில்நுட்பத்தை உருவாக்க OpenAI பந்தயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும் மஸ்க் குற்றம் சாட்டினார். OpenAIக்கு எதிரான எலோன் மஸ்க்கின் வழக்கு அவருக்கும் அவர் கண்டுபிடித்த ChatGPTக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலிலிருந்து உருவாகிறது. https://athavannews.com/2025/1420801
-
குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு!
குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்தாக்கில் அதிகாலையில் விழந்து விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எட்வின் வில்லக்ரன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ, தேசிய துக்க நாளையும் அறிவித்தார். https://athavannews.com/2025/1420805
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி! ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். அங்கு ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்திக்க உள்ளார். இதில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து டுபாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற எதிர்கால அருங்காட்சியகத்தில்(Future Museum) நடைபெறும் ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420706- யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்
சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள்! சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. அதன்படி கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன் வெய் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததுடன் நிகழ்வின் போது 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர்.எம்.பிரதீப்மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420695- தையிட்டி விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!
திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை! ”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420646- பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
சிறு பிள்ளை வேளாண்மை….- கருத்து படங்கள்
- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
- இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!
யாழ் வாலிபரை கடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது! ஆரியகுளத்தை சேர்ந்த ஒருவரை கடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நிதி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர் . பொலிஸாரின் கருத்தின் படி வாலிபர் வேலைக்காக ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமித்திருந்த நிலையில். கைது செய்யபட்ட பெண் 80 லட்சம் ரூபாய் குடுத்தால் அவரை 2 வாரங்களுக்குள் அனுப்பி வைபதாக உறுதியாளித்துள்ள நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் மூன்று பேருடன் இணைந்து வாலிபரை கடத்தி சென்று பெண்ணின் வங்கிக்கு பணத்தை மாற்றி உள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் ஆள் இல்லாத பகுதியில் வாலிபரை இறக்கி விட்டு சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யபட்டதுடன் கடத்தலுக்காக பயன்படுதபட்ட வாகனமும் பறிமுதல் செய்யபட்டதாக போலீசார் மேலும் தெரிவிதனர் . https://athavannews.com/2025/1420619- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு! இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது. இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். எவ்வாறெனினும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர். படிப்படியாக மின்சாரம் நேற்று மாலையாகும் போது வாமைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மின் துண்டிப்பின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை தூண்டியிருந்ததுடன், பல்வேறு நாடுகளின் பிரதான தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தது. அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420543- யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே மோதல்
யாழ். பல்கலையில் மோதல்; இரு மாணவர்கள் காயம்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது ஏற்பட்ட மோதலிலேயே இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். https://athavannews.com/2025/1420552- வகுப்பொன்றில் மாணவர்களின் தொகையை 35 ஆக குறைக்கும் திட்டம் பரிசீலனையில்!
வகுப்பொன்றில் மாணவர்களின் தொகையை 35 ஆக குறைக்கும் திட்டம் பரிசீலனையில்! ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35 க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இக்கலந்துரையாடலில் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பான உண்மைகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறான நிலையில் இருந்தால், பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார். https://athavannews.com/2025/1420575- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி! ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, டுபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார். மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதியின், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1420588 - "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.