குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
Everything posted by குமாரசாமி
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன். இருந்தாலும் சீமானுக்கு மட்டும் வரும் கேலிச்சித்திரம் விஜய் என்றவுடன் ஒரு கேலிச்சித்திரமும் வராதது ஏனோ தானோ என அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
-
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்!
இது முதற் தடவையல்ல.....அண்மைக்காலமாக வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தொடரும் என்பதை உணர முடிகின்றது. அதிக எரிசக்தி செலவுகளை யார் உருவாக்கினார்கள்? இவர்களே உருவாக்கி தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி தலையில் போட்டுள்ளார்கள். வியாபாரிகள் அரசியலை எக்காலமும் எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.அது சொந்த கல்லாவுக்கே நஷ்டத்தை விளைவிக்கும்.அதே அரசியல் வேலையைத்தான் ஜேர்மனியும் செய்தது.இவர்களுக்கு பக்கத்து வீட்டு அரசியல் தேவையில்லாத வேலை. தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இப்போது வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் அற்ப சொற்ப அரசியலினால்தான் Afd எனும் கட்சி இன்று முன்னணியில் நிற்கின்றது. ஒரு உலக புகழ்பெற்ற மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால்....மிகுதியை உங்கள் சிந்தனைக்கே விடுகின்றேன். பழைய ஜேர்மனியை நினைத்து இன்று போலியாக நான் சந்தோசப்பட மாட்டேன்.பெருமிதமும் அடைய மாட்டேன்.ஆனால் கவலையும் கரிசனையும் உண்டு.
-
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்
அமெரிக்கா கோவிக்காதா? 😂
-
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!
காலத்திற்கு காலம் மனிதம் மாறிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப அன்றைய கால அரசியலும் இன்று மாற வேண்டிய கட்டாயத்தில் உலகு இருக்கின்றது.சான்றாக பல நாடுகளில் பழைய அரசியல் தலைவர்களின் சிலைகள் அகற்றம்,உடைப்புகளை சொல்லலாம். அன்றைய அரசியல்/வாழ்க்கை தத்துவங்கள் கூட இன்றைய சந்ததியினர்க்கு ஏற்புடையதாக இல்லை. நாம் இன்று விரும்புவது நாளைய சமூகத்தினர்க்கு இடைஞ்சலாகவும் இருக்கலாம்.யார் கண்டார்.
-
”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்” - பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
தன்பாலினத்தவர்களை அரச ரீதியாக ஊக்கிவிக்கக்கூடாது என்பது என் கருத்து. ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கட்டும்.அது அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம் அல்லது பிரச்சனையாகும். உலகில் எத்தனையோ ஆயிரம் பிரச்சனைகள் இருக்க ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனை பெரிய பிரச்சனையாக போகின்றது. இயற்கை எப்படி படைத்ததோ அதன் படி வாழ்ந்தால் சகலதும் சுபமே.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை. தனியே தன் ரசிகர்களை மட்டும் நம்பி திறக்கப்பட்ட தேனீர் கடை போல் அவர் கட்சி அமைந்து விட்டது.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
என் டி ராமராவ் தொடக்கம் குஷ்பு என பல திரைக்கவர்ச்சி மனிதர்களை தெய்வமாக கொண்டாடும் பூமியாக அது அமைந்தது மொழிக்கும் இனத்திற்கும் ஒரு துர்ப்பாக்கியம். இது முடிவிற்கு வருமா என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் அந்த அரசியலை தூக்கி நிறுத்தி வைத்திருப்பது அந்த கவர்ச்சி சினிமாதான். நல்ல சிந்தனைக்கவிதையும் அதன் சொற்றாடல்களும்.... நன்றி ரசோதரன்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் இப்போதெல்லாம் சிலரை மதிப்பதில்லை....காரணம் அவர்களை மதித்தால் தானே அவமானப்படுத்துவார்கள்.😎 இது பிறருக்கு மரியாதை கொடுத்ததின் விளைவு.👇 சொந்த அனுபவமாக்கும்.👈
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும். அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝 ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎 இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான். எல்லாம் இருக்கட்டும்..... தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது. எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂
-
சமையல் செய்முறைகள் சில
மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄 சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂
-
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
நானாவது சிலோனுக்கு போறதாவது😎. அங்கை போய் காசை கரியாக்கிற நேரம் கியூபாவுக்கு போகலாம்.🤣
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
குரங்கிலிருந்து மனிதன் உருவாகி நாகரீகம் அடைந்தான் என சொல்கிறார்கள். எனக்கு என்னமோ மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்து விண்வெளியை தொடும் அளவிற்கு முன்னேறினாலும் குரங்கின் குணமும் செயல்களும் மாறவேயில்லை என தோன்றுகின்றது. ஏனென்றால் படித்தவர்கள் தான்,படிப்பில் முன்னேறியவர்கள் தான் ,மூளைசாலிகள் தான் போர் எனும் மனித குலத்தை அழிக்கும் செயல்களுக்காக ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.அரசியல் காரணங்களுக்காக சக மனிதர்களை அழிக்கின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களை பஞ்சத்தில் அழிய விடுகின்றார்கள். பாமரன் அன்னியவனை பலியெடுக்கவும் மாட்டான். பலியெடுக்கவும் மாட்டான்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இந்த உலகில் கேள்விகளும் நக்கல் நையாண்டிகளும்,கடுமையான வார்த்தை பிரயோகங்களும் போட்டி பொறாமைகளும் குழுக்களும் பட்டிக்காட்டுத்தனங்களும் இல்லை என்றால்... விஞ்ஞானிகளும் உருவாகி இருக்க மாட்டார்கள் கண்டுபிடிப்பாளர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள் பேராசிரியர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள். விரிவுரையாளர்களும் உருவாகி இருக்க மாட்டார்கள். முயற்சியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். இந்த உலகமே முன்னேறி இருக்கமாட்டாது. ஏன்... ஜேசுவும் உருவாகி இருக்க மாட்டார் புத்தரும் உருவாகி இருக்கமாட்டார். குண்டுமணி குப்பையிலும் மங்காது.அதன் படி குப்பைகள் இல்லை என்றால் குண்டுமணி மிளிர்வது தெரியாது. அனைவரையும் அரவணைத்தால் ஆயிரம் வெற்றி.
-
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
உக்ரேனின் நேட்டோ ஆசையையும் ஐரோப்பிய ஒன்றிய கனவையும் நிறுத்தினால் சகலதும் சுபமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.இல்லையேல் நீங்கள் சொன்ன பேரழிவுதான்..☹
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
ஜேர்மனியினது பல மருந்து உற்பத்திகள் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை என நான் அறிந்தேன். இதற்கு மேல் யாம் அறியோம் பராபரமே.🙏
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄
-
சமையல் செய்முறைகள் சில
புரட்டாதி வந்தாலே இப்பிடியான செய்முறைகளை தேடித்தேடி வாசிக்கச்சொல்லும். ஏனெண்டால் வீட்டு நிலைமை அப்படி.😂 உங்கடை நெத்தலி செய்முறையளுக்கு ஒருத்தர் ஓடி வந்து தாங்ஸ் பண்ணியிருக்கிறார். அந்த தாங்ஸ் ஆயிரம் கதை சொல்லும்.🤣
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களை கேட்டுப்பாருங்கள் இரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். பட சூட்டிங் இடத்தில் புதினம் பார்க்க வரும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சால்வை என பல பரிசு பொருட்களை கொடுக்க அவர் நடிக்கும் பட தயாரிப்பாளரையே வாங்கி வைக்க சொல்வாராம். ஆதாரம் கன காலங்களுக்கு முன் வாசிப்புகளில் கண்டு கொண்டது.