Everything posted by வாத்தியார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா சென்னையின் தல இன்று பத்துக்கட்டளைகளை தனது படையணிக்கு பிறப்பித்து அந்தக் கட்டளைகளை கண்ணும் கருத்துமாகப் பின் பற்றினால்( இன்னும் பல தோல்விகளை அட சி கருமம் கருமம் )😂 மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னேறலாம் என அறிக்கை விட்டுள்ளார்😗
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளையான் விளையாட்டில் யார் யாரைத் தெரிவு செய்தார்கள் என்ற விபரத்தைத் தந்தால் தான் இன்று இரவு நல்ல கனவு வருமா ...அல்லது கெட்ட கனவு வருமா..... எண்டு ஒரு முடிவுக்கு வரலாம் 😂🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று மகா மன்னர் அடித்த குத்துக் கரணம் இன்று அவரின் முடியைக் காப்பாற்றியுள்ளது 😇 படைத் தளபதியை எதிரிகளின் கோட்டைக்குள் அனுப்பி அவர்களுக்கு 😂 பலத்த சேதத்தை ஏற்படுத்தி இன்றும் மன்னராகத் திகழ்கின்றார் 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன மாயமோ இது என்ன மாயமோ SRH காரத் தம்பி ஏன்னா ஒரு விளாசல் பாத்து அப்பன் பாத்து 😂
-
வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் - பிரதமர்
இது மிகவும் தப்பான செய்தி 80 களுக்கு முன்னர் காரைநகரின் சனத்தொகை அண்ணளவாக 40 000 இப்போது அண்ணளவாக 9000 அல்லது 8ஆயிரம் என்று தான் நாங்கள் அறிந்தோம். தேசிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் காரைநகர் வாழ் மக்கள் இதை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை யா படித்த மக்கள் வாழும் இடம் என்று வேறை அம்மையார் புகாழாரம் சூட்டி விட்டுச் செல்கின்றார்... அம்மையார் கல்வியமைச்சரும் அவர் தானே இதைப்பற்றி எந்த ஆய்வும் இல்லாமல் பத்திரிகைகளும் அப்படியே அதையே செய்தி ஆக்கி இருப்பது இன்னும் கவலைக்குரியது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னர் கையை விரித்து விட்டாரே கவனிக்க வில்லையா 😂 அவருக்கு தனது படைத் தளபதியை சிம்மாசனத்தில் அமர்த்தும் ஆசை வந்து விட்டது ஆனால் எதிரி நாட்டுப் படையோ தளபதியை எதிர்த்து முன்னேற முனைப்பாகச் செயற்படுகின்றது 😃.👇 நாளை களத்தில் தெரிந்துவிடும் 😜
-
பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
குடும்ப ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது எளிதானது அல்ல பாவம் சரியாக கஷ்டப்படுகின்றார்😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதுக்கும் இப்போதே மன்னராட்சிக்கு எதிராக கவர்னரிடம் ஒரு முறைப்பாட்டை கொடுத்து விடுங்கள் ,😃 பதவியேற்பு நிகழ்வில் குண்டக்க மண்டக்கா தளபதியை அனுப்பி 😇 குழப்பம் விளைவிக்கலாம் என ஒரு புலன் ஆய்ந்த செய்தி கூறுகின்றது🫠
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு பாண்டவர்களுக்கே வெற்றி 😂 நான் இருக்கும் அணி கடந்த ஒன்பது விளையாட்டுக்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது🤣😂
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
சிறிமாவோ காலத்தில் பாணுக்குக் கூப்பன் காட்டை அடுக்கி வைத்து விட்டுக் காவல் இருந்த நாங்கள் தன்னிறைவு இன்மையும் இறக்குமதித் தடையும் தான் காரணம் தன்னிறைவு இல்லாவிட்டால் இறக்குமதி கட்டாயம் தேவை ட்ரம்பின் வரிக் கொள்கையால் அமெரிக்க துரைமார் குளித்துவிட்டு மாத்த ஜட்டி இல்லாமல் போட்டதையே காய போட்டுக் காவல் இருக்க வேண்டி வரப்போகின்றது 😂😇
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் 😃முன்னணியில் தனது படையணியையும் தக்க வைத்துள்ளார் வாழ்க வாழ்க மன்னர் புகழ் வாழ்க😂
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
மோடி தமிழில் மருத்துவத்தை ஊக்குவித்தல் அல்லது சீமான் மருத்துவத்தை தமிழில் ஊக்குவித்தல் மருத்துவம் கற்றவர் தமிழ் நாட்டிலேயே தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆனால் தமிழ் நாட்டு நிலைமேயே வேறு ஆங்கிலத்தில் மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் ஆங்கில மொழி பேசும் நாட்டில் தங்களின் மருத்துவத் தொழிலை தொடர நினைப்பவர்களாகத்தான் இருக்கும். தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் அல்லது வேறு மொழி பேசும் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும் . இதில் எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது கனடா நாட்டில் இருந்து ஐரோப்பா வந்து மருத்துவம் படித்தவர்கள் மீண்டும் கனடாவிற்கு சென்று அங்கே மருத்துவத் தொழிலை செய்ய விரும்பும் நேரத்தில் கனடா அரசாங்கம் அவர்களுக்கு உடன் அனுமதி அளிக்காது . அவர்கள் கனேடிய அரசாங்கம் வைக்கும் ஒரு தேர்வில் தோற்றி வெற்றியடைய வேண்டும்- இல்லையேல் போராட்டம் தான் இதே முறை தான் பிரித்தானியாவிலும்..... தமிழ் நாட்டு மாணவர்கள் மருத்துவம் கற்க ஆரம்பிக்கும்போதே எந்த நாட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற முடிவிற்கும் வந்து விடுகின்றார்களாம்
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இந்தக் கையெழுத்தைப் பற்றி நாங்கள் சிலர் கருத்துக்களால் மோதுகின்றோம். சரி இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்தச் செய்தியை வாசித்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் எப்படியெல்லாம் மரத்தடிகளில். தேநீர்க் கடைகளில் விவாதம் செய்வார்கள் என்ற ஒரு கேள்வி கண் முன்னே வந்து சென்றது........ மோடி ஒரு கில்லாடி தன் பாதம் இந்தியாவின் எல்லா மூலை மூடுக்குகளிலும் பா ஜ க என்ற முத்திரையுடன் பதிய வேண்டும் என்ற நோக்கில் கொழுத்திப் போட்ட ஒரு வெடி பலமாக வெடிக்கின்றது என்பதே பதிலாக வந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மாமன்னரும் அவரின் பாதுகாப்புக்கு கவசமாக வலம் வரும் படைத் தளபதியும் முன்னேறி வரும் நிலையில் மன்னரைப் பாடிப் புகழ புலவர்களும் பின் தொடர்வது மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கனின் பெருமையை காட்டி நிற்கின்றது 😂 இங்கே மன்னரின் படையணியில் இருந்து ஒரு வீரனைக் காணவில்லை என்று நாங்கள் தெடிக் கொண்டிருக்கின்றோம் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று மும்பை அணிவீரர்கள் எல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டு அடைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஓட்டைகள் அடைக்கப்பட்டும் 😂 பிடுங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு கட்டப்பட்டும் 🤣களத்தில் இறக்கப்படுவார்களாம் ஆகவே மும்பை இன்று வெல்லுது நாங்கள் புள்ளியை அள்ளுது🤩
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரப்பையன் என்ன இது சின்ன பிள்ளைகள் மாதிரி செம்பாட்டானுடன் கதைத்துப் பேசி.... இரண்டு பேருமாக வாங்கோ தொடர்ந்தும் இந்த விளையாட்டுத் திரியில் கலாய்க்கலாம்😐
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையன் தம்பி இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சுற்று பல அணிகள் ஒன்றுடன் ஒன்று ஒருமுறை அல்லது இருமுறை மோதி இறுதியில் ஒரு அணி எப்படியும் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் . இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களின் விருப்பப்படி இங்கே எந்த அணியிலும் விளையாடும் நிலை இல்லை.... அதுவும் பிரச்சனை இல்லை ... ஆனால் ஒரு அணி வென்றால் அந்த அணியைப் போற்றுவதும் உங்களுக்கு விரும்பிய அணியாக இருந்தால் ...அதை ஆகா ஓகோ என்று புகழ்வதும் .... அதே அணி தோல்வியைத் தழுவும் போது........ அந்த அணியையும் அதில் விளையாடிய வீரர்களையும் தப்பான வார்த்தைகளை பிரயோகித்து கருத்துக்களை வைப்பதையே ( உதாரணம் கேனையன்கள் ) எங்கள் முன்னாள் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கின்றார் என்பது எனது கணிப்பு உங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு வேண்டும் உங்கள் அனுமானங்கள் மற்றும் முன் கூட்டிய கணிப்புக்கள் எங்களுக்கு உதவியாகவும் ஒரு முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தையும் எங்களுக்குத் தருகின்றது தொடருங்கள் ..... யாரோ பெற்ற ஒரு பிள்ளைகள் விளையாடும் ஒரு அணியை சரியாக விளையாடவில்லை என்பதற்காக கடும் வார்த்தைகளால் சாட வேண்டாமே
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
பல மொழிகளை பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தலைவர் அவர் பேசும் மொழியில் அவரது கையெழுத்தினை இடுவதால் அவரது இனம் அந்தப் பிரதேசத்தில் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் என்று அர்த்தம் இல்லை கையெழுத்து என்பது ஒரு தனிப்பட்டவரின் அடையாளம் அதற்கு மொழிக்காப்பு முலாம் பூச நினைப்பது மோடியாரின் தேர்தல் காழ்ப்பு பேச்சு அவ்வளவே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டில் ஒன்றுதான் தெரிவு எனும் போது சிங்கங்கள் சேர்ந்தும் சிங்கிளாகவும் வரும் சந்தர்ப்பங்கள் இருக்கு...... இருந்தது..😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கள் மன்னர் தானைத் தலைவர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்கள் 🤣 எதிரிகளைத் தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்து தன்னைப் போர்முனையில் முன்னணியில் நிலை நிறுத்தியுள்ளார் 🙏 மாமன்னர் வழியே தன் வழியென தளபதி நந்தனாரும் 😃 மன்னருக்குப் பாதுகாப்புக் கவசமாக அவரைப் பின் தொடர்கின்றார் 😂 வாழ்த்துக்கள்
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
கந்தையா அண்ணை டென்ஷன் வேண்டாம் அவர் மாநகர சபை என்பதைத் தான் குப்பை கொட்டும் இடம் என்று நக்கலாக கூறினார் .😇
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள் அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும் இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
இது பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது இப்போது பெரிய பிரச்சனையாக காட்டப்படுவது தேர்தலுக்கான விளம்பரமாக இருக்கலாம் . இருந்தாலும் மாநகராட்சி ஊழியர்கள் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் பராக் பராக் பராக்😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி ஒன்று காலி ௦/1😃