Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இவ்வளவு காலமும்... சம்பந்தன் சுமந்திரன் இருந்த படியால்தான்... கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂 சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார். எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂 வேலியிலை போன ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜 பட்டது போதும், பட்டினத்தாரே... 🤣
  2. அதுதானே... புத்திசாலி மனுசன். 😂 நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣
  3. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழு கப்பல், 650 ஆட்களை ஏற்றிக் கொண்டு டியாகோ கார்சியாவிற்கு புறப்பட்டுக் கொண்டு இருக்குது... என்று ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣
  4. பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு! 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைமையிலான போராளிகள் 250 க்கும் மேற்பட்டவர்களைக் கைப்பற்றினர். இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், காசாவில் இன்னும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 101 வெளிநாட்டு மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இந் நிலையில் நவம்பரில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், நான் பெருமையுடன் பதவியேற்கும் திகதியான 2025 ஜனவரி 20 க்கு முன்னதாக பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் இந்த அட்டூழியங்களைச் செய்த பொறுப்பாளர்கள் நரக வேதனை அனுபவிப்பாளர்கள் என்று கூறியுள்ளார். காசாவில் 33 பணயக் கைதிகள் பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட 14 மாத கால யுத்தத்தின் போது அவர்களது தேசிய இனத்தை தெரிவிக்காது கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
  5. இவ்வளவு காலமும்... ஒலி பெருக்கி, இருந்தது ஆச்சரியமாக உள்ளது.
  6. பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும், புலம் பெயர் அமைப்புகளிற்கு வாழ்த்துக்கள். 😂 🤣 புலம் பெயர் அமைப்புகள்... சும்மா இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்தது. அவர்கள் பெரிய "மாஸ்ரர் பிளான்" உடன் ஒரு வேலையில் இறங்கியிருப்பது, இப்பதான் ஓமல்பே சோபித்த தேரர் மூலம் தெரிய வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். 👍 😂
  7. புதிய பிரதம நீதியரசராக இன்று பதவியேற்கும் முர்து பெர்னாண்டோ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், திருமதி முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார். பதவியேற்பு மூலம், பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக திருமதி முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிப்பார். https://athavannews.com/2024/1410643
  8. உ/த பரீட்சையின் பின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு? 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டால், பரீட்சைகள் காலத்தின் போது, வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள், எனவே, பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அது முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மோசமான காலநிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீளப் பெறுவது தொடர்பிலும் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1410646
  9. மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு! இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன், இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் ஜூன் மாதம் துப்பாக்கியை வைத்திருந்த சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார். ஒரு குற்றத்திற்காக குற்றவாளியாக ஒரு பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் இவர் ஆவார். https://athavannews.com/2024/1410655
  10. எப்படி வளர வேண்டும் என்பதை, நான் முடிவு செய்து கொள்கிறேன்.
  11. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நடைபெறும்! வாகன இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு கொள்கையாக வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை வழங்கியுள்ளது. வாகனங்களை வழங்க தயாராக உள்ளோம். மேலும், இதன் மூலம் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தைப் பெற முடியும். வாகனங்களின் இறக்குமதியை மீட்டெடுக்க பல விடயங்கள் உள்ளன. வாகன இறக்குமதிக்கான கொள்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. தேசியக் கொள்கையை உருவாக்குவது வாகனங்களில் இருந்து தொடங்கியது. அது நல்ல விடயம்தான். பெப்ரவரி முதல் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான பணத்தை ஒதுக்க மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 வருடங்களாக அனாதரவாக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410631
  12. பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்! மஹிந்த தேஷப்ரிய எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவத்றகு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை. ஏனெனில் குறித்த வேட்பு மனுக்கள் 2022 ஆம் ஆம் ஆண்டில் கோராப்பட்டவை. தற்போது 2 வருடங்கள் முற்றாக கடந்துள்ளது. எனவே பழைய வேட்பு மனுக்களின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது இளம் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு இழக்கப்படுகின்றது. 2023 தேர்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் வேட்புமனுக்களில் 35 வயதுக்கு குறைந்த இளம்பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 25 வீதமாக காணப்பட வேண்டும் என்ற யோசனை திட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் இந்த முறைமை பின்பற்றப்பட்டது. எனவே பழைய வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410612
  13. நினைவு கூர்தலில் பல்வகைமை – நிலாந்தன். “ஈழ விடுதலை இலட்சியத்திற்கான போரில் இன்னுயிர் நீத்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம்” என்று நோர்வையில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. மாவீரர்களின் நினைவுகளையும் ஏனைய இயக்கங்களின் தியாகிகளின் நினைவுகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு நாள். அதேசமயம் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் தங்களுக்கென்று தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றன. எனவே அவரவர் தங்கள் தங்கள் தியாகிகள் தினத்தைக் கொண்டாடுவதுதான் சரி. இதில் மாவீரர் நாளுக்குள் ஏனைய இயக்கங்களின் தியாகிகளை நினைவு கூர்வது சாத்தியமில்லை என்பது அவர்களுடைய வாதமாக இருக்கிறது. தமிழீழ தேசிய துக்க நாள் என்றால் அதில் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் நீத்த எல்லா இயக்கங்களின் தியாகிகளையும் நினைவு கூர வேண்டும். எனவே மாவீரர் நாளை தேசிய துக்க தினமாக அனுஷ்டிப்பவர்கள் ஏனைய இயக்கங்களின் தியாகிகளையும் நினைவு கூர்ந்தால்தான் அது முழுமையான தேசிய துக்க நாளாக இருக்க முடியும் என்று முன் கண்ட பதிவைப் போட்ட நோர்வே நண்பர் மீண்டும் வாதிட்டார். தேசியவாத அரசியல் என்பது திரளாக்கம்தான். தேசம் என்ற திரளுக்குள் எல்லா இயக்கங்களும் அடங்கும். எல்லா தியாகிகளும் அடங்குவர். எனினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா இயக்கங்களுக்குமான பொதுவான நினைவு நாள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒரு பொதுவான நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பையும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை பொதுவான நினைவு நாள் என்பது, இயக்கங்கள் கடந்து தியாகிகளை நினைவு நினைவு கூர்வது.அது தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயகச் செழிப்பைக் காட்டும். தமிழ்த் தேசிய அரசியலில் பொருத்தமான,சாத்தியமான பண்புருமாற்றம் நிகழ்ந்தால்தான் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு சாத்தியப்படும்.அப்படி ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்கப்பட்ட பொழுதும் மேற்படி வாதங்கள் எழுந்தன. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது பல்வேறு தியாகிகள் தினங்கள் உண்டு. நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புத்தான்.எனவே அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்வது இப்பொழுதும் சட்டரீதியாக ஆபத்தானது. இம்முறையும் என்பிபி அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பை நினைவுகூர முடியாது என்று அறிவித்தது. நேற்று முகநூல் பதிவுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இவ்வாறு விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களை நினைவு கூர்வது நாட்டில் முழுமையாக அனுமதிக்கப்படாத ஒரு பின்னணியில், அந்த நாட்களை நினைவுகூர வேண்டும் என்ற தாகமும் அதிகமாக இருக்கும். ஏனைய ஆயுதப் போராட்ட அமைப்புகளோடு ஒப்பிடுகையில் விடுதலைப்புலிகள் இயக்கம் நீண்ட காலம் அரங்கில் நின்றது என்ற அடிப்படையில், அந்த இயக்கத்தில்தான் அதிகம் தியாகிகள் உண்டு. எனவே அதிகளவு தியாகிகளை நினைவு கூரும் நாளாக மாவீரர் தினமும், அதிகளவு மக்களை நினைவு கூரும் நாளாக மே 18ம் காணப்படுகின்றன. அதிகளவு மக்கள், அதிகளவு தியாகிகள் என்பதனால் அங்கே அதிகளவு உறவினர்கள் கூடுவார்கள்.அதிகளவு ஆர்வலர்கள்,செயற்பாட்டாளர்கள் கூடுவார்கள். இதனால் ஒப்பீட்டளவில் ஏனைய தியாகிகளின் நாட்களை விடவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நாட்களைப் பொறுத்தவரை அங்கு அதிகளவு மக்கள் திரள் இருக்கும். அதிகளவு உணர்ச்சிப் பெருக்கும் இருக்கும். தாயகத்தில் மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் எல்லா இடங்களிலும் நிலைமை அப்படித்தான் இருக்கும்.அவை பெருமளவுக்கு அனைத்துலக அளவில் அனுஷ்டிக்கப்படும் நாட்களாகவும் இருக்கின்றன. ஆனால் ஏனைய நினைவு நாட்களுக்குத் தடை இல்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,ஏனைய இயக்கங்களும் உட்பட ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்குமான ஒரு பொது நாளைக் கண்டுபிடிப்பது கடந்த 15 ஆண்டுகளாக சவால்கள் மிகுந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஒரு இயக்கம் தியாகி என்று கொண்டாடும் ஒருவரை இன்னொரு இயக்கம் அல்லது கட்சி துரோகி என்று கூற முடியும். ஒரு இயக்கம் குற்றவாளி என்று கூறிச் சுட்டுக் கொன்ற ஒருவரை இன்னொரு இயக்கம் போராளி, தியாகி என்று கொண்டாட முடியும். ஒரு இயக்கத்துக்கு தியாகியாக இருப்பவர் இன்னொரு இயக்கத்துக்கு அல்லது அவரால் பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு துரோகியாக அல்லது கெட்டவராக இருக்க முடியும். ஒரு இயக்கத்துக்கு நல்லவராக இருப்பவர் அந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு அல்லது வேறொரு இயக்கத்துக்கு அல்லது கட்சிக்கு கெட்டவராக இருப்பார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் இயக்கங்களுக்கிடையிலான மோதலில் கொல்லப்பட்ட போராளிகள் உண்டு. இயக்கங்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள் உண்டு. என்ன நடந்தது என்று தெரியாமலே தொலைந்து போனவர்கள் உண்டு. இயக்கங்களால் கொல்லப்பட்ட கட்சிப் பிரமுகர்கள் உண்டு. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரி குழுக்களால் கொல்லப்பட்ட இயக்கத்தவர்கள் உண்டு. பொதுமக்கள் உண்டு. எனவே இந்த விடயத்தில் யார் யாரைக் கொன்றது? எதற்காகக் கொன்றது? என்று விவாதிக்கப் புறப்பட்டால் தமிழ் மக்கள் இறந்த காலத்திலேயே தேங்கி நிற்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக இறந்த காலத்தை அதன் தவறுகளோடு சேர்த்துப் புதைக்கவும் முடியாது. கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், குறிப்பாக கடந்த இரண்டு தசாப்த கால அனுபவங்களின் அடிப்படையில்,புதிய பண்புருமாற்ற அரசியல் ஒன்றை நோக்கி உரையாட வேண்டும். எனவே, போராட்டத்தில் உயிர் நீத்த எல்லாத் தியாகிகளுக்குமான ஒரு பொது நாளைக் கண்டுபிடிப்பதும் அதற்கு வேண்டிய ஒரு பொதுக் கட்டமைப்பை கண்டுபிடிப்பதும் அவற்றின் நடைமுறை அர்த்தத்தில் பண்புருமாற்றம்தான். தமிழ்த்தேசிய ஐக்கியம்தான்.அதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் செழிப்பாக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது மேற்சொன்ன முரண்பாடுகளைக் கடந்து சிந்திக்கப்பட்ட ஒரு பண்புருமாற்றத்தின் விளைவுதான். அது ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நீடித்தது.பின்னர் சிதைந்து விட்டது. அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள், தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் ஒற்றைப் புள்ளியில் இணைக்கப்பட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். அந்த ஒற்றைப் புள்ளி இன்றுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதற்குரிய பொதுக் கட்டமைப்பையும் இன்றுவரை உருவாக்க முடியவில்லை. கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு செயலற்றுப் போயிருக்கும் ஒரு பின்னணியில், நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை பற்றிச் சிந்திப்பது சிலருக்கு அபத்தமாகத் தெரியலாம். ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் கையாள போவதில்லை என்று அறிவித்தது. அதேசமயம் சங்குச் சின்னத்தை கையாள வேண்டாம் என்றும் கேட்டிருந்தது.ஆனால் கட்சிகள் சங்குச் சின்னத்தை தம் வசப்படுத்தியதன் மூலம் பொதுக் கட்டமைப்பின் புரிந்துணர்வுத் தளம் நொறுங்கிப் போனது. தமிழரசியலில் ஏற்பட்ட அகப்பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து செயல்பட முடியாத ஒரு பின்னணிக்குள் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக்கூட்டமைபைக் குறித்து யாரோடு யார் உரையாடுவது? தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பண்புரு மாற்றத்தைக் குறித்த மனந் திறந்த, முற்கற்பிதங்கள் இல்லாத மிகக்குறிப்பாக தேர்தல் அரசியல் நோக்கங்கள் இல்லாத, உரையாடலுக்குப் போக வேண்டும். ஆயுதப் போராட்டம் நடந்த எல்லா சமூகங்களிலும் இறந்த காலத்தை கிண்டப் புறப்பட்டால் ரத்தமும் நிணமும் எலும்புக்கூடுகளும்தான் வெளியே வரும். கசப்பும் வெறுப்பும் வன்மமும் பழிவாங்கும் வெறியும் தூண்டப்படும். எல்லாருடைய கைகளிலும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு ரத்தம் இருக்கும். தமிழ் மக்கள் தங்களுக்குரிய அரசியல் பொருளாதார விடுதலையை அடையும் பொழுது அந்த வெற்றியின் மீது இந்த வெறுப்பை, பழிவாங்கும் உணர்ச்சியை, தியாகி துரோகி வேறுபாடுகளைக் கடப்பது இலகுவாக இருக்கும். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பின்னணியில், தமிழ்த் தேசிய அரசியலில் உள்நோக்கிய பண்புருமாற்றத்தைச் செய்வது சவால்கள் மிகுந்ததாகவே இன்று வரை உள்ளது. அவ்வாறான பண்புரு மாற்றத்தை நோக்கிய உரையாடலின் போக்கில் இப்போதைக்கு இடைக்காலத்துக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. ஒவ்வொரு இயக்கமும் கட்சியும் அதன் தியாகிகளின் நாட்களை அதனதன் வசதிக்கு ஏற்ப அனுஸ்டிக்கட்டும்.ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் தன் தியாகியின் நாளை விரும்பியபடி அனுஷ்டிக்கட்டும்.ஒரு பொதுவான தியாகிகள் தினத்தை கண்டுபிடிக்கும் வரைக்கும் எல்லாத் தரப்புக்களும் எல்லாக் கட்சிகளும் அவரவர் தியாகிகள் தினத்தை அவரவர் அனுஷ்டிக்கட்டும். இந்த விடயத்தில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதே இப்போதைக்குப் பொருத்தமானது. https://athavannews.com/2024/1410619
  14. துறைமுகம் வந்தால்... நல்லது. ஆசை காட்டி, மோசம் செய்யாமல் இருந்தால் சரி. இதுவரை... நாங்கள் பார்க்காத வாக்குறுதிகளா? இதுவும் கடந்து போகும்.
  15. கோழி மேய்க்கிற வேலை என்றாலும், கோரணமேந்து (Government) உத்தியோகம் தான் உசத்தி என்று, வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போனதிலிருந்து கடந்த பல தலைமுறைகளாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்தவுடனேயே… யாரையாவது பிடித்து ஒரு அரச உத்தியோகத்தில் அமர்ந்தால்… பென்சன் எடுக்கும்வரை சோத்துக்கு பிரச்சினை இல்லை என்பதே பல இலங்கையரின் மனநிலை. கற்ற கல்வியை வைத்து சுயதொழில் செய்வது… மிக மிக அரிது. அதற்குரிய வழியையும், ஊக்கத்தையும் அரசும் கொடுக்க முன் வருவதில்லை.
  16. A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே இருவருக்கும் இடையே இருந்தது. நேற்று மெஸெஞ்சர்ல சும்மா மெஸேஜ் போட்டு பழைய கதைகளைப் பேசினேன். இருவரும் பேசும்போது "உண்மையைச் சொல்லு அப்ப ஏன் என்னைய வேணாம் எண்டு சொன்னாய்?" என்று கேட்டேன். "அப்ப நீ பார்க்கிறதுக்கு நல்லா இருக்க மாட்டா டா" என்றாள். "அப்ப இப்ப பார்க்கிறதுக்கு நல்லா இருக்கேனா?" என்று கேட்டேன். "இல்ல இப்ப இருக்கிறதுக்கு அப்ப இருந்தது பரவால்ல போல" என்றாள். அந்த அவமானத்துல இப்ப நான் அவள ப்ளொக் பண்ணிட்டேன். 😂 Suhirtharaj Logarasa
  17. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது என மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1410527
  18. யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி. இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பெளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டியாகும். சென்ற வருடம் முதலாவது போட்டியை மிகச் சிறப்பாக யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தி இருந்தது. இப் போட்டியானது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்கள் சர்வதேச தரத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு பல சதுரங்க வீரர்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கின்றது. போட்டியின் இன்றைய தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன் கலந்து கொண்டார். லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனம் மற்றும் வெளிநாடு, உள்நாட்டில் வசிக்கின்ற நலன் விரும்பிகளின் நிதி பங்களிப்புடன் சிறப்பாக இந்த சதுரங்க போட்டி நடைபெறுகின்றது. https://athavannews.com/2024/1410539
  19. உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410513

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.