vasee
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! - ஷோபாசக்தி
Everything posted by vasee
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாது என உண்மையிலேயே நினைக்கிறார்களா? அல்லது தமிழ் மக்கள் முட்டாள்கள் என நினைக்கிறார்களா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணியின் மனநிலை "நமக்கு ஒரு அடிமை வாய்ச்சிட்டான்".😁
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது. மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு. தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உங்கள் கருத்திற்கு நன்றி, பொதுவாக ஒரு பிரச்சினையினை அணுகும் போது அதனை தரவுகளினடிப்படையில் அணுகாமல் ஒரு தரப்பிற்கு எதிராக இன்ன்னொரு தரப்பு என இரு அணியாக பிரிந்து (தமிழ் தேசியவாதம் மற்று இலங்கை தீவிரவாதம் எனும் இரு பிரிவாக) தமது தரப்பினை நியாயப்படுத்த கருத்துக்களை உருவாக்கும் போது அது கடைசியில் கிளி யோசிய மட்டத்தில் கருத்துக்கள் வரத்தொடங்குகின்றன. பிரச்சினைக்கான தீர்வுக்காண அடிப்படைகளை ஆராய்வதற்காக (root cause analysis) முதலில் பிரச்சினை என்ன என்பதனை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், அதனை கண்டறிய 5 ஏன் என்பதனை வினவவேண்டும் என கூறுகிறார்கள். உதாரணமாக புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறியமையால்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. 1. ஏன் புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறினார்கள்? தேர்தலை புறக்கணிக்காவிட்டால் ரணில் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதால். 2. ஏன் புலிகளுக்கு ரணிலின் மேல் கோபம்? அவர் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார். 3. ஏன் ரணில் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்? புலிகளினை பலவீனப்படுத்தினால் தீர்வுத்திட்டம் எனும் அழுத்தம் இருக்காது தற்போது உள்ளது போல. 4. ஏன் ரணிலிற்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது விருப்பம் இல்லையா? இப்படியாக நீண்டு செல்லும் ஆனால் பிரச்சினையினை அடையாளம் கண்டு கொள்ளலாம். 5.****************? இது யாரையும் குறிப்பிடுவதற்காக எழுதவில்லை, ஆனால் உண்மையான சிங்களத்தின் முகத்தினை தெரியாமல் ஒரே வட்ட பாதையில் பயணிப்பதாலேயே 76 வருடங்களாக இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்கள் அல்லறுகிறார்கள். பல நாடுகள் இருந்தாலும் இந்தியாதான் அந்த அப்பம் பிரிக்கும் குரங்காக இருக்கும் எனகருதுகிறேன்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா? இந்த பிரச்சினை தொடர்ந்து செல்லும் கடைசியாக யாராவது இடையில் புகுந்து குரங்கு அப்பம் பிரித்தனை போல் பிரிப்பார்கள்.
-
3-வது முறை பிரதமராகப் பதவியேற்றார் மோதி - விழாவில் என்ன நடந்தது? - சமீபத்திய தகவல்கள்
பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பினை, பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னெப்போதும் இல்லாதவாறு, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியேறி இருப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றது.
-
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!
நிலமை இப்ப வேறமாதிரி, வங்கதேசம் இலங்கையினை பிச்சைகாரர்கள் என அழைக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் போட்டியினை விட இலங்கை வங்கதேச போட்டி மிக சுவாரசியமாக இருக்கும்😁, மைதானத்திற்குள் இல்லை வெளியே சமூக ஊடகத்தில், வார இறுதியில் வேலை இருந்ததால் அதனை தவறவிடவேண்டியதாகிவிட்டது. வங்கதேச அணி தோற்றாலும் வென்றாலும் சமூக ஊடகத்தில் நடக்கும் போட்டியில் வங்கதேசமே கை ஒங்கியிருக்கும், அதற்கு காரணம் இலங்கையின் தற்போதய நிலை. இலங்கையினை வித விதமாக அழைப்பார்கள், இலங்கை விசிறிகள் பம்முவார்கள் எப்பிடி இருந்த இலங்கை.
-
அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
- அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
மேற்கின் அடுத்த இலக்கு மொஸ்கோ என கூறப்படுகிறது, இந்த காணொளியில். தற்போதய இரஸ்சிய பொருளாதார வளர்ச்சி கூட தற்காலிகமானது என்பதாக இன்று ஏ பி சி தெரிவித்துள்ளது. சமகாலத்தில் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக இரஸ்சியாவினை தொடர் தேய்மானம் மூலம் நிகழ்த்த முடியும் என மேற்கு எதிர்பார்க்கின்றது, அவ்வாறு நிகழும்போது இரஸ்சிய கூட்டணி நாடுகள் மெதுவாக இரஸ்சியாவினை கழட்டி விட வாய்ப்புள்ளது, புட்டின் உக்கிரேனின் ஆக்கிரப்பு பகுதிகளை கைவிட்டு பின்வாங்குவதுடன் சமாதான உடன்படிக்கையினை மேற்கொள்வதுதான் உலகிற்கும் இரஸ்சியாவிற்கும் நல்லது.- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
உங்கள் கருத்திற்கு நன்றி புத்திசாலி, முட்டாள் எனும் கருதுகொள்களை Cognitive bias ஆக பார்க்கிறார்கள். https://www.beapplied.com/post/attribution-bias-what-is-attribution-bias நியூட்டனது பூனை வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் கதவினை பிராண்டுவதை பார்த்து அவருக்கு தொந்தரவில்லாமல் அதுவாக போய் வர கதவில் இரு துவாரங்களை போட தச்சனை அணுகினார் (பெரிய துவாரம் தாய் பூனைக்கு, சிறிய துவாரம் குட்டிப்பூனைக்கு) தச்சன் பெரிய துவாரத்தினை கதவில் போட்டு விட்டு சிறிய பூனை பெரிய துவாரத்தினூடாக செல்லும் என கூறினார், நியூட்டனால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை இருவரது வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது தாய் பூனையும் குட்டி பூனையும் அந்த பெரிய துவாரத்தினூடாக சென்றது. ஒவ்வொருவரது புரிதலும்(Perception) அவர்களது பிண்ணனியில் மாறுகின்றது. இந்த காணொளியில் அந்த பெண் ஒஸ்ரியா என கூறுவார், அதனை அவுஸ்ரேலியா என புரிந்து கொண்டு, அவுஸ்ரேலியர்களின் பேச்சு வழ்க்கில் அவர்களது பாரம்பரியமான இன்னொரு இறாலை பார்பக்கியூவில் போடு என்பார் அந்த நடிகர், இந்த நகைச்சுவை புரிவதற்கு அவுஸ்ரேலியர்களினது பாரம்பரியம் அறிந்தவர்களால் முடியும் மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களது கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எந்த வகையான கேள்விகளும் ஒரு புதிய பரிணாமத்துடன் ஒரு புரிதலை உருவாக்கும் அதனால் நன்மைதான் உண்டாகும், எனக்கு தெரிந்த விடயங்களில் கள உறவுகள் அது தொடர்பான எந்தவித பரிட்சயமுமில்லாமல் விவாதிக்கும் போது அது எனக்கு அதிக புரிதலை ஏற்படுத்துகிறதனை எனது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன், அதனை எப்போதும் விருப்புடன் எதிர்பார்ப்பதுண்டு(சிலர் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்வார்கள் அது அவர்களது திருப்திக்கு அதனை மட்டும் கண்டு கொள்வதில்லை).- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இது எதோ இஸ்ரேலியர்களாலேயே (மொசாட்) மிருகங்கள் என கழித்துவிடப்பட்டவர்களுக்கு சந்தடி சாக்கில் வெள்ளை அடிக்கும் முயற்சி போல் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் 2009 இற்கு பின் பிறந்தவர்களா?- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது. புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன். ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் காருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன், இதில் புத்திசாலிகள் யார் என்பதனையே வரையறுக்கமுடியாது இதில் எவ்வாறு முட்டாள்களை அடையாளாம் காணமுடியும்? முட்டாள்கள் கருத்து கூறாது மெளனமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
தங்களது வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தும் கடமை மக்களுக்குண்டு, அந்த கடமையினை தவறினால், அரசுகளின் தவறுகளுக்கு அவர்களும் பங்குதாரர்கள்தான், வியட்னாம் போரில் அமெரிக்க அரசுக்கெதிராக கிளர்ந்த போராட்டங்களும் அமெரிக்க அரசு அதனை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்தது,- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் வேலை செய்த நிறுவனத்தில் எனது கல்வித்தரமே மிக மோசமான கல்வித்தரம் (ஆரம்பத்தில் ஒரு சமையல்காரனாக வேலைக்குள் நுழைந்தேன்) இடைநிலை கல்வியினை கூட முடித்திருக்கவில்லை, நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திற்க்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது (ஆங்கிலமும் ஒழுங்க்காகத்தெரியாது) ஆனாலும் எனது முதலாளி (பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர்) வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார். எடிசனின் ஆரம்பக்கல்வி காலத்தில் ஒரு நாள் அவரது ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதத்தினை கொண்டு வந்து அவரது தாயாரிடம் கொடுத்தாராம், அதனை பார்த்த அவரது தாயார் தனது கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த கடிதத்தினை உரத்து படித்தார் "உங்கள் மகன் ஒரு மேதை அவனுக்கு கல்வி கற்பிப்பதற்கு இந்த சிறிய பாடசாலையில் வசதியில்லை" என. அதன் பின்னர் எடிசனிற்கு அவரது தாயாரே வீட்டில் கல்வி கற்பித்தார், பின்னாளில் அவரது தாயார் இறந்த பின்னர் அந்த கடிதத்தினை தாயாரின் பெட்டியில் கண்டெடுத்து எடிசன் வாசித்தார் அதில் "உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" என. எனது அபிப்பிராயத்தில் முட்டாள்கள் என எவரும் இல்லை.- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
முள்ளிவாய்க்கால் போல ரபாவும் ஆகக்கூடாதெனும் நிலையிலேயே நீங்களும் உள்ளீர்கள் என நம்புகிறேன், இதனை திட்டமிட்டு நடத்துபவர்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்த பின்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலை விசாரிப்பு எனும் நாடகத்தினை தொடர்வதை போல் ரபா படுகொல விசாரிப்பு நாடகத்தினை வருடக்கணக்காகத்தொடர்வார்கள், அவர்களிடமே போய் பதிலை கேட்டால் எந்த பிரயோசனமும் இருக்காது என கருதுகிறேன்.- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
உங்களுக்கே தெரியும் அமெரிக்காவினது ஆதரவின்றி (ஆயுத, மற்றும் கொள்கை ரீதியானஆசியில்லாமல்) இந்த படுகொலைகள் நடத்தப்பட முடியாது என்று, இந்த திரியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இதை ஒரு பேசு பொருளாக்கி விவாதிப்பதற்கு ஏற்ப மனநிலையில் நானும் இல்லை நீங்களும் இல்லை என தெரியும், எனது எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களால்தான் இந்த அழிவைத்தடுத்து நிறுத்த முடியும் அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அதற்காக குறைந்த பட்ச முயற்சியினையாவது யாழ்கள உறவுகள் முயற்சிக்கவேண்டும்.- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவில் வசிக்கும் மக்களது வரிப்பணத்தில்த்தான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறது, இதனை கண்டும் காணாமல் விட்டால் இந்த படுகொலைகளின் பாவம் அவர்களையும் வந்து சேரும். குறைந்த பட்ச மனித பண்புடைய மனிதர்கள் இதனை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்கள்.- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல். அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஈரான் மீதான பொருளாதார தடை மிக நீண்டகால நடைமுறையிலுள்ளது, இந்த தடைகளின் பாதிப்பிலிருந்தும் ஒரு சவால் விடும் தேசமாக உள்ளது. பலஸ்தீன இஸ்ரேல் போர் ஆரம்பத்தில் இந்தியா தனது ஆதரவினை இஸ்ரேலிற்கு வழ்ங்கியிருந்தது, அதற்கு கார்கில் போரில் இந்தியாவிற்கு தேவையான ஆட்லறி குண்டுகளை இரஸ்சியாவிடமிருந்து இஸ்ரேல் மூலமாக உடனடியாக பெற்றுகொண்டது என பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் எதிர்யான ஈரானின் ஜனாதிபதி மரணத்திற்கு இந்தியா தற்போது துக்கதினம் அனுஸ்டிக்கிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது இந்திய நலன் என கூறுகிறார், இந்த இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டிற்கு ஆசான் இலங்கைதான், மேற்கு சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரஸ்சியா என எதிர் எதிரணிகளுடன் ஒரே நேரத்தில் நல்லுறவினை பேணும் அதே நேரம் ஒரு குறித்த தரப்பு அழுத்தம் கொடுக்கும் போது அவர்களது எதிர்ப்பாசறையில் இருந்து இலங்கைக்கு ஆதரவாகவும் அழுத்தம் கொடுப்பவர்களுக்கு கண்டனம் கொடுக்கும் நிலையில் இலங்கை உள்ளது. ஏன் ஈரானின் அதிபருக்கு இலங்கை கூட அஞ்சலி செலுத்துகிறது ஏன் இவ்வாறு நாடுகள் ஈரானிற்கு திடீர் ஆதரவு செலுத்துகின்றன. தாராள மய பொருளாதாரத்தின் அடிப்படை தங்குதடையற்ற வர்த்தகம், ஆனால் தற்போதுள்ள உலகம் பொருளாதார தடையினை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் ஒரு புது வாய்ப்பினை வளர்ந்து வரும் நாடுகளுக்கு உருவாக்கிவிட்டுள்ளது அது இடைத்தரகர்களாக வர்த்தக செயற்பாட்டில் ஈடுபடுவது, இதனை ஐ எம் எப் இணைப்புநாடுகள் என அழைகிறது, இதன் மூலம் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பினை இந்த நாடுகள்நிவர்த்தி செய்கின்றன, இவை வர்த்கக தடை உள்ள நாடுகளுக்கு பொருள்களை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களது பொருள்களை பொருளாதார தடைவிதித்த நாடுகளுக்கே வழ்ங்குகின்றன அவற்றில் மெக்சிக்கோ, வியட்நாம், இந்தியா என்பன முன்னிற்கின்றன இந்த ஓட்ட போட்டில்யில் இலங்கையும் இணைய விரும்புகிறது, இலங்கை மட்டுமல்ல வேறு நாடுகளும் விரும்புகிறன. மறுவளமாக இஸ்ரேலின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிறது. எமது பிரச்சினைகான தீர்வினை இந்தியா மூலமாகத்தான் பெறுவோம் ஒரு சாராரும் மேற்கு நாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் ஒரு சாராரும் கறுப்பு வெள்ளையாக சிந்தித்து ஒரே வட்டத்திற்குள் நாம் இருக்க உலகம் எம்மை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நாமும் மாறவேண்டும்,- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
நன்றி ரஞ்சித் உங்கள் மொழிபெயர்ப்பிற்கு, ஆங்கிலத்தில் உரையாடப்பட்ட காணொளியில் ஒரு பகுதியினை பார்த்தேன் மிக நீளமாக இருப்பதனால் மிகுதியினை பிறகு பார்க்க முடிவு செதுள்ளேன். இலங்கையில் கல்விகற்ற பெரும்பான்மை சமூகம் கூட புரிந்துணர்வற்ற நிலையிலேயே இருக்கிறார்கள், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் (சில பெரும்பான்மை மக்களும் இதற்குள் விதிவிலக்காக அடங்ககூடும்) போர் முடிந்தபின்னரான இக்காலத்திலும் அநீதியான முறையில் இலங்கயின் சட்டத்திற்குட்பட்ட முறையில் துன்புறுத்தப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளார்கள், இதற்கு காரணம் இலங்கை எனும் நாட்டில் ஒரு பொதுவான சட்டம் இல்லை, இந்த காணொளியில் கூறுவது போல பெரும்பான்மை சமூகம் தான் நினைத்த மாத்திரத்தில் புத்த ஆலயங்கள், காணி அபகரிப்புகள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதனை எதிர்ப்பவர்களை கைது ஆணைப்பத்திரம் (அரஸ் வாரண்ட்) இல்லாமல் கைது செய்து காலவரையற்று தடுத்து வைக்கும் அவசரகால சட்டம் என்பவை உள்ளது. அரகலய நிகழ்வு பொருளாதார சீர்கேட்டினாலேயே உருவானது, பெரும்பான்மை வாதம் போரினால் சிறுபான்மையின தமிழ் மக்களை வென்றதன் பரிசாக அது நிகழ்ந்தது, பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் என்பது போல இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடைந்து விட்டதாக நினைக்கிறார்கள், அதனால் இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பாதுகாப்பிற்காக சட்டம் பேணப்படவேண்டும் என்பதனை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. கடந்தகாலத்தில் தவறுகள் நிகழ்ந்துவிட்டது என்பதனை ஏற்று சிறுபான்மை மக்கள் ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாது எனும் நம்பிக்கையுடன் ஒன்றித்து பயணிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இலங்கை இந்த புதை மணலிற்குள்ளிருந்து மீழ முடியும், அதற்கான அரசியல் தீர்வுகள் காணப்படவேண்டும். இலங்கை 2032 இல் தனது கடனினை மொத்த தேசிய வருமானத்தில் 95% கொண்டுவரமுடியும் என நம்புகிறது (தற்போது 104%) அதாவது ஆண்டொன்றிற்கு கிட்டதட்ட 1%, இலங்கை தொடர்ச்சியாக ஒரு விளிம்பு நிலையிலேயே நீண்டகாலத்திற்கு இருக்கும், கடந்தகாலத்தில் பொருளாதார வங்குரோத்தான நாடுகள் மீண்டும் வங்குரோத்தாகும் பொதுவான காரணி ஊழல், பாதுகாப்பான சட்டம்ற்ற சூழல், உள்நாட்டுப்பிரச்சினை காரணமாகிறது, இந்த அனைத்துப்பண்புகளூம் ஒருங்கே கொண்டதுதான் இலங்கை, அதனால் இவற்றிற்கான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கை மீண்டும், மீண்டும் வங்குரோத்தாகும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் எனும் மனப்பாண்மையில் இருந்து இலங்கையர்கள் வெளிவரவேண்டும், அதனால் எந்த இலாபமும் இராது நட்டம்தான் ஏற்படும்.- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
போரில் தோற்ற மக்களின் நிலைதான் சிரட்டை கையுமாக அலைய வைக்கவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை), இதற்கு காரணம் மக்களிடையே தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் எனும் குரோதத்தினை வளர்த்த, வளர்க்கின்ற அரசியல்வாதிகள்தான் காரணம்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது, அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம். அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம். இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது. ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்). ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond). இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள். அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும். பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன். - அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.