Everything posted by தமிழ் சிறி
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
Bar Licence டீலில் ஈடுபட்ட எம்.பி.க்களின் பெயர்கள் நாளை மறு தினம் 03.10.24 அன்று, வெளியிடப் படும் என NPP யின் பிரதான செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த முடியவில்லை.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்! தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது. அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும். இந்நிலையில் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன். இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசுக் கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும். அந்த வகையில் எங்களைப் பொறுத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும். மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே வன்னியை பொறுத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1402031
-
ரெய்லர்... தைத்த, சட்டை.
ரெய்லர்... தைத்த, சட்டை. ஒருவா், ரெய்லர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார். ரெய்லர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார். அவரும் வேறு ஒரு ரெய்லர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார். ரெய்லர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார். 5 நாள் கழிச்சு இவுரு போனார். சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது. அப்ப ரெய்லரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான். இவரு ஒண்ணும் பேசலை. நேரா விருவிருன்னு பழைய ரெய்லர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவுமில்லாம, அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தைச்சுப் போட்டிருக்காரு. நீ ரெய்லரே இல்லைன்னு சத்தம் போட்டாரு. அந்த ரெய்லர் கேட்டாரு, சார் அந்தப் பையனுக்கு என்ன வயசிருக்கும்ன்னு கேட்டாரு. என்ன இரண்டு வயசு இருக்கும்ன்னாரு. *உடனே ரெய்லர் சொன்னாரு, என் மகனுக்கு ஒம்பது வயசு.* அது சரி. 😂
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அதுகும் சரிதான். 😂 பன்றியுடன் சேர்ந்த கன்றும்.... "பீ " தின்னும். 🤣
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1401982
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
பிரான்ஸ் வர்த்தகர் @விசுகு அவர்களை மேடைக்கு வந்து, விளக்கம் தரும்படி அன்புடன் அழைக்கின்றோம். 😂 🤣
-
பொது தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் விக்னேஸ்வரன் - மணிவண்ணன் கூட்டணி.
நாங்கள்.... போன பஸ்சிற்கு, கை காட்டுகின்ற ஆட்கள் தானே. 😂
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
பையா.... அந்தப் பெயரை வைத்தால்தான், சந்தேகப் பட மாட்டார்கள். "படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என்ற மாதிரி இருக்கு இவர்களின் செயல்கள். 😂
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
வடக்கில் மூவாயிரம் வாக்குகள் மாத்திரம் எடுத்த ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுபானச்சாலை பெர்மிட்! ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானசாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மது பானசாலைகளுக்கான அனுமதியைப் பெற்று வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார். இந்த இரு மதுபானசாலை களையும் திறப்பதற்காக பிரதேச செயலகத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்றபோதும் பிரதேச செயலகம்அதை ஏற்க மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் அமைப்பதற்கான அனுமதிகளே நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபான சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது. இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபார்சில் வழங்கப்பட்ட ஒரு மது பாடசாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிச் சந்தியில் ஓர் மது பானசாலைக்கான அனுமதி சாகல ரட்ணாயக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாகல ரட்ணாயக்க எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மது பானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபான சாலைக்காகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின் மகனின் பெயரில் பரந்தன், கண்டாவளை பிரதேச செயலகத்தில் 2024-06-11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. Kunalan Karunagaran is with தமிழரசுக் கட்சி ஊர்காவற்றுறை தொகுதி and 11 others
-
கருத்து படங்கள்
- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
வன்னியில் Bar பொமிட் எடுத்தவர்களின் List வெளிவந்திருக்கிறது. 1) EPDP வன்னி எம்பி திலீபன் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் இரண்டு Bar பொமிட் எடுத்துள்ளார். 2) ரணிலின் செயலாளர் சாகல ரட்ணாயக்க நெடுங்கேணியில் பாலநாயகம் என்ற பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருக்கிறார். யாழ் அங்கயனின் சித்தப்பா ராஜன், தனது மகன் விதுர்சனின் பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலகத்தில் விதுர்சனின் பெயரிலேயே பணம் செலுத்தியிருக்கிறார். Kilinochchi Podiyan- பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா!
பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா! பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்விற்கான நிதி பங்களிப்பினை நோர் தம்டன் தமிழ் வர்த்தகர்கள் வழங்கியிருந்தன. குறித்த விளையாட்டு போட்டி முதல் தடவையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401882- 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே' - மன்னாரில் போராட்டம்
மன்னார் மக்களுக்கு வாழ்த்துக்கள். இதே முன் மாதிரியை மற்றைய மாவட்ட மக்களும் பின் பின்பற்ற வேண்டும்.- 'கௌரவ' பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் - கரு ஜயசூரிய
“கௌரவ” என்ற சொல்லுக்கு… இப்போ இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இல்லை. ஏல்லாரும் கசிப்பு காச்சுகின்ற சாராய வியாபாரிகள். 😂 திருட்டுப் பயல்கள். 🤣- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் காலை 7:50 மணிக்கே மதுபானசாலை திறந்து வியாபாரம் களை கட்டுதாம். 😮 திராவிடத்தை பார்த்து, தொழில் கற்றுக் கொண்ட…. வடக்கு / கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள். 🧐 தமிழர் உரிமைக்காக போராடப் போகின்றோம் என்றவர்கள்… கனக்க “Bar Licence“ எடுக்க உயிரை கொடுத்து போராடி இருக்கின்றார்கள். 😂 🤣- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
மிக்க நன்றி கந்தப்பு. 🙂 இம்முறை தேர்தல் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இருக்கும் என நினைக்கின்றேன். போட்டியை நடத்த சம்மதித்தமைக்கு மீண்டும் நன்றிகள். 🙏- ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்….. 80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள். ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம். மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
பதிலுக்கு நன்றி கிருபன் ஜீ. கந்தப்பு அவர்களின் சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இவ்வளவையும் கை நீட்டி, வாங்கி விட்டுத்தான்... தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் கதைக்காமல், "பம்மிக்" கொண்டு இருந்தவர்கள். 😂- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
யாழ்.கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் வைக்க.... @கந்தப்பு அல்லது @கிருபன் ஜீயை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂 வருகின்ற நவம்பர் மாதம் மட்டும்... தேர்தல் ஆணையாளர் என்ற பாரிய பொறுப்பை, யாழ். களம் தங்களுக்கு தருகின்றது. தாமதிக்காமல்... தங்கள் கடமையை பொறுப்பேற்கவும். 🤣- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
ஓம்... பையா. எல்லாரும் திருட்டு பயல்கள். வரும்... தேர்தலுடன், "பின்னங்கால் பிடரியில் அடிபட", ஓட விட வேணும்.- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
நீங்கள் மேலே பதிந்த தகவலின்படி.. வெளிவந்தது 10 மதுபானசாலைகள். கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாம். இன்னும்... வெளிவரும். லோயர்... பழம் தின்று, கொட்டை போட்ட ஆள் 😂. எப்படியும், இந்த விசயத்தை அமுசடக்கமாக... இடது கைக்கு தெரியாமல் சாதுரியமாகத்தான் கையாண்டு இருப்பார். நெருப்பு இல்லாமல்... புகை வராது. அது வரை பொறுமை காப்போம். 🤣- 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே' - மன்னாரில் போராட்டம்
தமிழ் நாடு மாதிரி…. சாராயக் கடைகளை எல்லா இடமும் திறந்து, மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை இல்லாது செய்யப் போகின்றார்கள். சாராயம், கசிப்பு, கஞ்சா… என்று எதிர்கால சந்ததியே பாழாய்ப் போகப் போகுது. ஓரு சிலர் பணம் சம்பாதிப்பற்காக, ஒரு இனத்தையே அழிக்கப் போகின்றார்கள்.- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இவர்கள் செய்த சுத்துமாத்துகள் எல்லாம்… மகிந்த, ரணில் ஆட்சிக் காலத்தில் நடந்தது போல்…. தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்கள். அனுர ஜனாதிபதியாய் வருவார் என இவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போ, திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி… திருட்டு முழி, முழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இப்போ வருவது கொசுறு😂. “மெயின் பிக்சர்” இனித்தான் வரப் போகுது. 🤣- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
தமிழ் கட்சிகளை விட்டு, மக்கள் விலகி செல்கின்றார்கள் போலுள்ளது. அனுர கட்சி வடக்கில், எப்படியும் இரண்டு இடங்கள் எடுப்பார்கள். அவர்களே… முழுக்க எடுத்தால் இன்னும் சந்தோசம். 😂 தமிழ் கட்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. 🤣 உங்கள் தலையில்… நீங்களே மண் அள்ளிப் போட்டீர்கள். அனுபவியுங்கள். - மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
Important Information
By using this site, you agree to our Terms of Use.