Everything posted by island
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
அப்ப ஒருக்கக அங்க போய் புத்தர் சிலையை புடுங்கி எறிஞ்சிட்டு நெஞ்ச நிமிர்ததி வீரந்த்திருமகனா திரும்பி வாறது தானே. 😂😂😂 திரி திரியா திரிஞ்சு யாழ் இணையத்தை வாசிக்காதவனுக்கு பதிலெழுதி மினக்கெடுவதால் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை. லண்டனில் இருந்து புறுபுறுப்பது தான் லேற்றஸ் தேசியப் போராட்டமோ. 😂
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
புத்தர் சிலைக்கும் சம்பந்தருக்கும் என்னப்பா சம்பந்தம்? விடுதலைப்புலிகள் பலத்துடன் இருந்த போதும் திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அவர்களாலும் அதை தடுக்க முடியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணம் இருந்த போது தான் பலாலியை அண்டிய பல ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. இனப்பிரச்சனை, அதனால் ஏற்பட்ட யுத்தம், போராட்டத்தை வென்றெடுக்க முடியாத அரசியல் ராஜதந்திர திறமையற்ற கடந்த 70 வருட தமிழ் தலைமைகள், அதனால் ஏற்பட்ட மக்கள் பேரழிவு, அரசியல்ப் பேரழிவு என்று மலைபோல காரணங்கள் இருக்கும் போது ஒரு சில தனி நபர்கள் மீது பழி போட்டு தப்பிக்க நினைப்பது தமது தவறுகளை மறைக்க நினைப்பவர்களின் தந்திரம் அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்வு மட்டுமே.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வணக்கம் @goshan_che பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம் பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍 நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா? புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். இந்த YouTube தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதை பற்றி அறிய வேண்டுமானால் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிந்து கொள்ளும் நூல்களை நீங்கள் வாசிப்பது அவசியம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வியில் உரிமை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான அடக்கப்பட்ட மக்களை மேலே தூக்கி விட இட ஒதுக்கீடு அவசியம். இதை உங்கள் தலைவர் சீமான் அடிக்கடி முஷடியை உயர்த்தி மேற்கோள் காட்டும் புரட்சியாளர் அம்கேத்கார் கூட வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும் அவ்வாறே அதை அடிப்படையாகக் கொண்டதே. இதன் மூலம. பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலன் பெற்றனர். என்ன பெயரால் அழைத்தாலும் ஒரு மக்கள் கூட்டதின் மீது மேலாதிக்கம் மேற்கொண்டால் அது ஒன்றே தான். இனம் என்று அழைத்தாலென்ன சாதி என்று அழைத்தாலென்ன. சாதிப்பிரச்சனை காலப்போக்கில் அகன்றுவிடும் அதை தூக்கி பிடிக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனையும் அப்படியே தானாக போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது. பேதமற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது. அதை நோக்கிய படிக்கட்டுகளை கட்டி எழுப்புவது. பெரியாரின் பல தசாப்ச போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகும். அதற்காகவே தேர்தல் அரசியலில் பங்கேற்காது தனது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அது தமிழ் நாட்டில் முழுமை பெற்று விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை இன்னும் முன்னேற பல விடயங்கள் உள்ளது என்பதே பதில். பத்தாம்பசலித்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னும் பல மாற்றங்களை அது உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால் ஆம் என்று கூறலாம். தமிழ் நாட்டில் தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் அடிபடையற்ற போலி அறிவியலை முன்னிறுத்தும் காணொளிகளை உருவாக்கி அதை பரப்பிவருவதை நீங்கள் அவதானிக்கவில்லையா? தமிழ் தேசியம் உலகளாகிய ரீதியில் வலுப்பெற வேண்டுமானால் அறிவியல் ரீதியில் அது பலம் பெற வேண்டும். அப்போது தான் உலகில் மற்றய இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்த இனமாக எமது சந்ததி வாழமுடியும். இன்று தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோர் செய்துவரும் போலி அறிவியலை ஊக்குவித்தல், பத்தாம்பசலித்தனம், விட்டுத்தொலைக்கவேண்டிய மூடப்பழக்கங்களுக்கு அறிவியல் முட்டுக்கொடுத்து அதை பரப்புவது, வெறுமனே உசுப்பேற்றுவது ஆகியவை தமிழருக்கு பெருமை தரும் விடயங்கள் அல்ல. ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம். அந்த பெயரில் அது தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக இருந்ததை அவதானித்துள்ளேன். ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இங்கு கருத்திறும் சில உறவுகள் அவ்வாறு செய்யாமல் சீமானுக்கு வக்காலத்துவாங்குவதற்காக மற்றய கட்சிகளைப் பகைக்கும் வசைபாடல்களை தொடர்ந்து தெரிவிப்பதாலும் சீமான் ஏதோ உத்தமன் என்ற ரீதியில் கருது தெரிவித்து உண்மைகளை மறைப்பதாலும், அவ்வாறு இல்லை சீமான் ஒன்றும் உத்தமன் அல்ல, மற்றய கட்சிகளைப்போல் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான் என்பதை ஆதாரங்களுடன் கூறினேன். அதை ஆதாரங்களுடன் மறுக்காமல் மற்றயவர்களை விட்டுவிட்டு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டால்…..
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானின் மனைவியின் அப்பா காளிமுத்து தானே. பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என று சட்ட சபையில் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றி அதில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய காளிமுத்து தானே! தான் தலைவன் என்று கொண்டாடும் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றிய காளிமுத்துவை துரோகி என்று சீமான் கூறாதது ஏன்? ஊழல்பற்றி வாய்கிழிய பேசிய சீமான் ஊழல்ராணி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்ட சசிகலாவை அரசியலில் ஆதரித்தது ஏன்? அரசியலுக்கு அப்பால் குடும்ப உறவு இருந்தால் ஊழலை கண்டுக்க மாட்டாரா அண்ணன்? 😂 இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய காளிமுத்து துரோகி என்று அண்ணன. கூறமாட்டார். ஆனால் 1982 ல் பிரபாகரனை இலங்கையிடம் கையளிக்க கூடாது என்று தீவிரமாக போராடி பிரபாகரனை காப்பாற்றிய திராவிட இயக்கதினர் அண்ணன் பார்வையில் துரோகிகள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி நான் எதுவும் கூறவில்லை. எதில் காலத்தில் உயர்பதவிகளுக்கு வரும் போது ஆங்கிலவழிக்கல்வி மகனுக்கு உதவியாக இருக்கும் என்ற அக்கறையில் ஒரு தகப்பனாக அவர் தன் மகனை ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பிப்பதை தவறென்று கூற முடியாது. நாம் தமிழரை வசை பாடவில்லை. அவர்களின் வண்டவாளங்களை ஆதாரத்துடன் கூறினேன். எனது கருத்துக்களை ஆதாரங்களுடன் உங்களால் மறுக்க முடியாது. தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியையும் பகைக்கக்கூடாது என்பதை இங்கு களத்தில் பல உறுப்பினர்கள் நீண்ட காலமாக மீறியபோதும் சீமானுக்காக படு மோசமான வார த்தைப் பிரயோகங்களுடன் அடுத்த கட்சிகளின் தலைவர்களை வசை பாடியபோதும், ஏன் இந்த திரியின் ஆரம்ப கருத்துக்களின் போதும் அவ்வாறு நடந்து கொண்ட போதும் அவர்களிடன் என்னிடம் கேட்டதைப்போன்ற ஆக்கரோஷத்துடன் இந்த கேள்வியை கேட்கவில்லையே? கேட்க மாட்டீர்கள் அது உங்கள் அரசியல் என்று கூறலாமா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
முடிந்தால் நான் இந்த திரியில் கூறிய விடயங்களை வாசித்து அந்த தகவல்களில்ல தவறு இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அது உங்களால் முடியாது என்பதால் வேறு வீண் கேள்விகளை கேட்டு திசை திருப்ப பார்கின்றீர்கள். விவாதம் என்பது ஒருவர் கூறும் விடயங்களை ஆதாரத்துடன் மறுப்பது. முதலில் அதை செய்துவிட்டு மற்ற வியங்களை பேசலாம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எனக்கு அங்கு வாக்கு இல்லை. அப்படியே நான் இந்திய குடிமகனாக இருந்து திமுகவுக்கோ, அதிமுக வுக்கோ, காங்கிரஸுக்கோ போடுவது எனது பிரச்சனை. உங்க பிரச்சனை என்ன? நீங்க உங்கள் நாட்டில் என்னதை புடுங்கினீங்க தமிழ் நாட்டுக்கு பாடம் எடுக்க?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கத்தப்பு, இந்த நான்கு பேரும் ஈழப்போராட்டத்துக்கு செய்ததை விட அதிகமாகவே போராளிகளுக்கு உளப்பூர்வமாக பல மறைமுக உதவிகளை புரிந்த கோவை ராமகிருஷன்ன், குளத்தூர் மணி உட்பட பலர் உள்ளார்கள். அவர்களை துரோகிகள் என று சீமான் வசைபாடினார். யாரெல்லாம் ஈழப்போராட்டத்திற்கு உளப்பூர்வமாக உதவி செய்தார்கள் என்பதெல்லாம் நாம் தமிழருக்கு முக்கியமில்லை. தமது அரசியலுக்கு எது முக்கியமோ அது மட்டும் தான் மற்றய அரசியல்க்கட்சிகளைப் போல நாம் தமிழர் என்ற கட்சிக்கும் முக்கியம். இவர்கள் கூறும், நாம் மாற்றத்திற்கானவர்கள் புரட்சியளர்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற இவர்கள் செய்யும் இவர்களின் பாசாங்குத்தனம் புருடா.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த காணொளியில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஊழல் ராணி சின்னம்மா முதல்வராக வரவில்லை, என்று சீமான் கவலைப்படுகிறார். அந்த கவலையால் தான் தண்டனை பெற்று திரும்பி வந்த பின்னர், அவரின் அரசியலை தொடர உதவி செய்ய முன்வந்தார். சின்னம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல் பணத்தில் சற்று பங்கு பெற்றிருக்கலாம் என்று சீமான் ஆசைப்பட்டிருப்பார். அது நடக்கவில்லை என்ற கவலை அவருக்கு.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மீண்டும் முதல் நீங்களே படத்துடன் கூறிய விடயத்துக்கான எனது கேள்விக்கு பதில் கூறாமலே முன்னரைப் போல் Skip பண்ணி அடுத்த விடயத்திற்குத் தாவியுள்ளீர்கள்.😂 இருந்தாலும் பதில் கூறுகிறேன் தேர்தல் அரசியல்வாதிகள் கொள்கைகளில் சறுக்குவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நடப்பது தான். அந்த வகையில் கருணாநிதியும் தேர்தல் அரசியல்வாதி என்ற ரீதியில் பல வண்ட வாளங்களை கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன். கருணாநிதி என்ற தேர்தல் அரசியல்வாதியின் அடுத்த Updated version ஆன சீமானும் மிகக்குறுகிய காலத்திலேயே பல வண்டவாளங்கள் கொண்ட சுயநல அரசியல்வாதிதான். (Updated Version எப்போதும் முன்னதை விட வீரியமாக இருக்கும் என்பதைக் கவனதில் கொள்க)
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர் என்று உங்களைப் போன்றவர்கள கூறுவது தவறு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள் போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
@goshan_che 1921 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வயதுக்கு உட்பட்ட விதவைப் பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் என்ற செய்தி வாசித்தேன். 25 வயதுக்கு குறைந்த விதவைகள் தொகை பல லட்சமாம். இது தொடர்பாக அறிந்தீர்களா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி சசிகலாவின் அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான். ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார். பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு, எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக உருட்டுனார். இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா, திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும். தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும். திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும் கடவுள் நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை. இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறியது அன்றாடம் நடை பெற்ற உண்மைத்தகவல்கள் பற்றியது. அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தெரிந்து கொள்ள அன்றாட பத்திரிகை செய்திகளை வாசிப்பது போதும். அரசியலைக் கரைத்து குடிக்க தேவையில்லை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு இணைக்கலாம். தற்போதைய 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின் யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம் பத்திரிகைச் செய்திகளை வாசித்தறியும் சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும் பொய்யானவை அல்ல.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதியை விடுங்கள் சீமான் என்ற சுயநல அரசியல்வாதிக்காக நீங்கள் வன்மத்துடன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் அன்று 1982 ல் மிகத் தீவிரமாக பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் ஒப்படைக்க விடாமல் காப்பாற்ற தீவிரமாக போராடியதை உண்மையான நேர்மையான ஈழத்தமிழர்கள் மறக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும் அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால், ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன். நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1982 ல் அந்த புழுவும் சேர்ந்து தான் பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் கையளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. 😂