Everything posted by nochchi
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு. 2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது. 3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன். 4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர். 5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து. இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு. ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களுக்கு வீரவணக்கம்.
-
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் -ரஸ்ய இராணுவமே அவர்களை இணைத்துக்கொண்டது - மோர்னிங்
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் -ரஸ்ய இராணுவமே அவர்களை இணைத்துக்கொண்டது - மோர்னிங் Published By: RAJEEBAN 03 JUN, 2024 | 04:10 PM ரஸ்ய அதிகாரிகளி;ற்கும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திரிகள் சிலருக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ரஸ்;யாவில் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் என்ற விடயம் தெரியவந்துள்ளதாக விடயம் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்;கையின் முன்னாள் படைவீரர்களை ரஸ்ய இராணுவமே தனது படையணிகளில் இணைத்துக்கொண்டுள்ளது வாக்னர் குழுக்கள் போன்றவை அவர்களை சேர்க்கவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்கள் படையணிகளில் முன்னாள் இலங்கை படைவீரர்கள் உள்ளதையும் அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளதையும் ரஸ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஸ்ய இராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அதனை பின்பற்றவேண்டும் இதன்காரணமாக முன்னாள் படைவீரர்கள் தாங்கள் நினைத்தநேரத்தில் அங்கிருந்து வெளியேற முடியாது ரஸ்யாவின் இராணுவத்தின் கட்டளை பீடங்களே அதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய படைப்பிரிவின் ஒருபகுதியாக செயற்படுகின்றனரா என்பதை அறிவதற்காகவே மொஸ்கோ சந்திப்பை இலங்கை பயன்படுத்தும் என தெரிவித்திருந்தார். அவர்களை போர் முன்னரங்கிலிருந்து அகற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்காகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காகவும் காயமடைந்தவர்களை மீள இலங்கைக்கு அழைக்க முடியுமா என ஆராயவும் இந்த சந்திப்பை இலங்கை பயன்படுத்தவுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் -ரஸ்ய இராணுவமே அவர்களை இணைத்துக்கொண்டது - மோர்னிங் | Virakesari.lk
- பொதுச்சுடர் - தெய்வீகன்
-
பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராலியில் கவனயீர்ப்பு போராட்டம்!
தமிழருக்குத் தீர்வுகிடைக்குதோ இல்லையோ, அதற்குமுன் இந்த மறவன்புலவு வகையாறாக்களைத் தமிழினம் துரத்தவேண்டிய தேவையேற்பட்டள்ளது. சோனகரை இலக்குவைத்துச் சொற்கொட்டுகளைத் தயாரித்துள்மையூடாக மதவாதப் பிரச்சினைகளைக் கூர்மைப்படுத்திப் பதட்டத்தை உருவாக்கி, தமிழர் தேசியப் பிரச்சினையை மழுங்கடிக்க இந்தியக்கைக்கூலியான நரைதொடங்க மறைகழண்டதுகள்போல் செயற்படும் இவர்களோடும் தமிழினம் போராடவேண்டிய துர்பாக்கியநிலை வரப்போகிறது. இந்தியன்ரை பணம் நல்லா வேலைசெய்யுது.
-
நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் - சி, வி கே சிவஞானம்
என்ன இவர் பாரம்பரிய கட்சி என்று சொல்கிறார்.ஆனால் 'யாழ்ப்பாண மக்களை' என்று சுட்டுகிறார். அப்படியென்றால் யாழ்மையவாதமெனச் சுட்டுவது பொருந்திப்போகிறதே. ஏலவே பல்வேறு பிளவுகள். இதில் இதுவேறு தேவையா?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது. எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
எனது அறிமுகம்
வணக்கம் தில்லைவினாயகலிங்கம் அவர்களே, யாழின் நரம்பகளை மீட்டி நற்சுவை ததும்பும் இன்தமிழிசை பரப்பி யாழைச்சிறப்பித்து அழகூட்டி அறிவூட்டிட வருகவெனத் தங்களை யாழ்க்கள உறவுகளோடு இணைந்து வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.
-
உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து .
உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . Posted on May 14, 2024 by சமர்வீரன் 68 0 உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . – குறியீடு (kuriyeedu.com)
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். Posted on May 20, 2024 by சமர்வீரன் 301 0 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத் துச்செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன்….. இன்றைய நாளில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களான, 1. வீரவேங்கை ஜெமிலன். 2. வீரவேங்கை இளஞ்செழியன். 3. வீரவேங்கை கலைமகன். 4. வீரவேங்கை கவிதா. 5. வீரவேங்கை தேவதாஸ். 6. வீரவேங்கை சுரதன். 7. வீPரவேங்கை சேரன். 8. வீரவேங்கை காந்தா/அவிர். 9. வீரவேங்கை யோகநாதன். 10. வீரவேங்கை நரேன். 11. வீரவேங்கை நிரஞ்சினி. 12. வீரவேங்கை முகுலினி. 13. வீரவேங்கை மொழித்தேவன். 14. வீரவேங்கை முரளி. 15. வீரவேங்கை பேரம்மான். ஆகியோருககான வீரவணக்க நிழ்வில் தமிழீழமக்கள் அனைவரும் கலந்துகொள்ள உருமையுடன் அழைக்கின்றோம். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். – குறியீடு (kuriyeedu.com) வீரவணக்க நிகழ்வு -25.5.2024 யேர்மனி,Ennepetal. Posted on May 19, 2024 by சமர்வீரன் 116 0 வீரவணக்க நிகழ்வு -25.5.2024 யேர்மனி,Ennepetal. – குறியீடு (kuriyeedu.com) வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024 Posted on May 14, 2024 by சமர்வீரன் 57 0 வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024 – குறியீடு (kuriyeedu.com) வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024 Posted on May 10, 2024 by சமர்வீரன் 78 0 வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024 – குறியீடு (kuriyeedu.com)
-
இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
தேர்தல்கால விளையாட்டோ!
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
உண்மைதான்! நாடுகளின் தோற்றம் என்பது தனியே போராடும் தேசத்தவரது வலுமட்டுமன்றி அனைத்துல சூழலும் தாக்கம் செலுத்தவல்லதே என்பதை யூகோஸ்லாவியாவின் உடைவும், புதிய நாடுகளின் தோற்றமும் புலப்படுத்தும் உண்மை. ஆனால், அனைத்துலகின் சமகால மாற்றத்தை கவனித்து நாமும் எமது விடுதலைக்கான குரலை அனைத்துலக அரங்கில் ஒலிக்கச் செய்யக்கூடிய தலையற்ற அனாதைகளாக நிற்கின்றோம் எனபதே தமிழினத்தின் துயரநிலையாகும். நன்றி
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
சீனாக்காரன் நிலத்தைப்பிடுங்கிப் பேரையெல்லாம் மாத்திறான்.அங்காலை பாக்கிஸ்தான் நொட்டுறான். அவங்களோடை மோதத்துப்பில்லை. ஆனால், தமது நிலத்தில் 190ஆண்டுகளுக்கு முன்புவரை தன்னாட்சியோடு வாழ்ந்த மிகச்சிறிய இனமான ஈழத் தமிழினத்தின் உரிமையை மறுதலித்து அழிப்பதில் தனது பலத்தைக்காட்ட முனையும் பெட்டைத்தனமான நாடே இந்தியா என்ற கிந்தியாவாகும்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
தலைவர்களுக்கு அரசபாதுகாப்பும் ஐந்துநட்சத்திர உணவும் வழங்கப்பட்டு,அப்பப்போ பெட்டிகளும் கைமாறுவதால் அவர்கள் கூறப்போவதில்லை. ஆனால், மக்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் அல்லவா? அது எதற்காக?
-
ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்
ஆரப்பா இது?
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
பலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஈழத்தீவிலும் இரண்டு தேசங்கள் அமையாது அமைதியும் திரும்பாது,இனவழிப்பும் முடிவுறாதென்பதை எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
உலகப்பரப்பிலே மண்ணாசை கரணியமாகப் போரும் ஆக்கிமிப்பும் உயிர் உடமை அழிவுகளும் பெரும் பொருண்மிய நெருக்கடியுமாகச் சீனா-இந்தியா, இந்தியா-காஸ்மீர்-பாக்கிஸ்தான், ரஸ்யா-உக்ரேன், ஈராக்,துருக்கி,சிரியா-குர்திஸ்தான்,கதலோனியா-ஸ்பெயின்,பிரித்தானியா-வட-அயர்லாந்து, இஸ்ரவேல்-பலஸ்தீனம் மற்றும் சிறிலங்கா-தமிழீழம்.... எனச் சீரழிவும் பேரழிவும் தொடர்கிறது. ஏன் இந்த உலகு அமைதியைக்காண விரும்பாது வெற்று வீம்புப் போர்களை நடாத்தி எலும்புக்கூட்டு மேடுகளை உருவாக்குகின்றன. நன்றி!
-
புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா்
இணைப்புக்கு நன்றி! வாழத்துகள் உரித்தாகுக. எமது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, டொச் என்று வெளிவரவேண்டும்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அண்ணாவை இழந்துவிட்ட வாதாவூரானவர்களுக்கும், அன்னாரது குடும்பத்தினர், உற்றார் மற்றும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
தங்களின் கூற்றுப்படி இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமேயென்றால் ஏன் துணிந்து பலஸ்தீனத்தை ஒருதேசமாக ஏற்றுச் சிங்கப்பூர்-மலேசியா போன்றோ அல்லது செக்-சிலவாக்கியா போன்றோ ஏன் வாழமுடியவில்லை.
-
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி Posted on May 9, 2024 by சமர்வீரன் 95 0 மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024.
தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. Posted on May 20, 2024 by சமர்வீரன் 607 0 18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பேரணி வந்தடைந்தது. முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை அரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது. நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோபிபிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக அசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது. தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. – குறியீடு (kuriyeedu.com)
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
திரயோடு தொடர்புடைய செய்தியானதால் இணைத்துள்ளேன். நன்றி
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
உண்மை, ஏதோ தாம் புனிதர்கள்போலவும், தாமே பலஸ்தீனர்களுக்குத் தீர்ப்பெழுதுபவர்போல் கொன்றொழித்தவாறு தம்மை அசைக்கமுடியாது என்ற சியோனிசவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடிதான். அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்விடைகொடுத்த உத்தமரே உங்களை நாம் என்றும் மறவோம்! உயிருள்ளவரை மறவோம்!
- 383 replies
-
-
- 1
-
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்