Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு போய் வீதியை நோக்கி ஓடியபோது வழியில் வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பியின் உடலை மீட்ட நாயின் உரிமையாளரும் ஊரைச் சேர்ந்தவர்களும் கருப்பிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளனர். பண்டிகை காலங்களில் இது போன்று விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என கால்நடை மருத்துவர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407130
  2. வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர். எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் செல்லும் மன்னரின் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. பல தசாப்த காலத்துக்கு பின்னர் ஸ்பெய்னில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1407052
  3. சபாஷ்.... சரியான போட்டி. சும்மா இருக்கும் தமிழர்களை... சொறிந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, இஸ்ரேல்காரன் தான் பொருத்தமான ஆள். இனி அவனுடன்... மல்லு கட்டுங்கோ. உங்களுக்கும்... பொழுது போக வேண்டும் எல்லோ.... இப்ப சரியான ஆள் கிடைத்திருக்கு. இனி... உங்களுக்கு மூச்சு விடக் கூட, நேரம் இருக்காது. நடத்துங்கோ... உங்கள் நாடகத்தை.
  4. சபாஷ்.... சரியான போட்டி. சும்மா இருக்கும் தமிழர்களை... சொறிந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, இஸ்ரேல்காரன் தான் பொருத்தமான ஆள். இனி அவனுடன்... மல்லு கட்டுங்கோ. 👇
  5. திருகோணமலையில்… கஜே அணியும், தமிழரசு கட்சியும் தான் போட்டியிடுவதாக எங்கோ வாசித்த நினைவு கோசான். ஓரு பிரபல கத்தோலிக்க பாதிரியாரின் வேண்டுகோளின் படி.. மற்றைய கட்சிகளான சித்தார்த்தன், மணிவண்ணன், தவராசா ஆகிய பெரும்பாலான கட்சிகள் ஒதுங்கி விட்டதாக அறிந்தேன். இது எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை. நீங்களும் ஒரு முறை வேறு வழிகளில் உறுதிப் படுத்துவது நல்லது. இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் உண்மை நிலவரத்தை தெளிவு படுத்தவும்.
  6. திருகோணமலையில் தமிழர்களின் வாக்குகள் சிதறாமல் தமிழர் வெல்வதற்காக மற்றைய கட்சிகள் ஒதுங்கி, தமிழரசு கட்சிக்கு விட்டுக் கொடுத்தது போல்… அம்பாறையில் தமிழர் தெரிவை நிச்சயப் படுத்த… தமிழரசு கட்சி ஏன், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. உங்களால்…. இந்த ஒரு ஆபத்தான விடயத்திலும் ஒற்றுமையாக செயல் பட முடியவில்லை என்றால்… நாசமாய் போவதைத் தவிர வேறு வழி இல்லை.
  7. ஊத்தை வேலை எல்லாத்தையும் செய்து விட்டு.... தங்களுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி நாடகம் ஆடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
  8. படம்... "கிளியர்" இல்லாமல் இருப்பது எனக்கு மட்டும் தானா? 😂 அல்லது உங்களுக்குமா? 🤣
  9. சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன் பயங்கர கெட்ட ஆள்.
  10. இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan
  11. டக்கியை விட... சுமந்திரன், தனக்கு வெளி நாட்டு அமைச்சர் பதவியோ, நீதி அமைச்சர் பதவியோ கிடைக்கும் என்ற பெரிய எதிர் பார்ப்பில் உள்ளார். தேர்தல் முடிந்த பின்... அசடு வழிய நிற்கப் போகின்றார்.
  12. விடிய விடிய ராமாயணம்.... விடிஞ்சாப் பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற கதையாய் இருக்கு. திரும்பவும் முதலில் இருந்தா... ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொழுது போகவில்லைப் போல் இருக்கு. சுமந்திரனின் திரிகளில்... அவரின் சுத்து மாத்துகள் ஏராளாமாக எழுதப் பட்டு உள்ளது, தேடி வாசியுங்கள். 🙂 இப்போதைக்கு... இந்தக் காணொளியை, 14´வது நிமிடத்தில் இருந்து கேளுங்கள்.
  13. நடிகர் விஜய் அரசியல் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது. ஒருமுறை சன் டிவியில் நடந்த போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான். சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது சன் டிவி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டான். இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜய். இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது. விஜய் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தோழர் பாலன்
  14. யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா ஆகியோரையும் அன்புடன் அழைக்கின்றோம். தாங்கள் போட்டியில் கலந்து கொள்ள ஏதாவது உதவி தேவைப் பட்டால்.... தாராளமாக இதே பதிவிலேயே கேளுங்கள். உதவி செய்ய மற்றைய உறவுகள் காத்திருக்கின்றார்கள். 👇 ஏற்கெனவே போட்டியில் கலந்து கொண்டவர்கள்.
  15. வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்! வாகன இலக்கத் தகடு அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், வாகன இலக்கத் தகடு விநியோகிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், வாகன உரிமையாளர்களுக்கு வாகன இக்கத் தகடு வழங்கப்படாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1406962
  16. சுமந்திரனால்... குட்டிச் சுவரான தமிழரசு கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப கனகாலம் எடுக்கும் என்றாலும், சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 🙂 நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்... ஆம். ✔️ 😂
  17. தந்தை செல்வாவுக்கு பக்கத்தில்... சம்பந்தனை கொண்டு வந்து வைத்ததை பார்க்க சகிக்க முடியவில்லை. உந்த மூஞ்சையை பார்த்து, தமிழரசு கட்சிக்கு விழுகிற வாக்கும்... விழாமல் போகப் போகுது. சொந்த செலவிலை.. "சூனியம்" செய்யுறாங்கள்.
  18. விசுகர், மேலுள்ள ஓவியத்தை குறிப்பிடுகின்கிறீர்கள் என நினைக்கின்றேன். தேர்தலுக்கு முன்... வடக்கு, கிழக்கு இணைப்பை பற்றி அனுரா கதைத்தால்... ஒட்டு மொத்த சிங்கள வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்... தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப் போகின்றோம் என்று எந்த இடத்திலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகக் கூட குறிப்பிட்டு பேசவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு... என்பது, இனி சாத்தியமற்ற விடயம் என்றே நான் நினைக்கின்றேன். அதுவரை... கிடைக்கும் வீதி விடுவிப்பு போன்ற சிறு சலுகைகளை வந்த வரையில் லாபம் என்று அனுபவிக்க வேண்டியதுதான்.
  19. யாழ். பலாலி வீதி திறப்பும், சுமந்திரனின் சந்தர்ப்ப வாதமும். சுமந்திரனின் சுத்துமாத்தை அறிய... 14´வது நிமிடத்தில் இருந்து காணொளியை கேட்கவும்.
  20. தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன். மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள். இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு. மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது. நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது. தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை அனுர ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒரு மாற்றம்தான். அதில் சந்தேகம் இல்லை. அந்த மாற்றம் ஒரு வெற்றி அலையாக தமிழ் பகுதிகளுக்கும் பரவியது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள்,விவரம் தெரிந்தவர்கள் மத்தியில் ஜேவிபி குறித்த ஓர் எதிர்பார்ப்பும் காணப்பட்டது.குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு, அக்கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படாமை, அக்கட்சிகள் உதிரிகளாக நின்று வாக்கு கேட்பது, சுயேச்சைகளின் அதிகரிப்பு… போன்ற பல விடயங்கள் காரணமாகத் தமிழ் தேசிய கட்சிகளின் மீது மக்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வரும் ஒரு பின்னணியில், ஒரு பகுதி படித்தவர்கள், அரசியலை அறிவுபூர்வமாக அணுகுபவர்கள், ஜேவிபியை ஒரு மாற்றாக பார்க்க தொடங்கிய ஒரு நிலைமை சில வாரங்களுக்கு முன்பு வரை காணப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்குள் அந்த எதிர்பார்ப்புக குறையத் தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் ஜேவிபியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் பெருமளவுக்கு மக்கள் அபிமானத்தை வென்றெடுத்தவர்கள் அல்ல. அவர்கள் பொதுவெளியில் ஆற்றும் உரைகளும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தருபவைகளாக காணப்படுகின்றன. திருகோணமலையில் ஜேவிபி நிறுத்தியிருக்கும் ஒரு வேட்பாளர் ஒப்பீட்டளவில் மூன்று இனங்களின் மத்தியிலும் தன் கவர்ச்சியை ஓரளவுக்குக் கட்டி எழுப்பி வைத்துள்ளார்.ஆனால் ஏனைய தமிழ்ப் பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்று தெரிகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, வடக்கில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிபோல காட்சி தருவது தொடர்பிலும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.அரச வைபவங்களில் அவர் அதிகம் துருத்திக்கொண்டு தெரிகிறார்.அதுவும் அனுர கொண்டுவந்த மாற்றம் எது என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. மேலும் அனுர ஆட்சிக்கு வந்ததும் முட்டை விலை குறைந்தது.ஆனால் அது தற்காலிகமானது என்பதைத்தான் சந்தை நிலவரங்கள் பின்னர் வெளிப்படுத்தின. அப்படித்தான் தேங்காயின் விலையும். மாரி காலங்களில் தேங்காய் உற்பத்தி குறைவதனால் தேங்காய் ஏற்றுமதியைத் தடுக்கும் அரச தீர்மானம் ஒன்று அமுலில் உள்ளது. ஆனால் அதை மீறி தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகிறார்கள். முட்டையைப் போலவே தேங்காயும் எல்லா வீடுகளின் சமையலறைகளிலும் அத்தியாவசியமான ஒரு பொருள். அதன் விலை அதிகரிப்பானது ஜேவிபி கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றம் தொடர்பான ஏமாற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியாது என்பது அரசியலை ஓர் அறிவியலாக பயில்பவர்களுக்கு விளங்கும்.ஆனால் சாதாரண வாக்காளர்களுக்கு அது விளங்காது. தேங்காயும் முட்டையும் அனுர மீதான எதிர்பார்ப்பைக் குறைக்க கூடும். அடுத்தது, பிரதான விடயங்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள், ஜேவிபியிடம் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை நிரூபித்தன. எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறி வரும் விடயம் அதுதான். அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே அவரை நோக்கி அது தொடர்பான கேள்விகளை நான் பகிரங்கமாக எனது கட்டுரைகளில் எழுப்பியிருந்தேன். அக்கேள்விகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் என்னை விமர்சித்து பதில் எழுதியிருந்தார். அவர் இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவராக தன்னை காட்டிக் கொள்ளும் ஒருவர். அவர் எனக்கு எழுதிய பதில்களை இப்பொழுது காலம் தோற்கடித்து விட்டது. இனப்பிரச்சினையை ஜேவிபி ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத்தான் விளங்கி வைத்திருக்கிறது. அதை இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்புக் கூடாக விளங்கி வைத்திருக்கவில்லை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக் கொள்ளாமைதான் இனப்பெருச்சினைக்கு மூல காரணம். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்,தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காத வரையிலும் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் இந்த விடயத்தில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் ஜேவிபியிடம் அடிப்படை விளக்கம் இல்லை என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தன. அடுத்தது பயங்கரவாத தடைச் சட்டம்.அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் ஒரு தரப்பாக இருக்கும் பொழுது ஜேவிபி பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் போன்றவர்களோடு சேர்ந்து போராடியது. ஆனால் இப்பொழுது அது அதன் வார்த்தைகளிலிருந்து வழுக்கத் தொடங்கிவிட்டது என்று சுமந்திரன் குற்றம் சாட்டுகிறார்.அது உண்மை.இனப் பிரச்சினை தொடர்பாக சரியான விளக்கம் இல்லை என்றால், அதோடு தொடர்புடைய ஏனைய விடயங்களிலும் அப்படித்தான் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாத நோக்கு நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாகத்தான் தெரியும். ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வந்து தமிழ்ப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று விழித்தார். ஆனால் ஜேவிபினர் அவர்களுடைய இரண்டாவது போராட்டத்தை தொடங்கியபொழுது அவர் அவர்களை பயங்கரவாதிகள் என்று விழிக்கவில்லை. நாசகார சக்திகள் என்றுதான் விழித்தார். வார்த்தைத் தெரிவில்கூட ஜெயவர்த்தனவிடம் இனவாதம் இருந்தது. ஆயுதமேந்திய தமிழ் மக்களை அவர் பயங்கரவாதிகள் என்று அழைத்தார். ஆனால் சிங்கள மக்களை நாசகார சக்திகள் என்று அழைத்தார். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் இயக்கங்களைப் போலவே ஜேவிபியும் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு ஆறுகளில் வீசப்பட்டார்கள். இன்னொரு பகுதியினர் குற்றுயிராக டயர்களோடு போட்டுக் கொளுத்தப்பட்டார்கள். அபகீர்த்தி மிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி- அவர் சித்திரவதைகளுக்குப் பேர்போனவர்.தன்னிடம் அகப்பட்ட ஜேவிபிக் காரர்களை எப்படிச் சித்திரவதை செய்வார் என்பது தொடர்பாக ஒரு கதை அப்பொழுது வெளிவந்தது. இரண்டு குமிழ்முனைப் பேனாக்களை அவர் கைதிகளின் இரண்டு காதுகளுக்குள்ளும் செருகுவார்.கைதி உண்மையைக் கூறாவிட்டால் அவர் தன் இரண்டு கைகளாலும் அந்த இரண்டு குமிழ் முனை பேனாக்களையும் பலமாக அறைவார். குமிழ்முனைப் பேனா காதைக் கிழித்துக்கொண்டு கபாலத்தைத் துளைக்கும். இப்படிப்பட்ட கொடுமையான அனுபவங்களுடாக வந்த ஒரு இயக்கம், இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்தை நியாயப்படுத்துகின்றதா? அது மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திலும் ஜேவிபி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில்,கலாநிதி விஜய ஜெயலத் உரையாற்றும் பொழுது இலங்கைத் தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறந்துவிடும் ஒரு குரூரமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்ற பொருள்பட உரையாற்றினார்.அவர் அவ்வாறு கூறியது, கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஜிவிபி உறுப்பினர்களின் அல்லது ஆதரவாளர்களின் கதையைத்தான். ஆயிரக்கணக்கான ஜேவிபியினர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதொடர்பான சரியான புள்ளி விபரம் கூடக் கையில் இல்லை. ஆனால் அதுதொடர்பாக ஜேவிபி எப்பொழுதாவது திறந்த, நீதியான விசாரணையைக் கோ? இல்லை. ஏன்? ஏனென்றால், அவ்வாறு விசாரணைகள் நடந்தால் படைத்தரப்பே குற்றம் சாட்டப்படும். யுத்த வெற்றிக்கு பின் எந்தப் படைத்தரப்பை ஜேவிபி தலையில் வைத்துக் கொண்டாடியதோ, இப்பொழுது அனுரவுக்கு எந்த படைதரப்பு அதிகம் வாக்களித்ததோ, அதே படைத்தரப்பை விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டியிருக்கும். ஜேவிபி அதை விரும்பவில்லை. அதாவது அங்கேயும் இனத்தின் வெற்றியை தான் ஜேவிபி பாதுகாக்க முற்பட்டது. தனது சொந்த தோழர்களுக்கான நீதியை அல்ல. மேலும் கடந்த வாரம், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய செல்வினை பனம்பொருள் அபிவிருத்தி சபை பணிப்பாளர் பதவிக்கு நியமித்த ஜேவிபி அமைச்சர்,சில நாட்களில் அந்த முடிவை மாற்றி அப்பதவிக்கு வேறொருவரை நியமித்திருக்கிறார்.என்ன காரணத்துக்காக செல்வின் நீக்கப்பட்டார்? செல்வினுக்கு அப்பதவி வழங்கப்பட்ட பொழுது அதை ஒரு பெரிய மாற்றமாகக் காட்டி சில தமிழ் இடதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். அரசியல் நோக்கு நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால் ஜேவிபி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது என்ற பொருள்படவும் எழுதினார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைதான் செல்வின் விவகாரம் தமிழ் மக்களுக்கு உணர்த்தியது. நிறைவேற்று அதிகாரம் கிடைத்ததும் ஜேவிபி அதே சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் கைதியாக மாறிவிட்டதா? அனுர அலை அதன் மினுக்கத்தை இழந்து வருகிறதா? அனுர,ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நான் அவரிடம் பகிரங்கமாக சில கேள்விகளைக் கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கேள்விகளுக்கு பதில் கூற முற்பட்ட தமிழ் ஜேவிபியர்கள் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் இனவாதம் பின்வாங்கி விட்டது என்பதுதான். அது ஆனால் அது பின்வாங்கவில்லை.அது தற்காலிகமாக தன்னை தற்காத்துக் கொண்டது; அல்லது பதுங்கிக் கொண்டது அல்லது உரு மறைப்புச் செய்துகொண்டது என்பதுதான் சரியா? கடந்த சில வார கால அனுர ஆட்சி தமிழ் மக்களுக்கு உணர்த்துவது அதைத்தானா? https://athavannews.com/2024/1406897

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.