Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் – தமிழ்த் தலைவர்கள் எடுத்துரைப்பு! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்திருந்தார். இதேவேளை, தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக அமையாது எனவும் இந்தியா வழங்கிய 13 ஆவது திருத்தம் வேறு இங்குள்ள தலைவர்கள் அமுல்ப்படுத்துவதாகக் கூறும் 13 ஆவது திருத்தம் வேறு என தமிழ் தலைவர்கள் இந்திய அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் எடுத்துரைத்தனர். அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவது குறித்தும் தமிழத் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெஸ்ஷங்கரிடம் தெரிவித்திருந்தனர். மேலும் ஒன்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனை இந்தியா ஏற்றுக்கொண்டு சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388963
  2. ஸ்ராலினின் தகப்பனும் மத்திய அரசுக்கு கடிதம்தான் எழுதுறவர். ஸ்ராலினும் அவர்வழி தான்... தலைமுறை தலைமுறையாக தொடரும் கடிதப் போக்குவரத்து.
  3. இவருக்கு சந்தேகம் வராட்டித்தான்... கமுக்கமாக அலுவலை பார்த்திடுவாரோ என்று நாங்கள் உசாராக இருக்க வேணும். 😂 ஈழப்போர் நடந்த போது... புலிகளை கண்காணிக்க இந்தியா, இலங்கைக்கு கொடுத்த சற்றலைட்டுகளை வைத்து... மண்வெட்டி கூட செய்ய முடியாது என்று நெத்தியில் அடித்த மாதிரி சொன்னவர் என்பதால்... இவரை கொஞ்சம் பிடிக்கும். 🤣
  4. இந்திய வெளிவிகார அமைச்சரின் திடீர் வருகையில் சந்தேகம் – சபையில் விமல் வீரவன்ச தெரிவிப்பு! இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை பாரிய சந்தேககத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின், இலங்கை விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் வலியுத்தினார். குறைந்த மணித்தியாலங்களை கொண்ட விஜயமாக இது அமைந்துள்ளதாகவும், இவ்வாறு திடீர் ஏன் அமைய வேண்டும்? எனவும் இதன் பின்னணி என்ன? எனவும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார். ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்றிட்டங்களை கைச்சாத்திடுவதற்கு, இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தம்மால் அறிய முடிவதாக விமல் வீரன்வன்ச குறிப்பிட்டார். மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன? என அவர் மீண்டும் கேள்வியெழுப்பினார். அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்றிட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். https://athavannews.com/2024/1388919
  5. ஈழப்பிரியனின் பேத்தி விரைவில் பூரண சுகம் பெற வேண்டுகின்றோம்.
  6. நீங்கள், ரசனியை ஏதிர்பார்க்கின்றீர்கள் போலுள்ளது. 😂 ரசனி... தனது கார் ரைவருக்கே சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும், அவரின் மனைவி லதா நடத்தும் பாடசாலைக்கும் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் உலாவுது. இப்படியான கஸ்ரமான நேரத்தில்... அவர்களிடம் பணம் எதிர்பார்ப்பது சரியல்ல. 🤣
  7. ஓம்... இல்லாவிட்டால், வேறு யாராவது பணத்தை ஆட்டையை போட்டுவிட்டு பிள்ளைகளை தவிக்க விட்டு விடுவார்கள்.
  8. இந்தக் குடும்பத்துக்கு… சுளையாக இருபது லட்சம் ரூபாய் கிடைக்கப் போகுது. அதை… யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
  9. கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு : விஜய் கண்டனம். தமிழகம் – கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய கோவிந்தராஜ், அவரது மனைவி 42 வயதுடைய விஜயா 40 வயதுடைய தாமோதரன் ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதொடு , 100ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்திய 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை நிவைடைந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று விஜய் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1388853
  10. குருந்தூர்மலை பகுதியில் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை! முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்று பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு, குருந்தூர்மலை நோக்கி பாதயாத்திரை சென்ற தேரர்கள் குழு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பும் பலம் முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் குழுவினர் இன்று பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்புடன் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டனர். பொசோன் பௌர்னமி தினத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் திகதி முதல் மஹியங்கனையிலிருந்து பாதயாத்திரை ஒன்றினை ஆரம்பித்த பிக்குகள் குழுவே இவ்வாறு முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு விஜயம் செய்துள்ளனர். இதனை முன்னிட்டு குறித்த பகுதியில் பௌத்த கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அளம்பில் சந்தியை அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388886
  11. திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.
  12. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்! ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என விசேடமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட இலங்கையினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உட்பட அதன் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதித்துறை சுதந்திரம், நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பதற்றங்கள், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள் மற்றும் தடுப்புக்காவலின் போது மோசமான முறையில் நடத்தப்படல் போன்ற நிலைமைகள் குறித்து கரிசனைக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1388817
  13. செங்கடலில் ஹூதி கிளச்சியாளர்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது கப்பல்! செங்கடல் வழியாகச் சென்ற லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியதோடு, குறித்த கப்பலின் மாலுமி உயிரிழந்துள்ளார் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய இராணுவத்தின் கடல் வர்த்தகக் கண்காணிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி. டியூட்டர் என்ற கப்பல் மீதே ஹவுதி கிளர்ச்சியாளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் குறித்த கப்பல் பலத்த சேதமடைந்த நிலையில், கடலில் மூழ்கியுள்ளதாகவும், கப்பலின் மாலுமி இதனால் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் இருந்த ஏனையவர்களை அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். பிலிப்பின் சீ போர்க் கப்பல் மீட்டுள்ளதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கிய பகுதியில் அதன் உடைந்த பாகங்களும் எண்ணெயும் மிதப்பதை பிரித்தானிய கடற்படை கண்டறிந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக கடலுக்குள் மூழ்கிய இரண்டாவது சரக்குக் கப்பல் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா- இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாகக் கூறினாலும், அனைத்துக் கப்பல்களும் தற்போது குறிவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹவுதிகளின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதிகளில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388847
  14. அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு! அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கர்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் ஜூன் 17ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும் பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1388731
  15. அதே போல "கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம்" என்ற கோசமும், அடுத்த நூறாண்டுகளுக்கு ஆவது, அரசியல்வாதிகளால் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறும் என நம்பலாம். 😂 மக்களை அடிமட்ட முட்டாள்களாக அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
  16. இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். -ஜனாதிபதி ரணில்.- கொரோனாக் காலத்தில் இஸ்லாமியர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது ‘அடக்கம் செய்தல் மற்றும் கொரோனா தொற்று நோயின்போது இடம்பெற்ற விடயங்கள் என்ன என்பது பற்றி நிறைய கலந்துரையாடல்களும் மனவேதனைகளும் ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். அந்த விடயத்தில் நானும் தலையிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலில், அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை நிறுத்தியது. அதன் பிறகு, உலக சுகாதார நிறுவனத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது. ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது. மேலும், இவை அனைத்தையும் நாம் எதிர்கொண்டோம். இந்த நாட்டில் அடக்கம் செய்வதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார். இந்த காலக்கட்டத்தில், முக்கியமாக இஸ்லாமிய மக்களுக்குப் மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள். எனவே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388673
  17. யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது! யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் மூன்று பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் மூன்று பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1388695
  18. 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388719
  19. உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை! சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாபதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை. உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவதுடன். சாதாரன வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என ஜனாதிபதி இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் ” இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388703
  20. தன்பாலினத் திருமணத்துக்குத் தாய்லாந்து அரசு அனுமதி! தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது. இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1388687

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.