Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது, யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம். Yoga Valavan Thiya
  2. நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க, நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள். அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுதானே.
  3. ஆளப் போகும் தொழில் கட்சியில் இருந்து உமா குமரன் 19,145 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். 🙂 பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? ! பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது. இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார். யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன? 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர். இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது. கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391080
  4. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2024/1391016
  5. விசேட சுற்றிவளைபில் கிளிநொச்சியில் பலர் கைது! கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து இதணை மேற்கொண்டுள்ளனர் இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஜஸ் போதைப்பொருள், மோட்டார் வண்டி உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1391004
  6. பிரித்தானியா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்! https://athavannews.com/2024/1390995 பிரித்தானிய தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறியத்தரும் ஈழப்பிரியனுக்கு நன்றி.
  7. ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்... -Livingston Edinborough-
  8. வட மராட்சியில் இருந்து சம்பந்தன் ஐயாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துபவர்களுக்கான இலவச பஸ் மற்றும் காலை, மதிய உணவு பார்சல்களும் கிடைக்கும். உங்கள் வரவை உறுதிப் படுத்த.... தொடர்பு: தீபன் 077652 XXXX Alagan Ratnam
  9. சம்பந்தனின் அஞ்சலிக்கு... இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து.. அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை. நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை. மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம்.
  10. பிரித்தானிய பொதுத்தேர்தல் – மனைவியுடன் வாக்களித்தார் பிரதமர் ரிஷி பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வாக்களித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாண்டு முதல் வாக்களிக்க அடையாள கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நாட்டின் புதிய அரசைத் தீா்மானிக்கக் கூடிய இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (house of commons) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவர். எனவே, 326 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்றால்தான் பிரித்தானியாவில் ஆட்சியமைக்க முடியும். இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1390957
  11. ஐயையோ என் புருஷன் இல்லையா...சாரி.. 😂
  12. மிக அருமையான பாடல். ஜெயலலிதாவை இளமையில் பார்க்க நன்றாக உள்ளது.
  13. நெற்றியில் “பொட்டு” வைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருப்பார்கள் . 😁
  14. இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன் இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1390804
  15. புற்றுநோயை உண்டாக்கும் பாணிபூரிக்கு தடை. கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள 250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோலி பிளவரை வைத்து செய்யப்படும் கோபி மஞ்சூரியன் மற்றும் சிக்கன் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390818
  16. உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் தங்காலை துறைமுகத்தை வந்தடைந்தது! கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்து உயிரிழந்த Dovon Son 5 மீன்பிடிக் கப்பலின் நான்கு மீனவர்களின் சடலங்களையும் ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் இன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை தங்காலை நீதவான் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வரை மீனவர்களின் சடலங்கள் கப்பலிலேயே இருக்கும் எனவும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2024/1390773
  17. இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி. இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்துத் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390764

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.