Everything posted by alvayan
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
எந்தக்குழு செய்தாலும் அவைக்கு பிரச்சினை இல்லை ...இப்ப செம்மணி உண்மை வெளியில் வந்து ..தமிழருக்கு நீதி கிடைக்கக் கூடாது...இந்த நேரத்தில் அரசுக்கு உதவி செய்தால் ...அளப்பரிய வரப்பிரசாதம் கிடைக்கும்...- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
அனுராவிற்கு ...சனி மாற்ற்ம் , குருமாற்றம் ..நல்லதுபோல.. அந்த சங் அம்மா எங்க போறா..- மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி!
அர்ச்சுனாவிக்கு ஒரு கொப்பி அனுப்பவும் சிறியர்...வாட்ஸா ப் ...போகமுன்னமே கம்பம் எழும்பி நின்றுவிடும்..- செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!
சம்மந்துரை...வீரமுனைபடுகொல்லை உங்கள் கணக்கில் இல்லையோ...அல்லது சண்கிளாஸ் போட்டிருக்கிறியாளோ... கடந்த 5 வருடத்தில் உங்கடை ஆட்கள் அமச்ச்சுப்பதவி வகித்தவையே,,, அதிவிட கிழக்கில் ஆட்ட்சியும் செலுத்தினவை....அப்ப எங்கை போனது இந்த குரலற்றவை அமைப்பு... செம்மணி தோண்டி உண்மைகள் வெளிவர உங்களுக்கு கடி தொடங்கியிட்டுது...- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ- முன்னேற்றத்தில் இருந்து முறிந்து போகும் வடக்கு மாகாணத்தின் கல்வி மரபு!
குதிரை ஓடீயவர்கள் அதிபர்கள் ..ஆசிரியர்களா க இருப்பதும் ஒரு காரணம்- மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!
ராசபக்ஸ மாத்தையாதானே காட்டினது...அவருக்கு கொடுக்கிற பென்சன் வீடாகக் கொடுத்துவிட்டால்... பிரச்சினை முடிஞ்சுது..- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நம்ம பகுதி நிலை அந்தோ பரிதாபம்...ஊரில் நின்றபோது ..இதனை அவதானித்தேன்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- உன்னால் முடியும் தம்பி
அட இவரா அவரு...- யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி
அப்ப இனி உத்திரப் பிரதேச நடைமுறைதான்....- யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
சும்மாதான்...எறிந்து பார்ப்பம்...இது வெளிநாட்டுக்காசு செய்யிற வேலைதான்...ஒன்ரில் மோட்டச்சயிக்கில் வாங்கி ஓடி போஸ்ரோடை ..அல்லது ரிப்பரோடை மோதி இல்லாமல் போவினம்...அல்ல்து பெட்டையோடயோ..பொடியனோடைய தொடர்புபட்டு...எக்குத்தக்காய் நடந்து மாட்டுப் படுவினாம் ..இது எல்லாம் கொலஸ்திரோல்.. கூடி குணம் பாருங்கோ..- செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!
அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
நம்ம சும்மர் மாதிரி என்கிறியள்...🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் @nilminiக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பின் சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.” “எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது கோபப்படுவேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.” இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf தகவல் உதவி - maatram கவ்வாது கேள்விப் பட்டிருக்கிறன்...அதென்ன கத்னா....- பயந்தாங்கொள்ளி
இந்த வசனத்தைப் பாருங்கோ ..விளங்கும்.. னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............'- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் என அடித்தால் ...அது ஒபென் கவுஸ்தான்...- பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி- இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?
நம்ம தமிழ் யூ டுயூப்பர்கள் குடும்பமாக இப்பவே அங்கு போய் விடுவினம்..- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
இந்த வழக்கின் பிரகாரம்...இசுலாமியர் ....சிங்களவர் தப்ப வைக்கப்படுவர்...பரிசோதானை எலியாக அகப்பட்ட பிள்ளையான் ..குற்றவாளியாக்கப்படுவார்- ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
அப்ப இனி எமக்குப் பயமில்லை...அமெரிக்கா எங்கடை பக்கம்..சொந்தம்- செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
அனுர ஒரு சிக்னல்..காட்டினால்....போதுங்க.... போதுங்க... உள்ளகப் பொறிமுறையே வேண்டாமென்பார்..அதைவிட..நம்ம உள்ளூராட்சி சபை விசாரித்தாலே போதும் என்பார்..- வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்
செம்மணியில் அவசரப்பட்டு கட்டிடம் எழுப்பாவிட்டால் சரி - குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.