Everything posted by ரசோதரன்
-
ஓயும் ஊசல்
சில வேளைகளில் இப்படியான ஒரு மனநிலை ஒரு முழுப் பைத்தியக்காரத்தனமோ என்றும் தோன்றும்............... ஆனால் ஒரே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் நான், இந்த தெருவில் இருக்கும் பலர் முடிந்து போனதை பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும் அவர்கள் எதிர்பார்த்தது சக மனிதர்களின் ஆதரவையும், அன்பையும் அன்றி வேறெதுவுமே இல்லை..........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணா!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣................... பையன் சார், உங்களின் இந்த ஒரு வரியால், எனக்கு எதிர்காலமே பிரகாசமாக தெரியுது.............😜.
-
சும்மா ஒர் பதிவு
மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன. இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
அதுவே தான். சீன வாகன இறக்குமதிக்கு எக்கச்சக்கமான வரி விதிப்பு மற்றும் சீனப் பொருட்களின் தரங்களைப் பற்றிய பொதுவான குறைந்த அபிப்பிராயம் என்பன சீன வாகனங்களை இங்கே வரவிடாமல் தடுக்கின்றன.
-
ஓயும் ஊசல்
ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த ஒரு நேர பூனை உணவிற்கு பின்னர் ஒரு நாளில் இருந்து அது வரவே போவதில்லை அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை.
- AFeralCat.png
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஏழைகளின் டெஸ்லாவே இந்த விலையா இலங்கையில்.............. இங்கு அமெரிக்காவில் நான் பார்க்கவில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கலாம்....
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி நடந்தால், அப்படியே முக்காடு போட்டுக் கொண்டே, 'எட்டு நாடும் என் நாடே...... எல்லா நட்பும் என் நட்பே.........' என்று சமரசம் உலாவும் இடமாக மாறிவிடுவேன்.....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣................ என்னுடைய இறுதி இலக்கு தான் எல்லோருடைய இறுதி இலக்குகளாகவும் இருக்கின்றது.........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வரை நாளைக்கு கவிழ்த்து, அல்வாயனை புது முதல்வர் ஆக்குகின்றோம்.......
-
பெரியார் தொண்டர்
👍......... மேலும் மேலும் அதிகமாக வாசிப்பதும், எங்களை நாங்களே கேள்விக்குள்ளாக்குவதும், இப்படியான ஒரு புரிதலை, வாழ்வை அடையவே. எவ்வளவு தூரம் இந்தப் பாதையில் போக இயலும் என்று தெரியவில்லை, ஆனால் ஆரம்பித்ததில் இருந்து பார்த்தால், ஏராளமான தூரத்தை கடந்து வந்து விட்டது தெரிகின்றது. சுற்றி வர எதுவும் மாறாவிட்டாலும் கூட, அப்படியே தேங்கிய குட்டையாக அது நின்றாலும் கூட, அதிலிருந்து எங்களால் ஓரளவாவது வெளியேற முடிந்தது என்பதே ஒரு வாழ்நாள் சாதனை..............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு கதைக்கு இல்லை பையன் சார்................ இனி வர இருக்கும் பல போட்டிகளில் இப்படித்தான் நடக்கப் போகுது.............😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுவே தான் காரணம் என்றும் இருந்தது.............. ஒதுங்கி வாழப் போகின்றார்கள் என்று. இரண்டாவது குழந்தை லண்டனில் தான் பிறந்தது என்றும் இருந்தது.......
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
300 வீதம் என்பது சரியாகத்தான் இருக்கும், ஏராளன். இது மிக அதிகம்.......🫢.
-
பெரியார் தொண்டர்
👍................ சரியாகவே சொல்லியிருக்கின்றார்.......... ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்..... நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி இந்தியாவில் இருந்து இங்கிலாத்துக்கு நிரந்தரமாக குடிபெயர்கின்றார் என்ற ஒரு செய்தியைப் பார்த்தேன். அதனால், அவருக்கு எவ்வளவு வேலைகளும், யோசனைகளும் இருக்கும்..... இந்த நேரத்தில் அவரை மைதானத்தில் ஒரு மணித்தியாலம் நில் என்று கேட்பது அவ்வளவு சரியில்லை.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி சரியாகத்தானே விளையாடுகின்றார்.................🤣.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣.............. ருத்ர தாண்டவம் என்று சொல்லி விட்டு, கமல் கிணத்துக்கு மேல நின்று ஆடின மாதிரி ஆடக்கூடிய அணி இந்திய அணி என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.........😜.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இது தான் அது, அண்ணா................... சைனாவின் வாகனங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விரைவில் தேறிவிடுவீர்கள், வசீ............. பாகிஸ்தான் தோற்றவுடன் எனக்கு மனம் சரியில்லாமால் இருந்தது, பின்னர் நேற்று இந்தியாவின் விளையாட்டைப் பார்த்த பின், இப்பொழுது உற்சாகம் கரைபுரண்டு ஓடுகின்றது...........🤣.
-
நியாயத்தின் சாம்பல்
❤️............... இது என்ன ஒரு எழுத்து, வில்லவன்...................👏. நீங்கள் முன்னர் எழுதிய சில குறிப்புகளிலிருந்து நீங்கள் மிகவும் அனுபவம் மிக்கவர் என்று நான் நினைத்திருந்தேன்.........👍. வாசிக்கும் போதே கிறுகிறுவென்று தலை போனது. தொடர்ந்து இன்னும் அதிகமாக எழுதுங்கள்.....❤️.
-
கைவிலங்குகள்
🤣............... அந்த இருவரும் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் விரும்பினால் இதற்கும் இன்னொரு -1 போடலாம்...................😜.
-
கைவிலங்குகள்
உண்மை தான் அண்ணா....... பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குரலாக இது இருந்து விட்டுப் போகட்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதினேன். ஒருவருடன் போராடிய அந்த தேசம் இப்பொழுது இருவருடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றது......