Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இலங்கை தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412820
  2. 2024 மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.5% வளர்ச்சி! 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், விவசாய பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 3.0 சதவீதம், 10.8 சதவீதம் மற்றும் 2.6 சதவீதம் செல்வ வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1412734
  3. நாடு திரும்பினார் ஜனாதிபதி! இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர், (Vice President Of India Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் (Dr.S.Jayashankar – Minister of External Affairs of India), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda – Minister of Health), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Shri Ajith Doval – National Security Advisor of India) உள்ளிட்ட இராஜதந்திரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு, வணிகம், பாதுகாப்பு தொடர்புகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்யை தினம் புத்த காயாவிற்கான பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினர் அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412754
  4. நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்! கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1412768
  5. குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு. சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர். மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப் பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://athavannews.com/2024/1412810
  6. இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா! 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும். மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலவே, ஒவ்வொரு நோயாளிக்கும் தடுப்பூசி தனிப்பயனாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், அது எவ்வாறு வழங்கப்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ரஷ்யாவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2022 இல் மாத்திரம் 635,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிரான தடுப்பூசிகள் போன்ற புற்றுநோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசிகள் சந்தையில் ஏற்கனவே உள்ளன. அமெரிக்காவில், புளோரிடா பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் மூளை புற்றுநோய்க்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412741
  7. சும்மர்…. வெளியிலை இருக்கிற ஆட்களை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய் முறைப்பாடு கொடுத்து உள்ளே தூக்கி போடுகின்றவர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரானால்… 20 பேர் வரையான தமிழ் இளைஞர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஒரு செய்தியில் வாசித்தேன். செய்த பாவம்தான்… ஆளை இப்பிடி, வீட்டிலை குந்த வைத்திருக்குது. 😂 🤣
  8. தற்போதைய ஊடகங்கள் பற்றி தாங்கள் கொண்ட கோபம் நியாயமானது. கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி. 👍🏽
  9. சட்டத்தரணி தவராசாவும், இவரின் காலஞ்சென்ற மனைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கௌரிசங்கரி தவராசாவும் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி வெளியே கொண்டு வந்துள்ளார்கள் என அறிந்தேன்.
  10. ஓம். யோஷித்த ராஜபக்‌ச ஒரு பெண்ணை காதலித்தவர். அந்தப் பெண் இவரை விரும்பாமல்... முஸ்லீம் பையன் ஒருவரில் காதல் கொண்ட போது, அந்த முஸ்லீம் பையனை கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. மேலதிக தகவல்களுக்கு.... @goshan_che, @குமாரசாமி, @Nathamuni ஆகியோரை அணுகவும். 😂
  11. கவி அருணாச்சலத்தைப் பற்றி.... வீரகேசரி பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று.. //"மூனா" என்கிற தெட்சிணாமூர்த்தி செல்வகுமாரன். ஈழத்தின் கருத்தோவிய உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்// எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததாக அறிகின்றேன். அதனை @ஏராளன், @கிருபன் அல்லது வேறு யாராவது தேடி எடுத்து இங்கு இணைத்து விடும்படி அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி. 🙂
  12. இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை. பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 30.11.2024 அன்று கைது செய்யப்பட்டிருந்தார் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், “உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான குறித்த நபர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார். பிரித்தானியாவுக்கு பயணம் அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய இவர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார். பொலிஸார் 2012 இல் சந்தேக நபர் சங்கருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதி மன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்படும்வரை இவருக்கெதிராக பொலிஸ் விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றதை புரிந்தார் என்பதை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேட்கொண்டிருக்கவில்லை என்பதை நீதி மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலப்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுத்துவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதனையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். https://tamilwin.com/article/court-order-regarding-british-citizen-1734428313
  13. 13 பிளஸ், மைனஸ்... விளையாட்டு... சம்பந்தன், மகிந்த, ரணிலுடன் போயிட்டுது. இடைக்கிடை செல்வமும், விக்கியரும்தான் அதை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 😂
  14. மாப்பிள்ளை... எவ்வளவு சம்பாதிக்கிறாரு. தோராயமா பத்தாயிரம். மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு. சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣
  15. அமைச்சர் சந்திரசேகரனையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம். மோடி அரசில் உள்ள அத்தனை தமிழ் அமைச்சர்களையும் (ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், வேல் முருகன்) அனுரவை சந்திக்க வைத்துள்ளார்கள்.
  16. "கேக்"கில் உள்ள ஆண்டுகளை கவனிக்கவும். 😂
  17. மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்தன 300 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொண்டு முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் இன்று சபையில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ , ”எமது நாட்டிலுள்ள வறுமையானவர்களுக்கு உதவுவதற்காக 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சட்டத்தைக் கொண்டுவரும்போது, உதவி செய்வதற்கான காரணிகளும் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில், முதலாவதாக காரணியாக வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக கல்வியறிவை வளர்த்தெடுக்க. மூன்றாவதாக மதங்களை வளர்த்தெடுக்க. நான்காவது, தேசிய ரீதியாக ஏதேனும் சேவை செய்தவவர்களுக்கு உதவிகளை செய்ய என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக ஜனாதிபதியினால், அல்லது நிதியத்தினால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உதவி செய்ய என்று காரணம் கூறப்பட்டுள்ளது. விசேடமாக வறுமை, கல்விக்காகத்தான் இந்த நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். என்னிடம் இப்போது ஒரு ஆவணம் உள்ளது. இதில், 2005 முதல் 2024 ஆண்டு வரை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தினால் பலனடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது. இதில் சிலரின் பெயர்களை நான் இங்கே வாசிக்கிறேன். பி. ஹரிசன் பியசேன கமகே சுமேதா ஜயசேன, இவருக்கு மெனராகலையில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. மனோஜ் சிறிசேன பி.தயாரத்ன எஸ்.சி. முத்துகுமாரன வாசுதேவ நாணயக்கார சரத் அமுனுகம எஸ்.பி.நாவின்ன ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தில் நிதியுதவிப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களே இவை. இன்னும் சிலரது பெயர்களும் உள்ளன. எனினும் இவர்களை தேடிப்பிடிப்பது சற்று கடினமாகும். அந்தவகையில், குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.பி.டி.பி.கே. ஜயசேகர. எச்.எம்.பி.என்.டி.சில்வா. இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் பியல் நிஸாந்த டி சில்வா. அடுத்து எஸ்.ஏ.டி.எஸ். பிரேமஜயந்த. யார் இவர்? ஆம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. ஈ.ஏ.ஐ.டி.டி.பெரேரா? இவர் மேல்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் யார்? இசுறு தேவப்பிரிய பெரேரா. இன்னும் உள்ளார்கள். எஸ்.ஏ,ஜகத் குமார. 10 இலட்சம் ரூபாயை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளார். கே.பி.எஸ். குமார சிறி, 9 இலட்சத்து 53, 430 ரூபாயை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஜயலத் ஜயவர்த்தன 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார். நாமல் குணவர்த்தன 10 இலட்சம் ரூபாய், தர்ததாஸ பண்டா 10 இலட்சம் ரூபாய், விதுர விக்ரமநாயக்க 15 இலட்சம் ரூபாய், விமலவீர திஸாநாயக்க 30 இலட்சம் ரூபாய், லக்கி ஜயவர்த்தன 16.2 இலட்சம் ரூபாய், சந்திரசேகரன் 14 இலட்சம் ரூபாய், 2014 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாய், ஜோசப் மைக்கல் பெரேரா 27 இலட்சம் ரூபாய், டி.பி. ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாய் டபிள்யு.எம்.எஸ்.பொன்சேகா 55 இலட்சம் ரூபாய், 2022 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் சட்ட ஆலோசகரான ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாய், எலிக் அலுவிகார 22 இலட்சம் ரூபாய், ரஞ்சித் அலுவிகார 8.6 இலட்சம் ரூபாய். இந்த அலுவிகார பரம்பரையே ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணத்தில்தான் மருந்து வாங்கியுள்ளார்கள். இன்னும் உள்ளது. ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாய், கெஹலிய ரம்புக்வல்ல 110 இலட்சம் ரூபாய்… எம்.கே.டி.எஸ். குணவர்த்தன 112 இலட்சம் ரூபாய், ரஞ்சித் சொய்சா 188 இலட்சம் ரூபாய், டி.எம்.ஜயரத்ன 300 இலட்சம் ரூபாய்… இவை எல்லாம் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணமாகும். எமது கிராமங்களில் வாழும் மக்கள், இதய நோய் சிகிச்சைக்கோ அல்லது கிட்னி பாதிப்புக்கான சிகிச்சைக்கோ ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை நாடினால், எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவார்கள். ஒரு இலட்சம், இரண்டு இலட்சத்தை இங்கிருந்து பெற்றுக் கொள்ளவே அத்தனை சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும். ஆனால், இவர்களுக்கு எல்லாம் எந்த பிரிவின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது? பாவம் இவர்கள் எல்லாம் வறுமையானவர்கள்தானே. இப்படித்தான் இவர்கள் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை பயன்படுத்தியுள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கரமசிங்க காலத்தில்தான் இந்த சம்பங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக மக்களுக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் தெரியாது. திறைச்சேரியில் இருந்துதான் இந்த நிதி வழங்கப்படுகிறது. 2022 முதல் 2024 பிரதமர் அலுவலகத்தின் வைத்திய பிரிவின் செலவு எவ்வளவு தெரியுமா? 121 இலட்சம் ரூபாய்… அதாவது இந்த இரண்டு வருடங்களில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் வைத்திய செலவுகள். பிரதமர் அலுவலகத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம் இருந்துவிடப் போகிறது? ஏன் அங்கே சென்று சிகிச்சைப் பெற முடியாதா? தனியார் வைத்தியசாலைகள் கூட அருகில் உள்ளபோது, 121 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நிறுத்ததான், மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்” என தெரிவித்தார். https://athavannews.com/2024/1412727
  18. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை விமர்சித்தார். அவர்கள் முதன்மையாக பொது நிதியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். நிதிப் பொறுப்பைப் பேணுவதன் மூலம் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும். செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட செலவினங்களை வெளிப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள்: மஹிந்த ராஜபக்ஷ •⁠ முப்படை: ரூ. 328 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 327 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 55 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 710 மில்லியன் மைத்திரிபால சிறிசேன •⁠ முப்படை: ரூ. 06 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 185 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 16 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 207 மில்லியன் கோட்டபாய ராஜபக்ஷ •⁠ முப்படை: ரூ. 258 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 39 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 10 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 307 மில்லியன் ரணில் விக்ரமசிங்க •⁠ முப்படை: ரூ. 19 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 60 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 82 மில்லியன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க •⁠ முப்படை: செலவுகள் இல்லை •⁠ பொலிஸ்: ரூ. 99 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 12 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 110 மில்லியன் ஹேமா பிரேமதாச (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி) •⁠ முப்படை: செலவுகள் இல்லை •⁠ பொலிஸ்: ரூ. 30 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 32 மில்லியன் கடந்த 11 மாதங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்தச் செலவு ரூ. 1,448 மில்லியன் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார். https://athavannews.com/2024/1412663
  19. கோவிலுக்குப் போகும் போது... வேட்டியை அழகாக கட்டிக் கொண்டு போக வேண்டும். தவறணைக்கு போகும் போது... வேட்டியால், றோட்டு... கூட்டிக் கொண்டு போக வேணும். 😂 முன்னாள் பா.உ. சுமந்திரன்... சரியாய்த்தான் செய்திருக்கிறார். 🤣
  20. சில யூ ரியூப் காரர் கடைகளில் போய் சாப்பிட்டு அதனைப் பற்றி காணொளி தயாரிப்பார்கள். அப்படி அவர்கள் சாப்பிடுவதை கண் கொண்டு பார்க்க முடியாது. நாகரீகமாக சாப்பிட வேண்டும் என்ற பண்பு அறவே தெரியாது, அவர்கள் பிசைந்து சாப்பிடுவதையும்... மீசை, தாடியில் சாப்பாடு "அப்பி" இருப்பதையும் பார்க்க எங்களுக்கும் வயித்தை குமட்டிக் கொண்டு வரும். இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையும்.... இதுகளை பார்த்து பழக்க வழக்கம் இல்லாமல் திரியப் போகுதுகள். யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள். 😂
  21. என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள். இலங்கையில்... இதன் மூலம், மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல் யூ ரியூப் நடத்துபவர்கள் இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு, வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து ஒரு கிழமைக்கு 80 லட்ச ரூபாய் பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.
  22. யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதியை" போட்ட... எஞ்சினியரையும், ஓவசியரையும் ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும். அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்... நான் உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.