Everything posted by ரசோதரன்
-
என் இந்தியப் பயணம்
பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
கீழே உள்ள ஒரு குறிப்பை ஒருவர் எழுதியிருந்தார். இங்கு சில கடலோடிகள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களால் இதை உறுதிப்படுத்த முடியும்: I heard on the radio that the ship reported to the shore that they lost propulsion control shortly after they left port and were warning they might hit the bridge. Sounds plausible since watching the video, you can see the ship lights go out then come back on shortly before the collision. Not sure though how much time there was between the alleged reporting and the collision, or if bridge could have been shut down and evacuated in that time frame.
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
உங்கள் வீட்டில் பறவைகளை தொந்தரவு செய்ய ஒருவரும் இல்லை என்றவுடன், சுகுமாரனின் இந்தக் கவிதை ஞாபகத்திற்கு வந்தது. அப்படியான வீடுகளுக்கும், இடங்களிற்கும் கடவுளும் சேர்ந்து வந்து போகின்றார் என்ற ஒரு அர்த்தத்தில் இதை கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கின்றார் என்று நான் விளங்கிக்கொண்டேன். ************ செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல --------------------------------------------------------- வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ எப்போதாவது யாராவது வருவார்கள் என்பதைத் தவிர்த்தால் வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும் அபூர்வமாக நுழைவதுண்டு விடிந்ததும் காற்றின் வெளிச்சம் வீட்டைப் பிரியாத பூனையின் காதலன் காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று பிராது சொல்லும் தேன்சிட்டு மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக் கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு இவையெல்லாம் தற்செயல் வருகைகள் இன்று வெய்யிலின் இளநீர் வாசனையோடு கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும் நட்டநடுப் பகலில் மூடிய கதவைக் கடந்து யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன் கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன் யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை எனினும் யாரோ வந்து வீடு முழுவதும் ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய் தாழிட்ட கதவுக்கு இப்பால் வாசல் நிலையருகில் தரையில் ஒரு ஜோடிக் காற்சுவடுகள் ஆரஞ்சு ஒளியுடன் விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன் அப்போது முதல்தான் இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில் ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன் அன்று செவ்வாய்க்கு மறு நாள், ஆனால் புதன்கிழமை அல்ல. - சுகுமாரன்
-
சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆசிரியர்
காலையிலேயே மகிழ்ச்சியை கொடுத்த செய்தி.....👍 ஆந்திராவில் ஒரு கணவனும், மனைவியுமாக ஒரு பெரும் வறண்ட நிலப்பரப்பாலான ஊர்களில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஆல மரங்களை வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்ற ஒரு கட்டுரையை சில மாதங்களின் முன் வாசித்திருந்தேன். 'இப்பொழுது அங்கு குருவிச் சத்தங்கள் கேட்கின்றன...' என்றும் அந்தக் கட்டுரையில் இருந்தது........
-
மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி
போன வாரம் யாரோ கேட்டிருந்தனர். திமுகவிற்கு இத்தனை லோக்சபா உறுப்பினர்கள் இருக்கின்றார்களே, ஒரு நாளாவது இந்தச் செங்கல்லை லோக்சபாவின் உள்ளே எடுத்துச் சென்று, அங்கே நியாயம் கேட்கலாமே என்று...... செங்கல் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்று சபையின் உள்ளே எடுத்துப் போக விட மாட்டார்களோ என்னவோ......
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
சில நேரங்களில் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தலைவர்களும் இப்படியான விபரீத முடிவுகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்று கூடத் தோன்றுகின்றது.
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
வட கலிபோர்னியாவில் உள்ள மகள் வீட்டிலா? அங்கு குளிர் காலங்களில் குளிர் கொஞ்சம் அதிகம். மரம் வளர்ந்து வர பெரும் சிரமப்படும். சிலர் ஒருவாறு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் என்று மாறி மாறி இடம் மாற்றி, வளர்த்தெடுத்து விட்டனர். ஆனால் அங்கு பூப்பதும், காய்ப்பதும் மிகக் குறைவு. சில இந்திய நண்பர்கள் கொய்யா இலையை என்னிடம் வாங்கிச் செல்கின்றனர். தடிமன் வந்தால், கொய்யா இலையை கொதிக்க வைத்து அந்த ஆவியைப் பிடிக்கின்றனர். நாங்கள் ஊரில் சஞ்சீவி (யூக்கலிப்டஸ்), தேசி இலைகளைத்தான் இதற்குப் பயன்படுத்தினோம். கொய்யா இலையில் ஆவி பிடித்ததாக ஞாபகம் இல்லை.
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
👍.... சில வேளைகளில் சில மனிதர்களின் வாழ்க்கையும் இவ்வாறே அமைந்து விடுகின்றது. எல்லாவற்றையும் தாண்டி மீண்டு வந்து விடுகின்றனர்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
இது இங்கு இப்பொழுது செய்திகளில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இப்படியான பல கப்பல்களில் எங்களவர்களும் மாலுமிகளாக வேலை செய்வதுண்டு. ஆனால், இந்த துறைமுகத்தில் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியே வரும் வரை அந்த துறைமுகத்தை சேர்ந்த ஒருவரே கப்பலே கையாளுவார் என்று செய்திகளில் இருக்கின்றது.
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
😀.... மெது மெதுவாகத்தான் நாங்கள் மாறுவோம் போல. நான் இங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் தான் நித்தியின் ஆச்சிரமம் ஒன்று இருந்தது. இப்பவும் இருக்கும் என்றே நினைக்கின்றேன். பலரும் போய்க் கொண்டிருந்தனர். முன்னர் ஒரு தடவை, அவரிடம் போனால் அவர் தமிழீழம் கிடைக்க உதவுவார் என்று யாரோ ஒருவர் எங்களில் பலரை ஒரு கூட்டமாக கூட்டிச் சென்றனர். நான் போகவில்லை. அன்று அங்கு நடந்ததை ஒரு கதையாகத்தான் எழுதவேண்டும். அங்கு போன சிலர் இன்றும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இத்தனைக்கும் போனவர்கள் பலர் பெரும் படிப்புகள் படித்தவர்கள்.
-
காந்தி கணக்கு
மிக்க நன்றி நீங்கள் எனக்கு கொடுக்கும் ஊக்கத்திற்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும்.....🙏
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
சிலர் திருமணத்தின் பின் தான் தாங்கள் பேயை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்கள்....டாக்டர் கோவூர் அந்தப் பக்கமே போக விரும்பவில்லை போல....
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
😢.... எங்களின் போராட்டத்திற்கு இவர்கள் செய்த துரோகங்கள் என்று பலர் எழுதியதை வாசித்திருக்கின்றேன். இவை வெளியில் வராத, பொதுவில் பலருக்கும் தெரியாத விடயங்கள். உங்களைப் போன்றோருக்கு மட்டுமே தெரியும். மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை உருவாக்கி, விஜய்காந்தை படு தோல்வி அடைய வைத்தவர் வைகோ என்று தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் இவர் போகும் இடம் உருப்படவே உருப்படாது என்ற ஒரு இமெஜ் இருந்தது.
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
😀... நீங்கள் சொல்லும் இந்தக் கதை இன்றைய கணினி தொழில்நுட்ப துறைக்கு சரியாக பொருந்தும். யாரோ இரவு பகலாக வேலை செய்வார்கள், யாரோ பெயர் எடுப்பார்கள்....
-
காந்தி கணக்கு
😀..... பிரச்சனையே பல இடங்களில் நான் நடுவராக இருப்பது தான்....... இது ஒரு சம்பளமில்லாத உத்தியோகம், ஏதோ ஒரு ஆசையில் போய்க் கொண்டிருக்கின்றது. அது தான் உண்மை.....🤣
-
காந்தி கணக்கு
காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
இவைகளை புனிஞ்சில் என்று என் ஊரில் சொன்னதாக ஞாபகம். Seven Sisters என்றும் சொல்லுவார்கள். அநேகமாக ஏழு குருவிகள் ஒன்றாக வரும்.
-
சங்கீத கலாநிதி
டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பற்றி பெருமாள்முருகன் இன்று 'அருஞ்சொல்' இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ******************************************************* சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா பெருமாள்முருகன் 25 Mar 2024 மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது. பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டுக்கு அப்பால்… தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. புதுமையான முன்னெடுப்புகள் டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார். புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது. துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார். அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். வாழ்த்துகள்... சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள். https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன். அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀 அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
👍... இப்ப ஞாபகம் வருகிறது. பிலாக்கொட்டை குருவி என்றும் சிட்டுக் குருவிகளை சொல்லுவோம். நீங்கள் இன்று காணும் இந்தக் குருவிகள் அன்றும் எங்களூரில் இருந்தன. பாரதியாரின் '....செண்பகத் தோட்டத்திலே...' என்ற வரிகளை என்று கேட்டாலும், உடனே நினைவுக்கு வருவது செண்பகப் பறவை தான்.....
-
ஒரு பொய்
😀.... தமிழை வளைத்து எந்தப் பக்கமும் நின்று அதற்காக வாதாடக் கூடியவாறு இருப்பது தமிழின் ஒரு அழகே....எங்களின் பட்டி மன்றங்கள் போல. மைக்கேல் எங்கேயாவது நல்லா இருக்கட்டும் என்று தான் நினைத்தேன். அவன் நல்லாகவே இருப்பான். என்னுடைய துறையில் உங்களைப் போன்றவர்கள் இல்லை அல்லது மிகக் குறைவே. எல்லோரும் வேலை செய்யும் இடங்களை சில வருடங்களுக்கு ஒரு தடவையாவது மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இங்கு வேறு பல துறைகளில் 30 வருடங்களிற்கு மேலேயும் ஒரே இடத்தில் பணி புரிபவர்கள் இருக்கின்றார்கள். இங்கு அரச வேலை என்றால், அது இன்னொரு கணக்கு. மாற்றமே இருக்காது ஓய்வடையும் வரை.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கவலை தரும் செய்தி. தேர்தலில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சியில் இறங்குவதா? பரீட்சைகள் மற்றும் நீட் தேர்வு பொன்றவற்றில் தோற்றுப் போகும் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்கும் போது, பரீட்சைகளும் முடிவுகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் இவர் போன்றோர்......
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
உண்மையாகவா, நான் நினைத்திருந்தேன் இந்தக் கொட்டைப்பாக்கு குருவிகள், அப்படித்தான் இவைகளை ஊரில் சொல்லுவோம், எங்களின் இன்னோரன்ன கொடுமைகளையும் தாங்கி எப்படியாவது வாழ்ந்து கொண்டேயிருக்கும் என்று. சில வருடங்களின் முன் எங்கோயோ வாசித்த ஒரு ஞாபகம். சென்னையில் ஒருவர் தனது மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியங்கள் போட ஆரம்பித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சிட்டுக் குருவிகளும், வேறு சில சிறு பறவைகளும் அங்கு சேர ஆரம்பித்து, பின்னர் நிறைய குருவிகள் நிரந்தரமாக வந்து சேர்ந்தன என்று. இப்படி ஒரு திட்டத்தை இவர்களும் ஆரம்பித்துப் பார்க்கலாம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தென் மாநிலங்கள் மற்றைய மாநிலங்களை விட வளர்ச்சியிலும், சகிப்புத் தன்மையிலும் சில படிகள் முன்னேயே நிற்கின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. பெரியார் மற்றும் அவர் வழி வந்த சீர்திருத்தவாதிகளும், அவர்களின் உறுதியான நிலைப்பாடுகளும் தென் மாநிலங்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு பெரிய காரணம் என்றே நினைக்கின்றேன். தொழிற்கல்வி மேல் தென் நாட்டவருக்கு இருக்கும் நாட்டமும், என்ணற்ற தனியார் கல்லூரிகளும், சரியான நேரத்தில் வந்த பில் கேட்ஸீம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார்கள். திராவிடம் (அரசியல் கட்சிகளும், சார்ந்தவர்களும்), தமிழ் தேசியம் (சீமான் வகையினர்), தனித் தமிழ் (தேவநேயப் பாவணர் வழி நிற்பவர்கள்) என்று மூன்று கோணங்களில் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உட் பிரிவுகள், உள்ளுக்குள்ளேயே பிடிக்காதவர்கள் என்ற, உதாரணம்: சீமான் எதிர் ரஞ்சித், பிணக்குகளும் உண்டு. தனித் தமிழ் பிரிவினர் அரசியலில் இல்லை என்று நினைக்கின்றேன், ஆனால் அரசியல் கருத்துகள் இவர்களிடம் உண்டு. அகராதி சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்களின் எழுத்தை வாசித்திருக்கின்றேன். இவர்களில் எவரென்றாலும் ஒரு நிலையான, நீதியுள்ள சமூகத்தை உருவாக்குவார்களா என்பதே எதிர்பார்ப்பு.
-
சங்கீத கலாநிதி
சாரு தன் இயல்பு மாறாமல் எழுதியிருக்கின்றார் என்று நீங்கள் சொல்லியிருந்த இடத்தில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் எப்போதும் இப்படித்தானே. இப்படி எல்லாம் இவர் எப்படி யோசிக்கின்றார் என்று தான் நான் யோசிப்பேன். இப்பொழுது பெருமாள் முருகன் இவரிடம் சிக்கியுள்ளார்.....😀 நீங்கள் இப்படி சொல்வது சாருவிற்கு தெரிந்தால், அமெரிக்காவில் ஒரு பேராசிரியர் இருக்கின்றார், அவருக்கு நான் தமிழில் எழுதுவது தமிழின் துரதிர்ஷ்டமாகத் தெரிகின்றதாம் என்று ஆரம்பித்து, அந்தப் பேராசிரியருக்கு லத்தீன் அமெரிக்காவில் இன்னாரை தெரியுமா, பிரான்ஸில் இன்னாரை தெரியுமா என்று உங்களை வறுத்து எடுத்துவிடுவார்...........🤣🤣 நல்ல ஒரு எழுத்து நடை அவரிடம் இருக்கின்றது.