Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. நமக்கு தூக்கம் வருவதை எப்படி அறிந்து கொள்வது ?
  2. காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி! காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளி கலவரம் அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ் பிரசாத் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அவரின் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமரேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது மீட்டு உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் இதனையடுத்து உயிரிழந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென்று வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாகக் கூடுதல் காவல் ஆணையர் பவாணீஸ்வரி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் காவல்துறையினர் வந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் ஒரு சில காவலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிரடியாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் அமைதி காத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆவடி கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள் இதற்கிடையே உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. குறிப்பாகச் சம்பவத்தில் ஈட்டுப்பட்டக் காவல்துறையினரிடமும் வட மாநில ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கல்வீசித் தாக்குதலில் ஈட்டுப்பட்ட 29 வடமாநிலத் தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகக் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காட்டுப்பள்ளி பகுதியில் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது குறிப்பிடத்தகது. https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-kattupalli-attack-northern-state-workers-vellore-jailed/articleshow/123669669.cm டிஸ்கி: குடி வெறியில் செத்தால் 5 லட்சம் இழப்பீடு ..? வட நாட்டவர்கள் அட்டகாசம் தாங்க முடியல.. நானும் ஊர காலி பண்ணிவிட்டு வேற நல்ல நாட்டில் செற்றில் ஆகலாம் என்டு இருக்கன்..
  3. சகல வசதிகளையும் செய்து கொடுப்பினம் போல கிடக்கு..
  4. வடக்கன்ஸ் - தமிழ்நாடு றோல் கேற் பரிதாபங்கள்..
  5. பூரியும் உருளைகிழங்கு குருமாவும் ஒட்டி பிறந்தவை / தவிர்க்க நினைப்பவர்களுக்கு அருமையான பாசிபருப்பு டிபன் சாம்பார்..
  6. படம் : பேரும் புகழும் இசை : விசுவநாதன் வரிகள் : கண்ணதாசன் பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
  7. திருக்குறள் மனப்பாடம் செய்கிறோமோ இல்லையோ.. அது ஒரு கனா காலம் ..
  8. மகளிர் கூந்தல் அலப்பறைகள்.. 810K views · 12K reactions | பரிதாபங்களோட அடுத்த அல்டிமேட...பரிதாபங்களோட அடுத்த அல்டிமேட்..🤣🤣. எவ்ளோ முடி வெச்சிக்கிட்டு அலம்பல் பண்றா பாரு... 😂🤣 சிரிச்சிட்டு இருக்கேன்.
  9. திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் .. அன்புள்ள ஆண்களே.., இது எல்லா ஆண்களுக்கும் அல்ல... பெரும்பாலான ஆண்களுக்கானது... நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது. திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். இதை உடைப்போம்: 1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார். அவருடைய அனைத்து ஆண்டுகால வேலை, மற்றும் வீடு கட்டுதல் ஆகியவை அவரது வயதான காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் வெற்று அறைகளையும் தனிமையான இரவுகளையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். 2. அவரது மனைவிக்கு வயது 62. தங்கள் குழந்தைகளுடன் வாழ்க்கையை செலவிடுகிறார். ஏன்? ஏனென்றால், சமூகம் பெண்களுக்குக் கணவர்களை விடக் குழந்தைகளை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார், எவ்வளவு தியாகம் செய்தார் என்பது முக்கியமல்ல - குழந்தைகள் வளர்ந்தவுடன், கணவர் பெரும்பாலும் மனைவியின் வாழ்க்கையில் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே மாறுகிறார். 3. அவரது குழந்தைகள் அரிதாகவே அவரிடம் பேசுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அங்கு அவர்களை அனுப்ப தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்ட மனிதனை மறந்துவிடுகிறார்கள். அவரது தியாகங்கள் இப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 4. அவர் இப்போது மீண்டும் ஒரு பிரம்மச்சாரி - 72 வயதில். ஒரு குடும்பத்தைக் கட்டி பராமரித்த இந்த மனிதர், இப்போது தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நோய்கள், தனிமை மற்றும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் தனது பணத்தை, தனது உடல் பலத்தை கொடுத்ததை உணர்ந்து போராடுகிறார். திருமணத்தில் ஆண்களுக்கான கடுமையான யதார்த்தம் உண்மை என்னவென்றால், ஆண்கள் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் அடைபடுகிறார்கள். இந்த அமைப்பு உங்களிடமிருந்து பறித்து உங்களை காலியாக விடுவதற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சனையில்லை. அவர்களின் குழந்தைகள், சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு ஆண்? கொடுக்கும் திறன் இல்லாதபோது அவரது பயன்பாடு முடிகிறது. சமூகம் உங்களை "ஒரு ஆணாக இருங்கள்", "உங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யுங்கள்" என்று சொல்கிறது, ஆனால் உங்களுக்காக யார் தியாகம் செய்கிறார்கள்? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் மன அமைதியை யார் உறுதி செய்கிறார்கள்? யாரும் இல்லை. கொடுப்பவராக உங்கள் பங்கு முடிந்ததும், நேற்றைய செய்தித்தாளை போல நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 1. முதலில் உங்களை நேசியுங்கள்: காலியான கோப்பையிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. உங்கள் உடல்நலம், உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் முதலீடு செய்யுங்கள். ஒரு கணவன் அல்லது தந்தையாக இருப்பதை மட்டுமே சார்ந்து இல்லாத, உங்களுக்கான ஒரு நேரத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குங்கள். 2. உங்கள் ஓய்வு நேரத்தைத் திட்டமிடுங்கள்: நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வயதாகும் வரை காத்திருக்காதீர்கள். செயலற்ற வருமான வழிகளை (PASSIVE INCOME) உருவாக்கத் தொடங்குங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், மேலும் உங்களை நம்பியிருக்கக்கூடிய எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். 3. எல்லைகளை முன்கூட்டியே அமைக்கவும்: உங்கள் முழு அடையாளத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதில் நேரம் செலவிடாதீர்கள். நீங்கள் ஒரு மனிதன், ஒரு இயந்திரம் அல்ல என்பதை உங்கள் மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும். 4. உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்குங்கள்: வயதான காலத்தில் உங்கள் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும் நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 5. திருமணத்தைப் பற்றி யதார்த்தமாக இருங்கள்: உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்து திருமணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்க படாமல் போகலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஒரு சூதாட்டம், வாய்ப்புகள் அரிதாகவே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இறுதி வரிகள்: ஆண்களே, சமூகம் உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் தள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு பணப்பையோ அல்லது வேலைக்கார குதிரையோ அல்ல. திருமணம், இன்றைய நிலையில், ஆண்களுக்கு, குறிப்பாக முதுமையில் சிறிய வெகுமதியை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், ஆனால் முதலில் உங்களை நேசிக்க மறக்காதீர்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே. புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..
  10. இசை: விசயபாஸ்கர் பாடியோர் : சுசீலா & am ராஜா படம்: வீர கடோத்கஜன்
  11. இந்த பாடல்களை மார்கழி மாதம் தாயகத்தில் கேட்டு உள்ளீர்களா..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.