Everything posted by island
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம். இவ்வாறான கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம். காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான கற்பனைகள்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
சீமான் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரின் மனைவி தாய்வழி தெலுங்கு. அவரின் மகன் மலையாள, தெலுங்கு , தமிழ் கலப்பினம் அப்படியாயின் சீமானின் தூய தமிழ் வாதம் சீமானுக்கே ஆப்பு அடிப்பதாக உள்ளதே! 😂 இனிமேலாவது சீமான் திருந்த வேண்டும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2019 பாராளுமன்ற தேர்தல் 2024 பாராளுமன்ற தேர்தல்
- IMG_6057.jpeg
- IMG_6058.jpeg
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
ஏற்கனவே வாக்களிப்பு ஏபரல் 19 ல் முடிந்து விட்ட நிலையில் இவ்வாறான அங்க பிரதஷ்னத்தால் அளிக்கப்பட்ட வாகுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
-
பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராலியில் கவனயீர்ப்பு போராட்டம்!
மாட்டிறைச்சியை தடை செய்தால் மீன் விலை அதிகரிக்கும் என்ற நப்பாசையில் கடற்றொழிலாளர் சங்க செயலாளரும் போனாரோ. 😂
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
ஈழத்தமிழரின் அரசியல் தொடர்பான உரையாடலை ஏதோ காரணத்துக்காக வேறு விடயங்களுக்கு திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள். இதற்கு விரிவாக பதில் சொல்ல போனாலும் சிக்கல் தான். என்றாலும் உறவாடி கொலை செய்தல் என்ற உங்கள் கடைசி பந்தியில் நீங்கள் கூறியது உண்மை தான். அமிர்தலிங்கமும் உறவாடி, அவரைக் கொண்டே வாசலில் தம்மைச் சோதனையிடவேண்டாம் என்று சொல்ல வைத்து அவரின் மனைவி கையால் தேனீர் குடித்தவர்களாலே கொலை செய்யப்பட்டார். பிரேமதாசவும் அவர் வீட்டுக்கு முன் வசித்து உறவாடியவாடியவராலே கொலை செய்யப்பட்டார். ரஜீவ் கொலையும் அதே போலவே. இந்த பட்டியல் நீளும். ஆனால், எமது உரையாடல் அது பற்றி அல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்!
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது தியாகத்தாலும், தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும், புலி வீரர்களது போர் திறமையாலும், புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர். புலிகள் அதை புறக்கணித்து மீண்டும் யுத்ததிற்கு செல்ல முடிவெடுத்ததன் பலனே முள்ளிவாய்கால் பேரழிவு. ஆகவே, அன்று ரணிலை ஜனாதிபதியாக்கி அவருடன் பேசியிருப்பதன் மூலம் புலிகள் பலவீனமாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அரசியல் ரீதியில் பலப்பட்டிருப்பார்கள். இன்று மூக்கால் அழும் நிலையும் வந்திருக்காது என்பது எனது கருத்து.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
புத்திசாலிகளை தொடர்ந்து மௌனமாக்கி அதையே தமது புத்திசாலித்தனம் என்று நினைத்ததன் விளைவுகளையே தமிழினம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
15 வருடத்தில் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இதுவரை எவருமே எதையும் புடுங்கவில்லை. பறி கொடுத்ததை மட்டுமே செய்தார்கள். இனிமேலும் புடுங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இப்படியே இணையத்தில் வந்து ஆளையாள் திட்டிவிட்டு போய் சேரவேண்டியதே தமிழ் தேசியம், என்ற நிலைக்கு கீழ் இறங்கி வந்து விட்டதே சாதனை. இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பவே அசத்துறீங்க. 😂
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5647.jpeg
- IMG_5646.jpeg
- IMG_5648.webp
- IMG_5650.jpeg
- IMG_5649.webp
- IMG_5651.jpeg
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5652.jpeg
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
யுத்தம் நடந்த காலத்தில் நடந்த உண்மைகளை யாரும் நேர்மையாக எழுதினால் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பின் ஆதரவாளர்களும் அதை ரசிக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களை அது கோபப்படுத்தும். இருதரப்பும் தமது வீரப்பிரதாபங்களை மட்டுமே பீற்றிக்கொள்ளும். இவர்களை எல்லாம் கடந்த, ஓரளவுக்காவது மக்களை நேசிக்கும் அரசியலாளர்கள் உருவாகும் போதே இனவாதம் ஒழிந்து காத்திரமான அதிகாரப்பகிர்வு ஏற்படலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படியான நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட தெரியவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
முள்ளிவாய்ககாலில் தமது குடும்ப உறவுகளை நினைத்து அழுத தமிழர்களையும் வெசாக் கூடுகளை ரசித்த தமிழர் களையும் இரு வேறுபட்ட தமிழராக நினைத்து ஒப்பிட்டு பார்ப்பதே சுத்த அபத்தம். இவர்களில் இருவரும் ஒருவராக இருக்கும் சாத்தியமும் உண்டு.